உலகக்கிண்ணம் VIII - வென்றது இந்தியா !!!

இதுவரையான உலகக்கிண்ண வரலாற்றிலே பாகிஸ்தான் அணி உலககிண்ண போட்டி ஒன்றிலே இந்திய அணியை தோற்க்கடித்ததில்லை. இந்த உலகக்கிண்ண தொடரிலே பாகிஸ்தான் அதை நிவர்த்தி செய்து இறுதிப்போட்டிக்கு உள் நுழையும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. காரணம் இவ் உலகக்கிண்ண தொடரிலே பாகிஸ்தானின் எழுச்சி அபாரமாக இருந்தது. எனினும் இம்முறையும் இந்திய அணியிடம் தோற்று வரலாற்றை மாற்றி எழுதும் சந்தர்ப்பத்தை மட்டுமல்லாது உலகக்கிண்ண இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது.



இரண்டு நாடுகளின் யுத்தம் என்ற ரீதியில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டி தோல்வி என்பது கவுரவ பிரச்சனையாக இரு நாட்டு ரசிகர்களாலும் பார்க்கப்பட்டது.

இம்முறை தோனிக்கு நாணய சுழற்ச்சியிலும் அதிஷ்டம் கிடைத்தது.  நாணய சுழற்ச்சியில் வென்று எதிர்பார்த்தது போலவே துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

கடந்த இரு போட்டிகளிலே இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய அஸ்வினுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு நெக்ரா அணிக்கு மீண்டும் உள்வாங்கப்பட்டிருந்தார். கடந்த போட்டிகளிலே மோசமாக பந்து வீசிய நெகராவின் வருகை ரசிகர்கள் மத்தியிலே எரிச்சலை கிளப்பி இருந்தாலும் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்டு தன்னை நிரூபித்துள்ளார். இது தவிர இந்திய அணியில் வேறு மாற்றங்கள் இல்லை. பாகிஸ்தான் அணியிலே அக்தர் இடம்பெறுவார் என எதிர்பார்த்த போதும் அவர் இடம்பெறவில்லை.  அத்தர் இடம்பெற்றால் போட்டி இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும். அக்தருக்கு பதிலாக அணியில் இடம்பெற்ற ரியாஸ் சிறப்பாக பந்து வீசியதன் மூலம்  முக்கிய ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை கட்டுப்படுத்த காரணமாகினார்.



ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய சச்சின் நிதானமாக நிலைத்து நிற்க வழமையை விட அதிகமாகவே  சேவாக் பாகிஸ்தான் ஆரம்ப பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கினார். உமர் குல்லின் மூன்றாவது ஓவரில் ஐந்து பவுண்டர்கள் அடங்கலாக இருபது ஓட்டங்களை பெற்றார். எனினும் எதிர்பார்ப்புக்கு மாறாக 38 ஓட்டங்களுடன் இவர் ஆட்டமிழக்க எதோ ஒரு வெறுமையும் தொற்றிக்கொண்டது. இவரின் இந்த அதிரடி ஆட்டமே மிடில் ஓடரில் விக்கெட்டுக்கள் சடுதியா விழுந்த போது ரன் ரேட்டில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருந்தது.

ஒரு கட்டத்தில் 14 ஓவர்களிலே இந்திய அணி 100 ஓட்டங்களை தொட்டது. அதன் பின்னர் முக்கிய விக்கெட்டுக்கள் 3 அடுத்தடுத்து சரிந்தது. சிறப்பாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த காம்பீர் ஆட்டமிழக்க அடுத்து வந்த கோலி 9 ஓட்டங்களுடனும் பெரிதும் எதிர்பார்த்த யுவராஜ் வந்த வேகத்திலே பெவிலியன் திரும்ப இந்திய அணி இக்கட்டில் மாட்டிக்கொண்டது. எனினும் மறுமுனையிலே  பொறுப்புடன் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த சச்சின் நம்பிக்கை தந்தார். இவர்  85 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சச்சினும் அவசரப்பட்டிருந்தால் இந்திய அணியின் நிலை அந்தோ பரிதாம் தான். தோனி சற்று நிலைத்து நின்று தட்டி தடவி 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இம்முறை பந்து வீச்சாளர்கள் சற்று கைகொடுக்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 260 ஓட்டங்களை எட்டி பிடித்தது. மீண்டும் இக்கட்டான நேரத்திலே ரைனா பொறுப்போடு ஆடி 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது  இருந்தார்.



260 என்பது சற்று சவாலானது தான் என்றாலும் பாகிஸ்தான் அணியிலே எட்டுபேர் துடுப்பாட்ட வீரர்களாக இருந்தார்கள். இதற்கு ஏற்றா போல ஆரம்பமே அதிரடியா தொடங்கினார்கள். மொத்த ஓட்டம் 44 ஆக  இருக்கும் போது முதல் விக்கெட்டாக கம்ரான் அக்மல் விழ பின்னர் ஒவ்வொரு  விக்கெட்டுக்களும் சீரான வேகத்தில் விழ ஆரம்பித்தது. முக்கியமாக துடுப்பாட்டத்திலே சொதப்பிய யுவராஜ் சிங் தன் முதல் நான்கு ஓவர்களையும் சிறப்பாக வீசி இரு முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார். அத்தோடு இவரது களத்தடுப்பும் அற்புதம்.

உமர் அக்மல் இரண்டு இமாலய  சிக்ஸ்சர்களுடன் இந்திய அணியினரை மிரட்டினார். எனினும் துரதிஷ்ர வசமாக இவரும் ஆட்டமிழக்க போட்டி இந்தியாவுக்கு சாதகமாக திரும்பியது. எனினும் அப்ரிடி ஆட்டமிழக்கும் வரை இந்தியாவின் வெற்றியை யாராலும் உறுதிசெய்திருக்க முடியாது.



இந்திய அணி சார்பாக பந்துவீச்சிலே வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்ப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுநாள் வரை சொதப்பிய முனாப் பட்டேல் நெக்ரா போன்றோர் வெற்றியில் பெரும் பங்கு ஆற்றியிருந்தார்கள். என்ன தான் சொன்னாலும் இப்போட்டியிலே ஒரு பக்கத்தில் விக்கெட்டுக்கள் சரிந்துகொண்டிருந்த போது நிலைமையை உணர்ந்து பொறுப்போடு ஆடிய சச்சினுக்கே  இவ்வெற்றியில் பெரும் பங்கு.


 மீண்டும் தாம் உலககிண்ண தொடர்களிலே அதிஷ்டம் அற்ற அணி என்பதை நிரூபித்து நியூசிலாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியிருந்தது தென்னாபிரிக்கா. இறுதி போட்டிக்கு செல்ல தகுதி உடைய அணி என்று ஆரம்பத்தில் இருந்தே கிரிக்கெட் விமர்சகர்களால் கருதப்பட்ட அணி தென்னாபிரிக்க என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பலமான துடுப்பாட்டத்தை கொண்டதாக இருந்த தென்னாபிரிக்க நியூசிலாந்திடம் வீழ்ந்தது அவர்களின் துரதிஸ்டமே. காசிம் அமலாவின் அவுட்டை கவனித்தவர்களால் புரிந்து கொள்ள முடியும் தென்னாபிரிக்காவுக்கு அதிஷ்டம் எந்தளவுக்கு வேலை செய்தது என்று.



இலங்கை அணி அரையிறுதியிலே நியூசிலாந்தை வீழ்த்த சற்றே போராடியிருந்தது. இலங்கை அணியை பொறுத்தவரை துடுப்பாட்டத்திலே முதல் மூன்று விக்கெட்டுக்கள் விரைவாக சரிந்தால் அவ்வணியை எதிரணி தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். இந்த  உலககிண்ண தொடரிலே அதிக ஓட்டம் எடுத்த முதல் ஐந்து வீரர்களிலே இலங்கை அணியின்  முதல் மூன்று துடுப்பாட்ட வீரர்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட பலத்துக்கு நிகராக இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்டமும் உள்ளது. அத்தோடு இந்திய அணியுடன் ஒப்பிடும் போது பந்து வீச்சிலும் பலமாகவே உள்ளார்கள். எனினும் இவர்களின் சுழல் பந்துவீச்சு இந்திய அணியிடம் எடுபடுமா என்பது பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இப்போட்டி இரண்டு வீரர்களுக்கு மிக முக்கியமானது, ஒன்று சச்சினின் இறுதி உலககிண்ண போட்டி இது. மற்றையது முரளியின் இறுதி உலககிண்ண போட்டி மடடுமல்லாது இதுவே அவரது இறுதி சர்வதேச ஒருநாள் போட்டியாகவும் அமைவது குறிப்பிடத்தக்கது. வரும் இரண்டாம் திகதி சனிக்கிழமை இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி இடம்பெற உள்ளது. பலமான துடுப்பாட்டம், பந்துவீச்சிலும் தற்சமயம் எழுச்சி , உள்ளூரில் இடம்பெறும் போட்டி என்பதால் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு கூடுதலாக உள்ளது என்பது என் கணிப்பு. முடிவை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

கொடூரமானவனா! விளக்கம் வேணும்..!!


உலகிலே மதம் என்ற முகமூடி அணிந்து எவ்வளவோ  கொடூரங்கள் நடந்துகொண்டு உள்ளது. சமீப காலத்துக்கு முன்  குடும்ப வறுமை காரணமாக தன் மகளை  தலிபான் அமைப்பை சேர்ந்த ஒருவருக்கு தகப்பன் திருமணம் செய்து வைத்துள்ளார். எனினும் கணவனின் கொடுமை தாங்க முடியாது அந்த பெண்ணும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். சில நாட்களின் பின் கணவனால் அந்த பெண் கண்டுபிடிக்க பட,வீட்டை விட்டு வெளியேறிய குற்றத்துக்காக தலிபான் அமைப்பை சேர்ந்த கணவனும் வேறு சிலரும் இணைந்து அந்த பெண்ணின் மூக்கை வெட்டி எறிந்துள்ளனர். இது எவ்வளவு பெரிய கொடுமையான விடயம். நீண்ட நாள் இடைவெளியின் பின்னரே இந்தசம்பவம் ஊடகங்கள் மூலமாக வெளிக்கொணரப்பட்டது. பார்ப்பவர்களை நெஞ்சு கனக்க வைத்தது. 



 ராமாயணம் என்ற புராணத்திலும் இப்படி ஒரு கொடூரம் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த கொடூரத்தை செய்தவர்களை நாம் கடவுளாக ஏற்றுக்கொள்கிறோமா? ராமாயணத்திலே குடும்ப பதவி இழுபறி காரணமாக வனவாசம் செல்கிறான் இராமன். வனத்திலே தங்கி இருக்கும் காலப்பகுதியில் இராவணனின் தங்கை  சூர்ப்பனகை என்ற பெண்ணின் கண்களில் இராமன் படவே அவன் மீது மோகம் கொண்டு தன்னை திருமணம் செய்துகொள்ளும் வண்ணம் தன் விருப்பத்தை இராமனிடம்  தெரிவிக்க, இதனை அறிந்து கடுப்பான இலட்சுமணன் அந்த பெண்ணின் மூக்கை அறுத்துவிடுகிறான்...! 
இது நியாயமான செயலா?
ஒரு பெண்ணின் மூக்கை அறுத்தால் அந்த பெண் எவ்வாறு சமூகத்தில் நடமாட முடியும் என்பதை மேலே உள்ள  பெண்ணை நீங்கள் மனிதில் வைத்து ஊகிக்க முடியும்.  






இலட்சுமணனை பொறுத்தவரை இரண்டாம் திருமணம் என்பது  ஒரு அநீதியான செயல் என்று எண்ண வாய்ப்பு உள்ளதா?  காரணம் அவனின் தகப்பன் தசரதனுக்கு மூன்று மனைவிகள்:-)    (அதிகம் என்றும் சொல்லப்படுகிறது)

மூக்கு அறுபட்ட சூர்ப்பனகை இராம இலட்சுமணனை பழிவாங்க  இராவணனை பயன்படுத்தி, அவனை சீதை மீது மோகம் கொள்ள வைத்து,  அவர்களை  பழி தீர்க்க எண்ணியதாக இராமாயணம் கூறுகிறது. இங்கே தான் ஆரியம் தன் வஞ்சகத்தை தீர்த்துள்ளதா?


( அன்று அந்த பெண்ணின் செய்தியை படித்த போது என் மனதில் தோன்றிய கேள்வி..! )

உலகக்கிண்ணம் - VII பழி தீர்த்த இந்தியா.

கடந்த உலகக்கிண்ண பதிவிலே இரண்டு விடயங்களை குறிப்பிட்டிருந்தேன். ஒன்று பாகிஸ்தான் தனது பந்து வீச்சு பலத்தால் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தும் வாய்ப்பு உள்ளது என்றும் மற்றையது  அவுஸ்ரேலியாவுக்கு எதிரான காலிறுதியில்  இந்தியாவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும். அதே போலவே காலிறுதி போட்டிகளின் முடிவுகளும் அமைந்துள்ளன ))         உலகக்கிண்ணம் - VI காலிறுதி அணிகள்...

நேற்று இடம் பெற்ற அவுஸ்ரேலியாவுக்கு எதிரான போட்டியிலே இந்தியா தனது நீண்ட நாள் பழியை தீர்த்துக்கொண்டது. 1996 இல் அரை இறுதியிலும் 2003 இல் இறுதி போட்டியிலும் அவுஸ்ரேலியா இந்தியாவை தோற்கடித்து இந்தியாவின் உலகக்கிண்ண கனவை தகர்த்திருந்தது. அவற்றுக்கெல்லாம்   நேற்றைய தினம் இந்தியா பதிலடி கொடுத்து  இந்த முறை அவுஸ்ரேலியாவின் தொடர் நான்காவது உலகக்கிண்ண கனவை தகர்த்தெறிந்துவிட்டது.

                                                                மீண்டும் சிகரம் (18000 )

நேற்றைய போட்டியை பொறுத்தவரை இந்தியாவின் நட்சத்திரம் யுவராஜ் தான். பந்துவீச்சிலும்  துடுப்பாட்டத்திலும் அவுஸ்ரேலியாவுக்கு தலையிடியாக மாறியிருந்தார்.  நாணய சுழற்ச்சியில்  இந்தியா தோல்வியடைந்தது ரசிகர்கள் மனதிலே ஒரு வித பயத்தை தோற்றியிருக்கலாம். காரணம் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் போது அவுஸ்ரேலியாவின் வேகங்களை சமாளித்து இலக்கை துரத்துவதென்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.

இந்திய அணியிலே யூசுப் பதானுக்கு பதிலாக தேறாத உடல் நலத்துடன்  சேவாக்  உள்வாங்கப்பட்டார். வேறு மாற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை. ரைனாவை அணியில் வைத்திருந்தது இந்தியாவுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது.

கடந்த மேற்கிந்தியாவுக்கு எதிரான போட்டியை போல இம்முறையும் அஷ்வினே ஆரம்ப ஓவர்களை வீசினார். இறுதி வரை சீராக வீசியது சிறப்பம்சம். அத்தோடு முக்கிய இரு விக்கெட்டுக்களை வீழ்த்தி அவுஸ்ரேலியாவின் ஓட்ட எண்ணிக்கையை கட்டுப்படுத்த இவரும் காரணமானார்.  இந்திய அணியை பொறுத்தவரை இந்த போட்டியிலே களத்தடுப்பு மிக அருமையாக இருந்து. அத்தோடு முனாப் பட்டேலை தவிர பந்துவீச்சாளர்கள் தமக்குரிய  கடமையை சரிவர செய்தனர். அரை இறுதியிலே முனாப்க்கு பதிலாக சிறீசாந்துக்கு வாய்ப்பளித்து பார்க்கலாம்.  இம்முறையும் சகீர்கானே பந்துவீச்சில் துருப்பு சீட்டாக பயன்பட்டார். அவுஸ்ரேலியாவின் இடை வரிசை துடுப்பாட்டத்தை சிதைத்த பெருமை இவருக்கே. ஹர்பஜன் சிங் விக்கெட்டுக்கள் எதுவும் எடுக்காவிட்டாலும் ஓட்டங்களை கட்டுப்படுத்தி பந்துவீசினார்.

                                            
அவுஸ்ரேலிய அணியை பொறுத்தவரை கிளார்க், ஹசி, வைட் என்று அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்ததே அவ்வணி மிகப்பெரிய ஓட்ட இலக்கை பெறுவதை தடுத்தது. எனினும்  இறுதி பவர் பிளே ஓவர்களை பாண்டிங்கும் டேவிட் ஹசியும் இணைந்து மிக சிறப்பாக கையாண்டார்கள். இல்லை எனில் 240 ஓட்டங்களுக்குள் கட்டுப்பட்டிருப்பார்கள். இதுவரை இடம்பெற்ற போட்டிகளிலே  மோசமாக  விளையாடி வந்த பாண்டிங் இப்போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஓரளவுக்கேனும் தன் மீதான நெருக்கடியை குறைத்துக்கொன்டாலும் அணித்தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார் என்றே எதிர்பார்க்கலாம்.

                                                         எங்கே செல்லும் இந்த பாதை..

265 என்ற இலக்கு இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையை பொறுத்தவரை  கடினமாது இல்லை தான் ஆனால் அவுஸ்ரேலியாவின் வேகங்களை சமாளிப்பார்களா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கும். எனினும் ஆரம்பம் முதலே சீரான ஓட்ட எண்ணிக்கையுடன் துடுப்பெடுத்தாடி வந்ததால் பெரிதாக நெருக்கடி ஏற்ப்படவில்லை. அதே போல முதல் ஐந்து விக்கெட்டுக்களும் அவுஸ்ரேலிய அணியின் ஓட்ட விகிதத்திலே விழுந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்தில் 187 /5 என்ற நிலையில் இருந்த இந்திய அணி நெருக்கடியை எதிர்கொண்டது. எனினும் பின் வந்த ரைனா வழமைக்கு மாறாக பொறுப்புடன் ஆட மறுமுனையில்  இந்த உலகக்கிண்ண தொடரில்  இது வரை 3 அரைசதம் அடித்த  யுவராஜ் இம்முறையும் சிறப்பாக செயற்பட்டு அரைச்சதம் ஒன்றை போட இந்திய அணி வெற்றியை எட்டி பிடித்தது. 

 இப்போட்டியிலே 53  ஓட்டங்களை பெற்ற சச்சின் அத்தோடு 18000 ஓட்டங்கள்  என்ற மைல்கல்லையும் கடந்து முடித்தார். அதே போல சிறப்பாக துடுப்பெடுத்தாடி 50 ஓட்டங்களை பெற்ற காம்பீர் தன் அவசரதனத்தால் ரன் அவுட் ஆனார். தோனி இம்முறையும் ஏமாற்றினார். மொத்தத்தில் இடதுகை துடுப்பாட்ட வீரர்களால் பெற்றுக்கொண்ட வெற்றி எனலாம். அவுஸ்ரேலியாவின் களத்தடுப்பு மிக மோசம்.

                                                  சண்டேன்னா சட்ட கிழியதான் செய்யும்...)

இவ்வெற்றியின் மூலம் அரையிறுதி போட்டியிலே இந்தியா தனது பங்காளி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. நடந்து முடிந்த காலிறுதி போட்டியிலே பாகிஸ்தான் தன் அபார பந்துவீச்சால் மேற்கிந்தியாவை படு தோல்வி அடைய வைத்தது குறிப்பிடத்தக்கது.  மேற்கிந்தியாவின் நிலைமையை நினைத்து பரிதாபப்படுவதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. கிரிக்கெட் உலகின் இமயங்கள் ஆடிய அணி அது (

தற்சமயம் பாகிஸ்தானின் பலமே அவர்களின் சுழல் பந்துவீச்சு தான். இது எந்தளவுக்கு இந்தியாவுக்கு எதிராக எடுபடும் என்பது பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். மீண்டும் அக்தருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா என்பது சந்தேகமே! துடுப்பாட்டத்தில் தற்சமயம் பாகிஸ்தான் பலவீனமாகவே உள்ளது. எனினும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளிலே யூனிஸ்கான் அப்ரிடி போன்றோர் சிறப்பாக செயற்ப்படக்கூடியவர்கள்.

                                                          டெரரா விளையாடுவம்..)

அதே போல இந்திய அணியின் துடுப்பாட்டம் பலமாக உள்ளது. அஸ்வினின் வருகைக்கு பின் இடம்பெற்ற இறுதி இரண்டு போட்டிகளிலும் இந்தியா பந்துவீச்சிலும் சிறப்பாகவே செயற்ப்பட்டுள்ளது. அத்தோடு சொந்த மண்ணில் இடம்பெறப்போகும் போட்டி என்பதாலும் வெற்றி வாய்ப்பு இந்தியாவுக்கே அதிகமாக உள்ளது. இதுவரை இடம்பெற்ற போட்டிகளை விட  இந்திய பாகிஸ்தானின் அரையிறுதி மோதல் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்பது நிச்சயம்.

ஆடு புலி ஆட்டம்..!!!

புற்றீசல் போல தினமும் புதுப்புது படங்கள் வந்துகொண்டு தான் இருக்கு. இதில சராசரியா ஒரு படத்துக்கு 4 /5 பாடல்கள் வரை இருக்கும். ஆனால் இந்த  பாடல்களில்  எத்தனை பாடல்கள் அர்த்தம் உள்ள வரிகளையோ, இல்லை இந்த சமூகத்தை படம் பிடித்து காட்டுவதாகவோ இருக்கும்  என்பது கேள்விக்குறியே! இப்ப எல்லாம் பாடல்களிலே பாடல் வரிகளை விட இசைக்கே முக்கியத்துவம் அதிகமாக கொடுக்கிறார்கள்.

சமீபத்தில ஒரு பாடலை  எதேச்சையாக கேட்டன். "ஆடு புலி ஆடம் தான் அரசியலாச்சு" என்று தொடங்கும் இந்த பாடல்  சம  காலத்தில ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் பொருந்தும் வரிகளாய் இருக்கு. ஒட்டுமொத்த தமிழ் அரசியல் வா(வியா)திகளையும்  பிழிந்து எடுத்துள்ளது இந்த வரிகள். ஆனாலும் ஒரு அதிசயம், இந்த பாடலுக்கு "தடா" போடவில்லை. தினா இசையிலே   பவானி படத்தில இருந்து அந்த பாடல்..



ஆடு புலி ஆட்டம் தான் அரசியலாச்சு இங்கே
ஆளை வெட்டும் காரியம் தான் தினசரி காட்சி!
கேடு கெட்ட கூட்டத்தால வாடுது ஊரு-இதை
கேள்வி கேக்க யாரும் இல்ல பாருங்க சாரு!

குள்ளநரி கூட்டத்தோட கொட்டம் அடங்குமா!
நம்ம புள்ள குட்டி கண்ணீரோட செத்து மடியுமா!

மூணு வேளை சோத்துக்காக ஓடி உழைக்குறோம்
நாம முப்பது நாளும் வேர்வையில வாடி கிடக்கிறோம்!
ஓடி ஆடி வேலை செஞ்சும் வாழ்க்கை மாறல
நாம ஊமையாட்டம் வாழ்வதால சோகம் போகல!
வீதியெல்லாம் கோவில் கட்டி என்ன புண்ணியம்
நம்ம வேதனையும் தீரலையே பூசை பண்ணியும்!

நல்லவங்க வாழ்ந்த பூமி ஆனது தீட்டு
இத நீயும் நானும் புரிஞ்சுக்கிட்டா கிடைச்சுடும் ரூட்டு!

ஓட்டுப்போட மட்டும் தானே நாம இருக்கிறம்
இந்த ஊசலாடும் வாழ்க்கையில எங்க சிரிக்கிறம்!
காலமெல்லாம் மாறும் என்னு கதயளந்தாங்க
நாம கவலையிலே சாகும் போது தலைவிதின்னாங்க! 
காசுக்காக கூட்டணியும் மாறுது ஜோரா
ஈன பதவிக்காக ஈழ ரத்தம் ஓடுது ஆறா!

ராத்திரியில் விடுதலையை வாங்கியதேனோ
இன்னும் விடியலேன்னு அழுது அழுது தேம்பிடத்தனோ!

உலகக்கிண்ணம் - VI காலிறுதி அணிகள்...

உலகக்கிண்ண கிரிக்கட் தொடரிலே ரசிகர்களுக்கு விருந்து படைக்கப்போகும் போட்டிகள் நாளையுடன் ஆரம்பமாகிறன. எதிர்பார்ப்புக்கள் போலவே காலிறுதிக்கான அணிகளும் தெரிவாகியுள்ளன. எனினும் B பிரிவிலே பங்களாதேஷுக்கு  காலிறுதிக்கான வாய்ப்பு இருக்கலாம் என்று சிலரது எதிர்பார்ப்புக்கள் இருந்திருந்தாலும் இறுதி நேரத்தில் திரில்லாக இங்கிலாந்து  மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக  பெற்ற வெற்றி பங்களாதேஷின் கனவுகளை தவுடு பொடியாக்கியது.

காலிறுதி போட்டிகளிலே பாகிஸ்தான் மேற்க்கிந்தியாவையும் ,இந்தியா அவுஸ்ரேலியாவையும், நியூசிலாந்து தென்னாபிரிக்காவையும், இலங்கை இங்கிலாந்தையும் சந்திக்கின்றன. இப்போட்டிகளில் தோற்கும் அணிகள் வீட்டுக்கு நடை கட்ட வெல்லும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிக்கொள்ளும்.



முதலாவது காலிறுதி போட்டி நாளை (23 )  பாகிஸ்தான் மேற்கிந்தியா அணிகளுக்கிடையே இடம்பெறுகிறது. பாகிஸ்தானை பொறுத்தவரை அவுஸ்ரேலியாவை தோற்கடித்த தெம்புடன் களமிறங்குகிறது. ஆனால் மேற்கிந்தியா தொடர்ச்சியாக இங்கிலாந்திடமும் இந்தியாவிடமும் பெற்ற தோல்விகளுக்கு பின் பாகிஸ்தானை சந்திக்கிறது. எனினும் இந்தியாவுக்கு  எதிரான போட்டியிலே மேற்கிந்தியா வெற்றிபெறும் நோக்கத்தை பெரிதாக கொண்டிருக்கவில்லை என்றே தெரிகிறது. அதனால் தான் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கெயில் மற்றும் முக்கிய பந்துவீச்சாளர் ரோச் க்கும் ஓய்வு வழங்கியிருந்தார்கள். காரணம் இந்தியாவுடன் வெற்றி பெறும் பட்சத்தில் அரை இறுதியிலே அவுஸ்ரேலியாவை சந்திக்க விரும்பாமையாக இருக்கலாம். பாகிஸ்தானை பொறுத்தவரை அவர்களின்  பந்துவீச்சு பலமாகவே உள்ளது எனினும் அவர்கள் துடுப்பாட்ட வரிசை பலமாக இல்லை. இது வரை இடம்பெற்ற போட்டிகளிலே ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் நிலையான ஆட்டத்தை காட்டவில்லை. மொத்தமாக இடம்பெற்ற ஆறு போட்டிகளிலே உமர் அக்மலை (211 ) தவிர வேறு எவரும் 200 ஓட்டங்களை கடக்கவில்லை. ஆறு போட்டிகளிலே விளையாடிய அப்ரிடி வெறும் 65 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டுள்ளார். எனினும் பந்துவீச்சிலே இவர் கலக்குவது அவ்வணிக்கு சற்று ஆறுதலே. நாளை அக்தரின் மீள்வருகையை எதிர்பார்க்கலாம் ஆனால் இதுவரை பெரிதாக சிறப்பாக செயற்படாத இவர் நாளை கலக்குவாரா? அதே போல, மேற்கிந்திய தீவுகளின் நிலைமையும் பந்துவீச்சில் சற்று பலமாக இருந்தாலும் அவர்களின் துடுப்பாட்டம் ஆட்டம் காண்கிறது. கிறிஸ் கேயில், சர்வான் போன்ற வீரர்கள் இருந்த போதும் துடுப்பாட்டத்திலே இதுவரை எழுச்சி இல்லை. அத்தோடு பின்வரிசை துடுப்பாட்டம் தான் இவர்களின் பலவீனமும் கூட. கெமர் ரோச் நாளை களமிறங்கும் பட்சத்தில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செயற்ப்பட்ட ராம்பால் க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றே தோன்றுகிறது. அதே போல சந்தர்போலும் அணிக்குள் உள்வாங்கப்படுவார் என்று எதிர்பார்க்கலாம்.   என்னை பொறுத்தவரை நாளைய போட்டியிலே தன் பந்துவீச்சு பலத்தால் மேற்கிந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தும் என்றே எதிர்பார்க்கிறேன். மேற்கிந்தியா தீவுகள் சார்பாக நாளைய போட்டியை கெயிலோ அல்லது கிரேன் போலர்ட்டோ தம் கையில் எடுத்துக்கொள்வார்களாயின் பாகிஸ்தான் வெளியேறுவது நிச்சயம்.
    


அதே போல அவுஸ்ரேலியாவின் தொடர் வெற்றிகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து அவர்களின் நம்பிக்கையில் ஆட்டம்காண வைத்துள்ளது பாகிஸ்தான். இனிவரும் போட்டிகளிலே அவுஸ்ரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங் துடுப்பாட்டத்தில் எழுச்சி பெற்றாலே  ஒழிய  அவ்வணி நெருக்கடிகளை எதிர்கொள்ளும்.இவர்  இதுவரை பங்குபற்றிய போட்டிகளிலே வெறும் 102 ஓட்டங்களையே பெற்றுள்ளார். எனினும்  மைக்கல் கிளார்க்கின் எழுச்சியும் ஹசியின்  மீள் வருகையும் அவுஸ்ரேலியாவுக்கு பலமே. அவுஸ்ரேலியாவின் பந்துவீச்சை பொறுத்தவரை லீயை தவிர வேறு எவரும் சிறப்பாக செயற்ப்படவில்லை. அத்தோடு சுழற்ப்பந்துவீசசு தான் அவுஸ்ரேலியாவுக்கு தற்போதைய மிகப்பெரிய பலவீனம். காலிறுதியிலே இவ்வணி இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை அவர்களின் பலமே ஆரம்ப துடுப்பாட்ட தூண்கள் தான். அவர்களை விட பின்வரிசை துடுப்பாட்டமும்  பலம் வாய்ந்ததாகவே உள்ளது. யுவராஜ் சிங் தற்சமயம் சிறந்த போர்முக்கு வந்திருப்பது கூடுதல் பலம். ஆனால் இதற்க்கு நேர் மாறாக உள்ளது இந்திய அணியின் பந்துவீச்சு. சகீர்கான் சிறப்பாக செயற்ப்பட்டாலும் முனாப் பட்டேல் பெயரளவிலே  அணியில் இருக்கிறார். ஹர்பஜன் சிங்கிடம் இன்னமும் அதிகமாகவே இந்தியா எதிர்பார்க்கிறது.



அவுஸ்ரேலியாவுக்கு எதிரான போட்டியிலே அனேகமாக இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களை இந்தியா களமிறக்கும் என்று எதிர்பார்க்கலாம். இரண்டாவது சுழல்  அஸ்வின்னா இல்லை சாவ்லாவா என்று  தெரியவில்லை. காரணம் பயிற்சி போட்டியிலே அவுஸ்ரேலியாவுக்கு எதிராக சிறப்பாக பந்துவீசியிருந்தார் சாவ்லா எனினும் அதன் பின் பங்குபற்றிய போட்டிகளிலே அவர் செயற்ப்பாடு மோசமாக இருந்துள்ளது. ஆனால் அஸ்வின் மேற்கிந்தியாவுக்கு எதிரான போட்டியிலே சிறப்பாக செயர்ப்பட்டிருந்தார்.
இந்தியாவின் பந்துவீச்சில் உள்ள பலவீனத்தை தமக்கு  சாதகமாக பயன்படுத்தும் பட்சத்தில் அவுஸ்ரேலியா தப்பித்துக்கொள்ளலாம். என்னை பொறுத்தவரை இந்திய அணிக்கே வெற்றிவாய்ப்பு உள்ளது என்று எண்ணுகிறேன். எனினும் இந்திய துடுப்பாட்ட தூண்களை ஒரேயடியாக நம்புவதற்கில்லை. ஆக இனிவரும் போட்டிகள் விறு விறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

உலகக்கிண்ணம் V - தேறுமா இங்கிலாந்து?


கடந்த உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளிலே இந்திய அணி வெளியேற காரணமாக இருந்த பங்களாதேஷ் இம்முறை இங்கிலாந்தை வெளியேற்றுமா ?
எதிர்வரும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியிலே பங்களாதேஷ் வெற்றி பெற்று , அதே நேரம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியிலே இங்கிலாந்து மிகப்பெரிய வெற்றி அடைந்து, அதே சமயம் இந்தியா எதிர்வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியிலே தோல்வி அடையுமாயின் இந்திய அணி வெளியேற வேண்டிய நிலை ஏற்படலாம். ஆனால் மேற்சொன்ன மூன்று சம்பவத்தில் ஒன்று நிகழாவிட்டாலும் இந்திய அணி காலிறுதிக்கு சென்றுவிடும். ஆக எதிர்வரும் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக இருக்கப்போகிறது. இனி இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் சிறு தொகுப்பு.



இம்மாதம் பதினோராம் திகதி மேற்கிந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு  இடையிலே இடம்பெற்ற போட்டி ஒன்றிலே மேற்கிந்திய அணி வெற்றிபெற்றது. இப்போட்டியிலே முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியா சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவான் சிமித் சிறப்பாக ஒரு சதம் அடித்தார். அத்தோடு கிரான் போலர்ட் 55 பந்துகளிலே ஐந்து சிக்ஸ்சர்கள் அடங்கலாக அதிரடியா 94 ஓட்டங்களை பெற்று சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பதிலுக்கு என்ற 275 என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 231 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவிக்கொண்டது. இப்போட்டியுடன் அயர்லாந்து தனது காலிறுதிக்கான வாய்ப்பை முற்றாக இழந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.



அயர்லாந்துடனான தோல்விக்கு பின்னர் மீண்டும் ஒரு அதிர்ச்சி தோல்வியை பெற்றுக்கொண்டது இங்கிலாந்து. இதன் மூலம் காலிறுதிக்கான வாய்ப்பு ஊசலாடுகிறது. பங்களாதேசய் பொறுத்தவரை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மோசமான தோல்வியில் இருந்து சிறு இடைவெளியிலே மீண்டெழுந்துவிட்டார்கள் என்றே கூறலாம். முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியை தமது பிடிக்குள்ளே இறுதிவரை வைத்திருந்தது பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. அவ்வணியை 225 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திக்கொண்டார்கள். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷுக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான, அதேசமயம் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார்கள். இறுதிவரை போராடி, ஷகிபுல் இஸ்லாமின் அசத்தலான ஆட்டத்துடன் பங்களாதேஷ் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் எதிர்வரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக கட்டாய வெற்றி பெறும் நிலைக்கு இங்கிலாந்து தள்ளப்பட்டுள்ளது. தோல்வி அடைய நேரிட்டால் அவ்வணி அடுத்த சுற்றில் இருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.



அடுத்து தென்னாபிரிக்க மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான  போட்டியிலே இந்தியா தனது முட்டாள் தனமான செயற்பாட்டால் எதிர்பாராத தோல்வியை பெற்றுக்கொண்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் ஆட்டத்தை 40  ஓவர்கள் வரை பார்த்தவர்கள் அவ்வணி 350 ஓட்டங்களை கடக்கும் என்றே எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால் மிடில் ஓடர் துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் 296 க்குள் சுருண்டுகொண்டது இந்திய அணி. சிறப்பான ரன் ரேட்டில் சென்றுகொண்டிருந்த போது எதற்காக டோனி பவர் பிளே ஓவரை 38 வது ஓவரிலே எடுத்தார் என்பது புரியவில்லை,பேராசை பெரு நட்டத்தில் போய் முடிந்துவிட்டது. அத்தோடு நான்காம் நிலையில் களமிறங்கி தொடர்ந்து சொதப்பும் பதானையே மீண்டும் களமிறக்கினார் டோனி. அதே போல சச்சின் காம்பீர், பதான் என்று தொடர்ச்சியாக விக்கெட்டுக்கள் விழுந்து கொண்டு இருக்கும் போது சுதாகரித்துக்கொள்ளாமல் தானும் அதிரடியாக ஆட முற்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தார் யுவராஜ் சிங். அதே போலவே அடுத்து வந்தவர்களும். பந்துவீச்சிலே சகீர்கானை தவிர அனைத்து வீரர்களும் சொதப்பினார்கள். இறுதி மூன்று ஓவர்களிலே தென்னாபிரிக்கா 29 ஓட்டங்கள் எடுக்க வேண்டி இருந்தது. இதிலே சகீர்கான் 48 வது ஓவரிலே பந்து வீசி வெறும் 4 ஓட்டங்களையே கொடுத்தார். ஆனால் முனாப்பட்டேல் மற்றும் ஆஷிஸ் நேக்ராவும் சேர்ந்து இரண்டு ஓவர்களிலே(48,49)  25 ஓட்டங்களை வாரி வழங்கி தென்னாபிரிக்காவுக்கு வெற்றியை பெற்று கொடுத்தார்கள். அதுவும் இறுதி ஓவரிலே அதிக போட்டிகளிலே விளையாடிய அனுபவம் வாய்ந்த நெக்ரா முதல் மூன்று பந்துகளிலே தென்னாபிரிக்காவின் வெற்றியை உறுதிப்படுத்தியது மிக மோசம். இந்த போட்டியை பொறுத்தவரை சச்சினின் செயற்பாடு மிகவும் அருமையாக இருந்தது 101  பந்துகளிலே தனது சதத்தை பூர்த்தி செய்தவர், முதலாவது இனிங்சில் 40  ஓவர்களும் இரண்டாவது இனிங்சிலே 50  ஓவர்களுமாக போட்டியிலே 90  ஓவர்கள் வரை  மைதானத்திலே நின்று அணிக்காக கடுமையாக பாடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 37 வயசிலும் இவர் செய்ய களத்தடுப்பு இளம் வீரர்களுக்கே சவால் விடும் வண்ணம் இருந்தது. 48 வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்த சச்சின் தனது கிரிக்கெட் வாழ்க்கையிலே சதத்திலே சதம் அடிக்க தேவைப்படுவது இன்னும் ஒரு சதமே, இது இந்த உலககிண்ண தொடரிலே இனி வரும் போட்டிகளில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கலாம்.



அடுத்து நியூசிலாந்து கனடா அணிகளுக்கு இடையிலான போட்டியிலே நியூசிலாந்து 97 ஓட்டங்களால் இலகுவான ஒரு வெற்றியை பெற்றுக்கொண்டது. மக்கலம் சதமடிக்க, ரோஸ் ரெயிலர் 44 பந்துகளில்  அதிரடியாக 74 ஓட்டங்களை பெற நியூசிலாந்து மொத்த ஓட்டங்களாக 358 ஐ எட்டி பிடித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கனடா ஓரளவு சிறப்பாக துடுப்பெடுத்தாடி 261 ஓட்டங்களையே பெற முடிந்தது.



13 திகதி இடம்பெற்ற அவுஸ்ரேலியா கென்யா அணிகளுக்கு இடையிலான போட்டியிலே அவுஸ்ரேலியா 60 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா 143/4  என்று தடுமாறிக்கொண்டிருந்த வேளையிலே மைக்கல் கிளார்க்கும், மைக் ஹசியும் இணைந்து அணியை மீட்டேடுத்தார்கள். காயத்தில் இருந்து குணமாகி பங்குபற்றிய முதல் போட்டியிலே ஹசி சிறப்பாக செயற்ப்பட்டமை சிறப்பம்சமாகும். 324 என்ற ஓட்டங்களை துரத்திய கென்யா 50 ஓவர்களிலே 6 விக்கெட்டுக்களை இழந்து 264 ஓட்டங்கள் வரையே பெற முடிந்தது. அவுஸ்ரேலியாவின் பந்துவீச்சை பொறுத்தவரை எவருமே எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயற்ப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



நெதர்லாந்துக்கு எதிராக இடம்பெற்ற போட்டியிலே பங்களாதேஷ் 6 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றது. காலிறுதியை தக்க வைப்பதற்கு இப்போட்டி பங்களாதேஷுக்கு முக்கியமான போட்டியாக அமைந்திருந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அப்துர் ரசாக்கின் சிறப்பான பந்துவீச்சு உதவியுடன் 160 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க பங்களாதேஷ் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து இலகுவாக வெற்றி இலக்கை அடைந்து கொண்டது. 



ஜிம்பாவேயுடன் மோதிய பாகிஸ்தான் மழை குறுக்கிட்டதால் டக்லத் லூவிஸ் முறைப்படி 7 விக்கெட்டுக்களால் வெற்றியை பெற்றுக்கொண்டது. அதே போல தென்னாபிரிக்க அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியிலும் தென்னாபிரிக்கா 131 ஓட்டங்களால் வெற்றியை பெற்றுக்கொண்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா ஆரம்பத்தில் தடுமாறினாலும் டுமினியின் சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் 272 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஒரு ஓட்டத்தால் பரிதாபமாக தன் சதத்தை தவறவிட்டார் டுமினி. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்தால் 142 ஓட்டங்களே பெற முடிந்து.



அவுஸ்ரேலியாவுடன் மோதிய கனடா 7 விக்கெட்டுக்களால் தோல்வியை பெற்றுக்கொண்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அவுஸ்ரேலிய வேகங்களை சமாளித்து 211 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா ஆரம்ப துடுப்பாட்டகாரர்களின் நிலையான துடுப்பாட்டம் மூலம் எவ்வித நெருக்கடிகளும் இன்றி வெற்றியை பெற்றுக்கொண்டது. 


A பிரிவை பொறுத்தவரை இலங்கை அவுஸ்ரேலியா பாகிஸ்தான் நியூசிலாந்து போன்ற அணிகள காலிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. ஆனால் B பிரிவிலே தென்னாபிரிக்காவை தவிர ஏனைய அணிகளான இந்தியா, மேற்கிந்திய தீவுகள் இங்கிலாந்து ,பங்களாதேஷ் ஆகியவற்றில் எந்த மூன்று காலிறுதிக்கு தகுதி பெறும் என்பதை நாளை இடம்பெறும் மேற்கிந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி முடிவு தீர்மானிப்பதாக அமையும். எனினும் தென்னாபிரிக்காவை பங்களாதேஷ் வெற்றி கொள்ளுமாக இருந்தால் நிலைமைகள் வேறு விதமாக மாறும் நிலை ஏற்படலாம்.

புலம்பெயர் தேசத்திலே நாம் - 2


ஆயுள் பாதி தாண்டிய வயசு இருக்கும்,
காணும் போதெல்லாம்
கைப்பிடியிலே "மனைவியை" வைத்திருப்பார்,
அவ்வளவுக்கு காதல்
அந்த மது போத்தல்கள் மீது!
ஆலமரம் போன்று பெருத்து வளர்ந்து
விசாலமாக கூரை விரித்து  நின்ற
அந்த மர நிணலே அவர் கூடு,
முகத்தை மறைக்கும் முடிகளும்
ஓட்டை விழுந்த உடைகளுமாக
பார்க்க பரிதாபமாக இருப்பதில்லை எனக்கு!
காரணம்
உயிர் வாழ ஆசைகொண்டு
நாடு விட்டு இங்கு வந்து
உயிரை குடிக்கும் விசமான
மதுவுக்கு அடிமை கொண்டு
வீடு வாசல் மனைவி மக்களுடன்
தன்னிலையும் தானிழந்தாரே தவிர,
ஊனம் என்பதே அவர் உடலில் காணோம்!

தன்னாலே தான் கெடுதல் என்பதற்கு
தன்னிலை விளக்கம் அளிப்பது போல
இருந்த அவர் தோற்றம்
சில நாளாக
என் கண்ணில் படவில்லை...!

அப்புறம் ஒருநாள்
இணையத்தில் உலாவரும் போது
கண்ணில் பட்ட செய்தி ஒன்றிலே,
"உறைந்த குளிரால்
இலங்கை தமிழர் ஒருவர்
இத்தாலிய வீதியிலே
செத்து பிணமாக இருக்கார்" என்று....!
 

உலகக்கிண்ணம் IV - அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணிகள்.

2003 றிலும் 2007 லிலும் இடம்பெற்ற உலகக்கிண்ண தொடர்களிலே அவுஸ்ரேலியா இறுதி போட்டிக்குள் நுழையும் என்பதை அநேகமானோர் ஊகிக்க கூடியதாக இருந்தது. ஆனால் இந்த உலகக்கிண்ண போட்டிகளிலே அவ்வாறான ஊகங்கள் எந்த அளவில் எடுபடும் என்பது கேள்விக்குறியே, காரணம் சமபலத்தில் உள்ள அநேக அணிகள். சமீபத்தில் பந்துவீச்சிலும் சரி துடுப்பாட்டத்திலும் சரி அசுர பலத்தோடு இருந்ததாக நம்பப்படும் தென்னாபிரிக்கா இங்கிலாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அதே போல இந்தியா அயர்லாந்திடமும் நெதர்லாந்திடமும் பெற்ற வெற்றிகள் சுலபமாக கிடைத்துவிடவில்லை. பாகிஸ்தானை சுருட்டிக்கொண்டது நியூசிலாந்து. இவ்வாறு ஆருடம் கூற முடியாத படி போட்டிகள் சென்றுகொண்டுள்ளது. தற்சமயம் அடுத்த சுற்றுக்கு செல்லும் அணிகள் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளன. இனி இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் சிறு தொகுப்பு.

இம்மாதம் 5 ம் திகதி  மிகவும் எதிர்பார்த்திருந்த இலங்கை அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான போட்டியை மழை வந்து குழப்பி ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. இதே வேளை காயம் காரணமாக விலகிய போலிஞ்சருக்கு பதிலாக அவுஸ்ரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரம் மைக் ஹசி அணியிலே இணைந்து கொண்டுள்ளமை அவ்வணியின்  துடுப்பாட்ட வரிசையை பலமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அடுத்த போட்டி இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடயிலானது, அயர்லாந்திடம் பெற்ற மோசமான தோல்விக்கு பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து இப்போட்டியிலே வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்பதுவே அநேகரின் கணிப்பாக இருந்திருக்கும். எனினும் சிறப்பான பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு  காரணமாக 6 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த போட்டியிலே பந்து வீச்சாளர்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 171 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. மீண்டும் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி இம்ரான் தகீர் தன் திறமையை நிரூபித்தார். சுலபமான இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்காவுக்கு ஆரம்பம் நன்றாகவே அமைந்திருந்தது. எனினும் 63 ஓட்டங்களை அணி பெற்றிருக்கையில்  முதல் விக்கெட்டுக்காக சிமித் ஆட்டமிழக்க அடுத்த 9 விக்கேட்டுக்களும் 102 ஓட்டங்களுக்குள் சரிந்துகொண்டன. Faf du Plessis இன் ரன் அவுட்டே  போட்டி இங்கிலாந்தின் பக்கம் சாய ஏதுவாகியது. பிரட் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை பெற்றிருந்தார். 



இங்கிலாந்துடனான  வெற்றிக்கு பின் மிகவும் உற்சாகமாக இந்தியாவை எதிர்கொண்டது அயர்லாந்து. இதிலே முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து யுவ்ராஜின் சிறப்பான பந்துவீச்சால் 207 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கெவின் ஒ பிரெயின் 9 ஓட்டங்களையே பெற்றார். சிறப்பாக பந்துவீசிய யுவராஜ் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். பதிலுக்கு இலகுவான ஓட்டங்களை துரத்திய இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி. 5 ஓட்டங்களுடன் சேவாக் ஆட்டமிழந்தார் அதன் பின் களமிறங்கிய காம்பீரும் 10 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க இந்திய சற்று தடுமாறியது. எனினும் பந்து வீச்சில் சிறப்பாக செயற்ப்பட்ட யுவராஜ் சிங் தனது நிலையான துடுப்பாட்டத்தின் மூலம் இந்தியாவை வெற்றி பெற செய்தார். கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியிலே 5 விக்கெட்டுக்களையும் 50 ஓட்டங்களையும் பெற்ற வீரர் என்ற சாதனையையும் யுவராஜ்  பதிவு செய்துகொண்டார்.



கென்யா கனடா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியிலே கனடா அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று இந்த உலககிண்ண தொடரில் தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துகொண்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய கென்யாவை 198 ஓட்டங்களுக்குள் கனடா மடக்கியது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கனடா 45 ஆவது ஓவரிலே இலக்கை அடைந்து வெற்றியை கொண்டாடியது.  இதற்க்கு முன்னைய போட்டியிலே பாகிஸ்தானுக்கு கனடா நெருக்கடி கொடுத்தது அறிந்ததே. சிறந்த பயிற்சி, அதிக போட்டிகளில் பங்குபற்றும் பட்சத்தில் கனடா எதிர்காலத்தில் சிறந்த அணியாக வலம் வரும் வாய்ப்பு உள்ளது. 



பாகிஸ்தான் சார்பாக எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலே மோசமான பந்துவீச்சால் பாகிஸ்தான் படு தோல்வி அடைந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 40 ஓவர்கள் வரை 170 ஓட்டங்களையே பெற்றிருந்தது  அடுத்த பத்து ஓவர்களிலே  ரோஸ் ரெயலரின் அனல் பறக்கும் ஆட்டத்தால் 132 ஓட்டங்களை குவித்து மொத்த எண்ணிக்கையாக 302 ஓட்டங்களுக்கு தாவியது.  இதிலே ரோஸ் ரெயிலர் ஆரம்பத்தில் மெதுவாகவும் பின்னர் அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காது 131 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதேவேளை ரெயலரின் இரண்டு பிடிகளை கோட்டை விட்டு பாகிஸ்தானின் தோல்விக்கு அடித்தளமிட்ட பெருமை கம்ரான் அக்மாலையே சாரும். பதிலுக்கு ஒரு மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அடுத்தடுத்து  விக்கெட்டுக்களையும் இழந்தது. ஆறுதலுக்கு அப்துல் ரசாக் மட்டும் 62 ஓட்டங்களை பெற பாகிஸ்தான் 192 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 110 ஓட்டங்களால் படு தோல்வி அடைந்து. இந்த உலககிண்ண தொடரிலே வேகப்பந்து வீச்சில் பாகிஸ்தான் பெரிதும் நம்பி இருக்கும்  அக்தர் இதுவரை சிறப்பாக ஆடவில்லை என்பது பாகிஸ்தானுக்கு கவலை தரும் விடயமே.



இந்தியா நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியிலே சிறிய போராட்டத்தின் பின் இந்தியா 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து  ஆரம்பம் முதலே விக்கட்டுக்களை பாதுகாப்பதில் குறியாக இருந்தது. இறுதியாக 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 198 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 36 வது ஓவரில்  5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. ஆரம்பத்தில் அதிரடியாக ஆடிய சச்சினும் சேவாக்கும் 69 ஓட்டங்களுக்கு பின் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த யூசுப் பதான், காம்பீர், கோலி குறுகிய  இடைவெளியிலே ஆட்டமிழந்தனர். எனினும் இந்த போட்டியிலும் யுவராஜ் சிங் அணியை வெற்றி இலக்கு நோக்கி  கூட்டி சென்றார். இவர் 51 ஓட்டங்களை பெற்றார். இந்த உலககிண்ண தொடரில்  இதுவரை யுவராஜ் சிங்  களமிறங்கிய மூன்று  போட்டிகளிலே வரிசையாக அடித்த மூன்றாவது அரைச்சதம் இதுவாகும். இந்திய அணியை பொறுத்தவரை யுவராஜ் சிங் பார்முக்கு திரும்பி துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் சிறப்பாக செயற்படுவது கூடுதல் பலமே. எனினும் வேக  பந்துவீச்சிலே சகீருக்கு இணையாக ஆரம்ப பவர்பிளே ஓவர்களை  சிறப்பாக  வீச யாரும் இல்லை என்பது ஒரு மிகப்பெரிய பலவீனமே.



அடுத்து இலங்கை சிம்பாவே அணிகளுக்கிடையிலான போட்டியிலே இலங்கை 139 ஓட்டங்களால் மிக பெரிய வெற்றி ஒன்றை பெற்று தனது அடுத்த சுற்றுக்கான உள்நுழைவை உறுதி செய்துகொண்டது. இதிலே முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பாக ஆரம்ப வீரர்கள் டில்சான் மற்றும் தரங்க சதம் அடித்தனர். அத்தோடு முதல் விக்கெட்டுக்காக  282 ஓட்டங்களை பெற்று உலககிண்ண போட்டிகளிலே முதல் விக்கெட்டுக்காக பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை என்ற சாதனையை பதிந்து கொண்டனர். ( உலக கிண்ண போட்டிகளிலே எந்த ஒரு விக்கட்டுக்குமான அதிகூடிய இணைப்பாட்ட சாதனையாக கங்குலி மற்றும் ராவிட் இணைந்து இலங்கைக்கு எதிராக 1999 ம் ஆண்டு உலக கிண்ண தொடரில்  இரண்டாவது விக்கட்டுக்காக பெற்ற 318 ஓட்டங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.)   தரங்காவின் ஆட்டமிழப்புக்கு  பின் அடுத்த 5 விக்கேட்டுக்களும் 26 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு இறுதி ஆறு ஓவர்களிலே 28 ஓட்டங்கள் மட்டுமே இலங்கை அணியால் பெற முடிந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாவே டில்சானின் சுழலில் சிக்கி 188 ஓட்டங்களுக்கு சுருண்டு கொண்டது. முதலாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ரெய்லர் மற்றும் சிக்கம்புரா 20 ஓவர்களிலே 116 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதிலே அதிரடியாக ஆடிய ரெய்லர் 80 ஓட்டங்களை பெற்றார். அத்தோடு சிம்பாவேயின்  இறுதி 9 விக்கேட்டுக்களும் 72 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. சிறப்பாக பந்துவீசிய டில்சான் 3 ஓவர்களிலே 4 ஓட்டங்கள் கொடுத்து  நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இதுவரை நடந்த போட்டிகளிலே புள்ளிகள் அடிப்படையில் அடுத்த  சுற்றுக்கு தெரிவாகக்கூடிய அணிகள்
A                                                                   B
இலங்கை                                  இந்தியா
நியூசிலாந்து                             இங்கிலாந்து
பாகிஸ்தான்                              மேற்கிந்திய தீவுகள்
அவுஸ்ரேலியா                        தென்னாபிரிக்கா

ஆகிய அணிகளே அடுத்த சுற்றுக்கு உள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. B அணி சார்பாக பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளை பொறுத்தவரை, இதுவரை மூன்று போட்டிகளிலே விளையாடி தலா ஒரு வெற்றியுடன் உள்ள இவ்வணிகள், கைவசமுள்ள ஏனைய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றை எதிர்பார்க்கலாம்.

உலகக்கிண்ணம் III- அவமானப்பட்ட இங்கிலாந்து (முன்னையது)

புலம்பெயர் தேசத்தில் நாம்.



என்பதுகளில் ஆரம்பித்த நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்கு  புலம்பெயரும் ஈழ தமிழரின் வாழ்க்கை, இன்று மூன்று தசாப்தம் கடந்தும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆரம்பத்திலே புலம்பெயருவதற்க்கு உள்நாட்டு யுத்தம், பொருளாதார நெருக்கடி என்ற இரு காரணிகள் முக்கியமானதாக இருந்தது. இன்று இதெல்லாம் கடந்து வெளிநாடு செல்லுவது இலட்சியமாக கொள்ளக்கூடிய அளவுக்கு வளர்ந்துவிட்டது.

இதை சாட்டாக வைத்து போலி முகவர்கள் மக்களை ஓட்டாண்டி ஆக்கி நடுத்தெருவில் விடும்  சம்பவங்களும் நடந்துகொண்டு தான் உள்ளது.
அநேகமானோர் புலம் பெயருவதற்கு விரும்பும் நாடுகள் வரிசையில் கனடா சுவிசர்லாந்து  இங்கிலாந்து பிரான்ஸ் முக்கியமாக இருக்கிறது. இதன் பிறகு ஏதாவது ஐரோப்பிய நாடு என்ற மனநிலை. ஒரு காலத்தில்அகதிகளாக வரும் மக்களுக்கு தயவு காட்டும் நிலையில் இருந்த இந்த தேசங்கள் இப்பொழுதும் எவரையுமே ஏற்க முடியாத நிலையில் உள்ளார்கள் என்பதுவே உண்மை. உதாரணமாக கனடாவிலே சன் சி  கப்பல் வருகைக்கு பின்னர் முற்றாக அகதிகளாக தம் தேசத்துக்கு வருவதை அந் நாடு எதிர்க்கிறது. அத்தோடு அங்கே வேலை வாய்ப்புக்களில் ஏற்பட்ட மிகையான வீழ்ச்சி அகதிகளை  உள் வாங்கி கொள்வதை தவிர்க்க மற்றுமொரு காரணம்.

சுவிற்சலாந்தின்  நிலை மேலும் மோசம் என்றே சொல்லலாம். சுற்றுலா பயணிகளின் சொர்க்க புரி என்று அழைக்கும் நாடு சுவிற்சலாந்து, ஆம் சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் தான் சொர்க்க புரி. ஒரு தடவை சென்று சுற்றி பார்த்து வந்தால் சரி, மாறாக அங்கே சென்று வாழ விரும்புபவர்களுக்கு இன்றைய காலத்தில் மிகவும் கடினம் தான். வேலையில்லா பிரச்சனை, அப்படி வேலை கிடைத்தாலும் வழங்கப்படும் அடிப்படை சம்பளமே அவரின் அன்றாட வாழ்க்கைக்கு மட்டு மட்டாக இருக்கும். அத்தோடு அகதி அந்தஸ்துக்கான சரியான  காரணம் இன்றி தங்கி இருப்பவர்களை திருப்பி அனுப்பும் நிலையில் தான் இன்று உள்ளது.  தற்காலிகமாக கொடுக்கப்பட்ட விசாக்கள் நிறுத்தப்பட்டு அவர்களையும் பிடித்து சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் வண்ணம் சட்டங்கள் இறுக்கமடைந்துள்ளது . இலங்கை தமிழன் ஒருவனுக்கு இந்நிலைமை ஏற்படும் போது அவன் நாட்டுக்கு திருப்பி அனுப்பபடுவான். நாட்டுக்கு சென்றதும் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்து பலகாலம் நோண்டி எடுக்கப்படுவான்(சொல்லி தெரியவேண்டியது இல்லை).

இதே போல அநேகமானோர் தேர்ந்தெடுப்பது  இங்கிலாந்து, காரணம் மாணவர்கள் விசா மூலம் சுலபமாக சென்றுவிடலாம். அவ்வாறு சென்று வேலை செய்துகொண்டே படிப்பையும் தொடரலாம். மாணவர் விசா மூலம் செல்வபவர்களுக்கு இரண்டு வருட விசா கொடுக்கப்படும். அதற்கு மேல் தங்கி இருக்க அனுமதி இல்லை. ஆனால் இன்று அதிலும் இடி விழுந்துள்ளது, அதாவது மாணவர் விசா மூலம் செல்பவர்கள் இனி அங்கே பகுதிநேர வேலை செய்யமுடியாது. இந்த சட்டம் பிரித்தானியாவில் கொண்டு வந்ததற்கு முக்கிய காரணம் அங்கே நிலவும் மிக அதிகரித்த வேலையில்லா பிரச்சனை. இவ்வாறு ஐரோப்பா முழுவதும் வேலையில்லா பிரச்சனையும் பொருளாதார நெருக்கடியும் தலைவிரித்தாடுகிறது.  நிலைமைகள் இவ்வாறு இருக்க வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்று கொடுப்பதாக கூறி மோசடி செய்யும் பேர்வழிகள் இலங்கையில் உலவுகிறார்கள். நிலைமைகளை புரிந்துக்கொண்டு மக்கள் தான் அவதானமாக இருக்க வேண்டும்.

உலகக்கிண்ணம் III- அவமானப்பட்ட இங்கிலாந்து

இந்த உலகக்கிண்ண தொடர்களிலே முதலாவது அதிர்ச்சியாக இங்கிலாந்து அயர்லாந்திடம் தோல்வியடைந்து அவமானப்பட்டுக்கொண்டது. இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு தன்னை தக்க வைப்பதற்கு அடுத்துவரும் போட்டிகளிலே (பங்களாதேஷ், தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள்) இரண்டில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.  இனி  இதுவரை  நடந்து முடிந்த போட்டிகளின் சிறு தொகுப்பு.



கடந்த மாதம் 28 ம் திகதி நடை பெற்ற மேற்கிந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியிலே மேற்கிந்தியா மிகப்பெரிய வெற்றி ஒன்றை பெற்றுக்கொண்டது.  முதலில் துடுப்பெடுத்து ஆடிய மேற்கிந்தியாவின் துடுப்பாட்டம் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக அமைந்திருந்தது. கிரான் போலர்ட் வான வேடிக்கையாக  ஐந்து சிக்ஸ்சர்களுடன் 27 பந்துகளில் பெற்ற 60 ஓட்டங்களுடன்   மேற்கிந்தியா 330 என்ற இமாலய இலக்கை எட்டியது. மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து  இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக துடுப்பெடுத்து ஆடியது போல இந்த போட்டியிலும்  ஆட மேற்கிந்திய பந்துவீச்சாளர்கள் அனுமதிக்கவில்லை. 115 ஓட்டங்களுக்கே அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தேல்வியை பெற்றுக்கொண்டது. தோம்  கோபர்  மட்டும் ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களை பெற்று அவ்வணிக்கு ஆறுதல் அளித்தார்.



 பாகிஸ்தானுடனான தோல்விக்கு பின் வென்றாகவேண்டும் என்ற கட்டாயத்துடன் இலங்கை கென்யாவுடன் மோதிய போட்டியிலே எவ்வித நெருக்கடியும் இன்றி  இலங்கை 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. நாணய சுழற்ச்சியில்  வென்று  முதலில் துடுப்பெடுத்தாடிய கென்யா மலிங்காவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாது 142 ஓட்டங்களுக்கு சுருண்டுகொண்டது. "இரண்டு ஒபுயாக்களை" தவிர துடுப்பாட்டத்தில் யாரையும் இரட்டை இலக்கத்தை தாண்ட இலங்கை பந்து வீச்சாளர்கள் அனுமதிக்கவில்லை. இலங்கை அணி சார்பாக மாலிங்க 6 விக்கெட்டுக்களை பெற்றுக்கொண்டார். அத்தோடு இப்போட்டியில் கட்றிக்  விக்கெட் பெற்றதன் மூலம் உலகக்கிண்ண போட்டிகளிலே இரண்டாவது தடவையாக தனது கேட்றிக்  சாதனையை பதிந்து கொண்டார். இதற்கு முன்னர் 2007 உலக கிண்ண போட்டிகளிலே தென்னாபிரிக்காவுக்கு எதிராக கேட்றிக் பெற்றது குறிப்பிடத்தக்கது. பதிலுக்கு அதிரடியாக துடுப்பெடுத்து ஆடிய இலங்கை பதினெட்டாவது ஓவரிலே ஒருவிக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதன் மூலம் இலங்கை அடுத்த சுற்றுக்கான தகுதியை தக்கவைத்துக்கொண்டது.




இங்கிலாந்து அயர்லாந்து அணிகளுக்கு இடையே இடம்பெற்ற போட்டி உலகக்கிண்ண வரலாற்றில் இங்கிலாந்துக்கு ஒரு அவமானகரமான போட்டி என்றே  சொல்லலாம். அயர்லாந்து அணியை குறைத்து மதிப்பிட்டதால் வந்த வினை தோல்வி. முதலில் துடுப்பெடுத்து ஆடிய இங்கிலாந்து  ரொறாட் மற்றும் இயன் பெல் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டத்தின் மூலம் 327 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். அயர்லாந்தால் இவ்வளவு பெரிய இலக்கை எட்ட முடியாது என்று முடிவு கட்டியே விளையாடியிருப்பார்கள் போல இங்கிலாந்து. அதற்க்கேற்றா போலவே முதல் 5 விக்கேட்டுக்களும்  111 ஓட்டங்களுக்குள் சாய்ந்து கொண்டது. 6 ஆவது  விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த கெவின் ஒ பிறையின் மற்றும் அலெக்ஸ்  குசாக் மிகவும் சிறப்பாக ஆடினார்கள். இதிலும் கெவின் ஒ பிறேயின் இங்கிலாந்தின் பந்துவீச்சை நிலை குலைய செய்தார். 50 பந்துகளில் சதத்தை கடந்து உலகக்கிண்ண வரலாற்றில் அதி குறைந்த பந்துகளில் சதம் பெற்ற வீரர் என்ற சாதனையை பதிவு செய்து கொண்டார். ஆறு சிக்ஸ்சர்களுடன் 113 ஓட்டங்களை பெற்ற போது  துரதிஸ்ட  வசமாக ரன் அவுட் ஆனார். இவரை தொடர்ந்து நிலையாக துடுப்பெடுத்தாடிகொண்டிருந்த அலெக்ஸ் குசாக் 47 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆகினார்.  எனினும் மூனியின் அதிரடி 33 ஓட்டங்களுடன்  49ஆவது ஓவரிலே தனது வரலாற்று வெற்றியை பெற்றுக்கொண்ட அயர்லாந்து  பரம எதிரியான இங்கிலாந்தில் முகத்தில் கரி பூசியது. இந்த போட்டி நடைபெற்ற  பாங்களூர் சின்னசாமி மைதானம்  முன்னதாக இந்தியா எடுத்த 339 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்தி சென்று இங்கிலாந்து சமநிலையின் முடித்தது அறிந்ததே. அன்றைய போட்டி போலவே இந்த போட்டியிலும் இரண்டாவதாக பந்துவீசும் அணிக்கு ஆடுகளம் சாதகமாக இருக்கவில்லை. எனினும் இந்த மிகப்பெரிய இலக்கை அனுபவம் அற்ற அயர்லாந்து அணி துரத்தி சென்று வெற்றி பெற்றது இங்கிலாந்துக்கு வரலாற்று அவமானமே. இந்த தோல்விக்கு இங்கிலாந்தின் திட்டமிடப்படாத பந்துவீச்சும் சொதப்பலான களத்தடுப்புமே முக்கிய காரணம்.   நாற்பதாவது ஓவர்களுக்கு முன்னரே  சிறப்பாக பந்துவீசிய கிரகம்  ஸ்வானின்
ஓவர்களை போட்டு முடிக்க விட்டமை, மற்றும் லட்டு போல கையிலே வந்து விழுந்த  கெவின் ஒ பிறைன் அடித்த பந்தை ஸ்ரரிஸ் பிடி எடுக்காமல் கோட்டை விட்டமை போன்று இங்கிலாந்து  தனது களத்தடுப்பிலும் பல குறைபாடுகளை விட்டு சென்றது.




அடுத்து தென்னாபிரிக்கா நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியிலே தென்னாபிரிக்கா 231 ஓட்டங்களாய் இமாலய வெற்றி பெற்று இதுவரையான போட்டிகளிலே அதிகூடிய ஓட்ட வித்தியாசத்தால் வெற்றி பெற்ற அணியாக  திகழ்கிறது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க காசிம் அமலா மற்றும்   வில்லியர்சின் அபார சதங்களுடன் 351 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.  இந்த  உலகக்கிண்ண தொடர்களிலே வில்லியர்ஸ் அடித்த இரண்டாவது சதம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. பதிலுக்கு ஆடிய நெதர்லாந்து  120 ஓட்டங்களுக்கு படுத்துக்கொண்டது. மீண்டும் சிறப்பாக பந்துவீசிய இம்ரான் தகீர் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். இந்த வெற்றி மூலம் தென்னாபிரிக்க அடுத்த சுற்றுக்கு தன்னை உறுதிப்படுத்திக்கொண்டாமை குறிப்பிடத்தக்கது.



பாகிஸ்தான் கனடா அணிகளுக்கு இடையேயான போட்டியிலே அப்ரிடியின் சுழலால் பாகிஸ்தான் தப்பித்துக்கொண்டது. இதன்  மூலம் ஒரு வெற்றி பெறக்கூடிய அருமையான வாய்ப்பை கோட்டை விட்டது கனடா.  இந்த போட்டியிலே துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் கனடாவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாது 184 ஓட்டங்களுக்குள் சுருண்டு கொண்டது. ஆக கூடுதலாக உமர் அக்மல் 48 ஓட்டங்களை பெற்றார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கனடா அப்ரிடியின் சுழலுக்கு தாக்குப்பிடிக்க முடியாது 138 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது. அப்ரிடி மீண்டும் சிறப்பாக பந்து வீசி  5 விக்கெட்டுக்களை பெற்றுக்கொண்டார்.  இந்த போட்டியிலே அக்தர் விளையாடாது குறிப்பிடத்தக்கது.



பங்களாதேஷ் சார்பாக பெரிய எதிர்பார்ப்புடன் இடம்பெற்ற மேற்கிந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியிலே  மேற்கிந்தியா மிகவும் அபாரமாக வெற்றிகொண்டது. போட்டிக்கு முன்னர் வாய்சவாடல் விட்ட பங்களாதேஷ் வீரர்கள் மேற்கிந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாது 58 ஓட்டங்களுக்குள் சுருண்டுகொண்டனர்.  பங்களாதேஷ்ன்  துடுப்பாட்டத்தில் இரண்டு வீரர்களை தவிர எவரும் இரட்டை இலக்கத்தை தாண்ட முடியவில்லை.  பதிலுக்கு ஆடிய மேற்கிந்தியா கைலின் அதிரடி 37 ஓட்டங்களுடன் 12 ஆவது ஓவரிலே வெற்றியை பெற்றுக்கொண்டது.



அடுத்து இந்த உலககிண்ண தொடரிலே இரண்டாவது தடவையாக பத்து விக்கெட்களுடனான வெற்றியை பதிவு செய்து கொண்டது நியூசிலாந்து.  சிம்பாவேக்கு எதிரான போட்டியிலே நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாவே 162 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து கொண்டது. பதிலுக்கு களமிறங்கிய நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கை அடைந்தது.

இங்கிலாந்தை பொறுத்த வரை அடுத்து வரும் மூன்று  போட்டிகளிலே   நெதர்லாந்தை வெற்றி கொண்டாலும், மேற்கிந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளை வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியே. அத்தோடு இன்னும் நான்கு போட்டிகள் மீதமுள்ள அயர்லாந்து அணி அதில் இரண்டில் வெற்றி பெற்றால்  அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை எதிர்பார்க்கலாம்.

இரண்டு பெண்கள்!


கருங்கூந்தல் முடி விரித்து
அதில் நறுமண  மலர்கள்  சூடி
கண்ணுக்கு மை போட்டு
காலில் இரு கொலுசு மாட்டி
நெற்றி மஞ்சள் திலகம் இட்டு
நிமிர்ந்த நின் பார்வையோடு
அன்ன நடை நீ  வாங்கி
வீதியோரம் நடந்து வந்தால்
விபத்துக்கள் அதிகமடி
பெண்ணே..!




கருங்கூந்தல் முடி வளர்த்து
அதில் வர்ண  கலரிங் பூசி
காதில் இரு வளையம் மாட்டி
கழுத்திலே நாலு செயின் பூட்டி
வாய் உதட்டு சாயம் போட்டு
வாசனை திரவியங்கள் சகிதம்
மின்னல் நடை கொண்டு
வீதியிலே நீ  நடந்தால்
விசில் சத்தம் ஏராளம்
பெண்ணே.