முற்போக்குவாதிகளின் "மேட்டுக்குடி"


பூனை குறுக்கால் போனாலும்
எதிர்க்கட்சிகாரன் சதி - என
சொல்லி அங்கலாய்க்கும்
ஆளும் கட்சிகள் போல

மக்கள் மனங்களில்,
நடைமுறைகளில் 
சில நல்ல மாற்றங்கள் தெரிந்தாலும்
பொறுத்துக்கொள்ள முடியாதவராய்
"மேட்டுக்குடியின் சூழ்ச்சி இது"
என்று சொல்லி முகம்சுழிக்கும்
"முற்போக்குவாதிகள்"

கால மாற்றத்தில் 
மக்களிடையே ஏற்படும்
சாதி பேதம்,ஏற்ற தாழ்வுகள்
ம(ற)றைந்து போக முற்பட்டாலும்
இழுத்து பிடித்து பழமைகளிலே நிற்கும்
மார்க்சிச போலிவாதிகள், 
ஊர் இரண்டுபட்டால் தானே
கூத்தாடிகளுக்கு
கொண்டாட்டமும் பிளைப்புக்களும்..!

இன்னும் எனக்கேன் தடைகள்..?


இரு  நிலவுகள் ஒன்றாகி சிலிர்க்கின்றது
சில நினைவுகள் நெஞ்சோடு துளிர்கின்றது
சித்தம்  இழந்து, சுயம் மறந்து
வரம் ஒன்று கேட்க மனம் துடிக்கின்றது.

பட்டாம் பூச்சி இறக்கையாய் கனவுகள்
கண்விழித்து பார்த்தால் வெறும் சுமைகள்  
சுமந்து செல்ல, சுகத்தை வெல்ல
வேண்டும் காதல் சிலுவைகள்.

எழுதுகோல் முனையில் எண்ணங்கள் 
எழுதிட வேண்டும் இவள் கன்னங்கள்.
படித்து பார்த்து, மடித்து வைக்க
இரு  உதடுகள் தேன் கிண்ணங்கள்.

இரு விழி மேல் கொண்ட பிறைகள்
இரவிலும் எனக்கவை சிறைகள்
விட்டு  வர, விலகியிருக்க
இன்னும் எனக்கேன் தடைகள்?!

வழி தேடும் தொடர் பயணங்கள்
விழி மேலே இவள்  சலனங்கள்
நடந்து செல்ல, தொடர்ந்து செல்ல
வேண்டும் சில ஜனனங்கள்..

விஜயகாந்துக்கு அப்புறம் யார்?... கேள்விக்கு விடை கிடைத்தது!

கேப்டன் விஜயகாந்துக்கு அப்புறம் இந்தியாவை தீவிரவாதிங்ககிட்ட இருந்து  காப்பாற்ற போவது யார்  என்ற கேள்வி எல்லோர் மனதிலும் தெக்கு நிற்க.. நான் இருக்கேன் என்ற குரல் அதே கேப்டனின் வீட்டில் இருந்து கம்பீரமாய் வருகிறது. எட்டி பார்த்தா நெஞ்ச நிமிர்த்தி, கைகளை முறுக்கி ஒரு உருவம்.. 'அது என் இரண்டாவது மவன் தான்' என்று கரகரத்த குரலில் சொல்லியவாறே கேப்டன் வெளியே வந்தார். இது சம்மந்தமாக கேப்டனிடம் சில கேள்விகள்..

''படிப்பே முடிக்கலை... அதுக்குள்ள சினிமாவா?''
ஆரம்பத்தில எனக்கும் இந்த டவுட்டு வந்திச்சு, ஆனா ஒருநாள் நைட்டு 'புல்லா போத்தி(ட்டு)ட்டு' படுத்து கிடந்து ஜோசிச்சு பார்த்தன்.. "நம்மளுக்கும் இப்போ வயசாகிடிச்சு! இப்பெல்லாம் முன்ன மாதிரி இந்தியாவுக்குள்ள வர்ற தீவிரவாதிங்கள துரத்தி பிடிச்சு பென்ட கழட்ட முடியுதில்ல! அதோட, சட்ட சபைக்க போய் அந்த அம்மாக்கூட சண்டை போடுறதிலே தாவு தீர்ந்து போயிடுது. அதால நீண்ட நாளாயே எனக்கப்புறம் இந்தியாவ காப்பாற்றுறது யாரு? என்ற கேள்வி ரணமாய் எனக்குள்ளும் கொதிச்சுட்டு தான் இருந்திச்சு!

இப்ப, இந்த நேரத்தில என் ரண்டாவது மவன் வந்து 'அப்பா நா இருக்கேன்'னு சொன்னப்போ அப்புடியே மூணு பெக் அடிச்சுட்டு வானத்தில பறக்குற போல இருக்கு. படிப்பு  முக்கியமா?, இல்லை இந்தியாவின் பாதுகாப்பு முக்கியமா?னு  வந்தப்போது எனக்கு இந்தியாவின் பாதுகாப்பு தான் முக்கியம்னு தோணிச்சு.. நானும் சம்மதிச்சிட்டன். (நாப்பது தீவிரவாதிங்க ரவுண்டு கட்டி அடிச்சப்போ கூட வாராத கண்ணீர் இப்போ கேப்டனின் கண்களை குளமாக்குகிறது)


''டைரக்டர், ஹீரோயின் எல்லாம் ஃபிக்ஸ் பண்ணிட்டீங்களா?''
நீ நான்னு டைரக்டர்கள் போட்டி போட்டு வந்து கியூவில் நிக்கிறாங்க! சமீபத்தில இயக்குனர் சங்கர் எந்திரன் 'பார்ட் ரூ' வ என் மவன வச்சு தான் எடுக்கணும்'னு சொல்லி ஒரு நாலு நாளாய் வந்து போய்க்கிட்டு இருந்தாரு. இருந்தாலும் அவற்ற கதையில இந்தியாவ காப்பாற்றுற மாதிரி எந்த சீனும் இல்லயாம். அதால வேண்டாம்னு சொல்லிப்புட்டன். நமக்கு இந்தியாவின் பாதுகாப்பு தான் முக்கியம். 

தென்னிந்திய சினிமாவிலே என் மவனுக்கு  ஏத்த ஜோடி நமீதா தான். ஆனா  என் மவனோ ஏஞ்சலினா ஜோலி, எமி ஜாக்சன்'னு இங்கிலீசு பொண்ணுக தான் வேணும்'னு ஒத்த காலில நிக்கான்! ஏண்டா அப்பிடி?'ன்னு கேட்டன்! அப்புறமா தான் தெரிஞ்சுது 'பையன் ரொமாண்டிக் மூட்டில இருக்கான்'னு.

''தம்பிக்கு நடிப்புல நீங்கதான் ரோல் மாடலா?''
ஆமா  சார்! அடிச்சும் கேட்டன், ஓதச்சும் கேட்டன்...எப்பிடி தான் கேட்டாலும்  "நீ தா'ப்பா என் ரோல் மாடலு" அப்பிடின்னு சொல்லி ஓ'ன்னு அழுகிறான். சரி, அப்பாக்கு அப்புறமா யாரையடா பிடிக்கும்?னு கேட்டா ... 'ஓங்க தலைவிய தான்'னு சொல்லி சிரிப்பான். ஆனா அந்த சிரிப்பின் அர்த்தத தான் இதுவரை என்னால புரிஞ்சுக்க முடியுதில்ல!
 
இருந்தாலும் எனக்கு ஒருடவுட்டு! சமீபத்தில பவர் ஸ்டார்'னு ஒரு ரொமாண்டிக் ஹீரோவின் லத்திகா'ன்ன படத்தை ஏழெட்டு வாட்டி பாத்திருக்கானாம். ஒருவேள எதிர்காலத்தில அவர போல ரொமாண்டிக் ஹீரோவா வந்துப்புடுவானோ'ன்ன கவலையும் உள்ளுக்குள்ள இருந்துக்கிட்டு தான் இருக்கு.  அந்த பயத்தில இப்போ அவன் மூட் மாறாம இருக்கணும்னு  அவன செயார்ல கட்டி வச்சு வல்லரசு, விருதகிரி போன்ற என் ஆக்ஷன் படங்களை திரும்ப திரும்ப போட்டு காட்டி வாறன். அதுக்கு நல்ல பலனும் கெடைச்சிருக்கு.

'' 'விஜயராஜ்’ சினிமாவுக்காக விஜயகாந்த் ஆனார். 'சண்முகபாண்டியன்’ பேர் மாற்றத்துக்கு உள்ளாகுமா?''
பெயர்  மாற்றி நடிப்பதில எனக்கு இஸ்டமில்ல. அவன் சொந்த பேர்ல நடிச்சு இந்தியான்ர பேர காப்பாத்தனும்! அதோட தமிழ் சினிமாவில நா விட்டு போன இடத்தை அவன் தான் நிரப்பனும். கடைசி நேரத்தில தமிழ் சினிமா ரசிகர்கள் என்கிட்ட நிறைய எதிர்பார்த்தாங்க! ஆனா அரசியலில் நான் பிசியாகிட்டன். இப்போ அந்த எதிர்பார்ப்பை எல்லாம் என் பையன் நிரப்புவான் என்ற நம்பிக்கை எனக்கு வந்திடிச்சு.


''உங்க இயக்கத்திலேயே அறிமுகப்படுத்திடலாமே...''  
என் இயக்கத்தில அறிமுகப்படுத்திற அளவுக்கு அவன் இன்னும் பக்குவப்படல்ல! ஆனா எதிர்காலத்தில விருதகிரி பார்ட் ரூ எடுக்கிற பிளான் இருக்கு. ஏன்னா என்னை வளர்த்துவிட்டு, எதிர்க்கட்சி தலைவர்'ன பதவியையும் கொடுத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு என்னாலான நன்றிக்கடனை செய்து தானே ஆகணும்.