தேவையற்ற விளம்பரங்களை தடை செய்ய


இன்று  விளம்பரம் என்பது  நமது வாழ்க்கையில் ஒரு  அங்கமாக  மாறி விட்டது.வீதியால் செல்லும் போது காணும் இடம்  எல்லாம் விளம்பரம். தொலைக்காட்சி  பார்க்கும் போது சொல்லவே வேண்டாம். அதே போல இணயத்திலே இதன் தொல்லை அதிகம் எனலாம். நாம் ஒரு வலைத்தளத்தை  பார்க்க திறக்கும் போது அவ் வலைத்தலத்துடன் சேர்ந்து  பல்வேறு விளம்பரங்களும் தோன்றிவெறுப்பை கொடுக்கும். அதுவும் சிறுவர்கள்பார்க்க கூடாத விளம்பரங்களும் சில சமயங்களில் வந்திவிடும்.
முதலாவதாக  பாப் அப் வகை. இவை புதிய ஒரு விண்டோவில், நாம் பார்க்கும் இணைய தளங்களுக்கு மேலாக தோன்றுகின்றன.  எதிர்பார்க்காத நேரத்தில் வந்து, மறையாமல் அடம் பிடிக்கும்  இவற்றை அனைவருமே விரும்புவதில்லை. அடுத்த வகை சிறிய படங்களாக, தளங்களில் ஊடுறுவும் கட்டங்கள்.

இவற்றை தடுப்பதற்கு ஒருவழி உள்ளது. https://addons.mozilla.org/en-US/firefox/addon/1865/ என்னும் இந்த தளத்துக்கு சென்று ஆட் பிளாக் ப்ளஸ் (Ad Block Plus) என்ற ஆட் ஆன் தொகுப்பினை, டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடவும். இவை உங்களுக்கு 99 % பயனை தருகின்றன.


0 கருத்து:

Post a Comment