இந்தியாவால் உருவாக்கப்பட்டுள்ள முதலாவது web browser


இந்தியாவால் உருவாக்கப்பட்டுள்ள முதலாவது web browser epic . (Hidden Reflex)    என்னும் நிறுவனம் இந்த பிரவுசரை உருவாக்கி யூலை 14 அன்று வெளியிட்டு உள்ளது.இந்த பிரவுசர் fire fox ஐ தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.இதில் தமிழ் உட்பட 12 பிற மொழிகளை நாம் பயன் படுத்தலாம்.

அத்தோடு இதன் சிறப்பு அம்சம் என்னவெனில்,இந்த பிரவுசருடன் இணைக்கப்பட்டுள்ள அன்டி வைரஸ் ஆகும். நாம் எந்த file ஐ  download செய்தாலும் பிரவுசரில் உள்ள அன்டி வைரஸில் scan செய்த பிறகே நம் கணனியில் ஏற்றப்படும்.  மற்றும்  இந்த பிரவுசரில் 1500 இறக்கும் மேற்ப்பட்ட wallpaper உள்ளது. நாம் இந்த பிரவுசரை  install பண்ணிய பிறகு எமக்கு பிடித்தது போல அழகுபடுத்துகொள்ளலாம். அத்தோடு இதன் இடது பக்கத்தில் ஓரமாக உள்ள கட்டத்தில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. face book ,twitter ,writer ,gmail ,yahoo ,games மற்றும் பல (கிரிக்கெட் score கூட online இல் பார்க்கலாம்).  இந்த பிரவுசரிலேயே ஒரு சிறிய விண்டோவில் யு–ட்யூப் தளத்தினை இயக்கி வீடியோ கிளிப்களைப் பார்க்கலாம். இன்னும் பல வசதிகள் உள்ளது. 

 நம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் எழுத வசதியுள்ளது என்ற காரணத்துக்காகவே இதை பாவிக்கலாம் என்பது என்னுடைய கருத்து. http://www.epicbrowser.com/                 

0 கருத்து:

Post a Comment