youtube யில் இருந்து வீடியோக்களை சுலபமாக தரவிறக்க..

Youtube, Metacafe தளங்களில் இருந்து வீடியோகளை download செய்ய நிறைய மென்பொருள்கள் உள்ளன. உதாரணமாக youtube downloader அனைவரும் அறிந்த ஒரு பிரபல்யமான மென்பொருள் .இதை தவிர இன்னும் நிறைய மென்பொருள்களும் உள்ளன. ஆனால் நாம் இங்கே பார்க்க போவது நெருப்பு நரியில்(fire fox ) addon மூலம் சுலபமாக  youtube வீடியோக்களை எவ்வாறு  download செய்வது என்று.  முதலில்  நீங்கள் bytubed என்னும் ஒரு   addon   உங்கள் நெருப்பு நரியில் (firefox ) நிறுவிக்கொள்ளுங்கள்.
அடுத்து youtube தளத்துக்கு சென்று உங்களுக்கு  விருப்பமான விடியோவை search செய்துகொள்ளுங்கள்.அடுத்து உங்கள் நெருப்பு நரியில் tool > bytubed   என்பதை கிளிக் செய்யுங்கள்.  உங்களுக்கு  கீழ் கண்டது போல ஒரு பட்டியல் தோன்றும் இங்கே நீங்கள் youtube யில் search  செய்த பக்கத்தில் உள்ள அனைத்து வீடியோக்களும் தோன்றும்.
 
இங்கே நீங்கள் தரவிறக்கும்  வீடியோவை  தெரிவுசெய்து  ,கீழே உள்ளது போல  flv or  mp4 ஆகவா தரவிறக்க வேண்டும் என்பதையும் தெரிவுசெய்த பின் start ஐ அழுத்துங்கள்.இப்பொழுது  நீங்கள் விரும்பிய வீடியோ தரவிறக்கப்படும்.(இது  Firefox 3.0 - 3.6. ஆகிய  பதிப்புக்களுக்கும் மற்றும் epic இயங்குதளத்துக்கும் சிறப்பாக செயற்படுகிறது )  தரவிறக்க

0 கருத்து:

Post a Comment