நாம் தமிழர்கள் கதைக்கிறோம்.....!






நாம் தமிழர்கள் கதைக்கிறோம்.....!

மானிட வர்க்கத்தில்
நாமும் ஒரு பகுதி தான்!
"தமிழர் " என்று
அடையாளப்பெயர் நமக்கு!
இருந்தும்
அதிகமானோர் விழிக்கும் பெயர்
"அகதிகள்"

உலகப்பந்திலே
எட்டுக்கோடி பேர்
நாம்!-இதில்
சில கோடி
உணர்வுகள் அற்ற
பிணங்களாகவும்,
பலகோடி
உரிமைகள் அற்ற
ஜடங்களாகவும்..!

எந்த ஒரு அழிவிலிருந்தும்
விரைவாக மீண்டுவிடுவோம்!,
காரணம்
அழிவென்பதே வாழ்வான போது
வாழப்பழகிக்கொண்டோம்!-இதுவே
எமது பலமும் கூட...!

ஏறித்தப்பவிடாது
ஒன்றன் பின் ஒன்றாக
காலைப்பிடித்து இழுத்துவிடும்
பெட்டிக்குள் அடைபட்ட
நண்டுகள் போல நம் குணம் !-இதுவே
நமது பலவீனம்...

சில லட்சம்
சாகும் போது,
பல லட்சம்
சினிமா பார்த்து  மகிழ்ந்தது,
எம் சமீபத்திய சாதனை!-இதை
உணர்வுகொண்ட  சிலரும்
தடுக்க முடியாமல் போன
இயலாமை, வேதனை..

அண்டத்தின்
மூலை முடுக்கு எங்கும்
நாம் இருக்கோம்! ஆனால்
நமக்கென்று இங்கே
யார் இருக்கா....?


பல்வேறு ஜோசனை கொண்டு
பதை வழியே நடந்தாலும்
பவுத்திரமாய் வீடு போய் சேரும்
நம் கால்கள் போல,
எமது  அன்றாட இருப்பும்  தொடர்கிறது.

நேற்று இஸ்ரேலில் இருந்து
இன்று எகிப்து வரை....
நம்பிக்கையுடன்...!

நாம் தமிழர்கள் கதைக்கிறோம்..!

6 comments:

  1. அந்த நம்பிக்கையை தவறவிடாமல் இருப்போம்...

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி ...

    ReplyDelete
  3. பெற்றவளின் பிறந்தநாள் மறந்திருப்போம் ஆடைஅவிழ்க்கும் பிசினின் பிறந்தநாளை மறவாது கொண்டாடுவோம்.பக்கத்த வீட்டு பாப்பா பசியில் பாலின்றி கதறியழ கருங்கல்லுக்கும், நடிகனின் தலைக்கும் பாலுற்றுவோம். பக்கத்திலே அவலக்குரல்கேட்க விஐயின் அடுத்த படம் எந்த நடிகையுடன் என கவலைப்படுவோம். ஐநூறு மீனவர்கள் மரணித்தால் என்ன அடுத்த உலகக் கிண்ணம் யாருக்கு? இது இன்றைய தமிழனின் முக்கிய கவலை. யாரோ வேலை வெட்டி இல்லாத பயல் சொன்னான் தமிழராய் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டும் என்று. இன்று சின்னாபின்னப்பட்டு நிற்கின்றோம் நாம் நம்மால்.

    ReplyDelete
  4. எல்லாமே மாறிப்போச்சு இப்போ. காலம் கலிகாலம்னு புலம்பத்தான் தோணுது.

    ReplyDelete
  5. ஏறித்தப்பவிடாது
    ஒன்றன் பின் ஒன்றாக
    காலைப்பிடித்து இழுத்துவிடும்
    பெட்டிக்குள் அடைபட்ட
    நண்டுகள் போல நம் குணம் !-இதுவே
    நமது பலவீனம்...//
    இன்றய நிலைமைக்கும் அது தான் காரணம்.

    ReplyDelete
  6. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றிகள் ..

    ReplyDelete