கொடூரமானவனா! விளக்கம் வேணும்..!!


உலகிலே மதம் என்ற முகமூடி அணிந்து எவ்வளவோ  கொடூரங்கள் நடந்துகொண்டு உள்ளது. சமீப காலத்துக்கு முன்  குடும்ப வறுமை காரணமாக தன் மகளை  தலிபான் அமைப்பை சேர்ந்த ஒருவருக்கு தகப்பன் திருமணம் செய்து வைத்துள்ளார். எனினும் கணவனின் கொடுமை தாங்க முடியாது அந்த பெண்ணும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். சில நாட்களின் பின் கணவனால் அந்த பெண் கண்டுபிடிக்க பட,வீட்டை விட்டு வெளியேறிய குற்றத்துக்காக தலிபான் அமைப்பை சேர்ந்த கணவனும் வேறு சிலரும் இணைந்து அந்த பெண்ணின் மூக்கை வெட்டி எறிந்துள்ளனர். இது எவ்வளவு பெரிய கொடுமையான விடயம். நீண்ட நாள் இடைவெளியின் பின்னரே இந்தசம்பவம் ஊடகங்கள் மூலமாக வெளிக்கொணரப்பட்டது. பார்ப்பவர்களை நெஞ்சு கனக்க வைத்தது. 



 ராமாயணம் என்ற புராணத்திலும் இப்படி ஒரு கொடூரம் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த கொடூரத்தை செய்தவர்களை நாம் கடவுளாக ஏற்றுக்கொள்கிறோமா? ராமாயணத்திலே குடும்ப பதவி இழுபறி காரணமாக வனவாசம் செல்கிறான் இராமன். வனத்திலே தங்கி இருக்கும் காலப்பகுதியில் இராவணனின் தங்கை  சூர்ப்பனகை என்ற பெண்ணின் கண்களில் இராமன் படவே அவன் மீது மோகம் கொண்டு தன்னை திருமணம் செய்துகொள்ளும் வண்ணம் தன் விருப்பத்தை இராமனிடம்  தெரிவிக்க, இதனை அறிந்து கடுப்பான இலட்சுமணன் அந்த பெண்ணின் மூக்கை அறுத்துவிடுகிறான்...! 
இது நியாயமான செயலா?
ஒரு பெண்ணின் மூக்கை அறுத்தால் அந்த பெண் எவ்வாறு சமூகத்தில் நடமாட முடியும் என்பதை மேலே உள்ள  பெண்ணை நீங்கள் மனிதில் வைத்து ஊகிக்க முடியும்.  






இலட்சுமணனை பொறுத்தவரை இரண்டாம் திருமணம் என்பது  ஒரு அநீதியான செயல் என்று எண்ண வாய்ப்பு உள்ளதா?  காரணம் அவனின் தகப்பன் தசரதனுக்கு மூன்று மனைவிகள்:-)    (அதிகம் என்றும் சொல்லப்படுகிறது)

மூக்கு அறுபட்ட சூர்ப்பனகை இராம இலட்சுமணனை பழிவாங்க  இராவணனை பயன்படுத்தி, அவனை சீதை மீது மோகம் கொள்ள வைத்து,  அவர்களை  பழி தீர்க்க எண்ணியதாக இராமாயணம் கூறுகிறது. இங்கே தான் ஆரியம் தன் வஞ்சகத்தை தீர்த்துள்ளதா?


( அன்று அந்த பெண்ணின் செய்தியை படித்த போது என் மனதில் தோன்றிய கேள்வி..! )

6 comments:

  1. உலகிலே மதம் என்ற முகமூடி அணிந்து எவ்வளவோ கொடூரங்கள் நடந்துகொண்டு உள்ளது.//
    மதத்தின் பெயரால் நட்க்கும் கொடூரங்கள் கண்டிக்கத்தக்கவை.

    ReplyDelete
  2. வணக்கம் சகோ, மூக்கை அறுத்தல் என்பதோ, பெண்களைத் துன்புறுத்தல் என்பதோ நியாயமான விடயமில்லை. ஆனாலும் காலாதி காலமாக எமது ஆணாதிக்கச் சமூகம் தங்களின் இருப்பினை நியாயப்படுத்த இத்தகைய இழி செயல்களைச் செய்து வருகிறது. உங்களின் பதிவில் உள்ள கேள்விகள் காத்திரமானவை. அதனோடு சேர்த்து ஒரு சில விடயங்களை நான் முன் வைக்கிறேன். ஒரு ஆணை ஒரு பெண் கூட்டத்தின் மத்தியில் கை நீட்டி அடித்து விட்டால் இந்தச் சமூகம் அந்தப் பெண்ணை என்ன நோக்கோடு பார்க்கிறது?
    அவளை என்னடி ‘ஒரு ஆம்பிளைய கை நீட்டி அடிச்சிட்டியா என்று ஏசி அசிங்கப்படுத்தி, வில்லி போல காண்பிக்கும் இவ் உலகில் ஆண்களின் ஆதிக்கவாதம், சமூக அந்தஸ்து எனும் மாயைகளின் கீழ் பெண்கள் என்போர் அடக்கி நசுக்கப்படுகிறாள் என்பதே எனது பார்வை.

    ReplyDelete
  3. இதனை விடவும் இழிவான வேலையினை இந்தியாவின் ஒரு மாநிலத்தில், பஞ்சாயத்து கூடி, தாழ்ந்த குலத்தவர்கள் என சமூகத்தால் முத்திரை குத்தப்பட்டவர்களுடன் ஓடிப் போய் திருமணம் செய்த குற்றத்திற்காக கூட்டமாக சேர்ந்து அடித்து துன்புறுதியுள்ள வீடியோ ஒன்றை யூடியுப்பில் பார்த்தேன். மீண்டும் தேடிக் கிடைக்கும் போது லிங்கை அனுப்புகிறேன்,

    ReplyDelete
  4. உங்களுடைய காத்திரமான கேள்விகளும், பதிவுகளும், எழுத்துக்களும் இன்னும் பல பேரைச் சென்றடைய வேண்டும் என்பதே என் அவா. தமிழ்மணத்தில் உங்கள் பதிவினை இணைத்தால் தமிழ் நாட்டு உள்ளங்களும் இப் பதிவு தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.

    http://www.tamilmanam.net/user_blog_submission.php

    http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html
    இது பற்றி சந்தேகங்கள் இருந்தால் nirupan.blogger@gmail.com இற்கு மின்னஞ்சல் அனுப்புங்கோ.

    ReplyDelete