உலகக்கிண்ணம் III- அவமானப்பட்ட இங்கிலாந்து

இந்த உலகக்கிண்ண தொடர்களிலே முதலாவது அதிர்ச்சியாக இங்கிலாந்து அயர்லாந்திடம் தோல்வியடைந்து அவமானப்பட்டுக்கொண்டது. இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு தன்னை தக்க வைப்பதற்கு அடுத்துவரும் போட்டிகளிலே (பங்களாதேஷ், தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள்) இரண்டில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.  இனி  இதுவரை  நடந்து முடிந்த போட்டிகளின் சிறு தொகுப்பு.



கடந்த மாதம் 28 ம் திகதி நடை பெற்ற மேற்கிந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியிலே மேற்கிந்தியா மிகப்பெரிய வெற்றி ஒன்றை பெற்றுக்கொண்டது.  முதலில் துடுப்பெடுத்து ஆடிய மேற்கிந்தியாவின் துடுப்பாட்டம் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக அமைந்திருந்தது. கிரான் போலர்ட் வான வேடிக்கையாக  ஐந்து சிக்ஸ்சர்களுடன் 27 பந்துகளில் பெற்ற 60 ஓட்டங்களுடன்   மேற்கிந்தியா 330 என்ற இமாலய இலக்கை எட்டியது. மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து  இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக துடுப்பெடுத்து ஆடியது போல இந்த போட்டியிலும்  ஆட மேற்கிந்திய பந்துவீச்சாளர்கள் அனுமதிக்கவில்லை. 115 ஓட்டங்களுக்கே அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தேல்வியை பெற்றுக்கொண்டது. தோம்  கோபர்  மட்டும் ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களை பெற்று அவ்வணிக்கு ஆறுதல் அளித்தார்.



 பாகிஸ்தானுடனான தோல்விக்கு பின் வென்றாகவேண்டும் என்ற கட்டாயத்துடன் இலங்கை கென்யாவுடன் மோதிய போட்டியிலே எவ்வித நெருக்கடியும் இன்றி  இலங்கை 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. நாணய சுழற்ச்சியில்  வென்று  முதலில் துடுப்பெடுத்தாடிய கென்யா மலிங்காவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாது 142 ஓட்டங்களுக்கு சுருண்டுகொண்டது. "இரண்டு ஒபுயாக்களை" தவிர துடுப்பாட்டத்தில் யாரையும் இரட்டை இலக்கத்தை தாண்ட இலங்கை பந்து வீச்சாளர்கள் அனுமதிக்கவில்லை. இலங்கை அணி சார்பாக மாலிங்க 6 விக்கெட்டுக்களை பெற்றுக்கொண்டார். அத்தோடு இப்போட்டியில் கட்றிக்  விக்கெட் பெற்றதன் மூலம் உலகக்கிண்ண போட்டிகளிலே இரண்டாவது தடவையாக தனது கேட்றிக்  சாதனையை பதிந்து கொண்டார். இதற்கு முன்னர் 2007 உலக கிண்ண போட்டிகளிலே தென்னாபிரிக்காவுக்கு எதிராக கேட்றிக் பெற்றது குறிப்பிடத்தக்கது. பதிலுக்கு அதிரடியாக துடுப்பெடுத்து ஆடிய இலங்கை பதினெட்டாவது ஓவரிலே ஒருவிக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதன் மூலம் இலங்கை அடுத்த சுற்றுக்கான தகுதியை தக்கவைத்துக்கொண்டது.




இங்கிலாந்து அயர்லாந்து அணிகளுக்கு இடையே இடம்பெற்ற போட்டி உலகக்கிண்ண வரலாற்றில் இங்கிலாந்துக்கு ஒரு அவமானகரமான போட்டி என்றே  சொல்லலாம். அயர்லாந்து அணியை குறைத்து மதிப்பிட்டதால் வந்த வினை தோல்வி. முதலில் துடுப்பெடுத்து ஆடிய இங்கிலாந்து  ரொறாட் மற்றும் இயன் பெல் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டத்தின் மூலம் 327 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். அயர்லாந்தால் இவ்வளவு பெரிய இலக்கை எட்ட முடியாது என்று முடிவு கட்டியே விளையாடியிருப்பார்கள் போல இங்கிலாந்து. அதற்க்கேற்றா போலவே முதல் 5 விக்கேட்டுக்களும்  111 ஓட்டங்களுக்குள் சாய்ந்து கொண்டது. 6 ஆவது  விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த கெவின் ஒ பிறையின் மற்றும் அலெக்ஸ்  குசாக் மிகவும் சிறப்பாக ஆடினார்கள். இதிலும் கெவின் ஒ பிறேயின் இங்கிலாந்தின் பந்துவீச்சை நிலை குலைய செய்தார். 50 பந்துகளில் சதத்தை கடந்து உலகக்கிண்ண வரலாற்றில் அதி குறைந்த பந்துகளில் சதம் பெற்ற வீரர் என்ற சாதனையை பதிவு செய்து கொண்டார். ஆறு சிக்ஸ்சர்களுடன் 113 ஓட்டங்களை பெற்ற போது  துரதிஸ்ட  வசமாக ரன் அவுட் ஆனார். இவரை தொடர்ந்து நிலையாக துடுப்பெடுத்தாடிகொண்டிருந்த அலெக்ஸ் குசாக் 47 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆகினார்.  எனினும் மூனியின் அதிரடி 33 ஓட்டங்களுடன்  49ஆவது ஓவரிலே தனது வரலாற்று வெற்றியை பெற்றுக்கொண்ட அயர்லாந்து  பரம எதிரியான இங்கிலாந்தில் முகத்தில் கரி பூசியது. இந்த போட்டி நடைபெற்ற  பாங்களூர் சின்னசாமி மைதானம்  முன்னதாக இந்தியா எடுத்த 339 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்தி சென்று இங்கிலாந்து சமநிலையின் முடித்தது அறிந்ததே. அன்றைய போட்டி போலவே இந்த போட்டியிலும் இரண்டாவதாக பந்துவீசும் அணிக்கு ஆடுகளம் சாதகமாக இருக்கவில்லை. எனினும் இந்த மிகப்பெரிய இலக்கை அனுபவம் அற்ற அயர்லாந்து அணி துரத்தி சென்று வெற்றி பெற்றது இங்கிலாந்துக்கு வரலாற்று அவமானமே. இந்த தோல்விக்கு இங்கிலாந்தின் திட்டமிடப்படாத பந்துவீச்சும் சொதப்பலான களத்தடுப்புமே முக்கிய காரணம்.   நாற்பதாவது ஓவர்களுக்கு முன்னரே  சிறப்பாக பந்துவீசிய கிரகம்  ஸ்வானின்
ஓவர்களை போட்டு முடிக்க விட்டமை, மற்றும் லட்டு போல கையிலே வந்து விழுந்த  கெவின் ஒ பிறைன் அடித்த பந்தை ஸ்ரரிஸ் பிடி எடுக்காமல் கோட்டை விட்டமை போன்று இங்கிலாந்து  தனது களத்தடுப்பிலும் பல குறைபாடுகளை விட்டு சென்றது.




அடுத்து தென்னாபிரிக்கா நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியிலே தென்னாபிரிக்கா 231 ஓட்டங்களாய் இமாலய வெற்றி பெற்று இதுவரையான போட்டிகளிலே அதிகூடிய ஓட்ட வித்தியாசத்தால் வெற்றி பெற்ற அணியாக  திகழ்கிறது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க காசிம் அமலா மற்றும்   வில்லியர்சின் அபார சதங்களுடன் 351 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.  இந்த  உலகக்கிண்ண தொடர்களிலே வில்லியர்ஸ் அடித்த இரண்டாவது சதம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. பதிலுக்கு ஆடிய நெதர்லாந்து  120 ஓட்டங்களுக்கு படுத்துக்கொண்டது. மீண்டும் சிறப்பாக பந்துவீசிய இம்ரான் தகீர் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். இந்த வெற்றி மூலம் தென்னாபிரிக்க அடுத்த சுற்றுக்கு தன்னை உறுதிப்படுத்திக்கொண்டாமை குறிப்பிடத்தக்கது.



பாகிஸ்தான் கனடா அணிகளுக்கு இடையேயான போட்டியிலே அப்ரிடியின் சுழலால் பாகிஸ்தான் தப்பித்துக்கொண்டது. இதன்  மூலம் ஒரு வெற்றி பெறக்கூடிய அருமையான வாய்ப்பை கோட்டை விட்டது கனடா.  இந்த போட்டியிலே துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் கனடாவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாது 184 ஓட்டங்களுக்குள் சுருண்டு கொண்டது. ஆக கூடுதலாக உமர் அக்மல் 48 ஓட்டங்களை பெற்றார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கனடா அப்ரிடியின் சுழலுக்கு தாக்குப்பிடிக்க முடியாது 138 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது. அப்ரிடி மீண்டும் சிறப்பாக பந்து வீசி  5 விக்கெட்டுக்களை பெற்றுக்கொண்டார்.  இந்த போட்டியிலே அக்தர் விளையாடாது குறிப்பிடத்தக்கது.



பங்களாதேஷ் சார்பாக பெரிய எதிர்பார்ப்புடன் இடம்பெற்ற மேற்கிந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியிலே  மேற்கிந்தியா மிகவும் அபாரமாக வெற்றிகொண்டது. போட்டிக்கு முன்னர் வாய்சவாடல் விட்ட பங்களாதேஷ் வீரர்கள் மேற்கிந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாது 58 ஓட்டங்களுக்குள் சுருண்டுகொண்டனர்.  பங்களாதேஷ்ன்  துடுப்பாட்டத்தில் இரண்டு வீரர்களை தவிர எவரும் இரட்டை இலக்கத்தை தாண்ட முடியவில்லை.  பதிலுக்கு ஆடிய மேற்கிந்தியா கைலின் அதிரடி 37 ஓட்டங்களுடன் 12 ஆவது ஓவரிலே வெற்றியை பெற்றுக்கொண்டது.



அடுத்து இந்த உலககிண்ண தொடரிலே இரண்டாவது தடவையாக பத்து விக்கெட்களுடனான வெற்றியை பதிவு செய்து கொண்டது நியூசிலாந்து.  சிம்பாவேக்கு எதிரான போட்டியிலே நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாவே 162 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து கொண்டது. பதிலுக்கு களமிறங்கிய நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கை அடைந்தது.

இங்கிலாந்தை பொறுத்த வரை அடுத்து வரும் மூன்று  போட்டிகளிலே   நெதர்லாந்தை வெற்றி கொண்டாலும், மேற்கிந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளை வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியே. அத்தோடு இன்னும் நான்கு போட்டிகள் மீதமுள்ள அயர்லாந்து அணி அதில் இரண்டில் வெற்றி பெற்றால்  அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை எதிர்பார்க்கலாம்.

5 comments:

  1. வணக்கம் சகோதரம். தமிழ் மணத்திலும் உங்கள் பதிவை இணைத்தால் இன்னும் நிறைய வாசக உள்ளங்களை உங்கள் பதிவுகள் சென்று சேர வாய்ப்பாக அமையும்.

    கிறிக்கற்- நேற்றைய ஆஸ்திரெலியா- இலங்கை பலத்த எதிர்பார்ப்புக்களுடன் காத்திருந்த என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்காண ரசிகர்களை மழை ஏமாற்றி விட்டது. இப்போதைய நிலவரப் படி இந்தியா, அயர்லாந்து ஆட்டத்தில் இந்தியா 32 ஓவர்களில் கடுமையாக போராடுகிறது, அயர்லாந்து வீரர்கள் களத்தடுப்பில் உற்சாகத்துடன் ஈடுபடுகிறார்கள். இந்தியா நான்று விக்கற்றுக்களை இழந்து விட்டது. உங்களது இதுவரை நடந்து முடிந்த போட்டிக்ள் பற்றிய அலசல் அருமை. இங்கிலாந்து ஆஸஸ் தொடரில் ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் மண் கவ்வச் செய்தார்கள். ஆனாலும் ஒரு நாள் ஆட்டத்தில் அவர்களால் சோபிக்க முடியவில்லை. நான் நினைத்தேன். உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக தங்களை நன்றாக தயார்படுத்தியிருப்பார்கள் என்று. அதுவும் தவறாகி விட்டது. பொறுத்திருந்து பார்ப்போம். இந்தியா வெல்லுமா/ அயர்லாந்து வெல்லுமா?
    மறு முனையில் தென் ஆபிரிக்கா வெல்லுமா/ இங்கிலாந்து வெல்லுமா?

    ReplyDelete
  2. இங்கிலாந்து போட்டியில் வெற்றி பெற்று விட்டது.

    ReplyDelete
  3. தமிழ்மணத்தில் இணைந்துவிட்டேன் ஆனால் ஓட்டுப்பட்டையை என் பக்கத்தில் இணைக்க முடியவில்லை.
    இன்று இந்தியா வென்றுவிட்டது :-)
    நன்றி நிரூபன் வருகைக்கும் கருத்துக்கும்..

    ReplyDelete
  4. விளையாட்டுப்போட்டியை அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.

    ReplyDelete