இந்த நாட்கள்...!!






இரண்டு வருடங்கள்
இமைப்பொழுதில் கடந்த போதும்
நினைவுகளில் இருந்து அகல மறுக்கும்
கொடிய நாட்கள்!

வாழவேண்டிய வயசிலே 
வசந்தங்களை பறித்து 
கயவர்களால் நயவஞ்சமாக 
எம் உறவுகளின் உயிர்கள் குடித்து 
உடல்கள் புதைக்கப்பட்ட நாட்கள்!

பள்ளி பருவத்தில்
சிட்டா திரிந்த 
சின்னஞ்ச் சிறுசுகளை
பெத்தவள் முன்னாலே
பிணமாக போட்ட நாள் இது!

பசி கொண்டு வரும்
பருந்தை கண்டு
குஞ்சுகளை காக்கும் கோழியாக,சீறி
பறந்துவரும் கொடும்
குண்டுவீச்சு அரக்கனை கண்டு 
குழந்தையை காக்க,
தன் உடலை 
துண்டுகளாக கொடுத்த
தாயவள் நாள் இது!

உறவை நினைந்து
கடல் கடந்த ஐரோப்பிய வீதிகளில்
நடை பிணங்களாக
நம்மவர்கள் கதறிய நாள் இது ,உலகின்
இறுதி சொட்டு மனிதாபிமானும்
புதைந்து போன
நாள் இது!

தொடர்ந்து துரத்தும்
போர் என்ற அரக்கனிடம் இருந்து
தம்மை காத்துக்கொள்ள,
ஓடி ஓடி
கால்கள் நலிந்து
முள்வேலிகள் நடுவே
முகத்தை புதைத்துக்கொண்ட 
கரி நாள் இது!

நேரில் கண்டவர்களும்
நிழற்ப்படத்தில் பார்த்தவர்களும்
கண்களால் உள்வாங்கி
இதயத்தில் புதைத்துவைத்த
அந்த உருவம்,இன்று
இல்லையே என்று தெரிந்ததும் 
இதயமே நொறுங்கிப்போன
நாள் இது.

பசுமை  படர்ந்து
செழித்து வளர்ந்துநின்ற மரத்தை
அழிக்கும் நோக்கம் கொண்டு, 
பக்கவேர்களை சிதைத்து சென்று
ஆணிவேரை
வெட்டி வீழ்த்திய  நாள் இது!

பட்டு போகுமோ
இனி
அந்த மரமும்  ..!!

20 comments:

  1. இரண்டு வருடங்கள்
    இமைப்பொழுதில் கடந்த போதும்
    நினைவுகளில் இருந்து அகல மறுக்கும்
    கொடிய நாட்கள்!//

    காலங் கடந்தாலும் கண் முன்னே நிற்கும் எங்களின் கொடிய நாட்களை இவ் வரிகள் சுட்டுகின்றது.

    ReplyDelete
  2. எந்த வரிகளைச் சுட்டுவதென்று தெரியவில்லைச் சகோ. எங்கள் வாழ்வின் அவலங்களை, கடந்த காலத்தின் கருகிய நாட்களினை உங்கள் கவிதை உணர்வுகளை உலுக்கும் வார்த்தைகளின் தொகுப்பாய் உரைக்கிறது.

    ReplyDelete
  3. தண்ணீர்விட்டா வளர்த்தோம்....என
    பாரதி பாடியதைபோல
    இதன் வேர்கள் பூமியிலா புதையுண்டு கிடக்கின்றன
    நெஞ்சங்களில் அல்லவா வேரூன்றிக் கிடக்கின்றன
    நிச்சயம் ஒரு நாள் இம்மரம் வான் மறைக்க பூதமாய்
    விஸ்வரூபமெடுத்து நிற்கும்
    உணர்வுபூர்வமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ஆணிவேரை
    வெட்டி வீழ்த்திய நாள் இது!

    ReplyDelete
  5. மனது கனக்க வைக்கும் கவிதை..

    ReplyDelete
  6. பக்கவேர்களை சிதைத்து சென்று
    ஆணிவேரை
    வெட்டி வீழ்த்திய நாள் இது!

    பட்டு போகுமோ
    இனி
    அந்த மரமும் ..!!
    \
    .. நெஞ்சை கணக்க வைக்கும் கவிதை.சீக்கிரம் நாம் விரும்பும் நாள் வரும் சகோ.

    ReplyDelete
  7. படிக்கும்போதே மனம் கனத்துப் போகிறது.நல்ல நாளுக்காக ஏங்குகிறது.

    ReplyDelete
  8. அசத்தல் கவிதை சகோ.. படிக்கும் போதே மனம் ஏதோ செய்கிறது..

    ReplyDelete
  9. தமிழன் வாழ்வில் மறக்க முடியா நாள் இது...

    ReplyDelete
  10. மனசை கனக்க செய்யும் கவிதை,

    ReplyDelete
  11. /////உலகின்
    இறுதி சொட்டு மனிதாபிமானும்
    புதைந்து போன
    நாள் இது!/////

    இந்த இடத்தில் தான் ஒரு பெரிய உச்சியடி சகோதரம்... பல அரசியல்வாதிகளின் மகமுடியை துகிலுரித்த நாளுமல்லவா ?

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. ?

    ReplyDelete
  12. உணர்வை சுமந்த பெரும் கவதை அருமை...

    ReplyDelete
  13. பிணமாக விழுந்தாலும் இனமாக விழுவோம் என்று இறுதிவரை இருந்த தமிழர்களுக்கு வீர வணக்கம்

    ReplyDelete
  14. எல்லா வரிகளும் ஏதோ எனது மனதை உறுத்துகிறது ......

    ReplyDelete
  15. கனக்கும் பகிர்வு.
    மீண்டும் துளிர்விட வேண்டும்.

    ReplyDelete
  16. @நிரூபன்
    ramani
    தாராபுரத்தான்
    ரேவா
    செங்கோவி
    சென்னை பித்தன்
    வேடந்தாங்கல்
    பலே பிரபு
    துஷ்யந்தன்
    மதி சுதா
    யாதவன்
    akulan
    இராஜராஜேஸ்வரி

    அனைவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மக்கள்ஸ்....

    ReplyDelete
  17. ம் ..
    இரண்டு வருடங்கள்
    இமைப்பொழுதில் கடந்த போதும் ...

    ReplyDelete
  18. facebookல் ஷேர் செய்துவிட்டேன்...அருமையான கவிதை...மனதை கனக்க செய்துவிட்டது!!

    ReplyDelete
  19. பசி கொண்டு வரும்
    பருந்தை கண்டு
    குஞ்சுகளை காக்கும் கோழியாக,சீறி
    பறந்துவரும் கொடும்
    குண்டுவீச்சு அரக்கனை கண்டு
    குழந்தையை காக்க,
    தன் உடலை
    துண்டுகளாக கொடுத்த
    தாயவள் நாள் இது!

    ஐயோ என எனை மறந்து என்
    உதடுகள்
    உச்சரித்த வார்த்தைகள் இவை
    மேல சொன்ன உங்களின் கவிதை வரிகளை படித்தபின் .
    துயரம் தூர போகும் நாள் வரும்
    ஆயினும் இத்தாய் பட்ட வலி
    என்றுமே ஆறாதே
    கொடுமையின் ஊற்றுகண்ணாய்
    கொடூரன் அவன் .

    ReplyDelete
  20. அழ வைத்திவிட்டது வரிகள்.இந்த வாரம் முழுதுமே ஒரு நிலையில் இல்லை நான் !

    ReplyDelete