சுரேஷ் ரைனா+ இந்திய அணி = ஒருநாள் தொடர்... சாதிக்குமா..?


உலகக்கிண்ண போட்டிகள்,  ipl போட்டிகள்  என்று மிக நீண்ட தொடர்களுக்கு பின்னர் மிக சிறு இடைவெளியில் மீண்டும் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

கிரிக்கெட் என்றாலே சலிப்பை உண்டுபண்ணும் அளவுக்கு தற்சமயம் தொடர்ச்சியாக இடம்பெற்ற போட்டிகளால் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்ப்படுத்துமா என்பது கேள்விக்குறியே..!


உலகக்கிண்ணத்தை வென்ற தெம்பு இருந்தாலும் அவ் வென்ற அணியில் விளையாடிய முன்னணி வீரர்கள் ஓய்வு காரணமாக இளம் இந்திய  அணியே ஒரு நாள் மற்றும் இருபதுகு இருபது  போட்டிகளில்  பங்குபற்ற உள்ளது.

காம்பீர் யுவராஜ் காயம் காரணமாக வெளியேற  மீண்டும் ஒரு முறை அணியை வழிநடாத்தும் பொறுப்பு சுரேஷ் ரைனாவிடம் வழங்கப்பட்டுள்ளது.. சாதிப்பாரா..? இல்லை சறுக்குவாரா..?   உப தலைவர் பொறுப்பை ஹர்பஜன் சிங் ஏற்றுக்கொண்டுள்ளார்.  அத்துடன் உலகக்கிண்ண போட்டிகளுடன் விலகிக்கொண்ட  கேரி கிர்ஸ்டனுக்கு பதிலாக நியமனம் பெற்றுள்ள புதிய பயிற்சிவிப்பாளர் டங்கன் பிளச்சருக்கு  இது முதலாவது தொடர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தற்சமயம்  ரைனா , விராட் ஹொலி  சிறந்த பார்மில் இருப்பது   இந்திய அணிக்கு பலம்.  பலர்  எதிர்பார்த்த,  ipl   போட்டிகளில் சிறப்பாக செயற்ப்பட்ட வீரர்களான அம்பாதி ராயுடு , பவுல் வால்ததி, இர்பான் பதான் ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை.  அப்பாதி ராயுடு மும்பை இந்தியன் அணி சார்பாக சிறப்பாக விளையாடியவர்.  இவர் தேர்வு செய்யப்படாமைக்கு கிரிக்கெட் (icl ) அரசியல் காரணமாய் இருக்குமோ ..?  மனோஜ் திவாரியை விட இவர் செயற்ப்பாடு ipl போட்டிகளில் சிறப்பாகவே இருந்தது..

பஞ்சாப் அணிக்காக வால்ததி ஆரம்பத்தில் சிறப்பாக செயற்ப்பட்டாலும் இறுதி போட்டிகளில் குறிப்பிடும் படியாக இல்லை, அத்துடன்   இருபதுக்கிருபது போட்டியை கணக்கில் கொண்டு  "ஒரு T20 காக"" என்ற காரணமும் தேர்வு செய்யப்படாமைக்கு காரணமாக இருக்கலாம்.

மற்றையது  இர்பான் பாதன்,  இவரது  துரதிஷ்ரம்  ipl போட்டிகளில் இவர் போகும் அணி மோசமாக  சொதப்புகிறது . முன்னர் பஞ்சாப்,  இப்போ டெல்லி...! இருந்தாலும் அவ் அணி சார்பாக சிறப்பாகவே செயற்பட்டார்.  உதாரணமாக அவர் அணியில் இருந்த 'தென்னாபிரிக்க புயல்' மோர்க்கலிலும் பார்க்க இவர் செயற்ப்பாடு சிறப்பாகவே இருந்தது,  மட்டுமல்லாது  சச்சின் மற்றும் மைக் ஹசியை கிளீன் போல்ட் ஆக்கியதை மறக்க முடியாது. 

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக  களமிறங்கக்கூடிய சச்சின், சேவாக், காம்பீர் இல்லாத  இடத்தை நிரப்ப பார்த்திவ் பட்டேல் , தவான் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம்..  அத்துடன் ரோகிற் சர்மாவுக்கு கடந்த தென்ஆபிரிக்க தொடருக்கு பின்னர் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. வாய்ப்பை சரியாக பயன்படுத்துவாரா..?  விக்கெட் கீப்பராக பார்த்திவ்வுடன், சாகாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் .


ipl போட்டிகளில் சிறப்பாக செயற்ப்பட்ட அஸ்வின், பத்திரிநாத் என்று  தமிழக வீர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். எனினும்  ஹர்பஜன் இருக்கும் போது அஸ்வின் பதினொருவர் அணிக்குள் உள்வாங்க படுவாரா என்பது சந்தேகமே..!

பந்துவீச்சாளர்களில் மீண்டும் பிரவீன்குமார் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.. இவருடன் இசாந்த் , முனாப் பட்டேல் , வினய் குமார், சுழல் அமித் மிஸ்ரா. .. சிறீசாந் கழட்டி விடப்பட்டமை ஆறுதல் :-)  ( டெஸ்ட் போட்டிகளில் தொற்றிக்கொண்டுள்ளார்)

மறு புறத்தே மேற்கிந்திய தீவு அணியை எடுத்துக்கொண்டாலும் டரன்  சாமியை தலைமையாக கொண்ட முன்னணி வீரர்கள் இல்லாத இளம்வீரர்களுடனே  முதல் T20 மற்றும் முதல் இரு ஒரு நாள் தொடர்களில் களமிறங்குகிறது.  ipl போட்டிகளிலே ஒரு கலக்கு கலக்கிய கிறிஸ் கெயில் இடம்பெறாதது  அவ்வணியின் துரதிஸ்ரமே..  மற்றொரு முன்னணி வீரர்  சந்தர்போலுக்கும் இடம் வழங்கப்படவில்லை...

தொடர்ந்து சொதப்பி வரும் சர்வான் அணியில் இடம்பிடித்துள்ளார்.  இவர் எழுச்சி பெறும் பட்சத்தில் அவ்வணி இன்னும் பலம் பெற வாய்ப்புள்ளது.. மற்றும்படி பாகிஸ்தானுடன் மோதி 3 -2   என்ற கணக்கில் தோற்ற  அணியே தேர்வு செய்யப்பட்டுள்ளது. முன்னர் ஒரு காலத்தில் கிரிக்கெட்டில் முடிசூடா முன்னர்களாக திகழ்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது பல்வேறு பிளவுகளால் சிக்கி சின்னாபின்னமாகி இருப்பது ஆரோக்கியமான கிரிக்கெட் ரசிகர்களுக்கு வருத்தத்தை தரும் விடயமே. 


 'இதுவரை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற' ஆறு  ஒருநாள் தொடர்களில் இரண்டு  தொடர்களை மட்டுமே  இந்தியா  கைப்பற்றியுள்ளது.  இதில் இறுதியாக 2009 இல் நடந்த தொடரை தோனி தலைமையிலான  அணி 2 -1 என்ற ரீதியில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. ஆக இம்முறை இளம் வீரர்களை கொண்ட ரைனா அணி சாதிக்குமா..?  இல்லை சறுக்குமா..?

19 comments:

  1. திறமை இருக்கிறது.. அதிர்ஷ்டம் கைகொடுக்கும் பட்சத்தில் வென்று வாகை சூட காத்திருக்கிறார் ரெய்னா...!!

    ReplyDelete
  2. இந்திய அணி சாதிக்க வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. நம் அணி சாதிக்கும் என்றே நினைக்கிறன் நண்பரே
    முடியை பொறுத்திருந்து பார்ப்போம்
    நீங்கள் சொன்ன படி தொடர் தொடர்கள் சற்று சலிப்பையே ஏற்படுத்துகின்றன

    ReplyDelete
  4. இளைஞர் படை ஜெயிக்க வாழ்த்துவோம்...

    நல்ல அலசல்..

    ReplyDelete
  5. பொறுத்திருந்து பார்ப்போம்

    ReplyDelete
  6. சாதிக்கும் என்றே நம்புவோம்!

    ReplyDelete
  7. Super analysis . . We will win

    ReplyDelete
  8. இந்திய அணி சாதிக்க வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. ///தங்கம்பழனி said...

    திறமை இருக்கிறது.. அதிர்ஷ்டம் கைகொடுக்கும் பட்சத்தில் வென்று வாகை சூட காத்திருக்கிறார் ரெய்னா...!!
    // உங்கள் கருத்துக்கு நன்றி ....

    ReplyDelete
  10. ///!* வேடந்தாங்கல் - கருன் *! said...

    இந்திய அணி சாதிக்க வாழ்த்துக்கள்..
    /// வாங்க பாஸ் ...

    ReplyDelete
  11. //////A.R.ராஜகோபாலன் said...

    நம் அணி சாதிக்கும் என்றே நினைக்கிறன் நண்பரே
    முடியை பொறுத்திருந்து பார்ப்போம்
    நீங்கள் சொன்ன படி தொடர் தொடர்கள் சற்று சலிப்பையே ஏற்படுத்துகின்றன
    /// தங்கள் கருத்துக்கு நன்றி தலைவா ...

    ReplyDelete
  12. //////# கவிதை வீதி # சௌந்தர் said...

    இளைஞர் படை ஜெயிக்க வாழ்த்துவோம்...

    நல்ல அலசல்..//// நானும் வாழ்த்துகிறான் பாஸ் ...

    ReplyDelete
  13. ///யாதவன் said...

    பொறுத்திருந்து பார்ப்போம்
    /// ம்ம் பார்ப்போம் பார்ப்போம் ...

    ReplyDelete
  14. //சென்னை பித்தன் said...

    சாதிக்கும் என்றே நம்புவோம்!
    /// நானும் நம்புகிறான் ஐயா ...

    ReplyDelete
  15. /////"என் ராஜபாட்டை"- ராஜா said...

    Super analysis . . We will win
    /// நன்றி பாஸ் ..

    ReplyDelete
  16. ///இராஜராஜேஸ்வரி said...

    இந்திய அணி சாதிக்க வாழ்த்துக்கள்..//// நன்றி சகோதரி உங்கள் வருகைக்கு ...

    ReplyDelete
  17. இப்ப நான் இந்திய அணியின்ர ரசிகனாகிட்டன். உலககிண்ண போட்டிகளிலிருந்து,
    இந்தியா அணி இலகுவாக போட்டிகளில் வெல்லும். பிரதான வீரர்கள் இல்லாவிடினும் திறமையான இளயவர்கள் இருக்கின்றனர்!

    ReplyDelete
  18. பாஸ், நீங்கள் கூறுவது போல இளையவர்களின் பட்டாளத்துடன் இந்திய அணி இப்போது களமிறங்கியுள்ளது, நிச்சயமாக வெற்றி பெறும்.


    நாங்கள் அனைவரும் வாழ்த்துவோம் சகோ. ரைனா தலமையில் இந்தியா வெல்வதற்கான வாய்ப்புக்களே அதிகமாக உள்ளன.

    பாஸ் கிரிக்கட் பற்றி அதிகம் தெரியாததால் ஊடாட முடியலை பாஸ்.

    ReplyDelete