சிறந்த விளையாட்டு செய்தியில் மகிந்தர் ! ( சிறு வரலாறு)

இந்த வாரத்தின்   சிறந்த   விளையாட்டு  செய்தி  என்று  சொல்வதை  விட இந்த ஆண்டின்  மிகச் சிறந்த விளையாட்டு  செய்தி  என்று  சொல்வதே  சாலப்பொருந்தும்.. 

மகிந்த ராஜபக்சே  புத்த பெருமானின்  இரத்த உறவினராம்,  அது  மட்டுமல்லாமல்லாது  துட்டகைமுனு  மகிந்தவுக்கு பூட்டன் முறையாம்..  இவ்வாறு  சொல்லியிருக்கிறார்  இலங்கையின் பிரபல  சினிமா நடிகர் ஜாக்சன் அந்தனி.

உண்மையிலே இந்த  விடயத்தை  வரலாற்று ரீதியா ஆராய முற்பட்டால் விடை  'மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும்  முடிச்சு போட்ட கதையாக தான் வரும்'.


கி .பி  5 -6 ஆம் நூற்றாண்டுகளில்  பவுத்த மதத்தை  முன்னிலைப்படுத்தி எழுதப்பட்ட   மகாவம்சம்  விஜயனின் வருகையுடன் ஆரம்பிக்கப்படுகிறது.  அதிலே கதாநாயகனாக   துட்டகைமுனு முன்நிறுத்தப்படுகிறான்.  ஆனால் மகாநாமதேரரால்  எழுதப்பட்ட  இந்த  மகாவம்சத்தில் அநேகமானவை  புனைவுகள் என்பது பலர் அறிந்தது.   உதாரணமாக புத்தர்  இலங்கைக்கு மூன்று  தடவைகள்  வந்ததாக மகா வம்சத்தில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் மகாவம்சம் தவிர்ந்த  வேறு எந்த புராணங்களிலோ வரலாறுகளிலோ புத்தர் இலங்கை சென்றதாக குறிப்பிடப்படவில்லை.  அதே போல புத்தர் இந்தியாவை விட்டு வேறு இடங்களுக்கு  சென்றதாகவும் இது வரை அறியப்படவில்லை  ( அன்று இந்தியா  என்பது   பாகிஸ்தான் நேபாளம்  போன்ற  நாடுகளையும் உள்ளடக்கி இருந்தது  என்பது குறிப்பிடத்தக்கது)

காக்கவண்ணதீசன்  மற்றும்  விகாரமாதேவிக்கு  மகனாக பிறந்தவன் துட்டகைமுனு.   இவன் ஒரு பவுத்தன். பவுத்த  மதத்தை தளுவியவனே  ஒழிய  இவன் சிங்களன் அல்ல.  இவன் காலத்தில் (கிமு 101 -77 )  சிங்களம் என்ற இனமோ சிங்களம் என்ற   மொழியோ இருந்திருக்கவில்லை.

சிங்களம் என்ற  இனம் கிறிஸ்துவுக்கு  பின்னர்  3 - 4  ம் நூற்றாண்டுகளில் ஒரு தனித்துவமான  மொழி  பேசுபவர்களை  அடிப்படையாக கொண்டு உருவாகியதாக  அறியப்படுகிறது.   இதற்க்கு உதாரணமாக   'ஒரு  இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்  நூலான  மாகவம்சத்தை எழுதிய மகாநாம தேரர் அந்நூலை  அவ்வினத்திற்க்கான  பிரத்தியோக மொழியில்,  அதாவது சிங்கள மொழியில் எழுதவில்லை , பாளி மொழியிலே  எழுதியிருந்தார் '.  ஆக அக்காலத்திலே ஒரு வரலாற்று  நூலை எழுதக்கூடிய வளர்ச்சியை சிங்கள மொழி கொண்டிருக்கவில்லை என்பதற்கு  இது கூட சிறு உதாரணம்.  இது மட்டுமல்லாது அந்த காலத்து வரலாற்று கல்வெட்டுக்கள் பல பாளி  என்ற ஒரு மொழியிலே எழுதப்பட்டிருக்கிறது. 

நாகர்  இனத்தை பூர்வீகமாக கொண்டவன்  துட்டகைமுனு.  அதே போலவே துட்டகைமுனுவுடன்  போரிட்டு  மடிந்த எல்லாளனும் நாகர் இனத்தை  சார்ந்த தமிழனாக இருந்தான்.  நாக வழிபாட்டை கொண்ட  நாக இனத்தவர்கள் பிற்காலங்களில்  தமிழர்களாக  மருவியதாக  சொல்லப்படுகிறது.  இதற்கு உதாரணம்  இன்று கூட  தமிழர்கள் மத்தியில் நாக வழிபாடு உள்ளது.  அது மட்டுமல்லாது  நாக என்ற  சொல்லை அடிப்படையாக  கொண்ட பெயர்கள் இன்றும் தமிழர்கள் மத்தியில் உள்ளது. ( நாகலிங்கம், நாகதம்பிரான்...)  ஆக ஒரு விதத்தில் எல்லாளன் மற்றும்  துட்டகைமுனுவின்  பூர்வீகம் ஒன்று,  இரத்த உறவுகள்.



அதே போல  துட்டகைமுனு  எல்லாளன் யுத்தத்திலே  துட்டகைமுனு  படையில்  பவுத்த  மதத்தை தழுவிய தமிழர்களும் , எல்லாளன்  படையில் பவுத்த  மதத்தை தழுவிய தமிழர்களும்  இருந்ததாக குறிப்பிடப்படுகிறது.  இப்படி இருக்க  எல்லாளன் துட்டகைமுனு யுத்தத்தை தமிழர் சிங்களவர் யுத்தமாக கருத முடியாது.  அத்துடன் இன்று  உள்ள சிங்களவர்கள் பலர்  தமிழ் பூர்வீகத்தை கொண்டவர்கள்.  ஆனால் தம்மை ஒரு தனித்துவமான இனமாகவும் வலிமையான  இனமாகவும்  காட்டுவதற்கு  இவர்களுக்கிடையிலான  யுத்தத்தை தமிழர்  சிங்களவர்  யுத்தமாக  மகாவம்சத்தின்  ஆசிரியர் புனைந்துவிட்டார்.  இது  போன்ற புனைவுகளே இன்றைய இனப்பிரச்சனைக்கும் அழிவுகளுக்கும் அடிப்படை  காரணமாக அமைந்துவிட்டது.

ஆக  கி.மு (560 - 480 ) ஐந்தாம் நூற்றாண்டுகளிலே  வட  இந்தியாவில் வாழ்ந்த புத்தபெருமானுக்கும்   கி.மு (101 - 77 )  முதலாம் நூற்றாண்டுகளிலே இலங்கையை  ஆட்சி செய்த  துட்டகைமுனுவுக்கும்  சம்மந்தம் இருப்பதாக தெரியவில்லை.

அப்படி இருக்க  கிறிஸ்துவுக்கு முன்  முதலாம் நூற்றாண்டில்  சிங்களம் என்ற இனம்   உருவாகுவதற்கு முன்னர் வாழ்ந்த துட்டகைமுனு  இரண்டாயிரம் வருடங்கள் கடந்த நிலையில் மகிந்தவுக்கு எப்படி  பூட்டனாவார்.  புத்தபெருமானுக்கு எவ்வாறு  ரத்த சம்மந்த உறவினராவார்...!!!

ஆனால்  துட்டகைமுனு  பவுத்த மதத்தை  தளுவியிருந்தானே ஒழிய  புத்தரின் சிந்தனைகளுக்கிணங்க  வாழவில்லை.  'நான் புத்தரின் தர்மத்தை நிலைநாட்டவே  யுத்தம் செய்கிறேன்'  என்று  கூறிவிட்டு  எல்லாளனுடனான யுத்தத்தை மேற்கொண்டான்  என்று மாகாவம்சம் குறிப்பிடுகிறது.  ஆகவே  இந்த விதத்தில் வேண்டுமென்றால் மகிந்தருக்கு  துட்டகைமுனு  பூட்டனாக இருக்கலாம் .  ஆனால் புத்தருக்கு  இரத்த உறவு என்பது  'கேக்கிறவன் கேனயனாய் இருந்தால் எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம்'  என்பது போல.

முன்னரெல்லாம்  அரசனின்  பெருமைகளை  புகழ் பாடி  பொற்கிழி பெற்று செல்வார்களாம்  புலவர்கள். ஆனால் இன்று அதிகாரவர்க்கங்களுக்கு பக்கத்தில் இருப்பவர்கள் ஆளும் வர்க்கத்தை பற்றி இல்லாததும் பொல்லாததுமாக புகழ் பாடினாலே  பிழைக்க முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டது .

43 comments:

  1. லேபிள் தேடினேன்.
    காணவில்லை.ஒருவேளை
    நகைச்சுவைப் பதிப்பாயிருக்குமோ !

    ReplyDelete
  2. இது போல பல புரளிகள் திரிபுபடுத்த பட்ட பொய்கள் தான் சிங்களவன் வரலாறு என சொல்லி கொள்கிறான்

    ReplyDelete
  3. //மகிந்த ராஜபக்சே புத்த பெருமானின் இரத்த உறவினராம், அது மட்டுமல்லாமல்லாது துட்டகைமுனு மகிந்தவுக்கு பூட்டன் முறையாம்.. //

    ஹா ஹா ஒருவேள இந்த டயலொக்க வடிவேலு படத்தில இருந்து சுட்டிருப்பாங்களோ?

    ReplyDelete
  4. மாப்ளே, நீங்களும் நானும் போட்டோ எடிற் பண்ணி ஒரு கவிதை போட்டோம், நினைவிருக்கா. ஒரு வேளை அந்தக் கவிதையைப் படித்த நினைப்பில் யாராச்சும் அறிக்கை விட்டிருப்பாங்களோ;-))

    பிணங்களைப் புணர்ந்த புத்தன்...

    ReplyDelete
  5. இன்னும் என்னென்ன விடயங்கள் புதுசு புதுசா வரப் போகிறதோ?

    ReplyDelete
  6. யோ....மகிந்த மாமா புத்தனின் நெருங்கிய உறவினர் என்றால்,
    அப்போ நம்மா கோத்தா அங்கிள்?

    ReplyDelete
  7. ஹேமா said...
    லேபிள் தேடினேன்.
    காணவில்லை.ஒருவேளை
    நகைச்சுவைப் பதிப்பாயிருக்குமோ !//

    அடடா, பதிவிற்கேற்ற காமெடி...

    ஹி...ஹி...

    ReplyDelete
  8. ஆமா ஏன் இந்த கொலை வெறி?நல்லாத்தானே போய்க்கிட்டிருந்திச்சு??

    ReplyDelete
  9. ஆமா ஏன் இந்த கொலை வெறி?நல்லாத்தானே போய்க்கிட்டிருந்திச்சு??

    ReplyDelete
  10. இல்லாததும் பொல்லாததுமாக புகழ் பாடினாலே பிழைக்க முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டது .

    ReplyDelete
  11. விடுங்க பாஸ்! காமெடிப் பீசுங்க! :-)

    ReplyDelete
  12. வரலாற்றை விளக்கமாக சொல்லி
    பொய் புனைபவர்களை புரட்டி எடுத்த பதிவு நண்பரே
    நன்றி வரலாற்றை வழி மொழிந்ததர்க்கு

    ReplyDelete
  13. சிரிப்பதா அழுவதா

    ReplyDelete
  14. Hats off to this post!
    பல வரலாறுகளை தெளிவுபடுத்தியிருக்கிறீர்கள்! உவன் சொல்லுறத அவங்கட ஆக்களே கேக்கிறேல பிறகு நாங்க ஏன் கவலைப்படோணும்!
    அதோட நான் கிருஷ்ணரின்ர அவதாரமுங்க!!! நம்புங்க

    ReplyDelete
  15. அட இது பறவாய் இல்லை கண்டோஸ்... ராவணனே எங்கள் இனம்தான், எங்கள் முப்பாட்டன் அல்லவா அவன் என்று கூறியவர்களல்லவா இவர்கள்??
    விட்டால் லிமோனியா கண்டத்தின் ஆதிக்குடிகள் நாம், பஞ்சியா கண்டம் கண்ட பக்தர்கள் நாம் என்றும் சொல்வார்கள். சில விடையங்களை கணக்கெடுக்காது இருப்பது நல்லது.

    ReplyDelete
  16. புது புது தகவலா சொல்றீங்களே...!!!

    ReplyDelete
  17. கலீஞ்சருக்கு ஒரு வைரமுட்டு ஸாரி வைரமுத்து..... ராஜ[நாய்]பக்ஷேவுக்கு அந்த நடிகன் கொய்யால....

    ReplyDelete
  18. சிரிப்பதா அழுவதா

    ReplyDelete
  19. தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் பாமியன் புத்தர் சிலைகளை சிதைத்ததை விட கொடுமையான விசயம் ராஜபக்சே அரக்கனை புத்தரின் வம்சாவளியென்று குறிப்பிட்டது.

    ReplyDelete
  20. ///ஹேமா said...

    லேபிள் தேடினேன்.
    காணவில்லை.ஒருவேளை
    நகைச்சுவைப் பதிப்பாயிருக்குமோ !//ஒரு வேளை டபுள் மீனிங்காய் இருக்குமோ :-)

    ReplyDelete
  21. //sarujan said...

    இது போல பல புரளிகள் திரிபுபடுத்த பட்ட பொய்கள் தான் சிங்களவன் வரலாறு என சொல்லி கொள்கிறான்// ஆமாம் பாஸ் மகாவம்சமே பாதி புனைவுகள் தான் ...

    ReplyDelete
  22. நிரூபன் said...

    ////மாப்ளே, நீங்களும் நானும் போட்டோ எடிற் பண்ணி ஒரு கவிதை போட்டோம், நினைவிருக்கா. ஒரு வேளை அந்தக் கவிதையைப் படித்த நினைப்பில் யாராச்சும் அறிக்கை விட்டிருப்பாங்களோ;-))

    பிணங்களைப் புணர்ந்த புத்தன்...// மொத்தத்தில நம்ம ரண்டு பேருக்கும் ஆப்பு இருக்கு என்கிறீங்க ...)))

    ReplyDelete
  23. ///நிரூபன் said...

    யோ....மகிந்த மாமா புத்தனின் நெருங்கிய உறவினர் என்றால்,
    அப்போ நம்மா கோத்தா அங்கிள்?/// பொறுங்கோ அறிக்கை தயாராகுதாம் சீக்கிரம் வெளியிடுகிரார்கலாம் ...))

    ReplyDelete
  24. ////மைந்தன் சிவா said...

    ஆமா ஏன் இந்த கொலை வெறி?நல்லாத்தானே போய்க்கிட்டிருந்திச்சு??/// இனி நால்லாய் தான் போகும் பாஸ் ஹிஹிஹி

    ReplyDelete
  25. இராஜராஜேஸ்வரி said...

    இல்லாததும் பொல்லாததுமாக புகழ் பாடினாலே பிழைக்க முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டது ./// வாங்க சகோதரி ...

    ReplyDelete
  26. மதுரன் said...

    //மகிந்த ராஜபக்சே புத்த பெருமானின் இரத்த உறவினராம், அது மட்டுமல்லாமல்லாது துட்டகைமுனு மகிந்தவுக்கு பூட்டன் முறையாம்.. //

    ஹா ஹா ஒருவேள இந்த டயலொக்க வடிவேலு படத்தில இருந்து சுட்டிருப்பாங்களோ?// ம்ம் வடிவேலு ஜோக் ரொம்ப பார்ப்பதால வந்த ஜோசனை போல ...)))

    ReplyDelete
  27. ஜீ... said...

    விடுங்க பாஸ்! காமெடிப் பீசுங்க! :-)// ம்ம் முன்னர் தான் டெரரா தெரிஞ்சாங்கள் ஆனா இப்ப இல்ல ...

    ReplyDelete
  28. A.R.ராஜகோபாலன் said...

    வரலாற்றை விளக்கமாக சொல்லி
    பொய் புனைபவர்களை புரட்டி எடுத்த பதிவு நண்பரே
    நன்றி வரலாற்றை வழி மொழிந்ததர்க்கு// நன்றி பாஸ் ...

    ReplyDelete
  29. யாதவன் said...

    சிரிப்பதா அழுவதா// அணைக்கும் ஆரம்பத்தில இப்படி தான் பாஸ் இருந்தது. ஆனா இப்ப காமெடியா இருக்கு

    ReplyDelete
  30. //கார்த்தி said...

    Hats off to this post!
    பல வரலாறுகளை தெளிவுபடுத்தியிருக்கிறீர்கள்! உவன் சொல்லுறத அவங்கட ஆக்களே கேக்கிறேல பிறகு நாங்க ஏன் கவலைப்படோணும்!
    அதோட நான் கிருஷ்ணரின்ர அவதாரமுங்க!!! நம்புங்க// நன்றி கார்த்தி.... அப்படியா )))

    ReplyDelete
  31. Jana said...

    அட இது பறவாய் இல்லை கண்டோஸ்... ராவணனே எங்கள் இனம்தான், எங்கள் முப்பாட்டன் அல்லவா அவன் என்று கூறியவர்களல்லவா இவர்கள்??
    விட்டால் லிமோனியா கண்டத்தின் ஆதிக்குடிகள் நாம், பஞ்சியா கண்டம் கண்ட பக்தர்கள் நாம் என்றும் சொல்வார்கள். சில விடையங்களை கணக்கெடுக்காது இருப்பது நல்லது.// ம்ம் போக போக தெரியும் என்னென்ன காமெடி எல்லாம் செய்யப்போகிறார்கள் என்று ...

    ReplyDelete
  32. MANO நாஞ்சில் மனோ said...

    புது புது தகவலா சொல்றீங்களே...!!!// ஆமாம் மனோ மாஸ்டர் இது பலர் அறிஞ்சிருக்க வாய்ப்பு இல்லை தான் ...

    ReplyDelete
  33. உங்களின் தமிழ் படிக்க இனிமையாக இருக்கு..

    ReplyDelete
  34. மாலதி said...

    சிரிப்பதா அழுவதா// கருத்துக்கு நன்றி சகோதரி ...

    ReplyDelete
  35. ராஜ நடராஜன் said...

    தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் பாமியன் புத்தர் சிலைகளை சிதைத்ததை விட கொடுமையான விசயம் ராஜபக்சே அரக்கனை புத்தரின் வம்சாவளியென்று குறிப்பிட்டது.// ம்ம் உண்மை தான். ஆனால் சொல்கிறத எல்லாம் நம்பும் படியாக தான் சொல்கிறார்கள் இல்லை

    ReplyDelete
  36. * வேடந்தாங்கல் - கருன் *! said...

    உங்களின் தமிழ் படிக்க இனிமையாக இருக்கு..// நன்றி கருண் ...

    ReplyDelete
  37. //இன்று அதிகாரவர்க்கங்களுக்கு பக்கத்தில் இருப்பவர்கள் ஆளும் வர்க்கத்தை பற்றி இல்லாததும் பொல்லாததுமாக புகழ் பாடினாலே பிழைக்க முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டது .//
    முற்றிலும் உண்மை.எங்கும் இதே கதைதான்!

    ReplyDelete
  38. //இன்று அதிகாரவர்க்கங்களுக்கு பக்கத்தில் இருப்பவர்கள் ஆளும் வர்க்கத்தை பற்றி இல்லாததும் பொல்லாததுமாக புகழ் பாடினாலே பிழைக்க முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டது .//
    முற்றிலும் உண்மை.எங்கும் இதே கதைதான்!// உண்மை தான் ...நன்றி ஐயா கருத்துக்கு ...

    ReplyDelete
  39. ஆக இந்த கொலைவெறியன் தான் ஒரு வந்தேறிக் குடிமகன் என்பதனை ஒத்துக் கொள்கிறான். புத்தனும் இரத்தம் குடிக்கும் எத்தனா?

    ReplyDelete
  40. ஆக இந்த கொலைவெறியன் தான் ஒரு வந்தேறிக் குடிமகன் என்பதனை ஒத்துக் கொள்கிறான். புத்தனும் இரத்தம் குடிக்கும் எத்தனா?

    ReplyDelete
  41. அவருக்கு கதை விடுறது என்ன புதுசா..??
    எது எப்படியோ நான் வந்தேறியன் என்று ஒத்துக்கொண்டதில் சந்தோஷம், இதுக்காகவே கொலைஞர் கருணா நிதியிடம் சொல்லி ஒரு பாராட்டுக்கவிதை வேண்டி அவருக்கு பேக்ஸ் அனுப்ப வேண்டும்.

    ReplyDelete
  42. காமெடி பண்ணுராங்கைய்யா ஓவரா. முடியல.
    அருமையாஅலசல் பாஸ்..

    ReplyDelete
  43. மாப்ள நான் கூட தாவர வகையோட சொந்தம்தானுங்க ஹிஹி!

    ReplyDelete