பெண்களை மறந்த பாண்டி!

மனிசிக்கு பட்டுச் சாறி
மகனுக்கு கொஞ்சம் ரொபி
சங்கானை போக வேண்டி, தனியாய்
சைக்கிளில் ஏறினான் பாண்டி!

உருவத்தில் இவன் நாற்று
உள்ளுக்குள் நினைப்போ யூத்து
சைக்கிளை மிதித்ததோ காற்று
சட்டென்று மெதுவானான் 

பிரேக் போட்டு!

                                                                    [படம் கூகுளே]
ரோட்டிலே வந்த பெண்ணால்
மனதை இழந்தான் தன்னால்
"சைட்" அடித்தான் கண்ணால், பஸ்
வருவதை மறந்தான் பின்னால்,

மனிசி இல்லா துணிவோ
தினிசு வந்தது நெஞ்சில்
கொலரை தூக்கி விட்டான், கையால்
தலையை மேவிக்கொண்டான்.
"ஹாய்" சொல்ல எண்ணியே,ரண்டு
கையையும் தூக்கினான் முன்னே;

....அப்பிடி ஒரு அடி... , பாண்டி
அடுத்த தெரு முடிவில்
"அம்மா" என்று கத்தியதில்
அம்புலன்ஸ் வண்டியும் நொடியில்..!

பெரியாஸ்பத்திரியில் பாண்டி ,இப்போ
பெண்களை மறந்த ஆண்டி
நடக்கிறதும் காலை நொண்டி, இனி
அஞ்சாறு மாசம் இவன் ஓட்டாண்டி..!


(சங்கானை- ஊரின் பெயர்.
பெரியாஸ்பத்திரி- யாழ் போதனா வைத்தியசாலை.)

49 comments:

  1. //உருவத்தில் இவன் நாற்று
    உள்ளுக்குள் நினைப்போ யூத்து//

    நிரூபனை சொல்ல வில்லைதானே?

    ReplyDelete
  2. நல்ல நகைச்சுவை.

    ReplyDelete
  3. //
    உருவத்தில் இவன் நாற்று
    உள்ளுக்குள் நினைப்போ யூத்து
    சைக்கிளை மிதித்ததோ காற்று
    சட்டென்று மெதுவானான்
    பிரேக் போட்டு!
    /

    கவிதை ..கவிதை ..

    ReplyDelete
  4. haaa......haaa......haaa......haaa......

    ReplyDelete
  5. கவிதை நகைச்சுவையாய் உள்ளது...

    ReplyDelete
  6. நல்ல நகைச்சுவை கவிதை அன்பரே ...
    அதில் சிந்திக்க செய்தியும் சொன்னது அசத்தல்

    ReplyDelete
  7. நகைச்சுவையில் பொதிந்த கருத்து அருமை.

    ReplyDelete
  8. வித்தியாசமான சிந்தனையில்...

    ReplyDelete
  9. நகைச்சுவை சிந்தனை,..
    \ஹா..ஹா.

    ReplyDelete
  10. ஹா..ஹா........
    எப்பிடி வந்தது வரிகள் எல்லாம் அடுக்கடுக்காய் நகைச்சுவையுடன்..
    நல்லாயிருக்குங்க...

    ReplyDelete
  11. ஆஹா சூப்பர்!

    ReplyDelete
  12. நிரூபன் அண்ணா
    ஹா ஹா

    ReplyDelete
  13. நிரூபனா அந்த பாண்டி??????? # பின் குத்தில் மாட்டிவிடுவோர்

    ReplyDelete
  14. செம காமெடி பாஸ்

    ReplyDelete
  15. இப்படிப்பட்ட கேசுகள் நம்ம ஊரில் நிறைய இருக்கு பாஸ்

    ReplyDelete
  16. அட ...பொண்ணுங்கன்னா இப்படியா அலைவாயிங்க ....

    ReplyDelete
  17. மாப்ள நிரூ .......ஐயோ ....அய்யோ...

    ReplyDelete
  18. ///உருவத்தில் இவன் நாற்று
    உள்ளுக்குள் நினைப்போ யூத்து
    சைக்கிளை மிதித்ததோ காற்று
    சட்டென்று மெதுவானான்
    பிரேக் போட்டு!//
    ஹி.ஹி.ஹி.ஹி

    நல்ல அடுக்குமொழி....டி.ராஜேந்தர் படத்துக்கு வசனம் எழுதலாம்....

    நல்ல நகைச்சுவை கவிதை நண்பா

    அப்பறம் சங்கானைப்பக்கம் நல்ல...........ஹி.ஹி.ஹி.ஹி.
    ரோட்டோ(வீதி)ஏன் கேட்கின்றேன் என்றால் சைக்கிளில் கைகளைவிட்டு ஓடலாம் என்றால்.நல்ல ரோடுகள்(வீதிகள்)இருக்கு போல....ஹி.ஹி.ஹி.ஹி

    ReplyDelete
  19. மச்சி, கவிதையினைப் படிக்க முன்னாடி, படம் பார்த்தேன்...
    படத்தினைக் கூகுளில் எடுத்திருக்கச் சந்தர்ப்பம் குறைவாக இருக்கிறதே,
    யாரோ ஒருவர்
    கந்தசாமி எனும் நபர் எடிற் பண்ணியிருக்கிறது போலத் தோன்றுதே.
    அவ்...அவ்....

    ReplyDelete
  20. பாண்டியோ பாண்டி..!
    சைக்கிளிலே பூண்டி..?!- இந்த
    வம்பே எனக்கு வேண்டான்டி.!

    ReplyDelete
  21. பெண்களை மறந்த பாண்டி!//

    தலைப்பே கொஞ்சம் கிளு கிளுப்பாக இருக்கு, பாண்டி பதிவுலகத்தில் பிசியாகியதால் இப்போ பெண்களை மறந்திட்டாராம்.
    ஊரில உள்ள விதானையாரின் பெட்டை உட்பட எல்லோரும் நான் ப்ளாக்கில் பிசியாகியதால் நிம்மதியாக இருக்கிறது உங்களுக்குத் தெரியாதோ பாஸ்?

    ReplyDelete
  22. நான் தான் எம்.ஜி.ஆரு..!
    என்ன எதித்த நின்னவன் யாரூ?
    அம்மா போடுவா சோறு!
    'அலேக்' விழுங்குவேன் பாரு!
    என் கவிதை கூட ஜோரு..!

    ReplyDelete
  23. கமெண்ட் எப்படி இருக்கு சாரு! ச்சீ சாரே.. இல்லையில்லை ஐயா!!

    ReplyDelete
  24. மனிசிக்கு பட்டுச் சாறி
    மகனுக்கு கொஞ்சம் ரொபி
    சங்கானை போக வேண்டி, தனியாய்
    சைக்கிளில் ஏறினான் பாண்டி!//

    யோ....கந்ஸ்..
    பாண்டிக்கு இன்னும் கலியாணம் ஆகலைத் தெரியாதோ....
    அவ்...அவ்...

    ReplyDelete
  25. நன்றாக ரசிக்கும்படிதான் இருக்கு..! பகர்வுக்கு நன்றி..!

    ReplyDelete
  26. உருவத்தில் இவன் நாற்று
    உள்ளுக்குள் நினைப்போ யூத்து
    சைக்கிளை மிதித்ததோ காற்று
    சட்டென்று மெதுவானான்
    பிரேக் போட்டு!//

    ஏனய்யா ஏன் இந்தக் கொலை வெறி?

    ReplyDelete
  27. மனிசி இல்லா துணிவோ
    தினிசு வந்தது நெஞ்சில்
    கொலரை தூக்கி விட்டான், கையால்
    தலையை மேவிக்கொண்டான்.
    "ஹாய்" சொல்ல எண்ணியே,ரண்டு
    கையையும் தூக்கினான் முன்னே;//

    நல்ல வேளை,
    தலையில் மயிர் இல்லை என்று நீங்க எழுதலை(((((:

    ReplyDelete
  28. பெரியாஸ்பத்திரியில் பாண்டி ,இப்போ
    பெண்களை மறந்த ஆண்டி
    நடக்கிறதும் காலை நொண்டி, இனி
    அஞ்சாறு மாசம் இவன் ஓட்டாண்டி..//

    அப்ப்பாடா... நான் தப்பிச்சேன், நீங்க என்னைப் பற்றிச் சொல்லலைத் தானே;-))))

    கவிதை சந்தம் கலந்து முடிக்கும் சொற்கள் ஒன்றித்து வந்து கலக்கலாக இருக்கிறது.

    ReplyDelete
  29. நல்ல போகுது பாண்டி கதை

    ReplyDelete
  30. வித்யாசமாய்த்தான் யோசிக்கிரீங்கப்பு

    ReplyDelete
  31. அருமையான நகைச்சுவைக் கவிதை வாழ்த்துக்கள்
    சகோ.....

    ReplyDelete
  32. நையான்டி கவிதை :) நன்றாக இருக்கிறது நண்பரே :)

    ReplyDelete
  33. அடபாவி மக்கா அனுபவம் சூப்பரா வெளியே வந்துருக்கே ஹி ஹி....

    ReplyDelete
  34. நகைச்சுவையுடன் கருத்தும் செறிந்த கவிதை.

    ReplyDelete
  35. நந்தவனத்தில் ஓர் ஆண்டிக்கப்புறம் இது தான்...
    கலக்கல்...

    ஓரம்போ..ஓரம்போ..கந்தசாமி வண்டி வருது...

    ReplyDelete
  36. வணக்கம் கவி மாகா சக்கரவர்த்தி
    ஆனாலும் நிரூபன் உங்களுக்கென்ன பாவம் பண்ணினான். ஒரு பச்சை பிள்ளையை இப்பிடியா போட்டு வாருறது

    ReplyDelete
  37. நல்ல கருத்தை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  38. எனக்கு இதென்னவோ கந்தசாமிக்கு நடந்தது போலதான் இருக்கு!!

    ReplyDelete
  39. என்னா ஒரு கவிதை....
    கடைசி இரண்டு பந்தி சூப்பர்.......

    ReplyDelete
  40. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கவிதை :)

    ReplyDelete
  41. நல்ல நகைச்ச்சுவைக் கதை கந்து...

    //உருவத்தில் இவன் நாற்று //

    ஹா..ஹா..நிரூ பாவம்!

    ReplyDelete
  42. இப்பிடியும் கவிதைகள் எழுதலாமோ எண்டிருக்கு !

    நிரூ பெரியாஸ்பத்திரில இருந்துகொண்டுதான் பதிவு
    எழுதுறாரோ !

    ReplyDelete
  43. ஆஹா படமும் பதிவும் சூப்பரோ சூப்பர்
    பாண்டி இனி வித்தையும் காட்ட மாட்டான்
    பெண்கள் பக்கம் போகவும் மாட்டான்
    படமும் பதிவும் இப்படி மிகச் சரியாக
    ஒத்துப் போவது அபூர்வம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  44. சகொதரா படத்துக்கான கவிதையா ? கவிதைக்கான படமா ரொம்பக் குழப்பமாயிருக்கங்க..


    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    என்னை கடுப்பேற்றும் பதிவர்களின் செயற்பாடுகள் மூன்று

    ReplyDelete
  45. இது ஒண்டும் உங்கட சொந்தக் கதை இல்லையே

    ReplyDelete
  46. ஏனெண்டா நல்லா அனுபவிச்சு எழுதின மாதிரியே இருக்குது

    ReplyDelete
  47. கவிதையும் தலைப்பும் சூப்பர்...

    ReplyDelete