அக்தர் சச்சின் பற்றி சொன்னது சரியா?

கிரிக்கெட் உலகிலே மைதானத்தில் அன்று தொடக்கம் ஆக்ரோசமாக ஆடக்கூடிய அணிகளில் பாகிஸ்தான் அணிக்கு  தனி இடம் உண்டு. அதே போல பல்வேறு பட்ட திறமைமிக்க,  உலகின் மிக சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய பெருமையும் பாகிஸ்தான் அணிக்கு உண்டு. என்னை பொறுத்தவரை உலகின் நம்பர் வன் அணியாக இருக்கக்கூடிய அத்தனை தகுதியும் பாகிஸ்தான் அணிக்கு இருந்து வந்தது. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு உள்ள மிக பெரிய குறைபாடு  அடிக்கடி சர்ச்சைகளில்  சிக்கிக்கொள்ளுதல். பாகிஸ்தான் அணியும் சர்ச்சைகளும் அண்ணன் தம்பி போல! உச்சத்தில் இருக்க வேண்டிய அணி இன்று கட்டெரும்பாய் தேய்ந்து போய் இருப்பதுக்கு காரணமும்  இது  தான். 

பாகிஸ்தான் அணிக்குள் எடுத்துக்கொண்டால் அன்று தொடக்கம் அதிகளவான சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டவர்களில் அக்தருக்கு முதல் இடம் கொடுக்கலாம்.

அக்தரை  பொறுத்தவரை இரண்டு வகைகளில் பிரபலமானவர். ஒன்று அவரின் அசுர வேக பந்து வீச்சு மூலம், மற்றையது மைதானத்துக்குள்ளும் -வெளியிலும் நடந்துகொள்ளும் விதம். மிகத்திறமை வாய்ந்த ஒரு வீரரின் முழுமையான பங்களிப்பை பாகிஸ்தான் அணி  பெற்றுக்கொள்ள முடியாமைக்கு காரணம், அவர் தேடி சென்று வம்பை விலைக்கு வாங்கி அணி நிர்வாகத்தின் கோபத்தை கிளறுவதும், ஐசிசியால் அடிக்கடி தடைவிதிக்கப்படுவதும் தான்.

சர்ச்சைகளே உருவான அக்தர் இப்பொழுது  எழுதிய  கான்ட்ரோவெர்ஸியலி யூவர்ஸ் என்னும் சுயசரிதை புத்தகத்தில் சச்சின் ,ராவிட் பற்றி குறிப்பிட்டுள்ள விடயங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த இரு வீரர்களும் மேட்ச் வின்னர்கள் இல்லை என்று குறிப்பிட்டதோடு, சச்சின் தன் பந்தை கண்டு அஞ்சி நடுங்கினார் என்று  ஒரு பிட்டையும் தூக்கி போட்டுள்ளார்.  

சச்சின் ராவிட் மேட்ச் வின்னர் இல்லையா!
சச்சினை பொறுத்தவரை  ஆரம்பத்தில் சில போட்டிகளின் பின்னர் பலகாலமாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவே களமிறங்கி வருகிறார். ஆக, ஒரு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மேட்ச் வின்னராக- இலக்கின் இறுதி வரை அணியை அழைத்து செல்பவராக  இருப்பது  சாத்தியமற்றது என்று அக்தருக்கு புரியாதது வியப்பாகவே  உள்ளது.  மற்றும்படி சச்சின் சிறந்த துடுப்பாட்ட வீரரா இல்லையா என்பதை அக்தர்  தீர்மானித்துவிட  முடியாது.
ஆனால் ராவிட் மேட்ச் வின்னர் இல்லை என்று சொன்னது அவரின் சிறுபிள்ளை தனமான-எந்தவிதமான தரவுகளையும் ஆராயாமல் எழுந்தமானமாக எழுதியுள்ளார் என்பதை தான் காட்டுகிறது! இதுவரை ராவிட் இந்திய அணிக்காக விளையாடிய 344  ஒருநாள் போட்டிகளிலே அவ்வணி 160 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இவ் வெற்றிகளின் போதான ராவிட்டின் துடுப்பாட்ட சராசரி 51 - இது ஒன்றே  போதும் ராவிட் மேட்ச் வின்னரா இல்லையா என்ற முடிவுக்கு வர! 

தூபமிடும் அப்ரிடி
அதே போல அக்தரின் இந்த பிரச்சனைக்கு தூபம் போடும் வகையில் பாகிஸ்தானின் சகலதுறை வீரர் அப்ரிடியும் தன் பங்குக்கு, சச்சின் அக்தரின் பந்தை எதிர்கொள்ளும் போது அவரின் கால்கள் நடுங்கியதை நேரில் கண்டேன் என்று மீண்டும் இந்திய ரசிகர்களை சூடேத்தும் விதமாக கூறியுள்ளார். சாதாரணமாக ஒரு துடுப்பாட்ட வீரர் பந்துவீச்சை எதிர்கொள்ளும் போது கால்கள் முன் பின் நகரத்தான் செய்யும்- இது பயத்தால் ஏற்ப்பட்ட நடுக்கம் தான் என்று அப்ரிடியால் உணரமுடிகிறதென்றால் ஆச்சரியம் தான்! நான் நினைக்கிறேன் அப்ரிடிக்கு இந்திய அணி மீது வெறுப்பு வர காரணம், கடந்த ipl  போட்டிகளுக்கான ஏலத்திலே   பாகிஸ்தான் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டதாக  இருக்கலாம். ஒரு முறை அவரே  இதை நேரடியாகவே சொல்லி ஆதங்கப்பட்டிருந்தார்.
இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிகளிலே பாகிஸ்தானுடனான போட்டியில் சச்சின் அக்தர் பந்துவீச்சுக்கு கொடுத்த மரண அடியை மறந்து, அக்தரால் இவ்வாறு எழுத எப்படி  தான் முடிந்தது. இன்றும் அக்தர் பந்துக்கு ஆஃப் சைடில் சச்சின் அடித்த சூப்பர்  சிக்சர் கண் முன்னே  நிற்கிறது.  அந்த போட்டியிலே ஒரு கட்டத்திற்கு பிறகு அக்தரை பந்து வீச அழைத்த போது, அவர் சச்சினின் ருத்திர தாண்டவத்தை கண்டு அஞ்சி பந்து வீச மறுத்தாராம் என்று அந்த போட்டியிலே பாகிஸ்தான் சார்பாக விளையாடிவர்களில் ஒருவரான வாசிம் அக்ரமே குறிப்பிட்டுள்ளார்.

அன்று வக்கார் யூனிஸின் பந்தில்  தாடையிலே  அடிவாங்கி ரத்தம் சொட்ட, அதுக்கு சிறு  கட்டுப்போட்டுவிட்டு மீண்டும் மைதானத்துக்குள் வந்து துடுப்பெடுத்தாடியத்தில் இருந்து, கார்ட்னி வால்ஷ், கார்ட்லி ஆம்புரோஸ் போன்ற எத்தனையோ ஆபத்தான பந்துவீச்சாளர்களை எல்லாம் எதிர்கொண்டு தான் இன்று உலகின் மிக சிறந்த துடுப்பாட்ட வீரர் என்ற நிலையை அடைந்தவர்.  அப்படிப்பட்ட சச்சினுக்கு அக்தர் எல்லாம் ஒரு பொருட்ட அல்ல.

அக்தரை பொறுத்தவரை அவரின் புத்தகம் விற்றுத்தீர்க்க வேண்டும். அவ்வாறு விற்று தீர்க்கப்பட வேண்டுமென்றால் அப்புத்தகத்திலே சர்ச்சைக்குரிய விடயங்களை எழுதி அதையே விளம்பரமாக வேண்டும்- அதை தான் செய்துள்ளார்.

ஆக, அக்தரை பொறுத்தவரை இப்பொழுது இந்த விடயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க பகிரங்க மன்னிப்பு கோர  வேண்டும். இல்லையெனில் அவர் இந்தியாவுக்குள் நுழையும் போது கல்லெறி மட்டுமல்ல, செருப்பெறி விழுவது கூட தவிர்க்க முடியாதது தான்!



27 comments:

  1. //பாகிஸ்தான் அணிக்கு உள்ள மிக பெரிய குறைபாடு அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளுதல். பாகிஸ்தான் அணியும் சர்ச்சைகளும் அண்ணன் தம்பி போல! உச்சத்தில் இருக்க வேண்டிய அணி இன்று கட்டெரும்பாய் தேய்ந்து போய் இருப்பதுக்கு காரணமும் இது தான். //

    உண்மை அய்யா!

    ReplyDelete
  2. ஆஹா!அந்த சிக்ஸர்!
    எப்போதும் மறக்காது!
    சச்சின் பயந்தார் என்பதெல்லாம் பம்மாத்து

    பந்து வீச இவர் பயந்தார் என வாசிம் அகரம் சொன்னது உண்மை!இவர் மட்டுமல்ல அந்த போட்டியில் பந்து வீச பாகிஸ்தான் பவுலர்கள் அனைவரும் பயந்தனர்.

    டிராவிட் மேட்ச் வின்னர் இல்லை என இவர் சொல்வதை சின்ன பப்பா கூட நம்பாது.

    ஏனிப்படி அக்தர் தனது புத்தகத்துக்காக புளுகுனி ஆகிட்டாருன்னு தெரியல.

    ReplyDelete
  3. கிரிக்கெட், சீட்டு, செஸ் விளையாட்டு பற்றி நமக்கு ஒன்னும் தெரியவும் செய்யாது புரியவும் செய்யாது...!!!

    ReplyDelete
  4. இன்ட்லிக்கும் எனக்கும் வாய்க்கா தகராறு அதனால பாக்கி எல்லா ஓட்டு பட்டையிலும் டண்டனக்கா குத்தியாச்சு ஹி ஹி...

    ReplyDelete
  5. புத்தகம் விற்பதற்காகச் செய்யப்படும் ஸ்டண்ட்.ஆனாலும் எல்லை மீறி விட்டார்.

    ReplyDelete
  6. After all it's just a game...and another gimmick to sell the book..Nothing more nothing less..Bro..

    ReplyDelete
  7. புக்குக்கு விளம்பரம்னு நினைச்சுப் பண்ணது தான்..ஆனால் இப்படிப் பேசினால் பாகிஸ்தானில் மட்டும் தான் புக் விக்கும்..இந்திய மார்க்கெட் காலி தான்.

    (எனக்கு கிரிக்கெட் புரியாட்டியும் இது புரியுது.)

    ReplyDelete
  8. ஐயா கந்தசாமி அடுத்த பதிவில் சந்திப்போம் இந்த விளையாட்டு எல்லாம் மேட்டுக்குடியாம்!!!! 

    ReplyDelete
  9. இனிய இரவு வணக்கம் ஐயா;
    நானும் உள்ளேன் ஐயா..

    என்ன பதிவுகளின் தலைப்புக்கள் எல்லாம் சரியா? சரியா என்று போகிறது?
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  10.  வணக்கம் கந்தசாமி  அவருக்கு புத்தகம் விக்கனும் அதுக்கு என்ன வேனும்னாலும் சொல்லுவார்.. இப்படி அதிக எழுத்தாளர்கள் செய்திருக்காங்க அவர்களின் வழியை  இவர் பின்பற்றுகிறார் யாராவது ஒரு பிரபலத்த சீண்டினால்தானே என்னவோ ஏதோன்னு ஓடி வருவாங்க..!!!

    ReplyDelete
  11. யோ தனிமரம் எல்லா இடத்திலேயும் உங்கட பின்னூட்டத்தை கவனித்து வருகிறேன் அக்தரின் புத்தகத்தை  புறூ பாத்தது நீங்களா? ஏன்னா சம்மந்தமில்லாமல் அவரும் எழுதி இருக்காரையா...!!!!)))

    ReplyDelete
  12. ட்ராவிட் மெட்ச் வின்னர் இல்லை எனக்கூறியதுதான் பெரிய காமெடி..

    ReplyDelete
  13. முன்பொருமுறை ஒரு நிகழ்ச்சியில் ஷேவாக் அக்தர் பற்றி கூறியதற்கு பதிலடியாக இருக்கலாம் சச்சின் பற்றி கூறிய கருத்து. ஆனாலும் டிராவிட் பற்றி கூறியது அபத்தமானது. டிராவிட் வென்று கொடுத்த போட்டிகள் ஏராளம்.

    ReplyDelete
  14. எல்லாம் வணிகம் நண்பா வணிகம்

    ReplyDelete
  15. ஆ... கிரிக்கெட்டா அப்போ ஓட்டு மட்டும் மச்சி.. பாய் பாய்

    ReplyDelete
  16. அக்தருக்கெல்லாம் ஒரு பதிவை போட்டு உங்க நேரத்தை வேஸ்ட செய்துட்டீங்க நண்பா...

    ReplyDelete
  17. வணக்கம் பாஸ் நானும் இதைப்பற்றி ஒரு பதிவு எழுதனும் என்று இருந்தன் நீங்க எழுதிவிட்டீங்க நான் என் கருத்துக்களை கருத்துரையில் சொல்கின்றேன்

    ReplyDelete
  18. சச்சின்,ராவிட்,மேட்ச் வின்னர் இல்லை என்று அக்தர் சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியாது ஒரு வேளை அக்தர் விளையாடவந்த பிறகு சச்சின் தனியாக பல போட்டிகளை வென்று கொடுக்கவில்லை அதனால் அப்படி சொன்னாரோ தெரியாது ஆனால் ராவிட்டை அப்படி சொல்ல முடியாது இந்தியாவின் மேட்ச் வின்ன்னர் என்றால் ராகுல் ராவிட்டுக்கு அதில் தனி இடம் உண்டு

    உதாரணத்துக்கு..லக்ஸ்மனுடன் சேர்ந்து அவுஸ்ரேலியாவுக்கு மரண அடிகொடுத்த அந்த கொல்கத்தா டெஸ்போட்டி இந்தியா பலோ ஓன் ஆன பிறகு கங்குலி போய் ராவிட்டிடம் சொன்னாராம் வருவது வரட்டும் நீங்கள் அடித்து தூள்கிளப்புங்கள் என்று...

    இன்னும் ஒரு உதாரண்ம் அவுஸ்ரேலியாவின் அடிலெட்டில் ராவிட் விளாசிய அந்த அற்புதமான இரட்டைச்சதம்...

    ஸ்ரிவோக்,பொண்டிங் சொல்வது போல
    வடிவேல் காமடியுடன் ஓப்பிட்டு போல சொல்வார்கள் டேய் அந்த அடிலெட்டில் அடிச்சீங்களே 11 பேரு அவங்களா நீங்க

    இப்படி நிறைய உதாரணங்கள் ராவிட் இந்திய அணியை தனி நபராக பல போட்டிகளில் வெற்றிக்கு காரணமாக இருந்து இருக்கின்றார்..
    இப்படி இருக்க அக்தர் ஏன் அப்படி சொனார் என்று தெரியவில்லை

    ReplyDelete
  19. அக்தராவது மேலோட்டமாக காமடி இல்லாமல் சொல்லியுள்ளார் ஆனால் அப்ரடி என்ன மப்பிள் இருந்தாரா? அக்தரின் பந்துக்கு சச்சினின் கால நடுங்குவதை பாத்தாராம் என்ன நாசம் இது..அப்ப என்ன விளையாடும் போது கால்களை நகர்த்தாமல் ஒரே இடத்தில் வச்சா விளையாடுவது...பிறகு அப்ரடி தனது கருத்தில் இருந்து பல்டி அடித்துள்ளார் அதாவது 1999ல் நடைபெற்ற ஒரு டெஸ்ட்போட்டியில் தான் அப்படிச்சொன்னாரான்..மற்றபடி சச்சின் சிறந்த வீரராம் .அப்ரடியின் கருத்து சின்னப்புள்ளைத்தனமாக இல்லை

    ReplyDelete
  20. இதில் இன்னும் ஒன்றை சொல்ல வேண்டும் எனக்கு தனிப்பட்ட ரீதியில் சச்சினைப்பிடிக்காது அதுக்காக ஒரு சிறந்தவீரரை கேவலமாக விமர்சிப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது...அக்தரின் கருத்தைவிட அப்ரடி கருத்துதான் காமடியாக உள்ளது

    ReplyDelete
  21. இதில் இன்னும் ஒன்றை கவனிக்க வேண்டும் இந்தபுத்தகத்தில் கங்குலியை பற்றி எதும் குறைகூறவில்லை நல்லமாதிரித்தான் சொல்லியுள்ளார்..அதாவது கங்குலி மிகச்சிறந்த கேப்டன் என்றும் இந்திய அணியில் பல இளம்வீரரகளை உருவாக்கியவர் அவர்,இபோதய தோனி தலைமையிலான இந்திய அணியின் வளர்ச்சிக்கு கங்குலிதான் காரணம் என்று இது 100 வீதம் உண்மைதான்.

    சச்சினை பற்றி சமநேரத்தில் விமர்சித்து இதனால் கங்குலி சச்சின் ரசிகர்களுக்கு இடையிலான போட்டியினால் தன் புத்தகம் பிரபல்யம் அடையும் என்று ஒரு வேளை அக்தர் நினைத்து இருக்கலாம்..ஆனால் நான் ஒரு தீவிரமான கங்குலி ரசிகன் தம்ம தலையை பற்றி நல்லமாதிரி சொல்லியுள்ளார் ஆனாலும் சச்சினை விமர்சித்தை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை அக்தரின் கருத்தாவது ஒரளவு ஏற்றுக்கொள்ளாம் அப்ரடி கருத்தை என்னவென்று சொல்வது..

    ReplyDelete
  22. இதில் இன்னும் ஒரு விடயம் அப்ரடி பற்றியும் அக்தர் இந்தப்புத்தகத்தில் விளாசியுள்ளார் இது பற்றி அப்ரடியிடன் கேட்டார்களாம் அவர் மளுப்பிச்சென்றுவிட்டாராம்...

    ReplyDelete
  23. இது பற்றி சச்சினிடம் கேட்ட போது சச்சின் என்ன சொன்னார் அக்தரின் கருத்துக்கு பதிலளிப்பது தன் புகழுக்கு இழுக்கு என்றார்..இதான் ஒரு ஜெண்டில்மேன் வீரருக்கு அழகு...சச்சினின் இந்தக்குணம்தான் அவர் கிரிக்கெட்டில் நிலைத்து நிற்க காரணம்...

    ReplyDelete
  24. அண்ணே ஒரு விளம்பரம்....

    டேய் மண்டையா நீ வாங்குன அடிக்கு இது தேவையா....

    மாப்ள இதான்யா என்னோட கருத்து!

    ReplyDelete
  25. உண்மைய சொல்லனுன்னா அப்ரிடியும் சர்ச்சையும் கணவன் மனைவி மாதிரி

    அப்போ அப்போ துரத்திகிட்டு இருக்கும்

    ReplyDelete
  26. இந்திய கிரிகெட் அணியின் இரண்டு இமயங்கள் இவர்கள், தன் புத்தகத்தை பிரபல படுத்தவேண்டும் என்றே இப்படி செய்திருக்கின்றார் அக்தர், இந்திய வீரர்கள் எப்படிப் பட்டவ்ர்கள் என்று இவர்களுக்கு நன்றாகவே தெரியும். . .

    ReplyDelete
  27. கிரிக்கெட்டைப் பொறுத்த வரை சச்சின் அவுட் என்றால் ஆட்டம் காலியென்பதும்,ரசிகர்கள் தலையை தொங்கப்போட்டுக்கொள்வதும் இந்திய கிரிக்கெட்டின் எழுதப்படாத விதி.பந்து சுழற்றும் லாவகத்தை சச்சினிடமே கற்றுக்கொள்ள வேண்டும்.

    Sachin one man show என்பதை சும்மா பெவிலியனில் உட்காரு மாமேன்னு தோனி குழுக்கள் ஆட்டத்தை மாற்றியதும் உண்டு.

    கிரிக்கெட் ஆட்டத்திலேயே எனக்குப் புடிச்ச பொழுதுபோக்கு இதோ இந்த ஓவரில் சச்சின் அவுட்டுன்னு சொல்லி நண்பர்களை உசுப்பேத்துவதுதான்:)
    அப்படியே 92லருந்து 98க்குள்ள அவுட்டாகி நண்பர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட நேரங்கள் தெரியனுமின்னா சச்சின் ரன் ரெக்கார்டு பார்த்துக்குங்க!

    ReplyDelete