சேவாக் சாதனை, சிறு வேதனை!

சிறு வயசில் இருந்தே சச்சினின் தீவிர ரசிகனாக, அவரையே தனது ரோல் மொடலாக கொண்டு கிரிக்கெட் விளையாடி வரும் ஒருவனுக்கு பிற்காலத்திலே அதே தனது ரோல் மொடலுடன் ஒன்றாக, அதுவும் ஆரம்ப துடுப்பாட்டத்தில் சச்சின் பங்காளியாக விளையாடக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தால் அவன் எவ்வளவு பெரிய அதிஷ்டகாரன். அந்த விதத்தில் ஒருவர் தான் விரேந்தர் சேவாக்.

ஆனால் இன்று ஒருபடி மேல் சென்று சச்சின் சாதனைப்படிகளில் ஒன்றை, யாருமே அவ்வளவு எளிதில் எட்டிப்பிடிக்க முடியாது என்று கருதப்பட்டத்தை கடந்துள்ளார். 

இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொன்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலே 'ஒருநாள் போட்டியில்இரட்டை சதம்' என்ற இலக்கை தனது சாதனைகளில் இன்னொன்றாக பதிவு செய்திருந்தார் சச்சின். அப்பொழுது பெவிலியனில், இருக்கையில் இருந்து எழுந்து தனது சந்தோசத்தை கைதட்டல்கள் மூலம் வெளிப்படுத்திய சேவாக் நினைத்திருப்பாரா? இன்னும் இரண்டு வருடங்களுக்குள் இந்த மைல்கல் தன்னால் முறியடிக்கப்படும் என்பதை!

மேற்க்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத போட்டியாக அமைந்துவிட்டது. அத்துடன் இந்தப்போட்டி இந்திய ரசிகர்களை பொருத்தவரை பெரும் சந்தோசத்தையும், கூடவே சிறு வருத்தத்தையும் கொடுத்திருக்கும் என்பது உண்மையே.

ஒருநாள் போட்டியோன்றிலே இரட்டை சதம் என்ற சச்சினின் சாதனை உடைக்கப்பட்டது வருத்தத்தை கொடுத்தாலும், அதை உடைத்தது அதே இந்திய அணிவீரர் தான் என்பது பெரும் ஆறுதலையும் சந்தோசத்தையும் கொடுத்திருக்கும். அத்துடன் சேவாக்குக்கு இந்த சாதனை மூலம் பெறப்பட்ட பெறுமதி வாய்ந்த விருதாக சச்சினிடம் இருந்து கிடைத்த வாழ்த்து செய்தி தான் இருக்கும் என்பதையும் நம்புகிறேன்.

இந்த தொடரிலே டோனி இல்லாத நிலையில் சேவாக் ஒரு கேப்டனாக, முன்னணி துடுப்பாட்ட வீரராக பெரும் பணி இருந்த போதும், முதல் மூன்று போட்டிகளிலும் சோபிக்க தவறிவிட்டார். எனினும் நான்காவது போட்டியிலே  தனது வழமையான பாணியிலே ஆட்டத்தை தொடங்கிய சேவாக் மேற்கிந்திய தீவுகளின் ஒட்டுமொத்த பந்து வீச்சு வரிசையை நிலைகுலைய செய்து விட்டார். தனது அறுபத்து ஒன்பதாவது பந்திலே பவுண்டரி மூலம் சத்தத்தை கடந்தவர்; அதன் பின் தன் அவசர தனத்தால் காம்பீர், மற்றும் ரைனாவின் ஆட்டமிழப்புக்கு காரணமாக இருந்தாலும், தொடர்ந்து பதற்றப்படமால் நூற்று நாற்பதாவது பந்துகளிலே தனக்கே உரிய பாணியில் மீண்டும் ஒரு பவுண்டரி மூலம் தனது இரட்டைசதம் என்ற மைல்கல்லை எட்டி பிடித்தார்.

மேற்க்கிந்தியாவுக்கு எதிரான இந்தப்போட்டியிலே மேற்கிந்திய அணி வீரர்களின் மோசமான களத்தடுப்பும் சேவாக்குக்கு கடைசி வரை பக்க பலமாக அமைந்துவிட்டது. இருபது ஓட்டங்களை பெற்றிருக்கும் போது ஒரு ரன் அவுட் வாய்ப்பையும், பின்னர் நூற்று எழுபது ஓட்டங்களை பெற்றிருக்கும் போது கிடைத்த சுலபமான கேட்சையும் அவ்வணி வீரர்கள் தவறவிட்டார்கள். 

இனி வருங்காலத்திலே 219 என்ற சேவாக்கின் இந்த இலக்கு அவ்வளவு சீக்கிரம் எந்த ஒரு துடுப்பாட்ட வீரராலும் உடைத்துவிட முடியாது. கிரிக்கெட் உலகிலே இந்த சாதனையை கடக்கக்கூடிய தகுதி ஒரு அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கே சாத்தியமாகும். ஆனால் தற்போதைய கிரிக்கெட் சூழலில் இதற்க்கு தகுதியான வீரர் யாரும் இல்லை என்பதுவே எனது பதில். இருந்தாலும் 'எதுவுமே நிரந்தரம் இல்லை'.

படங்கள்- cricinfo-

12 comments:

  1. சச்சின் சாதனைகளின் ஊற்று..
    சேவாக் அவரின் சாதனையை முறியடித்து
    புதிய சாதனையாளரானது உடனே கிடைத்ததல்ல..
    எத்தனை எத்தனை முயற்சிகள்..
    சாதனைக்கு வாழ்த்துக்கள்..
    இதே சாதனையை வைத்துக்கொண்டு
    மார்தட்டி திரியாமல் அடுத்த ஆட்டங்களிலும் விளையாட்டை
    மேம்படுத்திக் கொள்ளவேண்டும்..
    சாதனைகள் முறியடிப்பதற்கே.....

    ReplyDelete
  2. வணக்கம் பாஸ் இது பற்றி நானும் நேற்று ஒரு பதிவு போட்டேன்

    உண்மையில் சேவாக் இந்த சாதனையை படைத்ததுக்கு வாழ்த்துக்கள் அவரின் அறிமுக காலத்தில் இருந்தே அவரை ரசித்துவரும் ரசிகன் நான் இந்திய அணியில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு வீரரான சேவாக் இந்த சாதனையை படைத்தது மகிழ்சியே ஆனால் இந்த சாதனை எவ்வளவு காலத்துக்கு நிலைத்திருக்கும் என்பது சொல்ல முடியாது இது முறியடிக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை

    ReplyDelete
  3. வணக்கம் பாஸ்,

    நல்லா இருக்கீங்களா?

    சேவாக்கின் சாதனை பற்றி இணையத் தளங்கள் வாயிலாகத் தான் அறிந்தேன்.

    மச் பார்க்க டைம் கிடைக்கலை!
    அரிய சாதனை பற்றிய அசத்தலான பதிவிற்கு நன்றி!
    219 என்பது பெரியதொரு மைல் கல் தான்!

    சேவாக்கினை நாமும் வாழ்த்துவோம்!

    ReplyDelete
  4. சச்சினின் சாதனை பரிபோனது கவலைதான்...

    அதை மிஞ்சியது இந்தியரே என்பது தற்போதைக்கு ஆறுதல்தான்

    ReplyDelete
  5. இதுபோன்ற சாதனைகள் ரொம்பவும் அரிதானவை.சேவாக்கின் சாதனைக்கு வாழ்த்துக்கள். தகவலை சுவாரசியமாக பதிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. எனக்கும் கிரிக்கெட்டுக்கும் காததூரம்ங்கோ...!!!

    ReplyDelete
  7. அடிச்சி ஆடிட்டு வந்து சிறு மிதமான ஆட்டத்தை மட்டும் சேவக் பெற்று இருந்தால்...இந்நேரம் பல சாதனைகளை அடித்து நொறுக்கி இருப்பார்...இருந்தாலும் இதை உடைப்பது சற்று கடினமே!

    ReplyDelete
  8. எதுவுமே நிரந்தரம் இல்லை..

    இதை நம்மை விட நன்றாய் உணர்ந்தவர் சச்சின்...அவரே கூட இதை முறியடிக்கலாம்...காத்திருப்போம் நண்பா...

    உங்களின் வலைப்பூ அருமை..நான் இன்று உங்கள் பதிவேட்டில் ஓர் புதுவரவு...:)

    ReplyDelete
  9. மச்சி வோட் மட்டும்... ஹா ஹா

    ReplyDelete
  10. in my first comment, i dont mention any bad words, i wrote just as comedy. but in that your reply was worst i mean your used some animal names...........that's y i wrote my previous comment like that. and more over, everyone was asking to write comment comment..............so it is our right to write comments.........but you put my photo in the blogspot, i dont take this as serious..........its all comedy.........i may ask sorry to that. please i requested you to remove that post from your blog.Hope you understand

    ReplyDelete