ஸ்டாலின் கிராட். (stalingrad).. (தோல்வியின் ஆரம்பம்)

எதிரி தன்னை தயார்படுத்துவதற்க்கோ, யுத்தத்தின் இடைநடுவில் ஓய்வு எடுப்பதற்க்கோ சற்றே கால அவகாசம் வழங்காது, தான் வரையறுத்த இலக்கை நோக்கி உக்கிர தாக்குதல்களை நடத்தியவாறே மிக வேகமாக முன்னேறி சொல்லுவது தான் கிட்லரின் மின்னல் வேக தாக்குதல் தந்திரமாகும். இம்முறையிலான படையெடுப்பானது இரண்டாம் உலக யுத்தத்திலே கிட்லருக்கு மிக பெரிய வெற்றிகளை பெற்று கொடுத்தது; ஆனால் இந்த தாக்குதல் தந்திரம் சோவியத் யூனியனில் பலிக்கவில்லை. இது தான் சோவியத் யூனியனில், கிட்லரின் யூகத்துக்கு மாறாக கிடைத்த முதலாவது அதிர்ச்சி.

மின்னல் வேக தாக்குதல் மூலம் சோவியத் யூனியனை இரண்டு, மூன்று மாதங்களில் வெற்றி கொண்டுவிடலாம் என்று கிட்லர் போட்ட திட்டத்தில் (பார்பரோஸ்ஸா) மண்விழுந்தது.

இரண்டாம் உலக ஆக்கிரமிப்பு போரிலே முதன்முதலாக சோவியத் யூனியன் படைகளிடம் இருந்து கடும் எதிர்புக்கு முகம் கொடுக்கும் நிலைக்கு ஜேர்மனிய படைகள் தள்ளப்பட்டன. சோவியத் யூனியன் படைகளின் மனோபலத்துக்கு முன்னால் கிட்லரின் இராட்சத படைபலமும், ஆயுத பலமும் சமநிலையில் தான் நின்றது. ஆனாலும் கிட்லர் இதை அலட்சியம் செய்தார். சோவியத் யூனியனை அழிக்க எந்தப் பெரிய விலையும் கொடுக்கத் துணிந்தார்.

ஜூன் மாதம் இருபத்தியிரண்டாம் திகதி தொடங்கிய ஆக்கிரமிப்பு போர் வெறும் ஒன்றை மாதங்களை கடந்த நிலையில் ஜெர்மன் தனது 3 90 000 படைகளை சோவியத் யூனியன் மண்ணில் பறிகொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. அந்தளவுக்கு சோவியத் யூனியன் படைகளின் மூர்க்கமான பதில் தாக்குதல் அமைந்தது. ஒவ்வொரு அடி மண்ணை கைப்பற்றவும் ஜெர்மன் படைகள் தம் உதிரத்தையும் உயிரையும் பெறுமதி பாராது பறி கொடுத்தார்கள்.

சோவியத் யூனியன் ஒரு கம்யூனிச நாடு, இங்கே படை வீரர்கள்- மக்கள் என்ற பாகுபாடு இல்லை. உழைக்கும் வர்க்கம் முழுவதுக்கும் எதிரியிடம் இருந்து தம் தாய் நாட்டை காக்க வேண்டிய பாரிய கடமை கண் முன்னே நின்றது. இதை உணர்ந்தவர்களாக அம்மக்களும் ஆயுதம் தரித்து களமுனைக்கு சென்றார்கள். ஒட்டுமொத்தத்தில் சோவியத் யூனியனின் ஒவ்வொரு குடிமகனும் யுத்தத்துக்கு நேரடியாகவோ இல்லை எதோ ஒரு விதத்தில் முகம் கொடுத்தான்/பங்களிப்பை வழங்கினான்.

"செத்தாலும் சாவோமே தவிர இங்கிருந்து நகரமாட்டோம். நான் இருக்கிறேன் சரணடையவில்லை. தாய் நாடே விடை கொடு"- இவை யுத்தத்தின் ஆரம்ப நாட்களிலே சோவியத் யூனியன் படை வீரர்களால் தமது கோட்டை சுவர்களில் எழுதப்பட்ட வசனங்கள்.
ஒரு போர்வீரனுக்கான மிக சிறந்த அங்கீகாரம் அவன் எதிரியிடம் இருந்து கிடைப்பது தான்; அந்தவகையில் ஒரு ஜெர்மன் இராணுவ ஜெனரல் சோவியத் படை வீரர்களின் மன உறுதியை பின்வருமாறு சொல்கிறார் "ஒரு சோவியத் படைவீரனை இரண்டு தடவைகள் துப்பாக்கியால் சுட்ட பின் ஓங்கி நெஞ்சிலே கால்களால் எட்டி உதைத்தால் தான் அவன் நிலத்திலே சாய்கிறான்."-

இவ்வாறு ஒவ்வொரு தெருவாய், ஒவ்வொரு பிரதேசங்களாய், ஒவ்வொரு நகரங்களாய் மிக பெரும் எதிர்ப்புக்களையும், கடும் இழப்புக்களையும் சந்தித்த வண்ணம் கிட்லர் படை இறுதியாக சோவியத் யூனியனின் எண்ணெய் வளம் மிக்க பிரதேசமான காக்கசஸின் என்னும் இடத்தை சென்றடைந்தார்கள். எனினும் அவர்களால் அப்பிரதேசத்தை முற்று முழுதாக கைப்பற்ற முடியவில்லை. சோவியத் படையின் மூர்க்கத்தனமான எதிர்ப்பினால் தற்காப்பு யுத்த நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இப்பிரதேசத்தில் தான் கிட்லர் படையால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த யூதர்கள் ஆயிரக்கணக்கில் விசவாயு மூலம் கொல்லப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாய் யுத்தம் தொடக்கி ஆமை வேகத்தில் ஆக்கிரமித்து, ஆழ கால்பதித்து நின்ற கிட்லர் படையை பொறுத்தவரை சோவியத் யூனியனில் எஞ்சி இருக்கும் பெரு நகரங்களில் இரண்டு முக்கியமானவை. ஒன்று ஸ்டாலின் கிராட் மற்றையது மாஸ்கோ. இந்த இரு நகரங்களும் அரசியல் ரீதியாகவும் சரி இராணுவ தந்திர ரீதியாகவும் சரி மிக முக்கியமானவை. இதில் ஒன்றை கிட்லர் படை கைப்பற்றினாலும் சோவியத் யூனியனின் வீழ்ச்சி உறுதியாகிவிடும்; என்பது மட்டுமல்லாது உலகின் பிடியே சர்வாதிகாரிகளின் காலடியில் மண்டியிடக்கூடியதொரு ஆபத்தான சூழலும் உருவாகியது.

இந்நிலையில் 1941ம் ஆண்டு செப்டெம்பர் மாதமளவில் மாஸ்கோவை அழிப்பதற்காக கிட்லரால் தொடங்கப்பட்ட யுத்தம் ஜெர்மன் படைகளுக்கு படு தோல்வியையும், பெரும் இழப்புக்களையும் தான் பெற்று கொடுத்தது. இந்த தோல்விக்கு யுத்த காலப்பகுதியில் சோவியத் யூனியனில் நிலவிய பனி காலநிலையும் முக்கிய பங்காற்றியது..

எனினும் கிட்லர் விடுவதாக இல்லை. எப்படியாவது சோவியத் யூனியனை மண்டியிட வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த/இழுத்துவந்து விடப்பட்ட களமுனை தான் ஸ்டாலின் கிராட்...

அடுத்த பகுதியில்..

13 comments:

  1. ஸ்டாலின் கிராடைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகரிக்கிறது..தொடருங்கள்..


    அன்போடு அழைக்கிறேன்..

    உயிரைத் தின்று பசியாறு(அத்தியாயம்-1)

    ReplyDelete
  2. நன்று
    நீண்ட வராமைக்கு மன்னிக்கவும்.இனி தொடர்ந்து வருவேன்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    புத்தாண்டில் புதிய பொலிவோடு புறப்படட்டும் உங்கள் பதிவுகள்.

    ReplyDelete
  3. தெரியாத பல விஷயங்கள் புலனாகின்றன நண்பரே.
    நன்றிகள் பல

    என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. கந்து வழமை போல் படித்து விட்டு எஸ் ஆகிறேன்.... ஹா ஹா.....

    ReplyDelete
  5. ஆனால் ஒன்று கந்து.... தொடர் செம விறு விறுப்பு திரில்.... நான் இந்த வரலாறை முதல் முதல் படிப்பதால் எனக்கு திரில் அதிகமாகவே இருக்கு பாஸ்.

    ReplyDelete
  6. வணக்கம் கந்து வரலாற்றில் என்றும் மறக்கப்பட முடியாதது சோவியத்யூனியன் மக்களின் வீரமும் தன் நம்பிக்கையும் தாய் நாட்டு பற்றும்.

    சோவியத் யூனியன் மட்டும் சிதறாமல் இருந்திருந்தால் தற்போது எப்படி இருக்கும்?

    தொடர் விறுவிறுப்பாக செல்கின்றது பாராட்டுக்கள்

    ReplyDelete
  7. வணக்கம் நண்பா,
    போர்க் களத் தந்திரங்களையெல்லாம் மீட்டியவாறு பதிவு நகர்கிறது.
    வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்பு முனைக்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  8. ஸ்டாலின் கிராடைப் பற்றி அறிந்து கொள்ள மேலும் ஆசை

    ReplyDelete
  9. சோவியத் நாட்டின்பெருமையைத் தாங்கிநிற்கும் வரலாற்றுத்தொடர் சிறப்பாக இருக்கின்றது தொடருங்கள்!

    ReplyDelete
  10. வரலாறுகளைத் தோண்டி எடுக்கிறீங்க போல!

    ReplyDelete
  11. இதுநாள்வரை மேலோட்டமாகவே தெரிந்து வைத்திருந்தேன்.அடுத்த பதிவைக் கொஞ்சம் கெதியாத் தாங்கோ !

    ReplyDelete
  12. கந்து...இனிய பொங்கல் வாழ்த்து.எங்கே ஆளைக் காணேல்ல !

    ReplyDelete