விஜயகாந்துக்கு அப்புறம் யார்?... கேள்விக்கு விடை கிடைத்தது!

கேப்டன் விஜயகாந்துக்கு அப்புறம் இந்தியாவை தீவிரவாதிங்ககிட்ட இருந்து  காப்பாற்ற போவது யார்  என்ற கேள்வி எல்லோர் மனதிலும் தெக்கு நிற்க.. நான் இருக்கேன் என்ற குரல் அதே கேப்டனின் வீட்டில் இருந்து கம்பீரமாய் வருகிறது. எட்டி பார்த்தா நெஞ்ச நிமிர்த்தி, கைகளை முறுக்கி ஒரு உருவம்.. 'அது என் இரண்டாவது மவன் தான்' என்று கரகரத்த குரலில் சொல்லியவாறே கேப்டன் வெளியே வந்தார். இது சம்மந்தமாக கேப்டனிடம் சில கேள்விகள்..

''படிப்பே முடிக்கலை... அதுக்குள்ள சினிமாவா?''
ஆரம்பத்தில எனக்கும் இந்த டவுட்டு வந்திச்சு, ஆனா ஒருநாள் நைட்டு 'புல்லா போத்தி(ட்டு)ட்டு' படுத்து கிடந்து ஜோசிச்சு பார்த்தன்.. "நம்மளுக்கும் இப்போ வயசாகிடிச்சு! இப்பெல்லாம் முன்ன மாதிரி இந்தியாவுக்குள்ள வர்ற தீவிரவாதிங்கள துரத்தி பிடிச்சு பென்ட கழட்ட முடியுதில்ல! அதோட, சட்ட சபைக்க போய் அந்த அம்மாக்கூட சண்டை போடுறதிலே தாவு தீர்ந்து போயிடுது. அதால நீண்ட நாளாயே எனக்கப்புறம் இந்தியாவ காப்பாற்றுறது யாரு? என்ற கேள்வி ரணமாய் எனக்குள்ளும் கொதிச்சுட்டு தான் இருந்திச்சு!

இப்ப, இந்த நேரத்தில என் ரண்டாவது மவன் வந்து 'அப்பா நா இருக்கேன்'னு சொன்னப்போ அப்புடியே மூணு பெக் அடிச்சுட்டு வானத்தில பறக்குற போல இருக்கு. படிப்பு  முக்கியமா?, இல்லை இந்தியாவின் பாதுகாப்பு முக்கியமா?னு  வந்தப்போது எனக்கு இந்தியாவின் பாதுகாப்பு தான் முக்கியம்னு தோணிச்சு.. நானும் சம்மதிச்சிட்டன். (நாப்பது தீவிரவாதிங்க ரவுண்டு கட்டி அடிச்சப்போ கூட வாராத கண்ணீர் இப்போ கேப்டனின் கண்களை குளமாக்குகிறது)


''டைரக்டர், ஹீரோயின் எல்லாம் ஃபிக்ஸ் பண்ணிட்டீங்களா?''
நீ நான்னு டைரக்டர்கள் போட்டி போட்டு வந்து கியூவில் நிக்கிறாங்க! சமீபத்தில இயக்குனர் சங்கர் எந்திரன் 'பார்ட் ரூ' வ என் மவன வச்சு தான் எடுக்கணும்'னு சொல்லி ஒரு நாலு நாளாய் வந்து போய்க்கிட்டு இருந்தாரு. இருந்தாலும் அவற்ற கதையில இந்தியாவ காப்பாற்றுற மாதிரி எந்த சீனும் இல்லயாம். அதால வேண்டாம்னு சொல்லிப்புட்டன். நமக்கு இந்தியாவின் பாதுகாப்பு தான் முக்கியம். 

தென்னிந்திய சினிமாவிலே என் மவனுக்கு  ஏத்த ஜோடி நமீதா தான். ஆனா  என் மவனோ ஏஞ்சலினா ஜோலி, எமி ஜாக்சன்'னு இங்கிலீசு பொண்ணுக தான் வேணும்'னு ஒத்த காலில நிக்கான்! ஏண்டா அப்பிடி?'ன்னு கேட்டன்! அப்புறமா தான் தெரிஞ்சுது 'பையன் ரொமாண்டிக் மூட்டில இருக்கான்'னு.

''தம்பிக்கு நடிப்புல நீங்கதான் ரோல் மாடலா?''
ஆமா  சார்! அடிச்சும் கேட்டன், ஓதச்சும் கேட்டன்...எப்பிடி தான் கேட்டாலும்  "நீ தா'ப்பா என் ரோல் மாடலு" அப்பிடின்னு சொல்லி ஓ'ன்னு அழுகிறான். சரி, அப்பாக்கு அப்புறமா யாரையடா பிடிக்கும்?னு கேட்டா ... 'ஓங்க தலைவிய தான்'னு சொல்லி சிரிப்பான். ஆனா அந்த சிரிப்பின் அர்த்தத தான் இதுவரை என்னால புரிஞ்சுக்க முடியுதில்ல!
 
இருந்தாலும் எனக்கு ஒருடவுட்டு! சமீபத்தில பவர் ஸ்டார்'னு ஒரு ரொமாண்டிக் ஹீரோவின் லத்திகா'ன்ன படத்தை ஏழெட்டு வாட்டி பாத்திருக்கானாம். ஒருவேள எதிர்காலத்தில அவர போல ரொமாண்டிக் ஹீரோவா வந்துப்புடுவானோ'ன்ன கவலையும் உள்ளுக்குள்ள இருந்துக்கிட்டு தான் இருக்கு.  அந்த பயத்தில இப்போ அவன் மூட் மாறாம இருக்கணும்னு  அவன செயார்ல கட்டி வச்சு வல்லரசு, விருதகிரி போன்ற என் ஆக்ஷன் படங்களை திரும்ப திரும்ப போட்டு காட்டி வாறன். அதுக்கு நல்ல பலனும் கெடைச்சிருக்கு.

'' 'விஜயராஜ்’ சினிமாவுக்காக விஜயகாந்த் ஆனார். 'சண்முகபாண்டியன்’ பேர் மாற்றத்துக்கு உள்ளாகுமா?''
பெயர்  மாற்றி நடிப்பதில எனக்கு இஸ்டமில்ல. அவன் சொந்த பேர்ல நடிச்சு இந்தியான்ர பேர காப்பாத்தனும்! அதோட தமிழ் சினிமாவில நா விட்டு போன இடத்தை அவன் தான் நிரப்பனும். கடைசி நேரத்தில தமிழ் சினிமா ரசிகர்கள் என்கிட்ட நிறைய எதிர்பார்த்தாங்க! ஆனா அரசியலில் நான் பிசியாகிட்டன். இப்போ அந்த எதிர்பார்ப்பை எல்லாம் என் பையன் நிரப்புவான் என்ற நம்பிக்கை எனக்கு வந்திடிச்சு.


''உங்க இயக்கத்திலேயே அறிமுகப்படுத்திடலாமே...''  
என் இயக்கத்தில அறிமுகப்படுத்திற அளவுக்கு அவன் இன்னும் பக்குவப்படல்ல! ஆனா எதிர்காலத்தில விருதகிரி பார்ட் ரூ எடுக்கிற பிளான் இருக்கு. ஏன்னா என்னை வளர்த்துவிட்டு, எதிர்க்கட்சி தலைவர்'ன பதவியையும் கொடுத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு என்னாலான நன்றிக்கடனை செய்து தானே ஆகணும்.

12 comments:

  1. வணக்கம் அண்ணே .
    கலக்கலான பதிவு

    ReplyDelete
  2. ''படிப்பே முடிக்கலை... அதுக்குள்ள சினிமாவா?''
    படிப்பு எறல்ல . அதலா சினிமா

    ReplyDelete
  3. பயங்கர கலக்கல் ! சிரித்துக் கொண்டே இருந்தேன் ! நன்றி !

    ReplyDelete
  4. நமக்கு இந்தியாவின் பாதுகாப்பு தான் முக்கியம். !!!!!!!!!!!

    ReplyDelete
  5. தகப்பன் எவ்வழி
    மகனும் அவ்வழி.....

    ReplyDelete
  6. எப்பிடியோ அடுத்த சூப்பஸ்டாரோடு வருங்கால முதல்வரையும் சேர்த்தே உருவாக்குவோம்.!! ஹி ஹி

    ReplyDelete
  7. வணக்கம் கந்தசாமித் தாத்தா. 
    சினிமாவிற்கு படிப்பா முக்கியம் கையில் காசு இருந்தால் நாலு தியேட்டரை வாடகைக்கு எடுத்து 250 ஒரே படத்தை ஒருவர் ஓட்டும் போது  சட்டசபையில் எதிர்க்கட்சியாக இருக்கும் ஒரு தலைவர் தன் பிள்ளைக்கு செய்யக் கூடாதா ? விசில் குஞ்சுகள் லாஜிக்கா பார்ப்பார்கள் நமக்கு தீவிரவாதிகளை ஒழிக்கனும் கோடி கோடியா கொட்டி ஆயுதம் வாங்குவம் குடிக்கத்தண்ணியும் இருட்டை நீக்க மின்சாரமும் தேவையில்லை .
    அடுத்த முதல்வரும் அடுத்த தலைவரும் கண்டிப்பா தேவை அது சண்முகபாண்டியனா இருந்தா இன்னும் சிறப்பு . ( விளங்கிடும் சினிமா)

    ReplyDelete
  8. அப்ப அடுத்த கேப்டன் ரெடினு சொல்லுங்க அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  9. வணக்கம் கந்தசாமி அண்ணே!இப்பிடித்தான் முன்னொரு காலத்தில"அவருக்கு"மாற்றா எங்களிட்டையும் ஆள் இருக்கெண்டு ஒரு ஆளை இறக்கி விட்டினம்!ரெண்டே ரெண்டு படம்!அப்பிடியே கொப்பியடிச்சு?!நடிச்சுப் பாத்தவை!சீண்டுவார் இல்லாம......................

    ReplyDelete
  10. முதல் எழுதின கொமண்டைப் பாத்திட்டு விசயகாந்து என்னவோ வெட்டி விழுத்தின மாதிரி எழுதியிருக்கிறார் எண்டு நினைச்சிடப்படாது!

    ReplyDelete
  11. வணக்கம் அண்ணே, கலக்கலான பேட்டி, பதிவு.

    ReplyDelete
  12. கேப்டன் சார்,தமிழ் சினிமா ரசிகர்கள் பாவம்.

    ReplyDelete