கருணாநிதியும் டெசோவும்..

"இவனை அடிச்சும் பார்த்தாச்சு அவிழ்த்தும் பார்த்தாச்சு..." என்ற வடிவேலுவின் காமெடி தான், இன்று கருணாநிதி ஈழத்தமிழர்கள் பால் அக்கறைகொண்டு முதலைக்கண்ணீர் வடித்து, ஈழத்துக்காக தான் இன்னென்ன செய்தேன் என்று பட்டியலிட்டு அறிக்கை வெளியிடும் ஒவ்வொரு தருணமும் உலகத்தமிழர்களின் நினைவுக்கு வரும்! இதில் இறுதியாக நடந்து முடிந்த கலாட்டா காமெடி தான் அண்ணாரின் 'டெசோ' மாநாடு!
பதவி இழப்பு, ஸ்பெக்ராம் ஊழல், கனிமொழி சிறை, அண்ணன் தம்பி மோதல் என்று குடும்பமும் கட்சியும் நலிவடைந்து, மக்கள் மத்தில் செல்வாக்கு இழந்து வருகிற இந்த சூழலில்; இவற்றை எல்லாம் புறம்தள்ளி, கலைஞர் தான் ஈழ தமிழர்கள் மீது கொண்ட அக்கறையை ஒட்டுமொத்த தமிழினமும் வியந்து பாராட்டும் என்று நினைத்தாரோ என்னமோ... ஆனால் தொடர்ந்து ஏமாற தாம் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்பதை தமிழர்கள் நிரூபித்துள்ளார்கள்! ஆனாலும் இவை எதையும் கருத்தில் கொள்ளாது அடுத்த நாள் படுக்கையில் இருந்து எழும்பி 'டெசோ மாநாடு வெற்றி' என்று அறிவித்த கருணாநிதியின் ராஜ தந்திரத்தை பொன்னாடை போர்த்தி கவுரவித்தாக வேண்டும்!

கருணாநிதிக்கு ஈழ தமிழர்கள் மீது அக்கறை வருவது ஒன்றும் இதுவே முதற்தடவை அல்ல! அதாவது இதற்க்கு முன்னர் கூட 'எப்பெப்போ தேர்தல் காலம் வருகிறதோ.., எப்பெப்போ தன் அரசியல் செல்வாக்கு நலிவடைகிறதோ.., எப்போப்போ மாற்று கட்சிகள் ஈழ தமிழர்கள் மீது அக்கறை கொண்டு செயற்ப்படுகிறதோ.., எப்பெப்போ கருணாநிதிக்கு பொழுது போகவில்லையோ..,அப்பப்போ எல்லாம் ஈழதமிழர்கள் மீது அக்கறையும் அனுதாபமும் வந்து தொலைந்துவிடும்!

இது தவிர ஈழ தமிழர்கள்பால் கருணாநிதி மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படும் ஒவ்வொரு தடவைகளும் உடனே ஒரு பல்லவியை சந்தம் தப்பாமல் பாட தொடங்கிவிடுவார். "தண்டவாளத்தில் தலைவைத்தேன், பதவி இழந்தேன், ஈழம் சென்று திரும்பிய இந்திய இராணுவத்தை புறக்கணித்தேன், உண்ணாவிரதம் இருந்தேன், மனித சங்கிலி போராட்டம் நடத்தினேன்..." இவ்வாறு அது நீண்டு செல்லும். ஆனால் ரெயின் ஓடாத தண்டவாளத்தையும், காலை-மாலை இடைப்பட்ட நேர உண்ணாவிரதத்தையும், அடுத்த கட்ட அரசியலுக்காக இழந்த பதவியையும் பற்றி இந்த மக்கள் சிந்தித்து பார்க்க மாட்டார்கள் என்பது கருணாநிதியின் நீண்டகால அரசியல் ஊடாக தமிழ் மக்கள் மீதான நம்பிக்கை!

இதே போல ஒன்று தான் "தமிழர்களின் மறதி" வியாதியின் மீது நம்பிக்கை வைத்து நடாத்தப்பட்ட டெசோ மாநாடு!

இந்த பிசுபிசுத்துப்போன மாநாட்டில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்று கச்சதீவை மீட்க வேண்டுமாம். இதிலே வேடிக்கை என்னவென்றால் கச்சதீவை இந்திராகாந்தி அவர்கள் இலங்கைக்கு தாரை வார்க்கும் போது தமிழ்நாட்டின் முதல்வர் பதவியில் இருந்து வாய் பொத்தி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தவர் இதே கருணாநிதி தான். அதன் பின்னரும் மூன்று தடவைகள், மொத்தம் பதின்நான்கு வருடங்கள் தமிழகத்தின் முதல்வர் ஆட்சிப்பொறுப்பில் இருந்தவர். அப்பொழுதும் கூட தமிழக மீனவர்கள் தெருநாயை போல இலங்கை இராணுவத்தால் சுட்டு கொள்ளப்படும் ஒவ்வொரு தடவைகளிலும் வெறும் காகித கடதாசிகள் மூலம் மத்திய அரசுடன் குடும்பம் நடத்தினர். இப்பொழுது திடிரென கச்சதீவின் மீதும், தமிழக மீனவர்கள் மீதும் அக்கறை எழுந்ததன் நோக்கம் என்னமோ?

டெசோ மாநாட்டில் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களுமே இதே போல தான்; ஆட்சியில் இருக்கும் போது கும்பகர்ண தூக்கத்தில் இருந்தவர். ஆட்சி பறிபோன இந்நிலையில் துள்ளி எழுந்து, நேற்று தான் ஈழ பிரச்சனை தொடங்கியது என்பது போல இதய சுத்தியுடன் நடந்து கொள்வதாக நாடகம் காட்டுகிறார்! கூடவே இறுதி யுத்தம் நடந்துகொண்டு இருக்க, அது பற்றி சிறிதும் சலனம் காட்டாது மான் மயில்களை ஆடவைத்தும் ,'முத்தமிழ் அறிஞர்' பாராட்டு விழாக்களை மாறி மாறி ஒளிபரப்பி கருணாநிதியை குளிர்மை படுத்தியும் வந்த கலைஞர் தொலைக்காட்சியில் இந்த டெசோ மாநாட்டுக்கு ஆயிரத்தெட்டு அறிவுப்புகள்! 'கலைஞர் சொல்லியாச்சு ஈழம் உறுதியாச்சு' என்று மிக கேவலமான சுவரொட்டிகள்! தன் பிழைப்புக்காக இன்னொன்றை அடகு வைப்பது விபச்சாரத்துக்கு ஒப்பானது!

மாநாட்டிலே இறுதி தீர்மானமாக, டெசோவை எதிர்த்த அதிமுக வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம்....இப்போ சாதாரணமாகவே புரியும் இந்த மாநாட்டின் நோக்கம்பற்றி!

அப்படியெனில் டெசோவை எதிர்த்த ஓட்டு மொத்த உலக தமிழர்களுக்கு எதிராகவும் ஏதாவது தீர்மானம் நிறைவேற்றவில்லையா..?

சுவனப்பிரியன் என்னும் ஒரு சகாப்தம்!

என்னடா சுவனப்பிரியனிடனம் இவன் துட்டு கிட்டு வாங்கிட்டு எழுதிறானோ என்று நினைத்தீர்கள் என்றால் அது உங்கள் மடமை! ஆனாலும் எனக்கு சுவனப்பிரியனை பற்றி எழுத தோன்றுகிறது; இது ஒருவித நன்றி உணர்ச்சியாக கூட இருக்கலாம்! நான் சுவனப்பிரியனால் அடைந்த நன்மைகள் அதிகம்.. நான் என்று சொல்வதை விட பலர்.. என்று சொல்வதே பொருந்தும்!

நான் கடந்த சில மாதங்களாக சுவனப்பிரியனின் பதிவுகளை படித்த பின், அப்படி என்ன தான் இருக்கிறது இந்து மதத்தில்? என்ற ஆர்வம் சாதாரணமாக தொடக்கி தீவிரமாக பற்றிக்கொண்டது. அதில் ஒரு கட்டமாக கண்ணதாசன் அவர்கள் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலை இரண்டு தடவைகள் புரட்டி விட்டேன். இன்னமும் இந்து மதம் சார்பாக பல விடயங்களை தேடி தேடி படித்தேன். அதன் விளைவாக, நிச்சயமாக சொல்கிறேன்; எனக்கு என் மதம் சகல உரிமைகளையும் கொடுக்கிறது. எந்த விதமான விமர்சனத்தையும் என் மதம் சார்பாக என்னால் முன் வைக்க முடியும்! கல்லெறி சிரச்சேதங்கள் இல்லை! ஏன், பிடிக்கவில்லையா காறி உமிழகூட எனக்கு இங்கே சுதந்திரம் இருக்கிறது!

பிறப்பால் நான் ஒரு ஹிந்து. ஆனால் இந்த மதத்தை நான் நினைத்து பார்ப்பதும் இல்லை; அது தொடர்பில் அலட்டிக்கொள்வதும் இல்லை. நான் கடந்த பத்து மாதங்களிலே ஒரே ஒரு தடவை மட்டுமே கோவிலுக்கு சென்றுள்ளேன்! ஆனால் பல தடவைகள் சர்ச்சுக்கு சென்று வந்துள்ளேன்! காரணம் எனக்கு சர்ச்சுக்கு போவதற்கான போக்குவரத்து வசதி கோவிலுக்கு போவதை விட எளிது. எனக்கு கோவில் போவதானாலும் சரி, சர்ச்சுக்கு போவதானாலும் சரி, உள்ளே போனால் ஒரே அளவு மன அமைதியே கிடைக்கிறது; அங்கே இறைவன் இருக்கிறாரோ இல்லையோ அது வேறு விஷயம்! ஆனால் மன அமைதி கிடைக்கிறது! இந்த வகையில் எனக்கு விரும்பிய மத தலத்துக்கு போவதற்கும் வழிபடுவதற்க்கும், இந்து மதம் எனக்கு எந்த கட்டுப்பாடுகளையும், எல்லைகளையும் விதிக்கவில்லை! அந்த வகையில் நான் ஒரு இந்துவாக பெருமைப்பட்டுக்கொள்கிறேன். சுவனப்பிரியன் போல ஒரு இஸ்லாமியனாக பிறக்காததை இட்டு நின்மதி அடைகிறேன். இதை எனக்கு/என்னை போன்ற பலருக்கு உணர்த்த முன்னின்று உழைத்த/உழைத்து வரும் சுவனப்பிரியனுக்கு கோடி நன்றிகள்!

இப்படியான சேவைகளை வலைத்தலத்தினூடே செய்துவரும் இந்த சுவனப்பிரியன் என்பவர் யார்?!... எனக்கு தெரியவில்லை. ஆனாலும் என் ஊகத்தின்படி 'பாலாரும் தேனாறும் ஓடும்' சவூதி அரேபியாவிலே 'மதம் சார் நிறுவன கட்டமைப்பிலே' ஊழியம் பெறும் ஒரு உயர்மட்ட அதிகாரியாக/ ஊழியனாக இருக்க வேண்டும். ஏனெனில் இருபத்தி நான்கு மணி நேரமும் மதத்தை பற்றி மட்டும் சிந்தித்து/செயற்ப்படுத்திக்கொண்டு இருந்தால் சாப்பாட்டுக்கு எங்கே போவது? குடும்பம் நடத்த என்ன வழி? (பல தார திருமணத்தை வேறு ஆதரிக்கிறாராம; அப்படியெனில் அண்ணனுக்கு நாலஞ்சு அன்னிமார் இருப்பார்களே என்ற பொதுவான சந்தேகம் நமக்கு எழுவது இயல்பு தானே!) அதனால் தான் சொன்னேன் மதம் சார் நிறுவன கட்டமைப்பின் ஊழியன் என்று!

(அண்ணனின் தொழில்)
நாம் அனைவரும் அறிந்த/சிலர் அறியாத ஒரு விடயம் என்னவென்றால், சுவனப்பிரியனுக்கு ஹியூமர் சென்ஸ் ரொம்ப ஜாஸ்தி! உதாரணமாக; தனது பக்கத்து வீட்டு சுப்பர்ர பசுமாடு பேத்தை குட்டி போட்டதை பதிவாக போட்டும்; "சுப்பரின் பசுமாடு பேத்தைக்குட்டி போட்டதுக்கு அல்லாவே காரணம்" என எழுதி, அதன் கீழ் நான்கு குர்ரான் வசனங்களையும் இணைத்து, அதை வாசிப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கக்கூடிய நகைச்சுவை உணர்வு சுவனப்பிரியனிடம் அதிகமாகவே உள்ளது. இவ்வாறு அவ்வப்போது எழுதும் தனது பதிவுகளில் இஸ்லாம் மதம் சார்ந்த எள்ளல்களையும், கடிகளையும் வைத்து வெளியிடக்கூடிய தைரியம் எத்தனை பேருக்கு வரும்? ஆம், இவ்வாறு, இந்து மதம் கொடுக்கும் "சுதந்திரத்தை" போன்று , இஸ்லாம் மதமும் கொடுக்க வேண்டும் என்று, புதியதொரு பரிணாமத்தில் இஸ்லாம் மதத்தை அழைத்துச்செல்லும் சுவனப்பிரியன் ஒரு சகாப்தம் தானே!

நான் பார்த்த வரையில் சுவனப்பிரியனிடமும் கருணாநிதியிடமும் ஒருமித்த குணங்கள் அதிகமாகவே உள்ளது. கருணாநிதி கண்ணில் படும் ஜீவராசிகளை எல்லாம் எப்படி "உடன்பிறப்பே" என்று சொல்லி கழுத்தறுப்பாரோ, அதே போல தான் சுவனப்பிரியனின் "சகோ"...! அத்துடன் ஏற்கனவே பலதார திருமணக்கொள்கையை ஆதரித்த கருணாநிதியை(!) ஆரம்ப காலங்களில் சுவனப்பிரியன் போன்ற ஒருவர் ஆட்க்கொண்டிருக்க வேண்டும்!

அப்பப்போ கருத்துக்களில் நிலையில்லாமல் கருணாநிதியை போல் தள்ளாடும் சுவனப்பிரியன் எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வரக்கூடிய சந்தர்ப்பம் அதிகம்.. ஆனா என்னே, அதன் பின் தமிழ்நாட்டின் சனத்தொகை தாங்காது!

'பேஸ்மென்ட் வீக்கான' இந்த சுவனப்பிரியனுக்கு பின்னாலே எப்பவும் அண்டர்வேயர் போட்ட நாலு காமெடி பீஸ் அடியாட்கள் சுற்றுவார்கள்! இவர்களின் வேலையெல்லாம் கலகலப்பாக இருக்கும் பகுதிகளை தேடிச்சென்று கலவரம் உண்டு பண்ணிவிட்டு வருவது தான்! ஆனால் அதுக்கெல்லாம் சேர்த்து, தர்ம அடி விளுவதென்னமோ 'பேஸ்மென்ட் வீக்கானா' இந்த அப்பாவி சுவனப்பிரியனுக்கு தான். சமீபத்தில் கூட அண்ணரின் விழுதுகளில் ஒன்றான சர்மிளா அகமத் என்ற பொண்ணு கலகலப்பாக இருந்த பேஸ்புக் குழுமத்திற்கு வந்து "முஸ்லீம் அல்லாதவர்கள் எல்லாம் இஸ்லாம் மதத்தை பற்றி அறிந்து கொள்ள எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்" என்று கூறி தன்னுடைய மெயில் ஐடியை கொடுக்காது, இன்னொரு 'விழுதின்' மெயில் ஐடியை கொடுத்துவிட்டு, கலவரத்தை உண்டு பண்ணிவிட்டு சென்று விட்டது!

இவ்வாறான செயற்பாடுகள் இஸ்லாம் மதம் சார்பாக வெறுப்பலைகளை தான் உண்டு பண்ணும் என்று காமெடி பீஸுகளான விழுதுகளுக்கு தெரியாது! ஆனால் சுவனப்பிரியனுக்கு நன்றாகவே தெரியும்! ஆனாலும் இவற்றை தடுக்க மாட்டார். காரணம் சுவனப்பிரியன் அடிப்படையில் ஒரு இந்து ஆதரவாளர்! அவர் ஹோர்மொன்கள் எல்லாம் இந்து மதம் சார்பாக தான் செயற்படுகிறது! அவர் குர்ரானை படித்தார், ஆனால் இந்து மதத்தை கரைத்துக் குடித்துள்ளார். வேண்டுமென்றால் இந்துமதம் சார்ந்த ஏதாவது சந்தேகங்களை அவரிடம் நீங்கள் கேட்டுப்பாருங்கள்! மதுரை ஆதீனம் கூட அவருக்கு அடுத்தபடி தான். இது அவரின் முற்பிறப்பின் தொடர்பாக கூட இருக்கலாம்!

இவ்வாறாய் இன்று வலைத்தளத்திலே தொடங்கிய சுவனப்பிரியனின் இஸ்லாம் மதம் தொடர்பான "பட்டும் படாத" விழிப்புணர்வும், இந்து மதம் தொடர்பான, என் போன்ற பலருக்கு ஏற்ப்படுத்திய நன்மதிப்பும் வலைத்தளத்தை தாண்டியும் இன்னும் பலரை சென்றடைய வேண்டும் என்பதுவே என் போன்ற பலரது அவா..!

நண்பர்களுடன்....

புகைத்தல் உடம்புக்கும், உனக்கும் கெடுதலை தான் கொண்டு வந்து சேர்க்கும் என்று நான் என் நண்பர்களிடம் சொன்னால் அவர்கள் என்னை படு கேவலாமாக ஒரு பார்வை பார்த்துட்டு சொல்லுவார்கள் "நீ பிறந்ததுக்கு இதுவரை என்னத்த அனுபவிச்சிருக்க" அதுக்கு மேலயும் நான் வாய் திறக்குறதில்ல.. ஏனெண்டால் 'புகைத்தல் உடல் நலத்துக்கு கேடுதான்; ஆனால் அதையும் தாண்டி நல்ல விஷயங்களும் இருக்கு' எண்டு சொல்லி அந்த நல்ல விஷயங்களை பட்டியல்படுத்த தொடங்கிடுவார்கள்..

கடந்த சில நாட்களுக்கு முன்னர் எனக்கு பழக்கமான ஒருவருடன் கதைக்கும் போது சொன்னார்' தம்பி! இந்த சிகரெட் பழக்கத்தால எனக்கு மாசம் முன்னூறு யூரோக்கு கிட்ட வீணாய் போகுது; அதால இனி நான் சிகரெட் பழக்கத்தை விட்டுடலாம் எண்டு நேற்று தொடக்கம் முடிவெடுத்துட்டன்.. நேற்று ஃபுல்லா நான் சிகரெட் பிடிக்கவே இல்ல'... இப்பிடி பெருமையா பெருமூச்சோடு சொல்லி முடிக்க, நானும் பேசாமல் கேட்டுக்கொண்டே இருந்தேன்!

சில மணிநேரம் கழித்து இருவருமாக வெளியிலே புறப்பட்டோம்; போய் திரும்பிகிற போது ' தம்பி இதோகொஞ்சம் நில்லுங்க வருகிறன்' என்று சொல்லி அவசரமாக அருகில் இருக்கும் கடைக்குள் நுழைந்தவர், வரும் போது சில மணிநேரத்துக்கு முன்னர் பார்த்த 'அதே வாயில்-அதே சிகரெட்!!' இம்முறையும் நான் பேசாமல் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

இத்தனைக்கும் நான் அவரிடம் எந்த கேள்வியோ விளக்கமோ கேட்கல! ஏனெண்டால் விளக்கம்/பதில் எப்படி வரும் எண்டு எனக்கு நல்லாவே தெரியும்! இப்பிடி எத்தனை பேரோட பழகியிருப்பம்:)

முன்னரெல்லாம் சிகரெட் பெட்டியிலே 'புகைத்தல் உடல் நலத்துக்கு கேடு' என்று எழுதப்பட்டு தான் விற்பனைக்கு வரும்..ஆனா இந்த புகைப்பிரியர்களுக்கு அதை வாசிச்சு வாசிச்சே அது ஒரு புளித்துப்போன ஒரு வசனமாய் ஆகியிருக்கும் போல.... ஆனால் இப்பொழுது சிகெரட் பெட்டியிலே, புகைப்பவர்களது நலன் கருதி(!) புகைப்பதன் மூலம் உடலில் வரும் வியாதிகள் உடல் உறுப்புக்களை என்ன பாடு படுத்தும் என்பதை புகைப்பட வடிவிலும் சேர்த்திருக்கிறார்கள்.

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டியும் புகை பிடிப்பதை அவர்களால் நிறுத்த முடியவில்லை என்றால், அவர்களின் புகைத்தல் அடிமைத்தனத்தை நினைத்து வருத்தம் கொள்வதா.. இல்லை, இந்த புகைப்படங்களை பார்த்தும் அவர்களின் 'எதையும் தாங்கும் நெஞ்சத்தை' பாராட்டுவதா............... முடியல!!!
------------------------------------------------------------------------------------------------


சே குவேரா பற்றி அறியாதவர்கள் மிக குறைவு என்றே சொல்லலாம். அதுவும் இந்த சமூக வலைத்தளங்களை பாவிப்பவர்கள் நிச்சயமாக எதோ ஒரு கட்டத்தில், எதோ ஒரு விதத்தில் சே குவேரா பற்றி அறிந்திருப்பார்கள். சொல்லப்போனால் சமூக தளங்களிலே சே குவேராவை தமது ரோல் மொடலாக(!) கொண்டவர்களை அங்காங்கே அதிகமாக காணலாம். சிலர் ஒரு பந்தாவுக்காக சே போன்ற புரட்சியாளர்களின் புகைப்படங்களோடும், வசனங்களோடும் இணையப்புரட்சியாளர்களாக சுற்றுவது வேறு கதை... அது தேவையில்லை! ஆக, மொத்தத்தில் சமூக தளங்களிலே சே குவேரா ரொம்ப பரீட்சயம்!

அப்படி இருக்க சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த சம்பவம் ஒன்று என்னை மகா அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதோடு, சரியான கடுப்பையும் கிளப்பிவிட்டது.. ஆனாலும் இன்று வரை அந்த சம்பவத்தை நினைக்கும் போது என்னால் சிரிப்பை கட்டுப்படுத்தாமல் இருக்க முடியவில்லை..

அதாவது சில நாட்களுக்கு முன்னர் எனது நண்பன், அவனுக்கு ஒரு முப்பது வயசுக்கு மேல் வரும்; அவன் வழமை போலவே கம்பியூட்டரில் தனது முகநூல் கணக்கை பார்வையிட்டுக் கொண்டு இருந்தான்.. இருந்தவன், சற்று நேரத்தில என்னை கூப்பிட்டு ஒரு போட்டோவை காட்டி...

"இவர் தான் முன்னாள் புளெட் தலைவர், உனக்கு தெரியுமா?" என்று முகத்தை சீரியஸாக வைச்சுக்கொண்டு கேட்டான்.... யார்ரா எண்டு கிட்ட போய் பார்த்த எனக்கு அப்பிடியே ஷாக்..

"டேய் எதை வச்சுடா இவர புளெட் தலைவர் என்கிறா?"


"எனக்கு தெரியும்; முந்தி புளெட்காரங்கள் இப்படி தான்.. தாடியோடையும், தொப்பியோடையும் இருப்பினம்...."

-------------------------------------------------------------------------------------------------
இல்லை என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை என்றாகிப்போன இணையம் என்னும் பெரும் கடலிலே, மீண்டும் ஒரு முயற்சியாக புரட்சி எவ்.எம் என்னும் இனைய வானொலி ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயற்ப்பட்டுக்கொண்டு உள்ளது. நீங்களும் புரட்சி எப்.எம்'முடன் இணைந்திருக்க இங்கே சொடுக்கவும்.