சுவனப்பிரியன் என்னும் ஒரு சகாப்தம்!

என்னடா சுவனப்பிரியனிடனம் இவன் துட்டு கிட்டு வாங்கிட்டு எழுதிறானோ என்று நினைத்தீர்கள் என்றால் அது உங்கள் மடமை! ஆனாலும் எனக்கு சுவனப்பிரியனை பற்றி எழுத தோன்றுகிறது; இது ஒருவித நன்றி உணர்ச்சியாக கூட இருக்கலாம்! நான் சுவனப்பிரியனால் அடைந்த நன்மைகள் அதிகம்.. நான் என்று சொல்வதை விட பலர்.. என்று சொல்வதே பொருந்தும்!

நான் கடந்த சில மாதங்களாக சுவனப்பிரியனின் பதிவுகளை படித்த பின், அப்படி என்ன தான் இருக்கிறது இந்து மதத்தில்? என்ற ஆர்வம் சாதாரணமாக தொடக்கி தீவிரமாக பற்றிக்கொண்டது. அதில் ஒரு கட்டமாக கண்ணதாசன் அவர்கள் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலை இரண்டு தடவைகள் புரட்டி விட்டேன். இன்னமும் இந்து மதம் சார்பாக பல விடயங்களை தேடி தேடி படித்தேன். அதன் விளைவாக, நிச்சயமாக சொல்கிறேன்; எனக்கு என் மதம் சகல உரிமைகளையும் கொடுக்கிறது. எந்த விதமான விமர்சனத்தையும் என் மதம் சார்பாக என்னால் முன் வைக்க முடியும்! கல்லெறி சிரச்சேதங்கள் இல்லை! ஏன், பிடிக்கவில்லையா காறி உமிழகூட எனக்கு இங்கே சுதந்திரம் இருக்கிறது!

பிறப்பால் நான் ஒரு ஹிந்து. ஆனால் இந்த மதத்தை நான் நினைத்து பார்ப்பதும் இல்லை; அது தொடர்பில் அலட்டிக்கொள்வதும் இல்லை. நான் கடந்த பத்து மாதங்களிலே ஒரே ஒரு தடவை மட்டுமே கோவிலுக்கு சென்றுள்ளேன்! ஆனால் பல தடவைகள் சர்ச்சுக்கு சென்று வந்துள்ளேன்! காரணம் எனக்கு சர்ச்சுக்கு போவதற்கான போக்குவரத்து வசதி கோவிலுக்கு போவதை விட எளிது. எனக்கு கோவில் போவதானாலும் சரி, சர்ச்சுக்கு போவதானாலும் சரி, உள்ளே போனால் ஒரே அளவு மன அமைதியே கிடைக்கிறது; அங்கே இறைவன் இருக்கிறாரோ இல்லையோ அது வேறு விஷயம்! ஆனால் மன அமைதி கிடைக்கிறது! இந்த வகையில் எனக்கு விரும்பிய மத தலத்துக்கு போவதற்கும் வழிபடுவதற்க்கும், இந்து மதம் எனக்கு எந்த கட்டுப்பாடுகளையும், எல்லைகளையும் விதிக்கவில்லை! அந்த வகையில் நான் ஒரு இந்துவாக பெருமைப்பட்டுக்கொள்கிறேன். சுவனப்பிரியன் போல ஒரு இஸ்லாமியனாக பிறக்காததை இட்டு நின்மதி அடைகிறேன். இதை எனக்கு/என்னை போன்ற பலருக்கு உணர்த்த முன்னின்று உழைத்த/உழைத்து வரும் சுவனப்பிரியனுக்கு கோடி நன்றிகள்!

இப்படியான சேவைகளை வலைத்தலத்தினூடே செய்துவரும் இந்த சுவனப்பிரியன் என்பவர் யார்?!... எனக்கு தெரியவில்லை. ஆனாலும் என் ஊகத்தின்படி 'பாலாரும் தேனாறும் ஓடும்' சவூதி அரேபியாவிலே 'மதம் சார் நிறுவன கட்டமைப்பிலே' ஊழியம் பெறும் ஒரு உயர்மட்ட அதிகாரியாக/ ஊழியனாக இருக்க வேண்டும். ஏனெனில் இருபத்தி நான்கு மணி நேரமும் மதத்தை பற்றி மட்டும் சிந்தித்து/செயற்ப்படுத்திக்கொண்டு இருந்தால் சாப்பாட்டுக்கு எங்கே போவது? குடும்பம் நடத்த என்ன வழி? (பல தார திருமணத்தை வேறு ஆதரிக்கிறாராம; அப்படியெனில் அண்ணனுக்கு நாலஞ்சு அன்னிமார் இருப்பார்களே என்ற பொதுவான சந்தேகம் நமக்கு எழுவது இயல்பு தானே!) அதனால் தான் சொன்னேன் மதம் சார் நிறுவன கட்டமைப்பின் ஊழியன் என்று!

(அண்ணனின் தொழில்)
நாம் அனைவரும் அறிந்த/சிலர் அறியாத ஒரு விடயம் என்னவென்றால், சுவனப்பிரியனுக்கு ஹியூமர் சென்ஸ் ரொம்ப ஜாஸ்தி! உதாரணமாக; தனது பக்கத்து வீட்டு சுப்பர்ர பசுமாடு பேத்தை குட்டி போட்டதை பதிவாக போட்டும்; "சுப்பரின் பசுமாடு பேத்தைக்குட்டி போட்டதுக்கு அல்லாவே காரணம்" என எழுதி, அதன் கீழ் நான்கு குர்ரான் வசனங்களையும் இணைத்து, அதை வாசிப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கக்கூடிய நகைச்சுவை உணர்வு சுவனப்பிரியனிடம் அதிகமாகவே உள்ளது. இவ்வாறு அவ்வப்போது எழுதும் தனது பதிவுகளில் இஸ்லாம் மதம் சார்ந்த எள்ளல்களையும், கடிகளையும் வைத்து வெளியிடக்கூடிய தைரியம் எத்தனை பேருக்கு வரும்? ஆம், இவ்வாறு, இந்து மதம் கொடுக்கும் "சுதந்திரத்தை" போன்று , இஸ்லாம் மதமும் கொடுக்க வேண்டும் என்று, புதியதொரு பரிணாமத்தில் இஸ்லாம் மதத்தை அழைத்துச்செல்லும் சுவனப்பிரியன் ஒரு சகாப்தம் தானே!

நான் பார்த்த வரையில் சுவனப்பிரியனிடமும் கருணாநிதியிடமும் ஒருமித்த குணங்கள் அதிகமாகவே உள்ளது. கருணாநிதி கண்ணில் படும் ஜீவராசிகளை எல்லாம் எப்படி "உடன்பிறப்பே" என்று சொல்லி கழுத்தறுப்பாரோ, அதே போல தான் சுவனப்பிரியனின் "சகோ"...! அத்துடன் ஏற்கனவே பலதார திருமணக்கொள்கையை ஆதரித்த கருணாநிதியை(!) ஆரம்ப காலங்களில் சுவனப்பிரியன் போன்ற ஒருவர் ஆட்க்கொண்டிருக்க வேண்டும்!

அப்பப்போ கருத்துக்களில் நிலையில்லாமல் கருணாநிதியை போல் தள்ளாடும் சுவனப்பிரியன் எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வரக்கூடிய சந்தர்ப்பம் அதிகம்.. ஆனா என்னே, அதன் பின் தமிழ்நாட்டின் சனத்தொகை தாங்காது!

'பேஸ்மென்ட் வீக்கான' இந்த சுவனப்பிரியனுக்கு பின்னாலே எப்பவும் அண்டர்வேயர் போட்ட நாலு காமெடி பீஸ் அடியாட்கள் சுற்றுவார்கள்! இவர்களின் வேலையெல்லாம் கலகலப்பாக இருக்கும் பகுதிகளை தேடிச்சென்று கலவரம் உண்டு பண்ணிவிட்டு வருவது தான்! ஆனால் அதுக்கெல்லாம் சேர்த்து, தர்ம அடி விளுவதென்னமோ 'பேஸ்மென்ட் வீக்கானா' இந்த அப்பாவி சுவனப்பிரியனுக்கு தான். சமீபத்தில் கூட அண்ணரின் விழுதுகளில் ஒன்றான சர்மிளா அகமத் என்ற பொண்ணு கலகலப்பாக இருந்த பேஸ்புக் குழுமத்திற்கு வந்து "முஸ்லீம் அல்லாதவர்கள் எல்லாம் இஸ்லாம் மதத்தை பற்றி அறிந்து கொள்ள எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்" என்று கூறி தன்னுடைய மெயில் ஐடியை கொடுக்காது, இன்னொரு 'விழுதின்' மெயில் ஐடியை கொடுத்துவிட்டு, கலவரத்தை உண்டு பண்ணிவிட்டு சென்று விட்டது!

இவ்வாறான செயற்பாடுகள் இஸ்லாம் மதம் சார்பாக வெறுப்பலைகளை தான் உண்டு பண்ணும் என்று காமெடி பீஸுகளான விழுதுகளுக்கு தெரியாது! ஆனால் சுவனப்பிரியனுக்கு நன்றாகவே தெரியும்! ஆனாலும் இவற்றை தடுக்க மாட்டார். காரணம் சுவனப்பிரியன் அடிப்படையில் ஒரு இந்து ஆதரவாளர்! அவர் ஹோர்மொன்கள் எல்லாம் இந்து மதம் சார்பாக தான் செயற்படுகிறது! அவர் குர்ரானை படித்தார், ஆனால் இந்து மதத்தை கரைத்துக் குடித்துள்ளார். வேண்டுமென்றால் இந்துமதம் சார்ந்த ஏதாவது சந்தேகங்களை அவரிடம் நீங்கள் கேட்டுப்பாருங்கள்! மதுரை ஆதீனம் கூட அவருக்கு அடுத்தபடி தான். இது அவரின் முற்பிறப்பின் தொடர்பாக கூட இருக்கலாம்!

இவ்வாறாய் இன்று வலைத்தளத்திலே தொடங்கிய சுவனப்பிரியனின் இஸ்லாம் மதம் தொடர்பான "பட்டும் படாத" விழிப்புணர்வும், இந்து மதம் தொடர்பான, என் போன்ற பலருக்கு ஏற்ப்படுத்திய நன்மதிப்பும் வலைத்தளத்தை தாண்டியும் இன்னும் பலரை சென்றடைய வேண்டும் என்பதுவே என் போன்ற பலரது அவா..!

17 comments:

  1. இன்னும் சிறிது நேரத்தில் அண்ணன் தனது Xyz என்ற போலி ப்ரோபைலில் வந்து ஒரு கமெண்ட் போட்டு கள நிலவரங்களை அறிவார்... அடி பலம் எண்டா அண்ணன் வரமாட்டார்.. அடி குறைவு எண்டு உறுதியானாத்தான் சிங்கம் களத்தில குதிக்கும்

    ReplyDelete
  2. சுன்னத்ப்ரியன் சாரி... சுவனப்ரியன் அண்ணனின் புகழை பரப்பும் அவரின் தொண்டன் கந்தசாமி அண்ணனுக்கு என் நன்றிகள்.. அண்ணன் புகழை இன்னும் இன்னும் பரப்ப என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. ஆசிரியர் - மாணவர்களே! உங்களிடம் கேள்விகள் கேட்கப் போகிறேன்! நீங்கள் தயாரா??

    மாணவர்கள் - ஆம்! நாங்கள் தயார்!

    ஆசிரியர் - சரி முதலாவது கேள்வி - நாயன்மார்களின் மொத்த எண்ணிக்கை எத்தனை?

    கந்தசாமி - 58 சார்!

    ஆசிரியர் - இல்லை! தவறான பதில்!

    மதுரன் - 65 சார்!

    ஆசிரியர் - இல்லை! இதுவும் தவறான பதில்!

    சுவனப்பிரியன் - 63 சார்!

    ஆசிரியர் - வெல்டன் சுவா! மிகவும் சரியான பதில் :-))

    ReplyDelete
  4. ஆசிரியர் - இம்முறை தீபாவளி எப்போது வருகிறது?

    நிரூபன் - தெரியாது சார்!

    துஷியந்தன் - மறந்திட்டன் சார்! பொறுங்கோ போன் பண்ணி பட்டியிடம் கேட்டுச் சொல்கிறேன்!

    முஹம்மத் அஷிக் - சார் நாள், மாதம், ஆண்டு எல்லாம் சூரியனை பின்பற்றுகிறது. அதில் உள்ள பண்டிகை மட்டும் நிலவை பின்பற்றினால்... ஐப்பசி 1-ஆம் தேதியும் ஓர் அமாவாசை, 30-ஆம் தேதியும் மற்றோர் அமாவாசை ஒரு சமயத்தில் வரும். அந்த மாதம் எந்த ஐப்பசி அமாவாசை தீபாவளி என்ற குழப்பத்துடன் இருக்கேன் சார்!

    ஆசிரியர் - அடடா, இவன் அல்லவோ மாணவன்! குருவை மிஞ்சிய சிஷயனாக இருப்பான் போல இருக்கே! வெல்டன் ஆஷிக் :-))

    ReplyDelete
  5. ஆசிரியர் - சரி இப்போது அடுத்த கேள்வி கேட்கிறேன்! சுவனப்பிரியன், ஆஷிக் நீங்கள் இருவரும் இந்துக்களா? முஸ்லிம்களா?

    இருவரும் ஒருமித்த குரலில் - ”தெரியலையே சார்!” :-))

    ReplyDelete
  6. வணக்கம் கந்தசாமி அண்ணே,
    நல்லாயிருக்கிறீங்களா?
    உங்கள் மீது திருச்சிற்றம்பலத்தான் அருள் மழை பொழியட்டும்!
    வாழ்க்கையிலையே....நீண்ட நாளைக்கு அப்புறமா செமையா சிரிக்கும் வண்ணம் சூப்பரா ஒரு பதிவு கொடுத்திருக்கிறீங்க
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. உங்களுக்கும், எனக்கும் இப்போது பதிவு தயாராகும் என நினைக்கிறேன்.
    ஏன்னா அண்ணன்...
    பதிவுலகில் ஆபாச கருத்து விதைக்கும் நிரூபன் என்றும்.
    தன் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தும் கந்தசாமி என்றும்
    தலைப்பு வைத்து எழுதக் கூடியவர்

    ReplyDelete
  8. சில முக்கியமான விசயங்களை தாங்கள் தவற விட்டு விட்டீர்கள்!
    அவற்றினை நினைவுபடுத்துவது அடியேனின் கடமையல்லவா..

    தன்னுடைய பதிவுக்கு தானே அனானிமஸ் கமெண்ட் அடித்து சுய சொறிதல் செய்வது சுவனத்தின் இயல்பான குணங்களுள் ஒன்று!

    மற்றையது..அனானிமஸ் கமெண்ட் அடித்து தன் பின்னே பலர் இருக்கிறார்கள் என பந்தா காட்டி சுயசொறிதல் செய்வதும் இவரின் இயல்பு!

    பதிவுலகில் பலர் எழுதும் அரசியல் பதிவுகள், மக்களுக்குரிய தீர்வு எவ்வாறு அமைய வேண்டும் எனும் பதிவுகளைத் தேடிப் படிக்காது கில்மா எழுதியதும் பாய்ந்தோடி வந்து மீண்டும் மீண்டும் படித்து ரசிப்பது!

    ReplyDelete
  9. அப்புறமா இது என் சொந்த கமெண்ட் கிடையாது..
    பேஸ்புக்கில மணிங்கிற பயலோட கமெண்டை சுட்டிருக்கேன்..
    படிச்சு சிரிச்சுக்குங்க

    சம்பவம் - “ பள்ளிவாசலுக்குள் புகுந்த பௌத்த பிக்குகள, முஸ்லிம்களை தொழ விடாமல் துன்புறுத்துகின்றனர்! எங்கும் ஒரே ஆரவாரம்! அடிதடி! சில முஸ்லிம்கள் தாக்கப்பட்டு, காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றனர்”

    பத்திரிகை நிரூபர் - “ அங்க என்ன நடக்குதுங்க?”

    சுவனப்பிரியன் - “சும்மா பேசிக்கிட்டு இருக்கோம் மாமா”

    ReplyDelete
  10. நிகழ்வுகள்!

    //நான் கடந்த சில மாதங்களாக சுவனப்பிரியனின் பதிவுகளை படித்த பின், அப்படி என்ன தான் இருக்கிறது இந்து மதத்தில்? என்ற ஆர்வம் சாதாரணமாக தொடக்கி தீவிரமாக பற்றிக்கொண்டது.//

    ஏதாவது ஒரு வகையில் இந்து மதத்தில் ஆர்வம் வந்து வேதங்களை எல்லாம் படிக்க ஆரம்பித்து விட்டால் மூலக் கொள்கையான 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற இடத்தில் வந்து நிற்பீர்கள். அதைத்தானே இஸ்லாமும் சொல்கிறது.

    //ஆனாலும் என் ஊகத்தின்படி 'பாலாரும் தேனாறும் ஓடும்' சவூதி அரேபியாவிலே 'மதம் சார் நிறுவன கட்டமைப்பிலே' ஊழியம் பெறும் ஒரு உயர்மட்ட அதிகாரியாக/ ஊழியனாக இருக்க வேண்டும். ஏனெனில் இருபத்தி நான்கு மணி நேரமும் மதத்தை பற்றி மட்டும் சிந்தித்து/செயற்ப்படுத்திக்கொண்டு இருந்தால் சாப்பாட்டுக்கு எங்கே போவது? குடும்பம் நடத்த என்ன வழி//

    எனக்கு அரசு மதம் சார்பாக எந்த வேலையும் தரவில்லை. நான் முன்பே கூறியிருக்கிறேன். நான் ஒரு தனியார் கம்பெனியில் கணிணி பிரிவில் வேலை செய்து வருகிறேன். அலுவலக நேரமான 8 மணி நேரத்தில் 4 மணி நேரத்தில் எனது வேலைகள் முடிந்து விடும். மற்ற நான்கு மணி நேரத்தில் இது போன்று பதிவுகள் பக்கம் வருவேன். எனது ஆர்வத்தை பார்த்து எனது பாஸ்(சவுதி) தனியாக கணிணியும், பிரிண்டரும், ஸ்கேனரும் கொடுத்து அலுவலகத்தில் இதற்கென தனி இடத்தையே ஒதுக்கி கொடுத்துள்ளார். எனவே மனைவி மக்களுக்காக சம்பாதித்து விட்டு இறப்புக்கு பிறகு உள்ள நீண்ட நெடிய பயணத்துக்கு உதவியாக இருக்குமே என்று தான் இநத பணி. இதற்கு எந்த பண உதவியும் கிடைப்பதில்லை. அப்படி கொடுத்தாலும் வாங்கிக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை.


    மதுரன்!

    //இன்னும் சிறிது நேரத்தில் அண்ணன் தனது Xyz என்ற போலி ப்ரோபைலில் வந்து ஒரு கமெண்ட் போட்டு கள நிலவரங்களை அறிவார்..//

    சுவனப்பிரியன் என்ற இந்த ஒரு ஐடியை தவிர வேறு எதுவும் இல்லை. வேறு யாருடைய கருத்தையோ என் கருத்தாக்குவுது நகைப்புக்குரியது.

    நிருபன்!

    //தன்னுடைய பதிவுக்கு தானே அனானிமஸ் கமெண்ட் அடித்து சுய சொறிதல் செய்வது சுவனத்தின் இயல்பான குணங்களுள் ஒன்று!

    மற்றையது..அனானிமஸ் கமெண்ட் அடித்து தன் பின்னே பலர் இருக்கிறார்கள் என பந்தா காட்டி சுயசொறிதல் செய்வதும் இவரின் இயல்பு!//

    வேறொரு தளத்தில் நடக்கும் சிறப்பான பின்னூட்டங்களை குறிப்பாக தங்கமணி, காவ்யா, கிருஷ்ணகுமார், ஸ்மிதா போன்றவர்களின் எழுத்தை மறு மதிப்பாக பதியும் போது அதனை அனானி ஆப்ஷனில் வெளியிடுவேன். ஏனெனில் அது என்னுடைய கருத்து என்று தவறாக மற்றவர்கள் விளங்கி விடக் கூடாது என்பதற்காக. மற்றபடி எனக்கு நானே வேறு பெயர்களில் பின்னூட்டம் போடக் கூடிய அளவில் எனது வலைப்பூ இல்லை என்பதை நீங்களும் அறிவீர்கள்.

    //சம்பவம் - “ பள்ளிவாசலுக்குள் புகுந்த பௌத்த பிக்குகள, முஸ்லிம்களை தொழ விடாமல் துன்புறுத்துகின்றனர்! எங்கும் ஒரே ஆரவாரம்! அடிதடி! சில முஸ்லிம்கள் தாக்கப்பட்டு, காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றனர்”

    பத்திரிகை நிரூபர் - “ அங்க என்ன நடக்குதுங்க?”

    சுவனப்பிரியன் - “சும்மா பேசிக்கிட்டு இருக்கோம் மாமா”//

    எந்த வழியிலாவது பவுத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பிரச்னை வர வேண்டும் என்று உங்கள் உள் மனது சொல்வது எனக்கு நன்றாக தெரிகிறது. அப்படி எல்லாம் வராது கவலைப்பட வெண்டாம. இன்னும் சில ஆண்டுகளில் சிங்களவர்களோடு தமிழ் இந்துக்களை இணைக்கும் பாலமாக தமிழ் முஸ்லிம்கள் செயல்படுவார்கள். அதுவரை கொஞ்சம் பொறுத்திருக்கவும். அதுவரை சீமான், வைகோ, கலைஞர், நெடுமாறன் செய்யும் காமெடிகளை எல்லாம் ரசித்து பார்த்துக் கொண்டிருக்கவும். :-)

    .

    ReplyDelete
  11. ////தமிழ் இந்துக்களை///

    மதிப்பிற்குரிய சுவனம்! நான் வாழும் சமூகத்தில் இப்பிடியொரு சொல்லாடலை கேள்விப்பட்டதே இல்லையே! உங்களால மட்டும் எப்பிடி முடியுது.. பகுத்தறிய:P

    ReplyDelete
  12. ஏதாவது ஒரு வகையில் இந்து மதத்தில் ஆர்வம் வந்து வேதங்களை எல்லாம் படிக்க ஆரம்பித்து விட்டால் மூலக் கொள்கையான 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற இடத்தில் வந்து நிற்பீர்கள். அதைத்தானே இஸ்லாமும் சொல்கிறது.///

    அப்போம் நாம சொன்னம்ல" இதுமதத்தை பொருத்தவரை அண்ணருக்கு அப்புறம் தான் மதுரை ஆதீனமே என்று"P

    ReplyDelete
  13. பத்திரிகை நிரூபர் - “ அங்க என்ன நடக்குதுங்க?”

    சுவனப்பிரியன் - “சும்மா பேசிக்கிட்டு இருக்கோம் மாமா”//

    சுவனம் அண்ணே இந்த பதிவில ஒவ்வொரு எழுத்தா படிச்சிட்டேன்.. நீங்க சொன்னமாதிரி இந்த லைன் இந்த பதிவிலையோ ப்ளாக்கிலையோ காணல்லையே...

    என்ர கண்ணிலதான் கோளாறோ

    ReplyDelete
  14. நாம வேண்டிக் கொண்டாலும் வேண்டா விட்டாலும் சாமி கேக்கும் மச்சான்!

    -நன்றி கவிஞர் யுகபாரதி.

    ReplyDelete
  15. தாங்கள் உடனே ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் சுவாமி விவேகானந்தரது ஞானதீபம் திருமந்திரம் ஆகிய நூல்களைப் படியுங்கள். சரியான முடிவு எடுக்க உதவும்.

    ReplyDelete
  16. தாங்கள் உடனே ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் சுவாமி விவேகானந்தரது ஞானதீபம் திருமந்திரம் ஆகிய நூல்களைப் படியுங்கள். சரியான முடிவு எடுக்க உதவும்.

    ReplyDelete