விஜயும் கிளம்பிட்டார்..!

 என்ன தான் வாரிசு நடிகராக அறிமுகமானாலும் சினிமாவிலே தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு திறமை தான் முக்கியம். இந்த வழியிலே பிரசாந், பிரபு,கார்த்திக்  என்று பலர் இலகுவாக சினிமாவுக்குள் நுழைந்து கொண்டாலும் அவர்களால் தங்களுக்கு என்று ஒரு நிலையான,நிரந்தரமான இடத்தை தேடிக்கொள்ளமுடியவில்லை.



இந்த வகையிலே அப்பா சந்திரசேகரால் ஆரம்பத்தில் மொக்கை படங்கள் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான விஜய் இன்று  தனக்கு என்று ஒரு நிலையான  இடத்தை பிடித்திருப்பது அவரின் திறமைக்கான அங்கீகாரம் தான். வாழ்க்கை என்பது ஒரு வட்டம் அதிலே தோற்பவன் ஜெயிப்பான் ஜெயிப்பவன் தோற்பான் என்ற அவரது டயலாக்கை போலவே ஆரம்பத்தில் பல தோல்விகள் பிறகு தொடர் வெற்றிகள் பின் தோல்வி வெற்றி என்று சென்று கொண்டு இருந்த போது மாஸ் ஹீரோவாக  ஆசைப்பட்டு கில்லியில் தொடக்கி சிவகாசி, போக்கிரி என்று நல்லாவே போய்க்கிட்டு இருந்த விஜயை சனியன் சகடையில் வராமல் ராகுல் காந்தி மூலம் வந்து தொற்றிக்கொண்டது.

தமிழ்நாட்டை பொறுத்த  வரை   மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளவர்களில் அரசியல் வாதிகளையும் அடிச்சு முந்தி நிற்ப்பவர் விஜய். இவருக்கு தமிழ்நாட்டில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ரசிகர் மன்றங்கள்.போதாததற்கு கேரளாவில் சிலை வேறு. இப்படிப்பட்ட விஜயை தமது கட்சியில் இணைத்துக்கொண்டால் தமிழ்நாட்டு வாக்கு வங்கியை பெருக்கிக்கொள்ளலாம் என்ற சூழ்ச்சியோடு  ராகுல் காந்தி விஜயை தம் கட்சி  வசம் இழுக்க இந்த அழைப்பதை விட்டார். இந்த நேரம் தமிழ் மக்கள் காங்கிரஸ் கட்சி மீது கொதிப்படைந்து இருந்த காலம். ஆகவே  இந்த செய்தி விஜயை பொறுத்த வரை இருதலைகொள்ளி  எறும்பின் நிலை தான். ராகுலை சந்திக்க சென்றால் மக்களிடம் இருந்து பெரும் நெருக்கடி வரும். அதுவே தன் படங்களுக்கு ஆப்பாக மாறும். இல்லாமல் இந்தியாவை ஆளும்  கட்சியின் முக்கியஸ்தர் அழைக்கும் போது போகாமல் இருப்பது அவரை அவமதிக்கும் செயல்  ஆகவே  இதை  புறக்கணித்தாலும் அதுவே அரசியல் ரீதியாக நிகழ்காலத்திலோ இல்லை பிற்காலத்திலோ நெருக்கடிகளை ஏற்ப்படுத்தும். ஆகவே தமிழ் மக்களுக்கு  இருக்கும் மறதி வியாதியை தனக்கு சாதகமாக்கி கொண்ட விஜய் ராகுலை சென்று சந்திக்கிறார். இதனால் மக்களிடம் இருந்து குறிப்பாக புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து எதிர்பார்த்த எதிர்ப்பு கிளம்பியது. சில படங்களின் புறக்கணிப்பும் மும்மரகாக இடம்பெற்றது. வில்லு, வேட்டைக்காரன், சுறா என்று தொடர் தோல்வியால் துவட்டு போனார் விஜய்.
அப்பொழுது மூன்றாவது தரப்பு ஒன்றும் தனக்கு முதுகில் குத்தப்போகிறது என்று விஜய் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

எங்கே விஜய் சென்று காங்கிரசை சந்தித்த கையேடு அரசியலில் குதித்தால் தன் வாரிசு அரசியலுக்கு அதுவே ஆப்பாக அமைந்துவிடுமோ என்று பதறியவர்கள் ஆரம்பத்தில் விஜய்க்கு சிறிய அளவில் நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்தார்கள்  இதுவே போக போக பெருக்க ஆரம்பித்து காவலன் ரிலீசில் பூதரகரமாக வெடித்தது.  தங்கள் அரசியல் பலத்தை கொண்டு  தியேட்டர்  உரிமையாளர்கள் வரை விஜய்க்கு எதிராக திருப்பி விட்டார்கள். என்றுமே விஜய் சந்தித்திராத நெருக்கடியாக மாறியது.



இதுவரை உறங்கு நிலையில் இருந்த விஜயின் ரசிகர் பட்டாளம் விஜய் இந்த நெருக்கடிகளில் முழி பிதுங்கி நிற்பதை கண்டு கொதித்தெழுந்தது. விஜயின் காவலன் படத்துக்கு பொருட் செலவில் செய்த விளம்பரங்களிலும் பார்க்க யானை  தன் தலையில் தானே மண் அள்ளி போட்டது போல விஜய்க்கு ஆளும் தரப்பால கொடுத்த நெருக்கடிகளே மிகப்பெரிய விளம்பரங்களாக அமைந்துவிட்டது. விஜய் என்ற தனிமனிதன் மீது அவர் சக்திக்கும் மிஞ்சிய கூட்டத்தால் கொடுக்கப்பட்ட நெருக்கடிகளால் விஜய் மீது மக்கள் அனுதாபமும் அதிகரித்தது என்றால் மிகையல்ல. இதனால் காவலன் மீதான மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்தது. தை பொங்கலுக்கு ரிலீசகுமோ என்ற கேள்விக்குறியுடன் கிடந்த காவலனை தன் முயற்சியாலும் ரசிகர்களின்  ஆதரவோடும் வெளியிட்டு ஆளும் தரப்பு முகத்தில் ஆச்சரிய குறியை ஏற்படுத்திவிட்டார் விஜய்.

காவலன் கதை ஒன்றும் தமிழ் சினிமாவுக்கு புதியது அல்ல. காதல் கோட்டை துள்ளாத மனமும் துள்ளும் என்று பல படங்களின் நகல் தான். என்றாலும் இறுதி இருபது நிமிட கதையே  சற்று வேறு பட்டது. மற்றும் விஜயின் நடிப்பு ஒரு பிளஸ் போயின்ட். இவ்வாறு சுமாரான கதையே கொண்ட காவலனை இலவச விளம்பரப்படுத்தி வெற்றி அடைய வைத்த பெருமை  ஆளும் தரப்பையே சாரும். சும்மா விட்டிருந்தால் கூட இப்படி ஒரு பெரு வெற்றி கொடுத்திருக்குமா என்பது கேள்வி குறி தான்!



அன்று விஜய் காங்கிரசை சந்தித்தது ஒன்றும் ஆளும் தரப்பால் பயப்பட வேண்டிய விடயம் அல்ல!  காரணம் தமிழ் மக்களின் எதிர்ப்பை மீறி காங்கிரஸ் கட்சியில் விஜய் இனைய மாட்டார் என்பது  சாதாரண அரசியல் ஆர்வலனாலே 90 % கணிக்க கூடியது. ஆனால் அரசியல் சாணக்கியர்  முதல்வரால்  இதை கணிக்க முடியாதது மட்டும் அல்லாது மக்கள் பலம் கொண்ட ஒரு நடிகன் மீது கொடுக்கும் அழுத்தங்கள் பிற்காலத்தில் எந்த வித தாக்கங்களை கொடுக்கும் என்பதை  m g r காலத்திலே உணர்ந்தவரால் கணிக்க முடியாமல் போனது  ஆச்சரியம் தான். இப்பொழுது தன் வாரிசு அரசியலுக்கு எதிராக  முன்னர் விஜயகாந் போல தற்பொழுது விஜயை கிளப்பி விட்டுள்ளார். கலைஞருக்கு கூஜா தூக்கியே பழகிப்போன திரைத்துறையில் இருந்து ஒரு முன்னணி நடிகர் எதிர்த்து கிளம்பி இருப்பது நல்ல விடயம் தான். (அதுக்காக ஜெயா மேடத்துக்கு கூஜா தூக்குவது தான் சகிக்க முடியல!)

4 comments:

  1. என்று விசய், ராகுல் காண்டை மீட் பன்னானோ அன்றிலிருந்து அசிங்க அசிங்கமாக திட்ட ஆரம்பிச்சவந்தான் இது வரை நிறுத்தல ..

    ReplyDelete
  2. நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....
    இனி தினமும் வருவேன்.

    ReplyDelete
  3. ஓட்டும் போட்டுட்டோமில்ல...

    ReplyDelete
  4. sakthistudycentre @ உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்

    ReplyDelete