பிரபல மார்க்க அறிஞர் சூனா பானாவுடன் ஒரு பயங்கர சந்திப்பு!

சவூதி அரேபியாவிலே வசித்துவரும் விரல் விட்டு எண்ணக்கூடிய இஸ்லாமிய பிரபல மார்க்க அறிஞரான  சூனா பானா அவர்களை  பேட்டி காண ஆர்வம் கொண்டு ஒரு பத்திரிக்கை நிரூபர் அவர் வீடு செல்கிறார்!

வீடு சென்றதும், வீட்டு முற்றத்திலே காவல் கடமையில் நின்ற  நான்கு பன்றிகளையும், சூனா பானா அவர்களின் போக்குவரத்துக்காக அங்கே ஒழுங்கு செய்யப்பட்டு  நின்ற இரண்டு ஒட்டகங்களையும் தன் காமெராவிலே உள்வாங்கி கொள்கிறார்!  தொடர்ந்து உள்ளே சென்றதும் பிரபல பதிவர் சூனா பானா அவர்கள் தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக்கொண்டு இருந்தார். ஆகவே அவர் கவனத்தை தன் பால் திசை திருப்பி தன்னை அறிமுகம் செய்து கொள்ளவும்...

சூனா பானா:- வணக்கம் சகோ, உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும்!

நிரூபர்:- (கோவத்துடன்) இதோ பாருங்கள் சூனா பானா எனக்கு ஏற்க்கனவே கல்யாணம் ஆகிவிட்டது. கூடவே இரண்டு பிள்ளைகுட்டிகளும் இருக்கு.. ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டில் வளர்ந்த என்னால் இனியும் ஒரு சாந்தியை உண்டாக்க முடியாது!

சூனா பானா :- நீங்கள் தவறாக புரிந்துகொண்டுவிட்டீர்கள் சகோ, இது என் (பதிவுலக) பழக்க தோஷம்! அதனால் தான் கூறிவிட்டேன்! சரி விடயத்துக்கு வருவோம்...கூறுங்கள். உங்களுக்கு என்ன அறிய வேண்டும்!

நிரூபர்:- நீங்கள் ஒரு காமெடி மார்க்க அறிஞர் என்று ஊருக்குள் பேசிக்கொள்கிறார்களே! அது உண்மையா? அது பற்றிய தங்கள் கருத்து என்ன?

சூனா பானா:- வன்மையாக கண்டிக்கிறேன். இது அமெரிக்காவி.....    இது யாரோ எனக்கு எதிராக செய்யப்பட்ட பிரச்சாரம்!  நம்பாதீர்கள் சகோ! நான் சீரியஸான மார்க்க அறிஞர்! என்னை தலைமையாக கொள்ளகூடிய ஒரு கூட்டமே என் பின்னால் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! (பெருமிதத்துடன் மூச்சை உள்வாங்கி விடுகிறார் சூனா பானா)

நிரூபர்:-சமீபத்திலே, ஈழ தமிழர்கள் மகிந்த அரசாங்கத்துடன் ஒத்துழைத்து போக வேண்டும் என்று ஒரு அறிக்கை விட்டுள்ளீர்களே! அது உண்மையா?

சூனா பானா:- ஆம், உண்மை தான்! இது பற்றி நான் அதிகம் பேச வேண்டும். எமது இஸ்லாம் மத கொள்கைகளின் படி சுதந்திரம் கேட்ப்பதோ இல்லை சுதந்திரத்திற்காக போராடுவதோ ஒரு வீண் செயல்! நீங்கள் எமது இஸ்லாம் மதத்தை எடுத்து பார்த்தீர்களேயானால், நமது கண்மணி முகமத் நபி கூட ஆரம்பத்தில் ஒரு கொள்ளை கூட்ட தலைவனாகவும், பெண் பித்தனாகவும் தனது வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்த ஒருவர் தான். அப்படிப்பட்ட ஒருவரையே இறை தூதராக ஏற்றுக்கொண்ட எமக்கு சுதந்திரத்துக்கான போராட்டம் எல்லாம் ஒரு வீண் செயலாக தான் தெரிகிறது. உதாரணத்துக்கு இலங்கையில் கிழக்கு வாழ் முஸ்லீம்களை எடுத்து கொள்ளுங்கள். அவர்கள்  மகிந்த அரசுடன் அடிபணிந்து செல்வதால் தானே அதிகளவு சலூகைகளை பெற்று கொள்ள கூடியதாக இருக்கிறது! இது தொடர்பாகவும் நான் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தேன்! சகோ... நமக்கு சுதந்திரமா முக்கியம்?

நிரூபர்:- அப்படியெனில் பாலஸ்தீனத்தின் விடுதலைக்காக போராடுபவர்களும் இஸ்ரேலுக்கு அடிபணிந்து போய் தான் சலூகைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறீர்களா?

சூனா பானா:- நிச்சயமாக! அப்பிடி அவர்கள் அடிபணிந்து போகவில்லை எனில் அவர்கள் உண்மையான முஸ்லீம்களே கிடையாது! இதே நிலை தான் காஷ்மீர் மக்களுக்கும்!

நிரூபர்:- சூனா பானா அவர்களே இந்த உலகில் நீங்கள் முன்மாதிரியாக கொள்ளக்கூடிய நபர்கள் யாரேனும் உண்டா?

சூனா பானா:- இருக்கிறார்கள் சகோ! ஒன்றல்ல, மூன்று நபர்கள் உள்ளார்கள்.
முதலாவது- முகமது நபிகள் 
இரண்டாவது - மகிந்த ராஜபக்சே
மூன்றாவது-  ராஜீவ் காந்தி
இந்த மூவரும், மூவர் படைகளும் செயலில் ஒன்றுபட்டவர்கள்! கற்(ப்பழிப்)பிப்பதில் புகழ் பெற்றவர்கள்! இன்று எம் மதத்துக்கு எதிராக நிகழ்த்தப்படும் பிரச்சாரங்களுக்கு எதிர்வினையாக  இவர்களின் கற்பி(பழி)ப்பு  பயிற்சிகள் தான் எமக்கு உதவுகிறது.

நிரூபர்:- உங்கள் மதத்தில் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளதே? அது பற்றி தங்கள் கருத்து என்ன?

சூனா பானா:- இது உண்மை அல்ல. எங்கள் மத பெண்கள் சுதந்திரமாக தான் உள்ளார்கள். நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் இருப்பின் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு தடவை சென்று பாருங்கள். அங்கே பாலியல் தொழிலில் கொடி கட்டி பறப்பவர்கள் எம் மதத்தவர்கள் தான். அது மட்டும் அல்ல, அங்கே கஞ்சாவில் இருந்து களவெடுப்பது வரை இஸ்லாமிய பெண்களுக்கு உள்ள சுதந்திரம் வேறு எந்த பெண்களிடமும் இல்லை. ஆகவே இஸ்லாம் பெண்களின் சுதந்திரத்துக்கு முட்டுக்கட்டையாக இல்லை என்பதனை தாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்

நிரூபர்:- சூனா பானா அவர்களே இதுவரை நேரமும் என் கேள்விகளுக்கு நீங்கள் அளித்த பதில்களை பார்க்கும் போது, தங்களை தாங்கள் சார்ந்த மந்தை கூட்டம் 'தலைமைத் தாடி ஆடாக' ஏற்றுக்கொண்டதில் தப்பில்லை என்றே தோன்றுகிறது!

இதை கேட்ட நொடியே மிகவும் டென்ஷனான சூனாபானா, ஆத்திரம் கொண்டு அல்லாவின் பெயரை துணைக்கு அழைத்தவாறே நிரூபர் மீது பாய்கிறார்.

அருகில் இருந்த தொலைக்காட்சி பிரேக்கிங் நியூசாக ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கிறது "லிபியாவுக்கான அமெரிக்க தூதுவர் இஸ்லாம் மதவெறியர்களால் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார்".

சுவனப்பிரியனுக்கும் எமக்கும் என்ன உறவு?

யார் இந்த சுவனப்பிரியன்?? என்பதை அறியாதவர்கள் இப்பதிவை படிக்க முன்னர் கீழ் காணும் தலைப்பில் உள்ள பதிவை சொடுக்கவும்!

சுவனப்பிரியன் என்னும் ஒரு சகாப்தம்!

மீண்டும் சுவனப்பிரியனா? அப்பிடி சுவனப்பிரியன் மீது உனக்கு என்ன தான் ஒரு 'இது'!..... அட அவனா நீயி?? என்று என்னை பார்த்து நீங்கள் சந்தேகப்பட தேவையில்லை! என்னை விடுங்கள்! சுவனப்பிரியனை நீங்கள் அவ்வாறு சந்தேகப்பட முடியாது! காரணம் அன்று தொடக்கம் அவர் ஓரினச்சேர்க்கையை கோபமாக எதிர்த்து வருகிறார்!

அப்போ சுவனப்பிரியன் கும்பலுக்கும் உங்களுக்கும் என்ன தான் பிரச்சனை என்றா கேட்க்கிறீர்கள்? சொல்கிறேன்.

இற்றைக்கு சில பல மாதங்களுக்கு முன்னர் ஒரு இஸ்லாமிய பெண் ஒருவர் எமது 'நாற்று' பேஸ்புக் குழுமத்திலே அன்னியோன்னியமாக எம்முடன் பழகி வந்தார்! தினமும் குழுமத்துக்கு வருவார். கலகலப்பாக பேசுவார். பழகுவார்! இங்கு தான் பற்றிக்கொண்டது சுவனப்பிரியனுக்கும் அவர் மதவாதகும்பலுக்கும் எம் மீதான அரிப்பு! "ஒரு இஸ்லாமிய பெண்மணி இவர்களுடன் இவ்வாறு பழகுவதா?" (இந்நேரம், சென்னை பதிவர் சந்திப்புக்கு முன்னதாக இவர்கள் பதிவுலகில் கிளப்பிய சர்ச்சைக்கான மைய காரணத்தை நினைவில் கொள்ள) என்பது, இஸ்லாம் மதத்தை முன்னிறுத்தி இனைய உலகிலே பிரச்சாரம் செய்யும் இவர்களால் தாங்கி கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது! பல தடவைகள் எம் கூட பழகுவதை நிறுத்தும் படி அந்த பெண்ணுக்கு எச்சரிக்கை செய்தார்கள்! மிரட்டல்கள் விடுத்தார்கள்! இதை பல தடவைகள் எம் நண்பர்களுக்கு கூறி அந்த பெண் வருத்தப்பட்டுமுள்ளது! (இது உண்மையா பொய்யா என்று அந்த பெண்ணின் மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும்...அப்படி ஒண்ணு இல்லை எனில் ஆதாரத்துடன் நிரூபிக்கவும் தயார்!) இறுதியில் இந்த மதவாத கும்பலின் அச்சுறுத்தலாலும், வேறு சில காரணங்களாலும் அந்த பெண்ணும் எம்முடன் முரண்பட்டுக்கொண்டு சென்றுவிட்டார்! ஆனால் அதன் பின்னரும் சில நண்பர்களுடன் நட்பு ரீதியான தொடர்பை பேணி வந்தார்!... இவ்வாறு தான் தொடங்கியது நமக்கும் சுவனப்பிரியனுக்கும் இடையிலான முரண்பாடுகள்.

ஆனால் இன்று சுவனப்பிரியனோ, நமக்கும் அவர்களுக்குமான பிரச்சனை "இலங்கையிலே பாலியல் தொழிலை சட்ட ரீதியானதாக்க வேண்டும்" என்ற விவாதப்பதிவில் இருந்து ஆரம்பித்ததாக கதை எழுதுகிறார்!

இவ்வாறு, சுவனப்பிரியனுக்கு ஆட்டுக்குள் மாட்டையும், அல்லாக்குள் யேசுவையும் ஓட்டுவது என்பது இது தான் முதற்த்தடவையும் அல்ல! உதாரணமாக 'நீங்கள் இறை தூதராக சொல்லும் நபிகள் என்ன காரணத்துக்காக ஒன்பது வயசு பச்சிளம் சிறுமியான ஆயிஷா என்ற பெண்ணை திருமணம் புரிந்து கொண்டார்' என்று ஒரு கேள்வி சுவனப்பிரியனை நோக்கி கேட்டு பாருங்கள்!, உடனே 'அமெரிக்காவில் தொடக்கி ஆர் எஸ் எஸ் வரை சுவனத்தின் பதில் பயணிக்கும்!' இந்த பதிலை படிக்கும் போது, படிக்கும் நமக்கு பைத்தியமா இல்லை பதிலை எழுதியவனுக்கு பைத்தியமா என்று புரிந்து கொள்ள முடியாத குழப்ப நிலைக்கு ஆட்க்கொண்டு விடுவீர்கள் நீங்கள்!... சரி விடையத்துக்கு வருவோம்.

நண்பர் மாத்தி யோசி மணி என்பவர் சில காலங்களுக்கு முன்னர் இலங்கையில் பாலியல் தொழிலை சில பல காரணங்களால் சட்டரீதியானதாக ஆக்க வேண்டும் என்று எழுதியிருந்தார்! இது உண்மை தான்! ஆனால் இப்பதிவு சுவனத்தின் கண்களில் சிக்கியிருக்க வேண்டும்! படித்ததும், தம் கொள்கையில் இடி விழுந்ததாக அடி வயிற்றில் இருந்து பற்றி எரிந்திருக்க வேண்டும் சுவனப்பிரியனுக்கு, வெகுண்டெழுந்தார்! ஐயகோ பாலியலை சட்ட ரீதியான தொழில் ஆக்கினால் சமூகம் என்னாவது? ஈழ தமிழர்களின் நிலை என்ன ஆவது? கலாச்சார சீரழிவு வரப்போகிறதே! என்று தேர்தலுக்கு முந்தய திகதிகளில் அறிக்கை விடும் கருணாநிதி போல அழ ஆரம்பித்தார்!

என்னடா சுவனம் ஈழ தமிழர்கள் மீது பற்று வைத்து தானே சொல்கிறார் என்று எண்ணிவிடாதீர்கள்! இந்த மத வெறிக்கூட்டம் ஈழ தமிழர்கள் மீது கொண்ட பற்றும் அக்கறையும் எப்படி பட்டது என்பதற்கு கீழே சின்ன ஒரு உதாரணம்!

(இது சுவனத்தின் மதவாத கும்பலில் ஒன்று)

இப்படி ஈழ தமிழர்கள் மீது வக்கிரமான எண்ணத்தை கொண்ட கூட்டத்தை சேர்ந்த இவர் எதற்க்காக பாலியல் தொழில் என்று வரும் போது மூக்காலே அழுகிறார் என்றா எண்ணுகிறீர்கள்? வேறொன்றும் இல்லை இவரின் இந்த அழுகையும் மத வெறியால் எழுந்த ஒன்று தான்!

அடிப்படையில் இஸ்லாம் மதவாதியான இந்த சுவனப்பிரியன் பலதார திருமணத்தின் பால் கவர்ந்திழுக்கப்பட்ட ஒரு ஜீவன்! அதாவது பாலியல் தொழில் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று என்றும், அதற்க்கு மாற்றீடாக பலதார திருமணத்தை இஸ்லாம் அறிவுறுத்துகிறது என்பது தான் சுவனப்பிரியனின் இடி விழுந்த கொள்கை!

அதாவது ஒருவன் தன் பாலியல் இச்சையை தீர்க்க விலை மாதுகளின் பால் செல்வதை விட அந்த விலை மாதுகளையே சட்டரீதியாக திருமணம் புரிந்துகொள்ள வேண்டும். இது தான் சுவனத்தின் சில/பல தார திருமணக்கொள்கை!! (ஒருவன் விலைமாது பால் நாடுவதற்கும், மனைவி உயிருடன் இருக்கத்தக்கதாக இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கும் அடிப்படையாக இருப்பது காமத்தின் தூண்டுதல் தான் என்பது சுவனப்பிரியனின் மதக்கறை படிந்த மூளைக்கு இந்த ஜென்மத்தில் புரியக்கூடிய வாய்ப்பு இல்லை! )

இவ்வாறு சுவனத்தின் கொள்ளை பிரகாரம், காம இச்சைக்காக விலைமாதுவையே மறுமணம் செய்து கொள்ளும் ஒருவனின் காம இச்சை தீர்ந்த பிற்பாடு, குறித்த அந்த பெண்ணின் நிலை என்ன என்பதை சுவனப்பிரியன் போன்ற 'மதம் என்னும் இரண்டாவது மூளை' கொண்டு சிந்திப்பவர்களால் புரிந்து கொள்ள முடியாது தான்!

இப்படிப்பட்ட சுவனப்பிரியன் பால் எனக்கொரு ஆசை! என்னவென்றால், சுவனப்பிரியனும் அவர் தம் மதவாத கும்பலும் பிரான்ஸுக்கு வர வேண்டும். வந்து, இங்கு வாழும் இஸ்லாமியர்களின் நடவடிக்கைகளை அவதானிக்க வேண்டும். அதன் பின்னர் சுவனப்பிரியனும் அவர் தம் மதவாத கும்பலும் ஈபில் டவலில் நான்கு முழ கயிற்றை கட்டி தொங்குவார்களா? இல்லை, இனம் இனத்தோடு தான் சேரும் என்பதற்கு இணங்க 'சிவப்பு விளக்கு ஏரியாக்களில்' தஞ்சம் புகுவார்களா என்பதை பார்க்க வேண்டும்!

சுவனப்பிரியனிடம் ஒரு சந்தேகம்!- அண்ணே... சுவனம் அண்ணே! உலகிலே தற்சமயம் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் அதிகரித்து வருகிறது என்று போற வாற இடமெல்லாம் சொல்லி புளங்காகிதம் கொள்கிறீர்களே....அது உண்மையாகவே இருக்கட்டும்!..ஆனால் நீங்கள் மேற்ப்படி "பின்பற்றுபவர்கள் தொகை அதிகரித்து செல்லும் இஸ்லாம் மதம்" என்று சொல்வது எந்த பிரிவு அண்ணே?.... சுன்னியா, சியாவா, அல்லோவியா, சூபியா, அல்லாவியா...இல்லை இன்ன பிறவா??... முடியல...! இதில் எந்த பிரிவில் இணைந்தால் வெட்டுக்குத்துபடாமல் சந்தோசமாக இருக்கலாம் என்று சொல்லுங்கண்ணே? ஏன் கேட்க்கிறேன் என்றால் நாளை எனக்கும் உதவும் பாருங்கோ:)


இந்த வார சுவனப்பிரியன் காமெடி:-///உலகிலேயே தலை நிமிர்ந்து வாழும் சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம். தெருவோரத்தில் பிளாட்பாரத்தில் படுத்துறங்கும் ஒரு சராசரி முஸ்லிமை யார் காலிலாவது விழச் சொல்லிப் பார். உனக்கு உறைக்கும் படி சரியான பதிலை அவர் கொடுப்பார்:)//// அண்ணன் சுவனப்பிரியனின் ஆசைக்கு இணங்க பிரான்சிலே இஸ்லாமியர்களின் சட்டவிரோத விபச்சார விடுதிகள் பற்றி புகைப்படங்களுடன் விரைவில்...

சுவனப்பிரியன் என்னும் ஒரு சகாப்தம்!

என்னடா சுவனப்பிரியனிடனம் இவன் துட்டு கிட்டு வாங்கிட்டு எழுதிறானோ என்று நினைத்தீர்கள் என்றால் அது உங்கள் மடமை! ஆனாலும் எனக்கு சுவனப்பிரியனை பற்றி எழுத தோன்றுகிறது; இது ஒருவித நன்றி உணர்ச்சியாக கூட இருக்கலாம்! நான் சுவனப்பிரியனால் அடைந்த நன்மைகள் அதிகம்.. நான் என்று சொல்வதை விட பலர்.. என்று சொல்வதே பொருந்தும்!

நான் கடந்த சில மாதங்களாக சுவனப்பிரியனின் பதிவுகளை படித்த பின், அப்படி என்ன தான் இருக்கிறது இந்து மதத்தில்? என்ற ஆர்வம் சாதாரணமாக தொடக்கி தீவிரமாக பற்றிக்கொண்டது. அதில் ஒரு கட்டமாக கண்ணதாசன் அவர்கள் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலை இரண்டு தடவைகள் புரட்டி விட்டேன். இன்னமும் இந்து மதம் சார்பாக பல விடயங்களை தேடி தேடி படித்தேன். அதன் விளைவாக, நிச்சயமாக சொல்கிறேன்; எனக்கு என் மதம் சகல உரிமைகளையும் கொடுக்கிறது. எந்த விதமான விமர்சனத்தையும் என் மதம் சார்பாக என்னால் முன் வைக்க முடியும்! கல்லெறி சிரச்சேதங்கள் இல்லை! ஏன், பிடிக்கவில்லையா காறி உமிழகூட எனக்கு இங்கே சுதந்திரம் இருக்கிறது!

பிறப்பால் நான் ஒரு ஹிந்து. ஆனால் இந்த மதத்தை நான் நினைத்து பார்ப்பதும் இல்லை; அது தொடர்பில் அலட்டிக்கொள்வதும் இல்லை. நான் கடந்த பத்து மாதங்களிலே ஒரே ஒரு தடவை மட்டுமே கோவிலுக்கு சென்றுள்ளேன்! ஆனால் பல தடவைகள் சர்ச்சுக்கு சென்று வந்துள்ளேன்! காரணம் எனக்கு சர்ச்சுக்கு போவதற்கான போக்குவரத்து வசதி கோவிலுக்கு போவதை விட எளிது. எனக்கு கோவில் போவதானாலும் சரி, சர்ச்சுக்கு போவதானாலும் சரி, உள்ளே போனால் ஒரே அளவு மன அமைதியே கிடைக்கிறது; அங்கே இறைவன் இருக்கிறாரோ இல்லையோ அது வேறு விஷயம்! ஆனால் மன அமைதி கிடைக்கிறது! இந்த வகையில் எனக்கு விரும்பிய மத தலத்துக்கு போவதற்கும் வழிபடுவதற்க்கும், இந்து மதம் எனக்கு எந்த கட்டுப்பாடுகளையும், எல்லைகளையும் விதிக்கவில்லை! அந்த வகையில் நான் ஒரு இந்துவாக பெருமைப்பட்டுக்கொள்கிறேன். சுவனப்பிரியன் போல ஒரு இஸ்லாமியனாக பிறக்காததை இட்டு நின்மதி அடைகிறேன். இதை எனக்கு/என்னை போன்ற பலருக்கு உணர்த்த முன்னின்று உழைத்த/உழைத்து வரும் சுவனப்பிரியனுக்கு கோடி நன்றிகள்!

இப்படியான சேவைகளை வலைத்தலத்தினூடே செய்துவரும் இந்த சுவனப்பிரியன் என்பவர் யார்?!... எனக்கு தெரியவில்லை. ஆனாலும் என் ஊகத்தின்படி 'பாலாரும் தேனாறும் ஓடும்' சவூதி அரேபியாவிலே 'மதம் சார் நிறுவன கட்டமைப்பிலே' ஊழியம் பெறும் ஒரு உயர்மட்ட அதிகாரியாக/ ஊழியனாக இருக்க வேண்டும். ஏனெனில் இருபத்தி நான்கு மணி நேரமும் மதத்தை பற்றி மட்டும் சிந்தித்து/செயற்ப்படுத்திக்கொண்டு இருந்தால் சாப்பாட்டுக்கு எங்கே போவது? குடும்பம் நடத்த என்ன வழி? (பல தார திருமணத்தை வேறு ஆதரிக்கிறாராம; அப்படியெனில் அண்ணனுக்கு நாலஞ்சு அன்னிமார் இருப்பார்களே என்ற பொதுவான சந்தேகம் நமக்கு எழுவது இயல்பு தானே!) அதனால் தான் சொன்னேன் மதம் சார் நிறுவன கட்டமைப்பின் ஊழியன் என்று!

(அண்ணனின் தொழில்)
நாம் அனைவரும் அறிந்த/சிலர் அறியாத ஒரு விடயம் என்னவென்றால், சுவனப்பிரியனுக்கு ஹியூமர் சென்ஸ் ரொம்ப ஜாஸ்தி! உதாரணமாக; தனது பக்கத்து வீட்டு சுப்பர்ர பசுமாடு பேத்தை குட்டி போட்டதை பதிவாக போட்டும்; "சுப்பரின் பசுமாடு பேத்தைக்குட்டி போட்டதுக்கு அல்லாவே காரணம்" என எழுதி, அதன் கீழ் நான்கு குர்ரான் வசனங்களையும் இணைத்து, அதை வாசிப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கக்கூடிய நகைச்சுவை உணர்வு சுவனப்பிரியனிடம் அதிகமாகவே உள்ளது. இவ்வாறு அவ்வப்போது எழுதும் தனது பதிவுகளில் இஸ்லாம் மதம் சார்ந்த எள்ளல்களையும், கடிகளையும் வைத்து வெளியிடக்கூடிய தைரியம் எத்தனை பேருக்கு வரும்? ஆம், இவ்வாறு, இந்து மதம் கொடுக்கும் "சுதந்திரத்தை" போன்று , இஸ்லாம் மதமும் கொடுக்க வேண்டும் என்று, புதியதொரு பரிணாமத்தில் இஸ்லாம் மதத்தை அழைத்துச்செல்லும் சுவனப்பிரியன் ஒரு சகாப்தம் தானே!

நான் பார்த்த வரையில் சுவனப்பிரியனிடமும் கருணாநிதியிடமும் ஒருமித்த குணங்கள் அதிகமாகவே உள்ளது. கருணாநிதி கண்ணில் படும் ஜீவராசிகளை எல்லாம் எப்படி "உடன்பிறப்பே" என்று சொல்லி கழுத்தறுப்பாரோ, அதே போல தான் சுவனப்பிரியனின் "சகோ"...! அத்துடன் ஏற்கனவே பலதார திருமணக்கொள்கையை ஆதரித்த கருணாநிதியை(!) ஆரம்ப காலங்களில் சுவனப்பிரியன் போன்ற ஒருவர் ஆட்க்கொண்டிருக்க வேண்டும்!

அப்பப்போ கருத்துக்களில் நிலையில்லாமல் கருணாநிதியை போல் தள்ளாடும் சுவனப்பிரியன் எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வரக்கூடிய சந்தர்ப்பம் அதிகம்.. ஆனா என்னே, அதன் பின் தமிழ்நாட்டின் சனத்தொகை தாங்காது!

'பேஸ்மென்ட் வீக்கான' இந்த சுவனப்பிரியனுக்கு பின்னாலே எப்பவும் அண்டர்வேயர் போட்ட நாலு காமெடி பீஸ் அடியாட்கள் சுற்றுவார்கள்! இவர்களின் வேலையெல்லாம் கலகலப்பாக இருக்கும் பகுதிகளை தேடிச்சென்று கலவரம் உண்டு பண்ணிவிட்டு வருவது தான்! ஆனால் அதுக்கெல்லாம் சேர்த்து, தர்ம அடி விளுவதென்னமோ 'பேஸ்மென்ட் வீக்கானா' இந்த அப்பாவி சுவனப்பிரியனுக்கு தான். சமீபத்தில் கூட அண்ணரின் விழுதுகளில் ஒன்றான சர்மிளா அகமத் என்ற பொண்ணு கலகலப்பாக இருந்த பேஸ்புக் குழுமத்திற்கு வந்து "முஸ்லீம் அல்லாதவர்கள் எல்லாம் இஸ்லாம் மதத்தை பற்றி அறிந்து கொள்ள எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்" என்று கூறி தன்னுடைய மெயில் ஐடியை கொடுக்காது, இன்னொரு 'விழுதின்' மெயில் ஐடியை கொடுத்துவிட்டு, கலவரத்தை உண்டு பண்ணிவிட்டு சென்று விட்டது!

இவ்வாறான செயற்பாடுகள் இஸ்லாம் மதம் சார்பாக வெறுப்பலைகளை தான் உண்டு பண்ணும் என்று காமெடி பீஸுகளான விழுதுகளுக்கு தெரியாது! ஆனால் சுவனப்பிரியனுக்கு நன்றாகவே தெரியும்! ஆனாலும் இவற்றை தடுக்க மாட்டார். காரணம் சுவனப்பிரியன் அடிப்படையில் ஒரு இந்து ஆதரவாளர்! அவர் ஹோர்மொன்கள் எல்லாம் இந்து மதம் சார்பாக தான் செயற்படுகிறது! அவர் குர்ரானை படித்தார், ஆனால் இந்து மதத்தை கரைத்துக் குடித்துள்ளார். வேண்டுமென்றால் இந்துமதம் சார்ந்த ஏதாவது சந்தேகங்களை அவரிடம் நீங்கள் கேட்டுப்பாருங்கள்! மதுரை ஆதீனம் கூட அவருக்கு அடுத்தபடி தான். இது அவரின் முற்பிறப்பின் தொடர்பாக கூட இருக்கலாம்!

இவ்வாறாய் இன்று வலைத்தளத்திலே தொடங்கிய சுவனப்பிரியனின் இஸ்லாம் மதம் தொடர்பான "பட்டும் படாத" விழிப்புணர்வும், இந்து மதம் தொடர்பான, என் போன்ற பலருக்கு ஏற்ப்படுத்திய நன்மதிப்பும் வலைத்தளத்தை தாண்டியும் இன்னும் பலரை சென்றடைய வேண்டும் என்பதுவே என் போன்ற பலரது அவா..!

நண்பர்களுடன்....

புகைத்தல் உடம்புக்கும், உனக்கும் கெடுதலை தான் கொண்டு வந்து சேர்க்கும் என்று நான் என் நண்பர்களிடம் சொன்னால் அவர்கள் என்னை படு கேவலாமாக ஒரு பார்வை பார்த்துட்டு சொல்லுவார்கள் "நீ பிறந்ததுக்கு இதுவரை என்னத்த அனுபவிச்சிருக்க" அதுக்கு மேலயும் நான் வாய் திறக்குறதில்ல.. ஏனெண்டால் 'புகைத்தல் உடல் நலத்துக்கு கேடுதான்; ஆனால் அதையும் தாண்டி நல்ல விஷயங்களும் இருக்கு' எண்டு சொல்லி அந்த நல்ல விஷயங்களை பட்டியல்படுத்த தொடங்கிடுவார்கள்..

கடந்த சில நாட்களுக்கு முன்னர் எனக்கு பழக்கமான ஒருவருடன் கதைக்கும் போது சொன்னார்' தம்பி! இந்த சிகரெட் பழக்கத்தால எனக்கு மாசம் முன்னூறு யூரோக்கு கிட்ட வீணாய் போகுது; அதால இனி நான் சிகரெட் பழக்கத்தை விட்டுடலாம் எண்டு நேற்று தொடக்கம் முடிவெடுத்துட்டன்.. நேற்று ஃபுல்லா நான் சிகரெட் பிடிக்கவே இல்ல'... இப்பிடி பெருமையா பெருமூச்சோடு சொல்லி முடிக்க, நானும் பேசாமல் கேட்டுக்கொண்டே இருந்தேன்!

சில மணிநேரம் கழித்து இருவருமாக வெளியிலே புறப்பட்டோம்; போய் திரும்பிகிற போது ' தம்பி இதோகொஞ்சம் நில்லுங்க வருகிறன்' என்று சொல்லி அவசரமாக அருகில் இருக்கும் கடைக்குள் நுழைந்தவர், வரும் போது சில மணிநேரத்துக்கு முன்னர் பார்த்த 'அதே வாயில்-அதே சிகரெட்!!' இம்முறையும் நான் பேசாமல் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

இத்தனைக்கும் நான் அவரிடம் எந்த கேள்வியோ விளக்கமோ கேட்கல! ஏனெண்டால் விளக்கம்/பதில் எப்படி வரும் எண்டு எனக்கு நல்லாவே தெரியும்! இப்பிடி எத்தனை பேரோட பழகியிருப்பம்:)

முன்னரெல்லாம் சிகரெட் பெட்டியிலே 'புகைத்தல் உடல் நலத்துக்கு கேடு' என்று எழுதப்பட்டு தான் விற்பனைக்கு வரும்..ஆனா இந்த புகைப்பிரியர்களுக்கு அதை வாசிச்சு வாசிச்சே அது ஒரு புளித்துப்போன ஒரு வசனமாய் ஆகியிருக்கும் போல.... ஆனால் இப்பொழுது சிகெரட் பெட்டியிலே, புகைப்பவர்களது நலன் கருதி(!) புகைப்பதன் மூலம் உடலில் வரும் வியாதிகள் உடல் உறுப்புக்களை என்ன பாடு படுத்தும் என்பதை புகைப்பட வடிவிலும் சேர்த்திருக்கிறார்கள்.

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டியும் புகை பிடிப்பதை அவர்களால் நிறுத்த முடியவில்லை என்றால், அவர்களின் புகைத்தல் அடிமைத்தனத்தை நினைத்து வருத்தம் கொள்வதா.. இல்லை, இந்த புகைப்படங்களை பார்த்தும் அவர்களின் 'எதையும் தாங்கும் நெஞ்சத்தை' பாராட்டுவதா............... முடியல!!!
------------------------------------------------------------------------------------------------


சே குவேரா பற்றி அறியாதவர்கள் மிக குறைவு என்றே சொல்லலாம். அதுவும் இந்த சமூக வலைத்தளங்களை பாவிப்பவர்கள் நிச்சயமாக எதோ ஒரு கட்டத்தில், எதோ ஒரு விதத்தில் சே குவேரா பற்றி அறிந்திருப்பார்கள். சொல்லப்போனால் சமூக தளங்களிலே சே குவேராவை தமது ரோல் மொடலாக(!) கொண்டவர்களை அங்காங்கே அதிகமாக காணலாம். சிலர் ஒரு பந்தாவுக்காக சே போன்ற புரட்சியாளர்களின் புகைப்படங்களோடும், வசனங்களோடும் இணையப்புரட்சியாளர்களாக சுற்றுவது வேறு கதை... அது தேவையில்லை! ஆக, மொத்தத்தில் சமூக தளங்களிலே சே குவேரா ரொம்ப பரீட்சயம்!

அப்படி இருக்க சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த சம்பவம் ஒன்று என்னை மகா அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதோடு, சரியான கடுப்பையும் கிளப்பிவிட்டது.. ஆனாலும் இன்று வரை அந்த சம்பவத்தை நினைக்கும் போது என்னால் சிரிப்பை கட்டுப்படுத்தாமல் இருக்க முடியவில்லை..

அதாவது சில நாட்களுக்கு முன்னர் எனது நண்பன், அவனுக்கு ஒரு முப்பது வயசுக்கு மேல் வரும்; அவன் வழமை போலவே கம்பியூட்டரில் தனது முகநூல் கணக்கை பார்வையிட்டுக் கொண்டு இருந்தான்.. இருந்தவன், சற்று நேரத்தில என்னை கூப்பிட்டு ஒரு போட்டோவை காட்டி...

"இவர் தான் முன்னாள் புளெட் தலைவர், உனக்கு தெரியுமா?" என்று முகத்தை சீரியஸாக வைச்சுக்கொண்டு கேட்டான்.... யார்ரா எண்டு கிட்ட போய் பார்த்த எனக்கு அப்பிடியே ஷாக்..

"டேய் எதை வச்சுடா இவர புளெட் தலைவர் என்கிறா?"


"எனக்கு தெரியும்; முந்தி புளெட்காரங்கள் இப்படி தான்.. தாடியோடையும், தொப்பியோடையும் இருப்பினம்...."

-------------------------------------------------------------------------------------------------
இல்லை என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை என்றாகிப்போன இணையம் என்னும் பெரும் கடலிலே, மீண்டும் ஒரு முயற்சியாக புரட்சி எவ்.எம் என்னும் இனைய வானொலி ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயற்ப்பட்டுக்கொண்டு உள்ளது. நீங்களும் புரட்சி எப்.எம்'முடன் இணைந்திருக்க இங்கே சொடுக்கவும்.

விஜயகாந்துக்கு அப்புறம் யார்?... கேள்விக்கு விடை கிடைத்தது!

கேப்டன் விஜயகாந்துக்கு அப்புறம் இந்தியாவை தீவிரவாதிங்ககிட்ட இருந்து  காப்பாற்ற போவது யார்  என்ற கேள்வி எல்லோர் மனதிலும் தெக்கு நிற்க.. நான் இருக்கேன் என்ற குரல் அதே கேப்டனின் வீட்டில் இருந்து கம்பீரமாய் வருகிறது. எட்டி பார்த்தா நெஞ்ச நிமிர்த்தி, கைகளை முறுக்கி ஒரு உருவம்.. 'அது என் இரண்டாவது மவன் தான்' என்று கரகரத்த குரலில் சொல்லியவாறே கேப்டன் வெளியே வந்தார். இது சம்மந்தமாக கேப்டனிடம் சில கேள்விகள்..

''படிப்பே முடிக்கலை... அதுக்குள்ள சினிமாவா?''
ஆரம்பத்தில எனக்கும் இந்த டவுட்டு வந்திச்சு, ஆனா ஒருநாள் நைட்டு 'புல்லா போத்தி(ட்டு)ட்டு' படுத்து கிடந்து ஜோசிச்சு பார்த்தன்.. "நம்மளுக்கும் இப்போ வயசாகிடிச்சு! இப்பெல்லாம் முன்ன மாதிரி இந்தியாவுக்குள்ள வர்ற தீவிரவாதிங்கள துரத்தி பிடிச்சு பென்ட கழட்ட முடியுதில்ல! அதோட, சட்ட சபைக்க போய் அந்த அம்மாக்கூட சண்டை போடுறதிலே தாவு தீர்ந்து போயிடுது. அதால நீண்ட நாளாயே எனக்கப்புறம் இந்தியாவ காப்பாற்றுறது யாரு? என்ற கேள்வி ரணமாய் எனக்குள்ளும் கொதிச்சுட்டு தான் இருந்திச்சு!

இப்ப, இந்த நேரத்தில என் ரண்டாவது மவன் வந்து 'அப்பா நா இருக்கேன்'னு சொன்னப்போ அப்புடியே மூணு பெக் அடிச்சுட்டு வானத்தில பறக்குற போல இருக்கு. படிப்பு  முக்கியமா?, இல்லை இந்தியாவின் பாதுகாப்பு முக்கியமா?னு  வந்தப்போது எனக்கு இந்தியாவின் பாதுகாப்பு தான் முக்கியம்னு தோணிச்சு.. நானும் சம்மதிச்சிட்டன். (நாப்பது தீவிரவாதிங்க ரவுண்டு கட்டி அடிச்சப்போ கூட வாராத கண்ணீர் இப்போ கேப்டனின் கண்களை குளமாக்குகிறது)


''டைரக்டர், ஹீரோயின் எல்லாம் ஃபிக்ஸ் பண்ணிட்டீங்களா?''
நீ நான்னு டைரக்டர்கள் போட்டி போட்டு வந்து கியூவில் நிக்கிறாங்க! சமீபத்தில இயக்குனர் சங்கர் எந்திரன் 'பார்ட் ரூ' வ என் மவன வச்சு தான் எடுக்கணும்'னு சொல்லி ஒரு நாலு நாளாய் வந்து போய்க்கிட்டு இருந்தாரு. இருந்தாலும் அவற்ற கதையில இந்தியாவ காப்பாற்றுற மாதிரி எந்த சீனும் இல்லயாம். அதால வேண்டாம்னு சொல்லிப்புட்டன். நமக்கு இந்தியாவின் பாதுகாப்பு தான் முக்கியம். 

தென்னிந்திய சினிமாவிலே என் மவனுக்கு  ஏத்த ஜோடி நமீதா தான். ஆனா  என் மவனோ ஏஞ்சலினா ஜோலி, எமி ஜாக்சன்'னு இங்கிலீசு பொண்ணுக தான் வேணும்'னு ஒத்த காலில நிக்கான்! ஏண்டா அப்பிடி?'ன்னு கேட்டன்! அப்புறமா தான் தெரிஞ்சுது 'பையன் ரொமாண்டிக் மூட்டில இருக்கான்'னு.

''தம்பிக்கு நடிப்புல நீங்கதான் ரோல் மாடலா?''
ஆமா  சார்! அடிச்சும் கேட்டன், ஓதச்சும் கேட்டன்...எப்பிடி தான் கேட்டாலும்  "நீ தா'ப்பா என் ரோல் மாடலு" அப்பிடின்னு சொல்லி ஓ'ன்னு அழுகிறான். சரி, அப்பாக்கு அப்புறமா யாரையடா பிடிக்கும்?னு கேட்டா ... 'ஓங்க தலைவிய தான்'னு சொல்லி சிரிப்பான். ஆனா அந்த சிரிப்பின் அர்த்தத தான் இதுவரை என்னால புரிஞ்சுக்க முடியுதில்ல!
 
இருந்தாலும் எனக்கு ஒருடவுட்டு! சமீபத்தில பவர் ஸ்டார்'னு ஒரு ரொமாண்டிக் ஹீரோவின் லத்திகா'ன்ன படத்தை ஏழெட்டு வாட்டி பாத்திருக்கானாம். ஒருவேள எதிர்காலத்தில அவர போல ரொமாண்டிக் ஹீரோவா வந்துப்புடுவானோ'ன்ன கவலையும் உள்ளுக்குள்ள இருந்துக்கிட்டு தான் இருக்கு.  அந்த பயத்தில இப்போ அவன் மூட் மாறாம இருக்கணும்னு  அவன செயார்ல கட்டி வச்சு வல்லரசு, விருதகிரி போன்ற என் ஆக்ஷன் படங்களை திரும்ப திரும்ப போட்டு காட்டி வாறன். அதுக்கு நல்ல பலனும் கெடைச்சிருக்கு.

'' 'விஜயராஜ்’ சினிமாவுக்காக விஜயகாந்த் ஆனார். 'சண்முகபாண்டியன்’ பேர் மாற்றத்துக்கு உள்ளாகுமா?''
பெயர்  மாற்றி நடிப்பதில எனக்கு இஸ்டமில்ல. அவன் சொந்த பேர்ல நடிச்சு இந்தியான்ர பேர காப்பாத்தனும்! அதோட தமிழ் சினிமாவில நா விட்டு போன இடத்தை அவன் தான் நிரப்பனும். கடைசி நேரத்தில தமிழ் சினிமா ரசிகர்கள் என்கிட்ட நிறைய எதிர்பார்த்தாங்க! ஆனா அரசியலில் நான் பிசியாகிட்டன். இப்போ அந்த எதிர்பார்ப்பை எல்லாம் என் பையன் நிரப்புவான் என்ற நம்பிக்கை எனக்கு வந்திடிச்சு.


''உங்க இயக்கத்திலேயே அறிமுகப்படுத்திடலாமே...''  
என் இயக்கத்தில அறிமுகப்படுத்திற அளவுக்கு அவன் இன்னும் பக்குவப்படல்ல! ஆனா எதிர்காலத்தில விருதகிரி பார்ட் ரூ எடுக்கிற பிளான் இருக்கு. ஏன்னா என்னை வளர்த்துவிட்டு, எதிர்க்கட்சி தலைவர்'ன பதவியையும் கொடுத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு என்னாலான நன்றிக்கடனை செய்து தானே ஆகணும்.

அரசியல்வாதி ஆகிப்பார்..!



அரசியல்வாதி ஆகி பார்..,

உன்னை சுற்றி ஒரு கூட்டம் தோன்றும்,
நீ கெட்டவார்த்தையால் பேசினாலும்
அது அர்த்தம் கண்டு கைதட்டும்!

"வெளுத்ததெல்லாம் பால்" என்று நம்பும்
மக்கள் குணம் நன்கறிந்து,
வெள்ளை உடையாலே
உன்னை போர்த்திக்கொள்வாய்!

மக்கள் மீதிருந்து
விலகியே இருக்கும் உன் பார்வையை
மற்றவரிடம் இருந்து மறைத்துக்கொள்ள,
கருப்பாலே கண்களுக்கு திரையிட்டுக்கொள்வாய்!

ஆளில்லா வீதியிலும்
கை கூப்பி வணக்கம் வைப்பாய்,
வார்த்தை ஜாலங்களாலும்
வீர பேச்சுக்களாலும்
புரட்சிகள் பல வென்று முடிப்பாய்!

கெப்பு தாவும் குரங்குகள் போல
வருடத்தில் பல கொள்கைகள் மாறுவாய்!

நேற்று சொன்னதை
இன்று நினைக்க மறப்பாய்,
இன்று சொல்வதை
நாளை செய்ய மறுப்பாய்!

கூட இருப்பவன் மீது
என்றுமே சந்தேகம் கொள்வாய்,
அவன் குழி பறிப்பானோ என்றஞ்சி
இரா நேர தூக்கங்களை இழந்து தொலைப்பாய்!

தேர்தல் நாட்களே
உன் திருவிழா காலங்கள் ஆகும்.
குப்பங்கள் கிராமங்கள் யாவும்
தினந்தோறும் தெருவடியளப்பாய்,
மக்களின் நண்பன் நான் என்பாய்
கவரிமான் பரம்பரை நாம் என்பாய்
வயோதிபர்களிலிருந்து
குமருகள்,குழந்தைகள் வரை
ஒன்றாக நின்று போஸ் கொடுப்பாய்;
வீதிகளிலே அவற்றை நிறுத்தி
உன் விளம்பர பொருளாக்குவாய்.
வரவு செலவு பாராது-  மக்களை
வாக்குறுதிகளால்
குளிர்மைப்படுத்துவாய்!

தேர்தலில் நீ ஜெயித்தால்
ஓட்டுப்போட்ட மக்களுக்கு மொட்டைபோடுவதாக
இறைவனிடம் வேண்டிக்கொண்டதை
இறுதிவரை இரகசியமாகவே வைத்திருப்பாய் ...!

அரசியல்வாதியாகி பார்...


பிற குறிப்பு - யாவும் கற்பனையே!  தனி மனிதர்களுடனோ, இல்லை அவர்தம்  அரசியல் வாழ்க்கையுடனோ ஒத்துப்போனால் அது தற்செயலானது. (நம்பித்தான் ஆகணும்)

என்ஜாய் ஃப்ரண்ட்..

காட்சி 1

வணக்கம் அண்ணே!

வணக்கம் தம்பி! வாங்க. கண்டு கனகாலம், இந்த பக்கமே வர்றதில்ல போல? வந்து இதில உக்காருங்க.

ஓம், நன்றி அண்ணே.... வேல தானே.. அது தான். இண்டைக்கு ஞாயிற்று கிழமை லீவு; அப்பிடியே உங்கள எல்லாம் பாக்கலாம் எண்டு வந்தனான்.

ஓம் தம்பி, வெளிநாட்டு வாழ்க்கையெண்டால் இப்படித்தானே.

என்ணண்னே இண்டைக்கு ரூமில நிறைய பொடியள் இருக்காங்கள். ஏதாவது விசேஷமா?

இல்ல தம்பி, இண்டைக்கு எங்களுக்கும் லீவு தானே; அது தான் வந்திருக்காங்கள். ஒவ்வொரு கிழமையும் லீவு எண்டா இப்படி தான், வந்து எல்லாருமா தண்ணி அடிச்சிட்டு கிடப்பம். அதுக்கு பிறகு அடுத்தநாள் விடிஞ்சா தான் உண்டு. 
சரி தம்பி... உங்களுக்கும் தண்ணி அடிக்கிற பழக்கம் இருக்கா? வாங்களன் சும்மா பம்பலா ஒரு ரவுண்டு அடிப்பம்.

இல்ல அண்ணே எனக்கு அந்த பழக்கம் எல்லாம் இல்ல.

பியர் கூட அடிக்கமாட்டிங்களா தம்பி?

இல்ல அண்ணே நான் அல்கோல் பாவிக்கிறேல்ல.


தம்பி! தண்ணி அடிக்கிறவன் எண்ட ரீதியில சொல்லுறன். நீங்கள் குடுத்து வச்சனியள். உங்கட எதிர்காலம் நல்லா இருக்கும். இனி வாழ்க்கேல்ல அல்கோல் தொட்டுடாதேங்க. இதால உடம்பும் கெட்டுப்போம், காசும் கரியாய் போடும்...நானும் முந்தி உங்கள போல தான் இருந்தனான்.. ஆனா இந்த நாதாரிங்க எனக்கும் ஊத்தி தந்து கெடுத்துப் போட்டணுங்கள்.
( பின்னால இருந்து வந்த ஒரு தகர டப்பா அண்ணையின் முதுகை பதம் பார்க்க "டேய் *********  ஏண்டா எறியுறாய்")

தம்பி குறை நினைக்கதேங்க! எல்லாம் ரெடியாகிவிட்டுது; நாங்கள் தொடங்கப்போறம்.. இப்பவே தொடங்கினால் தான் நாளைக்கு காலமை வேலைக்கு போக முடியும்.

சரி அண்ணே! பறுவாயில்ல நீங்க நடத்துங்க...

காட்சி 2 ( சுமார் அரை மணிநேரத்தின் பின்)

தம்பி குறை நினைக்கிறியளோ?

இல்ல. நான் ஏன் அண்ணே குறை நினைக்கிறன்!

சரி, வந்து ஒரு பெக் அடியுங்களன்.

இல்லண்ணே. எனக்கு உதெல்லாம் சரிவராது.

அட என்ன தம்பி!  இதெல்லாம் இல்லாமல் வாழ்க்கேல்ல வேற என்னத்தை கண்டனியள். பிறந்தோம் இறந்தோம் எண்டு இருக்கக்கூடாது. நாளைக்கு செத்தாலும்...எதுவுமே இல்ல. என்ஜாய் பண்ணுற வயசில என்ஜாய் பண்ணனும். அப்புறம் இதெல்லாம் கிடைக்காது. தம்பி, தண்ணி அடிக்கிறவன் எல்லாம் கெட்டவனும் கிடையாது, தண்ணி அடிக்காதவன் எல்லாம் நல்லவனும் கிடையாது.

அண்ணே இப்ப கொஞ்சத்துக்கு முதல் தானே நான் தண்ணி அடிக்கிறேல்ல எண்டு சொன்னதுக்கு என்னை பாராட்டினிங்கள். இப்ப அப்பிடியே மாத்தி பேசுறியள்!

தம்பி அது பழைய கதை..அத விடு. 
எனக்கு வெறி எண்டு நினைக்காதேங்க. நான் எப்பவும் உண்மையை தான் சொல்லுவவவ..(எழுந்து என்னை நோக்கி வந்தவர்)

தம்பி நான் ஒண்டு சொல்லட்டுமா..? நாம தண்ணி அடிக்கலாம் அது பிரச்சனையே இல்ல. ஆனால்.... தண்ணின்ர கண்றோல்ல நாம இருக்கக்கூடாது; எங்கட கண்றோல்ல தான் தண்ணி இருக்கணு..ணு....
( 'பொத்'தென்று ஒரு சத்தம்)
.." தம்பி.... ஒரு கைகொடுத்து இந்த அண்ணனை எழுப்பி விடு பாப்பம்"

முடிஞ்சா சிரியுங்கோ..










தமிழேண்டா ..!

பொதுவாகவே மனிதர்கள் தமது அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை "எல்லாம்  இந்த ஒரு சான் வயிற்றுக்கு தானே..!" என்று ஒற்றை வரியில் சொல்லிக்கொள்வார்கள். ஆனால் இந்த வரியை சரியாக, காலாகாலமாக கடைப்பிடித்து வருகிற பெருமை தமிழனுக்கு மட்டும் தான் உண்டு.  எப்பூடி ....

*உலகிலே ஒப்பீட்டளவில் தமது  அன்றாட உணவை தயார் செய்வதற்காக அதிகளவு நேரத்தை செலவழிப்பவர்கள் தமிழர்களாக தான் இருப்பார்கள். இந்த விஷயத்தில் யாராலும் தமிழர்களை அடிச்சுக்க முடியாது. தினமும் மூன்று நேரம் அவியல், பொரியல் ,வறுவல்..  இதனால் தானோ என்னமோ உலகிலே விருந்தோம்பல் என்றால்(அதுக்கு மட்டும் தான்) தமிழனுக்கு என்று  தனி இடம்  உண்டு.

*அதே போல, தனக்கு வாய்க்கு ருசியான உணவு வாழ் நாள் முழுவதும் வேண்டுமே... என்பதற்காய் ஒரு ஆண் தனக்கு பெண் தேடும் போது பெற்றோரிடம் சொல்லிக்கொள்வான் "நல்லா சமைக்கத் தெரிந்தவளாக பாருங்க" என்று. இவ்வாறு தனக்கு துணைவியாக வரப்போவளிடம் முதல் கண்டிஷனாக 'பெண் சமைக்க தெரிந்தவளாக இருக்க வேண்டும்' என்று கருதுபவனும் தமிழனாக தான் இருக்க வேண்டும்.

*உலகின் வளர்ச்சியடைந்த-அடைந்து வருகின்ற, குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்க நாட்டவர்களின் சராசரி ஆயுட்கால எல்லை எம்மை விட அதிகம். தொண்ணூறு வயசென்றாலும் பொல்லு பிடிக்காமல் தெருக்களிலே நடந்து செல்வதை பார்க்க எமக்கே ஆச்சரியமாய் இருக்கும். இத்தனைக்கும் அவர்கள் எம்மை போலெல்லாம் வாய்க்கு ருசியாக அவிச்சு கொட்டுவதில்லை. அவர்களை பொருத்தவரை உடல் நலம் தான் முக்கியம். அதற்கேற்ற போலவே அவர்களின் உணவு பழக்கங்களும்..  ஆனால் நம்மாக்கள் இருக்கார்களே அறுபத்தி ஐந்து-எழுபதிலே கடைசி டிக்கட் வாங்கிற நிலைக்கு வந்திடுவார்கள்.  இல்லை மூன்றாம் கால் உதவி வேண்டி  கைத்தடி  பிடிக்க தொடங்கிடுவார்கள். எம்மை பொறுத்த வரை உடல் நலம் எல்லாம் இரண்டாம் பட்சம், வாய்க்கு ருசி தான் முதல்.

*தமிழர்கள் வசிக்கும் அநேகமான வீடுகளிலே அந்தந்த  வீட்டு பெண்கள் ஐந்து-ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார்கள். வேலைக்கு போகணும் என்று அல்ல.. சமைக்கணும்! இவ்வாறு வெளிவேலை வெட்டி இல்லாது, சமைக்கணுமே.... என்டதற்க்காய் அஞ்சு மணிக்கு அல்லார்ம் வச்சு எழுந்து அடுப்பு ஊதுறத்திலும் தமிழனுக்கு முதலிடம் கொடுக்கலாம்.

*நான் இப்போ இரண்டரை வருசமா பெற்றோரை பிரிந்து வேறு ஒரு நாட்டில இருக்கிறன். நாட்டில இருந்து கிழமேல மூணு தடவையாவது தொடர்பு கொள்வார்கள். அப்பிடி தொடர்பு கொண்டதும் "ஹலோ.. சுகமா இருக்கியா!" எண்ட வார்த்தைக்கு அடுத்ததாய் கேட்ப்பார்கள் " சாப்பிட்டியா..!" அதோட விட்டாலும் பறுவாயில்ல.. 'என்ன சாப்பாடு, என்ன கறி..' எரிச்சல் தான் வரும்.. அட, நம்ம வீட்டுக்காரர்  மட்டும் தானா இப்படி! என்று நினைச்சு என் நண்பர்களிடமும் கேட்டு பார்த்தன்.. அவர்களுக்கும் இதே நிலைமை தான்.

*சில அரசியல்வாதிகள் இருக்கார்கள். மேடையில ஏறியவுடன் நெஞ்சை நிமிர்த்தி, மீசைய முறுக்கிக்கொண்டே   "உலகின் மூத்த குடிமகன்டா தமிழேன்...!" என்பார்கள். அப்பப்ப இதை கேட்டப்புறம் நானும் ஜோசிச்சு பார்ப்பதுண்டு, உலகின் மூத்த குடிமகன் தமிழனின் சாதனைகள், கண்டுபிடிப்புக்கள்? ......... யார் சொன்னது தமிழன் எதுவுமே கண்டு பிடிக்கல எண்டு.. சமீபத்தில கூட இடியப்பம் பிழியிற மெசினை கண்டு பிடித்துள்ளானே! இதற்க்கு முன்னர்  மின்சாரத்தில இயங்கிற ஆட்டுக்கல்லை கண்டு பிடித்த பெருமையும் தமிழனது தான் என்று நினைக்கிறன். ஆக தமிழனின் கண்டு  பிடிப்பு கூட சாப்பாட்டை மையமா  வச்சு தான்.

*ஈழத்தை பொருத்தவரை அதன்  மூத்த குடிமக்கள் தமிழர்கள் தான். ஏன், மகாவம்சம் கூட போற போக்கில இந்த சந்தேகத்தை சில இடங்களில் கிளப்பி விடும். ஆனா இந்த மூத்த குடிகள் தமது  காலத்துக்கு முற்பட்ட- தமது காலத்துக்குரிய முக்கிய விடயங்களை ஆவணப்படுத்த வேண்டுமே; எம் சந்ததியூடு அவற்றை எடுத்து செல்ல வேண்டுமே என்ற சிந்தனைகள் ஏதும் அற்றே வாழ்ந்து முடித்தார்கள்.
ஏறத்தாழ கிபி பதினேழாம் நூற்றாண்டு வரை தின்றுவிட்டு படுப்பதையே தமது பிறப்பின் நோக்காக கொண்டு செயற்பட்டார்கள். (நிரூபன் அவர்கள் தனது தொடரிலே   குறிப்பிட்டிருப்பார்.)

*அன்று மட்டுமல்ல, இன்று கூட அதை தான் செய்கிறார்கள். அதாவது, எமக்கு பிற்பட்ட காலம், எமது சந்ததி என்று எது பற்றியும் யோசிப்பதில்லை. எமக்கு என்று ஒரு மிகப் பெரிய விடுதலை அமைப்பு இருந்த போது, அதற்கு  சகல விதத்திலும் ஒத்துழைப்பு கொடுத்து, நோக்கத்தை விரைவாக அடைந்து கொள்ள எத்தனிப்பதை விட தின்று படுப்பதே முக்கிய நோக்காக கொண்டிருந்தார்கள்(தோம்). ஆனால் சில வேளைகளில் அந்த விடுதலை அமைப்பின் போராளிகளுக்கு உணவு (மட்டும்) கொடுப்பதையே தமது வரலாற்று கடமையாக கொண்டிருந்தார்கள். அதை விட.....?
அது போல கொடிய யுத்தத்தால் ஒரு பகுதி மக்கள் ஒரு வேளை உணவின்றி உடல் சுருங்கி வாடிய போதும், அந்த மக்களுக்காக யுத்தத்தால் பாதிக்கப்படாத பகுதிகளை சேர்ந்த மக்கள் தமது ஒரு நேர உணவையே இழக்க தயாராக இருக்கவில்லை.


ஆக  எந்த விதத்தில பார்த்தாலும் பொதுவாகவே தமிழனின் சிந்தனை, செயல், நோக்கம் எல்லாமே சாப்பாடு என்ற ஒன்றை மட்டுமே மையமாக வைத்து சுத்தி வருகுது. ஆமாம்..  ஒரு சான் வயிற்றுக்கு தான் இந்த மனித பிறப்பு என்னும்  யதார்த்தத்திற்கு   அமைவாக வாழ்பவன் தமிழன் மட்டும் தான்..... என்பதை ஆணித்தரமாகவும், பெருமையாகவும் கூறிக்கொண்டு இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்..   தமிழேண்டா..!!

திருமாவும் பின்னே சீமானும் ...!
















இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வி!











 இறுதியாக...


அனைத்தும் கலப்படம் அற்ற கற்பனைகள்.நகைசுவைக்காக மட்டுமே. யார் மனதையும் புண்படுத்த அல்ல ;-)

செல்லப்பாவும், இரண்டு மனிசியும்..!

செல்லப்பாவுக்கு மனிசி இரண்டு,
மாதுவாக ஒன்றும்,
மதுப் போத்தல் வடிவில் மற்றொன்றும்.
செல்லம் பொழிய
இரு பிள்ளைகள் இருந்த போதும்
செல்லப்பாவுக்கு வேண்டியது
கள்ளு தான்.
கள்ளு அடிப்பதிலிவர் 
கர்ண பரம்பரை!

காலையில் எழுவார்
காதல் மனைவி கையால்
காரமாய் உண்பார், முடித்ததும்
கண்ணே மானே மயிலே என்று
அன்பால் அவளை உருக்கி- பின்
அலுவலகம் கிளம்பிடுவார்.
அது வரை
அவர் நல்ல பிள்ளை தான்!

 
வேலை முடிய
மாலை வேளையாகும்,
இரண்டாம் மனைவியை
அவர் மனம் தேடும்
காசு கையை அரித்தாலும்
காசா பனை கள்ளு கொட்டிலை
கால்கள் நாடும்.
கண்ணில் ஏக்கமும்,
நாவில் தாகமும்
கள்ளை கண்டவுடன் தொற்றிக்கொள்ளும்!

நிரந்தர வாடிக்கையாளர் என்ற நன்மதிப்பு,
ஒரு போத்தல்
கடனாய் கையில்; இருந்தும் போதாது,
இரண்டு போத்தல் அடித்தால் தான்
தரையில் நீந்துவார்
தண்ணீரில் நடப்பார்-ஆகவே
மீதி கெஞ்சல் கொஞ்சலுடன்
அடுத்த போத்திலும். அவ்வளவு தான்!


 
தண்ணி இறங்கியதும்
தன்னிலை மறப்பார்
வெறி ஏறியதும்
வெட்கம் இழப்பார்
வேட்டி கழன்றாலும்
வின்னராய் சுழலுவார்.

நாட்டின் குடிமகன் நான் என்பார்
நாட்டாமை போலவும் கதையளப்பார்
ஒபாமா எனக்கு மாமன் என்பார்
பில்கேட்ஸையும் உறவு கொள்வார்
தத்துவங்கள் பொழிவதில்
விவேகானந்தரையும்
பின் தள்ளிடுவார்!

வம்பென்று வந்தாலும் விடமாட்டார்
வேட்டியை மடித்து கட்டியே
வேங்கை போல்
வெறியில் பாய்வார்.
ஆமிக்காரனை கண்டாலும்
அவ்வளவு சீக்கிரம் அடங்கி விடார்.
போக்கிரி தனமெல்லாம்
போதையோடு வந்துவிடும்.

 
இருள் கண்களை  சூழவும், தன்
இருப்பிடம் தேடுவார்
போதையில் பாதை மறந்தாலும்
செல்லப்பா கால்கள்
சரியாக தான் செல்லும்.
சரிந்து, நிமிர்ந்து
விழுந்து, உருண்டு
வீடு.... வாசல் வரை; அதன் பின்
அவர் அப்பாவி..!

மது
ஏற்றிய போதையை
போக்கும் மருந்து
அவர் மாது- பவ்வியமாகவும் சரி
பத்திரகாளியாகவும் சரி!

வடிவேலு தொடக்கம்... கொஞ்சம் சீரியஸ் , மொக்கைஸ் ;-)

*வடிவேலு காமெடி பார்த்தும் வாய் திறந்து சிரியாதவன், வடிவான பொண்ணு ஒண்ணு வெளங்காத  பகிடி விட்டாலும் வீழ்ந்து வீழ்ந்து சிரித்தால் அது காதல். இதுவே கல்யாணத்தின் பின்னும் தொடர்ந்தால் அது கணவனின் கடமை.

*'தம்பி ரொம்ப தங்கமானவரு' என்று புகழப்படுபவனை கனநாள் கவனித்த திருடன் கவர்ந்து சென்று கல்லில் உரசிப்பார்த்தனாம் # தங்கத்தின் தரத்தில்  சந்தேகம்.
*ஆசிரியர் என்பதை பன்மையில் ஆசிரியர்கள் என்று அழைக்கலாம். அதுவே ஆசிரியரின் மறுபதமான  குரு என்பதை பன்மையில் 'குருக்கள்' என்று அழைக்கலாமா# டவுட்டு :-)

*பொறாமை என்பது காலிலே போட்டிருக்கும்   சப்பாத்து போல வாசலிலே களட்டிடனும், போட்டி என்பது காலுறை போல உள்ளே அனுமதிக்கலாம் # நட்பு


 *சாதிகள் இல்லையடி பாப்பா என்று எனக்கு சொல்லித்தந்த ஆசிரியர்கள் யாரும் சாதிகடந்து தம் பிள்ளைகளை கல்யாணம் செய்து கொடுத்ததாக நினைவில்லை#  பேச்சு பேச்சு தான்!

 *தமிழ் கடவுளான முருகனுக்கு மந்திரம் சொல்லி பூஜை செய்யப்படுகிறது  சமஸ்கிருதத்திலே  # உலகின் தொன்மை மொழி தமிழ். 


*இரண்டு பெருசுகளின் சின்னப்புள்ள விளையாட்டில் தமிழர்களுக்கு புதுவருஷ பிறப்பு என்பதே மறந்து போனாலும் ஆச்சரியம் இல்லை தான்.

*இலங்கையில் இருந்து கொண்டு,  ஆட்சி செய்யும் ஆளும் தரப்பை விமர்சிப்பவர்கள் வீட்டுக்கு பொலீஸ் வண்டி வருமா,  இல்லை வெள்ளை வண்டி வருமா  என்பதை,  குறித்த விமர்சகர்கள்  விமர்சிக்கும் தன்மையே தீர்மானிக்கிறது.

*தன்  பலத்தை கொண்டு ஒருவனை அடி பணிய வைப்பதென்பது அவன் பலவீனனாக இருக்கும் வரை மட்டுமே சாத்தியம் # கந்தசாமி தத்துவம் ;-)

*தம்மை எதிர்ப்பவன் பின்னால் உள்ள மக்களின் மனங்களை வெல்வதே, அந்த எதிரியை தோற்க்கடிப்பதற்கான மிக சிறந்த வழி # தமிழ்நாட்டில் சிங்கள மக்கள்  மீது  தாக்குதல்.

*வீர வசனங்கள் மூலம் வெள்ளந்தி மனம் கொண்ட பாமர மக்களின்  உணர்ச்சிகள் தூண்டப்படலாம்.  அதுவும்  எவ்வளவு  காலம்? # புரிந்தால்  சரி தான்.

*வெளங்காத ஒரு  விடயத்தையே திரும்ப திரும்ப பேசுவதன் மூலம் அந்த விடயம் மட்டுமல்ல, அதை சொல்பவரும்  மக்களால் காமடியாக தான் பார்க்கப்படுகிறார் # வெளங்கினா சரி தான்!

*ஆபாசம் என்ற சொல்லின் வரைவிலக்கணத்தை, பார்க்கும் அவரவர் கண்கள் தான் வரையறுத்துக்கொள்கிறது # கந்தசாமி தத்துவம் ;-)

*ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டுங்கள்- கேபி மாமா  # முப்பது வருடங்களின் முன் நீங்கள் செய்திருக்க வேண்டியது- காலத்தை பின்னகர்த்தும் மிசின் கண்டு பிடிக்கப்படவில்லை மாமா ;-)

மதிப்புக்குரிய விஜய் அடிப்பொடிகளுக்கு...

மதிப்புக்குரிய (!) விஜய் அடிப்பொடிகளுக்கு,

                                                           நான் நலமே, அது போல விஜய் நலமே உங்கள் நலம் எனக்கொண்டு, இற்றைக்கு பத்து வருடங்களுக்கு முற்ப்பட்ட விஜய் ரசிகன் எழுதிக் கொ(ல்)ள்வது...
நிகழ்வுகள் வலைத்தளத்தில் திருடியது
ஒரு நடிகனுக்கு ரசிகனாய் இருப்பதில் எந்த தப்பும் இல்லை தான். அப்படி இருக்காதே என்று சொல்வதற்கு யாருக்கும்  எந்த உரிமையும்  இல்லை. அது தனிப்பட்டவர் விருப்பு வெறுப்புக்களை பொறுத்தது.  ஏன், நான் கூட  ரசிகன் என்று அல்லாது இப்பொழுதும்   விஜய் படங்களை விரும்பி பார்ப்பேன். எனக்குள் இருக்கும் கொழந்தை மனசு தான் இதற்கு காரணமோ  தெரியவில்லை. (விஜய் குழந்தைகளுக்கு பிடிச்ச நட்சத்திரம் என்று சந்திரசேகர் அவர்கள் சொன்னதை நினைவில் கொள்க)

ஒருவர் மீதான ரசிப்புத்தன்மை அதி தீவிரமாகும் போது அதுவே தனிமனித வழிபாடாகிவிடுகிறது என்பதுவே எனது எண்ணமாக இருந்தது . அதை இன்று உங்கள் செய்கைகளை  பார்த்து உறுதிசெய்து கொள்கிறேன். அது தான், சமீப காலமாக போஸ்டர் ஓட்டுறன் என்ற போர்வையில்  நீங்கள் செய்யும் கேவலங்கள்.....  சகிக்க முடியல்ல. .நிகழ்வுகள் வலைத்தளத்தில் திருடியது

இருந்தாலும், எனக்கு ஒரு சந்தேகம் வரவே செய்கிறது.  உண்மையிலே நீங்கள் நல்லவர்களா கெட்டவர்களா?  ஏனென்றால், கீழே உள்ள படங்களை பார்க்கும் போது, சத்தியமாய் அந்த படங்களை பார்ப்பவர்கள் சாணி எடுத்து அடிக்கணும் என்ற நோக்கிலேயே அச்சிடப்பட்டதாக உணர்கிறேன்!
விஜயை கடவுளாக வழிபடும்  அதி தீவிர வெறியர்கள் தவிர்ந்து சாதாரண நபர்களால் இந்த போஸ்டர்களை ஒரு போதும் சகித்துக்கொள்ளவே முடியாது.  சொல்லப்போனால், விஜய் மீது நல்ல அபிப்பிராயம் வைத்திருப்பவர்களை கூட அவரை வெறுக்க வைக்கும் நோக்கில் தான் அச்சடிக்கப்பட்டதாக நினைக்கிறேன். அதனால் தான்  உண்மையிலே நீங்கள் விஜய் ரசிகர்களா என்ற சந்தேகம் எழுகிறது. நிகழ்வுகள் வலைத்தளத்தில் திருடியது 

இருந்தாலும்  இதை நீங்கள் அச்சிட்டதற்க்கு இரண்டு காரணங்களை உணர்கிறேன்.
1. ஒரு பிரபலத்துக்கு நீங்கள் நெருக்கமானவர் என்று சுற்றி உள்ளவர்களுக்கு காட்டிக்கொள்ள. அதாவது 'படம் காட்டுதல்'  (அதனால் தான்  அந்த போஸ்டர்களின் கீழே தெளிவாக உங்கள் மூஞ்சிகளையும் போட்டுள்ளீர்கள்)
2. உங்கள் அதி  உச்ச விசுவாசத்தை விஜய் கவனத்துக்கு கொண்டு வருவதற்கு.(காக்கா பிடித்தல்)நிகழ்வுகள் வலைத்தளத்தில் திருடியது


'வேலாயுதம்' என்ற பெயருக்காக விஜயை  முருகன், சிவன் போன்ற கடவுள்களுடன் ஒப்பிடுவதும். அந்த படம் வெளி வந்த பின்பு தான் நாட்டிலே அதர்மம் அழிந்து தர்மம் நிலைநாட்டப்பட்டு மக்கள் காக்கப்பட போவதாக காட்டுவதும் ... அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தற்க்காய்  அவரை தமிழ்நாட்டு அன்னா ஹசாரே என சித்தரிப்பதும்... நாளைய முதல்வராக விஜய் வருவார் என்ற நம்பிக்கையில்(!) அவரை mgr ருடம் ஒப்பிடுவதும்.................ஏன்பா ---------!  உண்மையிலே உங்களுக்கு அறிவு என்ற ஒன்று இருக்கா? தெரியாம தான் கேக்கிறன், எந்த நம்பிக்கையில் இப்படிப்பட்ட போஸ்டர்கள் மக்கள் மனங்களில் விஜய் தொடர்பாக நல்ல அபிப்பிராயத்தை கொண்டு வரும் என்று  தெருத்தெருவாக விளம்பரப்படுத்துகிறீர்கள்?நிகழ்வுகள் வலைத்தளத்தில் திருடியது

இப்படிப்பட்ட செய்கைகளுக்காய் ஒருபோதும் நான் விஜயை குற்றம் சொல்ல மாட்டேன். ஏனெனில், நீங்கள் செய்யும் முட்டாள் தனத்துக்கு அவர் எப்படி பொறுப்பாக முடியும். இறுதியாக கலைஞர் டிவியில் காவலன் வெற்றி நிகழ்ச்சியின் போது விஜய் சொன்னார் 'தயவு செய்து என் கட்டவுட்டுகளுக்கு பாலாபிசேகம் செய்யாதீர்கள், அது நாலு ஏழைகளின் வயிற்றை நிரப்ப உதவும்' என்று.. ஆனால் நீங்கள் கேட்பீர்களா? உங்களுக்கு "படம் காட்டுவது" தான் முக்கியமாச்சே!நிகழ்வுகள் வலைத்தளத்தில் திருடியது

இன்று சமூக தளங்களை எடுத்துக்கொள்ளுங்கள், வடிவேலுவை விட அதிகமாக காமடி செய்யப்படும் நடிகராக விஜய் தான் இருக்கிறார். அதற்க்கு 90வீதமான காரணம் உங்களை போன்ற ஆட்கள் தான்.  தலைவா அரசியலுக்கு வா என்று சும்மா கிடந்த சங்கை தூக்கி ஊதிநீர்கள், அன்று பிடித்த சனி இன்று வரை உங்கள் மூலம் தான் அவரை  துரத்துகிறது. 

உண்மையில் சாதாரண மனநிலையில் உள்ளவர்களால் இவ்வாறு செய்ய முடியாது. அதுவும், ஒருபுறத்தால் அந்த மூன்று மனிதப்படுகொலைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்துகொண்டிருக்கும் போது நீங்கள் இப்படிப்பட்ட போஸ்டர்களுடன் கொண்டாட்டம் நடத்தினீர்களே, இந்த இடத்தில் உங்கள் உணர்வுகள் மெச்சத்தக்கது.நிகழ்வுகள் வலைத்தளத்தில் திருடியது 

ஆனால், ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். நாளைய தமிழ்நாட்டின் முதல்வராக வரும் நோக்கோடு, முழு நேர அரசியல்வாதியாக களமிறங்க திட்டம் தீட்டிக்கொண்டு இருக்கும் விஜய்க்கு, உங்களின் இந்த நடவடிக்கைகள் மொத்தமாக சேர்ந்து அரசியலில் அவரை டி  ராஜேந்திரனை (மன்னிக்கவும்  டி ஆர் சார்)  விட காமெடியாக மக்கள் மத்தியில் சித்தரிக்கும் என்பது மட்டும் உண்மை.நிகழ்வுகள் வலைத்தளத்தில் திருடியது

                                                                                                                                       இப்படிக்கு 
                                                                                                         -முன்னாள் விஜய் ரசிகன்-

பின் குறிப்பு- இங்கே சாதாரண விஜய் ரசிகர்களை நான் குற்றம் சொல்ல வரவில்லை. ஏனென்றால் அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களை ஏற்றுக்கொள்ளார்கள் என்பதுவே என் நினைப்பு.


நானும், அந்த இரண்டு பெண்களும்! (உண்மை சம்பவம்)

காதிலே ஹெட் ஃபோனை மாட்டிக்கொண்டு, மனசுக்கு இனிமையான பாடலை கேட்டுக்கொண்டு, பஸ்ஸில் ஜன்னலோர பயணம் எனக்கு மிகவும் அலாதியானது. என்ன தான் மனசு பாரமாய் இருந்தாலும் அந்த தருணங்களில் எல்லாம் மறந்து போய்விடும்.


அன்றும் அப்படி தான், சில இடைக்கால இனிமையான பாடல்களை ஹெட் ஃபோன் வழியாக கேட்டு ரசிச்சுக்கொண்டே, பஸ் ஏறுவதற்காக தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட அரை மணித்தியால பயணம் மேற்கொள்ள வேண்டும். எனினும், வழமைக்கு மாறாக அன்று பஸ்ஸும் என்னை கால் கடுக்க நிற்க வைக்காது வேளைக்கே வந்து விட்டது.

உடனே நம்மூர் பழக்கம் போல அடித்து முந்திக்கொண்டு ஏறாமால், எல்லோரும் ஏறி முடிந்த பின்னரே நானும் ஏறினேன். காரணம், தள்ளுப்பட்டுக்கொண்டு ஏறினால் வெள்ளைக்காரன் எதோ ஒரு வித்தியாசமான ஜந்து போல பார்ப்பான் என்பது முன்னைய அனுபவம்.

ஏறியவுடன் அமருவதற்கு வசதியாக அருகிலே ஒரு இருக்கை கிடந்தது. இருந்தும், ஜன்னலோர இருக்கையில் அமர வேண்டும் என்ற என் அவா, சற்று ஒரு அடி முன்னுக்கு சென்று ஒரு தடவை கண்களாலே பஸ்ஸின் ஜன்னலோர இருக்கைகளை நோட்டம் விட வைத்தது. ஒன்றும் அகப்படவில்லை.... சரி, கிடைத்த இருக்கையிலே உட்காரலாம் என்று முன்பக்கம் திரும்பாமலே அதே ஒரு அடி பின்னெடுத்து இருக்கையில் அமர முற்பட்டேன்; எதோ முட்டுப்பட்டது, சட்டென்று திரும்பி பார்த்தால் ஒரு ஆபிரிக்கன், கொல வெறியோட என்னை பார்த்தான். நான் உட்கார போனது அவன் மடியில்...

நான் தான் முதலில் வந்தேன் என்று அவனுடன் வாக்குவாதம் செய்யலாம் தான். ஆனால், அடி வாங்க உடம்பில தெம்பு வேணுமே!

இருக்கிறதை விட்டு பறக்க ஆசைப்பட்ட கதையாக அதுவும் போச்சு. சரி போனால் போகட்டும், நமக்கு தான் இரண்டுகால்கள் இருக்கே, நின்றால் என்ன தேஞ்சா போய்விடும் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு பஸ்ஸின் பின்பக்கமாய் போய் நின்றுகொண்டேன்.

பஸ்ஸும் புறப்பட, சற்று நேரத்திலே மீண்டும் ஹெட் ஃபோன் வழி இனிமையான பாடல் ஒன்றுடன் ஒன்றித்துவிட்டேன். என்பார்வைகள் பஸ்ஸின் கண்ணாடி வழியே காட்சிகளை தரிசித்தாலும், மனம் பாடலிலே ஒன்றித்துவிட்டது.

இவ்வாறு, சிறிது நேரம் போனதே தெரியாது சென்று கொண்டிருக்க, எதோ ஒரு சைகை, என் நினைவுகளை அந்த பாடல்களில் இருந்து மீட்டு அதன் பக்கம் திருப்ப வைத்தது.....


ஒன்றல்ல, இரண்டு பெண்கள்! ஒன்று குண்டாக, மற்றையது ஒரு மெலிந்த பெண்ணு..!

'என்ன..' என்றேன் முகபாவனையில்!

அதில், மெல்லிய பொண்ணு என்னை நோக்கி 'காதில இருக்கிற ஹெட் ஃபோனை கழட்டு' என்பது போல சைகையில் சொன்னது.

"என்ர காது, என்ர ஹெட் ஃபோன், கழட்ட சொல்ல நீ யார்..?" என்று நானும் கேட்கலாம் தான். ஆனா, கேட்டது ஒரு பெண்ணாச்சே. சரி என்று நானும் கழட்டி விட்டு, 'என்ன' என்று கேட்பது கணக்காய் மீண்டும் தலையை மேல் நோக்கி ஆட்டினேன்.

யாருக்கு தெரியும் இப்பிடி ஒரு பிட்டை தூக்கி போடப்போறாள் என்று!
"நீ அழகாய் இருக்காய்" என்றாள் அந்த பொண்ணு, அத்தனை பேர் சூழ்ந்திருக்க... (அவர்கள் பாசையில்)

எனக்கோ ஷாக்காய் போச்சு. நெளிந்துகொண்டே சுற்றி உள்ளவர்களை தடவை பார்த்துவிட்டு, "என்ன ..?" என்றேன் மீண்டும் ஒருதடவை, .....புரியாதவன் போல!

" நீ அழகாய் இருக்காய்" என்றாள் மீண்டும் சிரித்துக்கொண்டே..

அது தான் தாமதம், உடனே வெள்ளை உடையிலே அழகு தேவதைகள் என்னை சுற்றி கும்மியடிப்பதாக என் நினைவுகள் சூழ்ந்து கொண்டது, சிறகுகள் முளைத்து வானத்தில் பறப்பது போல உணர்ந்தேன்! என்று பொய்யெல்லாம் சொல்லமாட்டேன். காரணம் அந்த இரு பெண்களும் தான்.


மேற்கத்தைய நாட்டவர்களை பொறுத்தவரை, போடும் உடையில் இருந்து, நடு ரோட்டில் நின்று முத்தம் கொடுப்பது வரை ஆணுக்கும் பெண்ணும் ஒரே அளவு சுதந்திரம் கொ(எ)டுத்திருப்பார்கள்; நல்ல விடயம் தான். ஆனால், இந்த இரு பெண்களும் அதையும் ஒரு படி தாண்டி, அந்த ஓரிரு நிமிடங்களில் நான் கவனித்த செயற்பாடுகள் ,குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்று எவனோ சொல்லி வைத்ததை என்னுள் நினைவுபடுத்திக்கொண்டிருந்தது .

அந்த மெல்லிய பெண், தன் இரண்டு கைகளையும் பஸ்ஸில் நிற்பவர்கள் பலன்ஸுக்காக(balance) பிடிக்கும் கம்பிகளிலே பிடித்து அடிக்கடி அந்தரத்தில் தொங்கிக்கொண்டே நின்றாள். மற்றைய குண்டுப்பெண் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு தன் இரண்டு கால்களையும் தூக்கி அருகில் இருக்கும் இருக்கையில் போட்டு, அந்த இருக்கையில் இருந்தவனை ஒரு வழி பண்ணுறேன் என்றே நின்றாள். பாவம்! அந்த இருக்கையில் இருந்தவன் கூட என்னை போல் ஒரு அப்பிராணி போல!

என்ன தான் இருந்தாலும், ஒரு பொண்ணு , அதுவும் கிட்டத்தட்ட பதினேழு பதினெட்டு வயசு மதிக்கத்தக்க பொண்ணு ஒருவனை பார்த்து அழகாய் இருக்காய் என்று சொன்னால் எவன் தான் அந்தரத்தில் பறக்கான்! எனக்கும் 'லைட்டா' அதே உணர்வுதான்! மனசுக்குள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பறந்த பட்டாம் பூச்சிகளை அப்படியே அமத்தி வைத்திருந்தேன். எதையுமே என் முக பாவனையில் காட்டிக்கொள்ளாதவனாய், மீண்டும் ஹெட் ஃபோனை தூக்கி காதிலே மாட்டினேன்.
எனினும் அந்த பொண்ணு 'ஹெட் ஃபோனை மாட்டாதே உன்னோடு கதைக்கணும்' என்றது மெதுவாக! இருந்தும், நான் அதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை........................ என்று சொல்வதை விட வாங்கிக்கொள்ளாத போல நடித்தேன்.

'அப்படி என்ன தான் கதைக்கப்போறள்' என்று எனக்குள்ளும் ஆவலாக இருக்காதா என்ன? (உணர்வுளை அடக்கிக்கொள்ள நான் என்ன நித்தியானந்தா சாமியா!) அதால ஹெட் ஃபோன் வால்யூமை மிக மிக குறைத்துவிட்டேன். அவளும் விடுவதாக இல்லை. என் அருகிலே வந்தாள். என்னை தன் பக்கம் திரும்பச்சொல்லி முதுகில் தட்டி கூட பார்த்தாள். இருந்தாலும் நானும் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. காரணம், பஸ்ஸுக்குள் இருந்தவர்கள் பலர் எம்மையே கவனித்துக்கொண்டிருந்தார்கள். எனக்கோ வெக்கமாய் போச்சு! என் பார்வையை பஸ்சுக்கு வெளியே செலுத்தி அந்த பெண்ணை சற்றும் பொருட்படுத்தாதவனாக நின்றுகொண்டிருந்தேன்.

சிறிது நேரத்தில ஒரு பஸ் தரிப்பிடம் வர, மேலும் சிலர் பஸ்ஸில் ஏறிக்கொண்டார்கள். பஸ்சும் புறப்பட, கூடவே அந்த பெண்ணின் பேச்சையும் காணோம். எங்கே........ என்று சுற்றும் பார்த்தால், சற்று முன் பஸ்ஸில் ஏறிய ஒரு சைனிஸ்காரனின் முதுகை தட்டிக்கொண்டிருந்தாள். அவனும், யாரோ ஆண் சண்டைக்காக தன்னை தட்டுகிறான் என்று நினைத்தானோ என்னமோ!, சற்று கடுப்புடனே திரும்பினான்.
உடனே அந்த பொண்ணும், அவன் பேச்சை எதிர்பார்க்க முன்னமே அதே சிரிப்போடு சொன்னாள் "நீ அழகாய் இருக்காய்......."

கடுப்போடு திரும்பியவன் முகத்தில் ஆயிரம் வோல்ட் வல்பு, எனக்கோ மெயின் பியூஸ் போயிட்டுது.

இருந்தாலும், அந்த சயினிஸ்காரன் ரொம்பவே ஸ்பீட்டு ......!!

பெண்களை மறந்த பாண்டி!

மனிசிக்கு பட்டுச் சாறி
மகனுக்கு கொஞ்சம் ரொபி
சங்கானை போக வேண்டி, தனியாய்
சைக்கிளில் ஏறினான் பாண்டி!

உருவத்தில் இவன் நாற்று
உள்ளுக்குள் நினைப்போ யூத்து
சைக்கிளை மிதித்ததோ காற்று
சட்டென்று மெதுவானான் 

பிரேக் போட்டு!

                                                                    [படம் கூகுளே]
ரோட்டிலே வந்த பெண்ணால்
மனதை இழந்தான் தன்னால்
"சைட்" அடித்தான் கண்ணால், பஸ்
வருவதை மறந்தான் பின்னால்,

மனிசி இல்லா துணிவோ
தினிசு வந்தது நெஞ்சில்
கொலரை தூக்கி விட்டான், கையால்
தலையை மேவிக்கொண்டான்.
"ஹாய்" சொல்ல எண்ணியே,ரண்டு
கையையும் தூக்கினான் முன்னே;

....அப்பிடி ஒரு அடி... , பாண்டி
அடுத்த தெரு முடிவில்
"அம்மா" என்று கத்தியதில்
அம்புலன்ஸ் வண்டியும் நொடியில்..!

பெரியாஸ்பத்திரியில் பாண்டி ,இப்போ
பெண்களை மறந்த ஆண்டி
நடக்கிறதும் காலை நொண்டி, இனி
அஞ்சாறு மாசம் இவன் ஓட்டாண்டி..!


(சங்கானை- ஊரின் பெயர்.
பெரியாஸ்பத்திரி- யாழ் போதனா வைத்தியசாலை.)

நாய்க்கு ஒரு கவிதை(!)


கொளுத்தும் வெயிலிலும்
காவற் கடமை நிமிர்த்தம்,
காய்ந்து போய்
நடு முற்றத்தில் படுத்துக்கிடந்த
நாயார்..,
(நிகழ்வுகள் வலை தளத்தில் திருடியது)
பார்த்துப் பரிதாபப்பட்டு
பக்கத்துக்கு கடைக்கு போய்,
அளவான தொப்பி
வாங்கி ஒன்று கொடுத்தேன்.

வாலை ஆட்டிக்கொண்டே
தலையை நீட்டியவர்,
உரிமையோடு ஒரு
கூலிங்கிளாஸ்_சும் கேட்டார்!
(நிகழ்வுகள் வலை தளத்தில் திருடியது)
 "கருப்பு தான் எனக்கு
எடுப்பாக இருக்கும்!" என்று
சொன்னவர்கு..
ஆசை போலவே
அழகான ஒரு கண்ணாடியும்;

கருப்பு கண்ணாடி
போட்ட நாள் முதல்
புரட்சி தலைவன் MGR! என்று
நினைப்பு வேறு.
(நிகழ்வுகள் வலை தளத்தில் திருடியது)
 ம்ம்ம்
நினைப்பில மட்டும் தான்..!

எவ்வளவு தான் அ(க)டி வாங்கினாலும்
வலியை வெளிக்காட்டா
வடிவேலு போல...,
எங்க வீட்டு நாயார்!
(நிகழ்வுகள் வலை தளத்தில் திருடியது)
குறிப்பு 1;-சில போட்டோக்களை பார்த்தால் ஏதாவது நாலு வரி எழுதணும் என்று தோணும், அந்த வகையில் என்றோ ஒரு நாள் எழுதிய கவிதை (!) தான் இது ;-)

குறிப்பு  2;- புகைப்படம் -கூகுளே

'புதிய புதிய யாழ்ப்பாணம்,' தொடங்கப்போகிறேன். ஆதரவு தாரீர்!

நேற்று நள்ளிரவை தாண்டிய நேரம், சுமார் இரண்டு மணி  இருக்கும். இரவெல்லாம் கம்பியூட்டரோட இருந்த அசதியால் ஆழ்ந்த உறக்கத்தில இருந்திருந்தேன். அப்பொழுது திடீரென்று "டாங்" என்று  எழுந்த சத்தம், என் நித்திரையை குழப்பி எழ வைத்தது. என்னடா! என்று நானும் அடிச்சி தடவி எழுந்தா, என்ர  ரூம் முழுக்க ஒரே மல்லிகைப்பூ வாசம். 'நான் தான் எந்த மல்லிகைபூ சென்ட்ரும்  பாவிக்கிறதில்லையே......!' எனக்கோ நடுக்கமாய் போச்சு.  அப்பொழுது  தான் ஒரு எலி, நான் நேற்று இரவு தண்ணீர் குடித்துவிட்டு வைத்திருந்த கிளாஸை தட்டி விழுத்திவிட்டு  யன்னல் பக்கமாய் தாவிக்கொண்டிருந்தது. 
அப்பாடா! என்று நானும் நிம்மதிப் பெருமூச்சு விட்டு, மீண்டும் படுக்கவென்று  சரிந்தால், என்  கட்டிலுக்கு அருகில் உள்ள ஜன்னலோரம் எதோ அசைவு கண்டு திரும்பினேன்.

எதோ ஒரு உருவம்!
ஐயோ.,
ஐயோ பேய் ......! பொம்புள பேய் ...! என்று நானும்  அதிர்ச்சியோடு அலறத் தொடங்கினேன். அது தான் தாமதம், உடனே  அந்த உருவம் மேலும் ஜன்னலுக்கு அருகில் வந்தது. என்னை கண்டுகொண்டவுடன்  'சத்தம் போடாதே,  நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்' என்றது. 
நானும் பயத்துடனே "சரி" என்றுவிட்டு, அந்த உருவத்தை சற்று உற்று பார்த்தேன். அது எங்கட செத்துப்போன தாத்தா போலவே  இருந்தது.  சற்று நடுக்கத்துடன், மனசிலே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு   "நீங்க செத்துப்போன  என்ர  தாத்தா தானே"  என்று  கேட்டேன்  அதை நோக்கி.. .  

"இல்ல,  நான் உன் தாத்தா இல்ல.  உன்ர  தாத்தான்ர அப்பா" என்றது.

அப்போ,  நீங்க என்ர  தாத்தா  போல  இருக்கீங்களே!  என்று கேட்டேன் நான்.

அப்பிடி இல்ல கந்தசாமி! எனக்கு பிறந்ததால, உன்ர தாத்தா தான் என்னை போல இருந்தாரு, என்று சொல்லி, தன்னை புத்திசாலி என்று காட்டிக்க முனைந்தது  அந்த  உருவம். 

நீ என்னை தாத்தா என்றே கூப்பிடலாம் என்று சொல்லிவிட்டு  "அதுசரி, முதலில் பேய் என்று தானே  கத்தினாய், சற்று  பிறகு ஏன்  பொம்பிள பேய் என்று கத்தினாய்? " என்று கேட்டர்  ஆவலாய்.  
'இல்லை தாத்தா,  நள்ளிரவில மல்லிகைப்பூ மணம் வீசினா அது பொம்பிள பேயாய் தான் இருக்கும் எண்டு நான் சினிமாவில பார்த்திருக்கன். அது  தான் அப்படி கத்தினான்' என்றேன் நான்.  என் புத்திசாலித்தனத்தை பார்த்து பூரிப்படைந்த  தாத்தா,  அதை   பெருமூச்சாக   வெளிக்காட்டிக்கொண்டார்.

'தாத்தா!  இந்த நேரத்தில அங்க தூங்காமல் எதுக்கு என்னை பார்க்க இவ்வளவு தூரம் வந்தனி,  என் மீது உனக்கு அவ்வளவு பாசமா'  என்று கேட்டேன்  நான்.
ஓம் கந்தசாமி, நீ என்ர மகன்ர, மகன்ர, மகனாச்சே. என்ர வம்சத்தை விருத்தி செய்யப்போறவனாச்சே! அது தான், கொஞ்ச நாளாய் விண்ணுலகில் விடுமுறை வாங்கி உன்னை விடுப்பு பார்க்க,  உன் பின்னாலே சுத்திக்கொண்டு இருக்கிறன்'  என்றவர்,  தொடர்ந்து;
"நாலு கழுத வயசாச்சு, இன்னமும் உனக்கு பொறுப்பு வரேல்ல! சும்மா பொடியளோட சேர்ந்து ஊர் சுத்துகிறியே, ஒரு வேலைக்கு போகணும் என்ற எண்ணமே   இல்லையா  உனக்கு...?"  என்றார்  என்  மீது  பெரும் அக்கறை கொண்டவராக..

'எனக்கும் வேலைக்கு போகணும் என்று ஆசை தான் தாத்தா! ஆனா, அது நோகாத வேலையாய் இருக்கணுமே'  என்றேன் நான். 
அது என்னடா நோகாத வேல! கொஞ்சம் விளக்கமா சொல்லேன்ரா கந்தசாமி என்றார்  தாத்தா.
அது தான் தாத்தா  'இருந்த இடத்திலே இருந்து கஸ்ரப்படாம, ஏதாவது வேலை என்றால் எனக்கு ஒக்கே தான்'  என்றேன்.
அப்போ நீ என் கூட வா,  உனக்கு நான் அப்படி ஏதாவது வேலை எடுத்துத்தாறேன் என்றார் தாத்தா!  
சரி  தாத்தா! என்று நானும் அப்பாவித்தனமாய் தலையை ஆட்டிவிட்டு ... திடீரென்று   நினைவுக்கு வந்தவனாக  "என்ன  தாத்தா நக்கலா,  நீ தான் எல்லாம் அனுபவிச்சுவிட்டு என்பது வயசில போய்விட்டா. ஆனா, எனக்கு இப்ப தான் இருபத்தி நாலு வயசு. இன்னும் கல்யாணம் காட்சி கூட பார்க்கல, அதுக்குள்ளே  என்னை உன் கூட   கூப்பிடுறியே  இது  நியாயமா?"  என்று கடிந்து கொண்டேன்.  
கோவப்படாத  கந்தசாமி,   நான் சும்மா தான்   சொன்னேன். சரி,  அப்போ  எப்படி தான் நோகாத வேலை தேடுறது? என்று தன் கையை தூக்கி நாடி மேலே வைத்து  ஜோசிக்க  தொடங்கினார்  தாத்தா!

'ஆ,  ஒரு ஐடியா! உன்கிட்ட தான் கம்பியூட்டரும், இணையமும் இருக்கே.  நீ ஏன் ஒரு இணையத்தளம் தொடங்கக்கூடாது? பத்து டொலர் கட்டினா இப்ப சொந்தமா ஒரு  டொமைன்  எடுத்திடலாமே....'  என்றார் தாத்தா.

என்ன தாத்தா விளையாடுறியா! அதுக்கு தான் எழுதத் தெரிஞ்சிருக்கணுமே. பள்ளிக்கூட காலத்தில நான் முழுசா ஒரு கட்டுரை எழுதியதே கிடையாது. இப்படி தான், ஒரு முறை  ரீச்சர் கோவிலை பற்றி ஒரு கவிதை எழுதச்சொன்னா....

என்ன, எழுதினியா நீ ?- ஆர்வக்கோளாறில் தாத்தா...

ஓம் தாத்தா,  முதல் நாள்  தான்    அஜித்தின்ர  'ஜி'   படம்   பார்த்திருந்தன்.  அதில   ஒரு   பாட்டு வரும்  தானே  "டிங் டாங் கோவில் மணி  கோவில் மணி நான் கேட்டேன்" என்று..  அந்த பாட்ட  அச்சு  பிசகாமல் எழுதி கொடுத்தன். ரீச்சர்  பிரின்ஸுபால்'ட   என்னை   இழுத்துப்போகாத   குறை  தான்....
இந்த லட்சணத்தில நான் எங்க,  இணையத்தளம் தொடக்கி ...எழுதி....!

'அட போடா கந்தசாமி!   உனக்கு இன்னமும் விவரம் பத்தல. இப்ப இணையத்தளம் தொடங்கிறத்துக்கு பெருசா எழுதப்படிக்கவெல்லாம் தேவையில்ல.  ஒரே ஒரு தகுதி மட்டும் இருந்தா போதும்!' என்று சொல்லி சிரித்துக்கொண்டார்  தாத்தா.

அது என்ன  தகுதி  தாத்தா?

அது தான்ரா,  கொப்பி  பண்ணி  பேஸ்ட் பண்ணுறது.... உனக்கு தெரியாதா என்ன?

ஓம் தாத்தா! அதுவும்  ஈசியான வேல தான்.  ஆனா, எவனாச்சும் கண்டு பிடிச்சா நாறடிச்சுடுவானே! என்றேன் ஆதங்கத்துடன்.
உனக்கு தெரியாது கந்தசாமி! இப்ப இணையத்தளம் வச்சிருக்கிறவங்கள்  எல்லாம் உந்த வலைப்பூ வச்சிருக்கிற ஆக்களின்ர பதிவுகளை தானே கொப்பி பண்ணி போடுறாங்களாம். 

இதால ஒரு பிரச்சனையும் வராதா தாத்தா? 

இல்ல கந்தசாமி!   கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு இணைய தளத்தில பார்த்தன், "டாவின்ஸ் கூர்ப்பு விதியை கொப்பி அடிக்கினம், வள்ளுவற்ரையையும் பாரதியின்ரையையும் கொப்பி அடிக்கினம், ஆகவே நாங்களும் அடுத்தவேன்ர எழுத்துக்களை கொப்பி அடிப்போம்" என்று அரைவேக்காட்டுத்தனமாய் ஒரு இணையத்தளக்காரர் தங்கட இணையத்தளப்பக்க மூலைல எழுதி வச்சிரிக்கினம். அது போல நீயும் உன்ர இணையத்தளத்தில எழுதி வைக்க வேண்டியது தானே.


ஓம் தாத்தா,  நல்ல ஐடியா தான்!


அது மட்டுமில்ல கந்து, நீ உந்த கொப்பி பண்ணிய செய்திகளுக்கு தலைப்பு வைக்கிறதிலையும் கவனமாய் இருக்கணும். ஏனெண்டால், நீ இணையத்தளம் தொடங்கினாப்பிறகு, யாழ்ப்பாணத்தின்ர கலாச்சார காவலர்களில்  நீயும்  ஒருத்தனாய்  ஆகிடுவாய். 


அப்பிடியா தாத்தா..? பெரிய பொறுப்பாச்சே !


அதோட, நீ  எப்போதும் கையில காமராவோட தான் இருக்க வேணும். முக்கியமா,  பஸ்சுகளில ஆணும் பெண்ணும் முட்டுப்பட்டாலோ, இல்லை  ஆட்கள் இல்லா  தெருக்கள், பூங்காக்களில ஒரு ஆணும் பெண்ணும் கதைச்சுக்கொண்டு நின்றாலோ  உடனே படம் பிடிச்சு 'யாழ்ப்பாணத்தில் கலாச்சார சீர்கேடு' என்ற தலைப்பில,  அந்த படத்தை உன்ர இணையத்தளத்தின் முன் பக்கத்தில பிரசுரிக்கணும்.


சரி தாத்தா.  அப்புறம் 'தமிழன்' என்ற கோசம் ஏதாவது.....??


உலகம் புரியாத பயலடா நீ கந்தசாமி!  நேற்று இப்படி  தான், ஒரு  பிரபல தமிழ் இணையத்தள பக்கம் போனேன். அதில ஒரு செய்தி இருந்திச்சு  "நீங்கள் மானத்தமிழன்  என்றால் இதை வாசியுங்கள்" என்று! உடனே அடிச்சுப் பதைச்சு நானும் அதை வாசிச்சேன், வாசிச்சு முடிச்சதும் அந்த இணையத்தளத்துக்கு ஒரு இ-மெயிலும் அனுப்பினேன், "நான் உங்கட செய்தியை படிச்சிட்டேன். ஆகவே, தயவு செய்து என்னையும் மானத்தமிழனாய் ஏற்றுக்கொள்ளுங்கள்"  என்று.. ஏனெண்டால், நமக்கு மானம் தான் முக்கியம் பாரு...! அது சரி, நீ வாசிச்சனியா கந்தசாமி  அந்த செய்தியை?


வாசிக்கவில்லையே  தாத்தா...! 'அப்போ...... நான் மானத்தமிழன் இல்லையா?' அழத்தொடங்கினேன் நான்.

உடனே என் நிலைமையை கண்டு பரிதாபப்பட்ட தாத்தா 'கவலைப்படாத கந்தசாமி. அடுத்த தடவ இப்படி ஒரு செய்தி வந்தா உடனே  உனக்கு தகவல் அனுப்புகிறன். நீயும்  ஓடிப்போய் வாசிச்சு, உன்னையும் மானத்தமிழனாய் உறுதி செய்து கொள்!' என்றார்.
 நன்றி தாத்தா.  அது சரி,  நான் தொடங்க இருக்கிற  இணையத்தளத்துக்கு என்ன பெயர் வைக்கலாம்? என்று கேட்டேன் ஆர்வத்தோடு.


"ஏதாவது  புரட்சிகரமான பெயராக இருக்கணும்.....என்ன வைக்கலாம்....." என்று சொல்லிக்கொண்டே, மீண்டும் தன் கையை தூக்கி நாடி மேலே வைத்து  ஜோசிக்க  தொடங்கினார்  தாத்தா!


 "ஆ..    புதிய புதிய யாழ்ப்பாணம்  என்று  பெயர்  வைக்கலாம் கந்தசாமி!" என்றார், எதோ பெரிய கண்டுபிடிப்பு நடத்திய சந்தோசத்தை முகத்தில் காட்டியவாறு.

"ஏன் தாத்தா, இரண்டு தரம்  'புதிய' என்று  வரணும்? புதிய யாழ்ப்பாணம் என்று பெயரை வச்சு,  நியூ ஜப்னா என்று  இங்கிலிசிலையும்  வச்சாத்தான் என்ன?" புரியாதவனாக கேட்டேன் நான்

அது வேண்டாம் கந்தசாமி!  நீ தாத்தா சொன்ன போல பெயரை வை. என்றுவிட்டு, எதோ ஒரு அழைப்பு வரவே கையில் வைத்திருந்த கருவியை தூக்கி காதில் வைத்தவர், "ஹலோ சொர்க்கத்திலிருந்தா" என்று கதைக்க தொடங்கினார்.  சிறிது நேரத்தின் பின்  "இதோ நான் உடனே  வருகிறேன்" என்று பேசி முடித்தவர்.  'கந்தசாமி எனக்கு அழைப்பு  வந்திருக்கு நான் சொர்க்கத்துக்கு  போகணும்  மீண்டும் சந்திப்போம். உனக்கு  ஜெயம்  உண்டாகுக ' என்று சொல்லிக்கொண்டே கிளம்ப முற்பட்டவரை மறித்த  நான்..

"தாத்தா ஒரு நிமிஷம்!"

என்ன கந்தசாமி?

"நீ.........  சொர்க்கத்திலா இருக்கா..?"

கடற்கரையில் அவமானப்பட்ட நபர்!


நீண்டநாள் எனதாசை
கரைநகரிலுள்ள
"கசூரினா பீச்"க்கு
செல்ல வேண்டுமென்று,
ஒரு நாள் சென்றேன்
தனியாக..!

நீண்ட நேரம்
நீருக்குள் கிடந்து
மீண்டும் கரை வந்த போது..

பூவரசு நிழலின் கீழ்
கறுத்த குடை ஒன்று
ஆட்கள் அற்று
அநாதையாக விரித்து கிடந்தது!

சிறிது நேரத்தில்
அங்குமிங்கும் ஆடிய குடை,
காற்றுக்கு தான் ஆடுகிறது! என
கவனித்த போது
அதன் மறைவில் ஒரு உருவம்...

ஆர்வக்கோளாறில்
கிட்டப்போய் எட்டிப்பார்த்தேன்...

ஐயோ!

ஒன்றல்ல! ஒரு சோடி,
எதோ "ஆராய்ச்சி" பண்ணீனம்!
என்னை கண்டதும்
"இங்கிதம் தெரியாதவன் நீ"
எண்டு ஏசுகீனம்!

பேசாமல் வந்துவிட்டன் நான்,
இருந்தும்..,
கரைக்கு வந்ததும்
இருப்புக்கொள்ளாது
மீண்டும் கடலை தேடும்
அலைகள் போல,
'சின்ன பொடியன்' எனக்கு
இன்னும் ஒருக்கா
எட்டிப் பாக்கணும் போல....!

என்ன செய்ய,
மீண்டும் என்னை
ஏசுவீனமே!
'இங்கிதம் தெரியாதான்'
எண்டு...!!

பின் குறிப்பு ;- என்றோ எழுதியது, வெறும் நகைச்சுவைக்கு மட்டுமே!  கலாச்சார காவலர்களே! இதில் உங்கள் கற்பனை குதிரையை அவிழ்க்காதீர்கள்;-)