மனிசிக்கு பட்டுச் சாறி
மகனுக்கு கொஞ்சம் ரொபி
சங்கானை போக வேண்டி, தனியாய்
சைக்கிளில் ஏறினான் பாண்டி!
உருவத்தில் இவன் நாற்று
உள்ளுக்குள் நினைப்போ யூத்து
சைக்கிளை மிதித்ததோ காற்று
சட்டென்று மெதுவானான்
பிரேக் போட்டு!
[படம் கூகுளே]
ரோட்டிலே வந்த பெண்ணால்
மனதை இழந்தான் தன்னால்
"சைட்" அடித்தான் கண்ணால், பஸ்
வருவதை மறந்தான் பின்னால்,
மனிசி இல்லா துணிவோ
தினிசு வந்தது நெஞ்சில்
கொலரை தூக்கி விட்டான், கையால்
தலையை மேவிக்கொண்டான்.
"ஹாய்" சொல்ல எண்ணியே,ரண்டு
கையையும் தூக்கினான் முன்னே;
....அப்பிடி ஒரு அடி... , பாண்டி
அடுத்த தெரு முடிவில்
"அம்மா" என்று கத்தியதில்
அம்புலன்ஸ் வண்டியும் நொடியில்..!
பெரியாஸ்பத்திரியில் பாண்டி ,இப்போ
பெண்களை மறந்த ஆண்டி
நடக்கிறதும் காலை நொண்டி, இனி
அஞ்சாறு மாசம் இவன் ஓட்டாண்டி..!
மகனுக்கு கொஞ்சம் ரொபி
சங்கானை போக வேண்டி, தனியாய்
சைக்கிளில் ஏறினான் பாண்டி!
உருவத்தில் இவன் நாற்று
உள்ளுக்குள் நினைப்போ யூத்து
சைக்கிளை மிதித்ததோ காற்று
சட்டென்று மெதுவானான்
பிரேக் போட்டு!
[படம் கூகுளே]
ரோட்டிலே வந்த பெண்ணால்
மனதை இழந்தான் தன்னால்
"சைட்" அடித்தான் கண்ணால், பஸ்
வருவதை மறந்தான் பின்னால்,
மனிசி இல்லா துணிவோ
தினிசு வந்தது நெஞ்சில்
கொலரை தூக்கி விட்டான், கையால்
தலையை மேவிக்கொண்டான்.
"ஹாய்" சொல்ல எண்ணியே,ரண்டு
கையையும் தூக்கினான் முன்னே;
....அப்பிடி ஒரு அடி... , பாண்டி
அடுத்த தெரு முடிவில்
"அம்மா" என்று கத்தியதில்
அம்புலன்ஸ் வண்டியும் நொடியில்..!
பெரியாஸ்பத்திரியில் பாண்டி ,இப்போ
பெண்களை மறந்த ஆண்டி
நடக்கிறதும் காலை நொண்டி, இனி
அஞ்சாறு மாசம் இவன் ஓட்டாண்டி..!
(சங்கானை- ஊரின் பெயர்.
பெரியாஸ்பத்திரி- யாழ் போதனா வைத்தியசாலை.)
//உருவத்தில் இவன் நாற்று
ReplyDeleteஉள்ளுக்குள் நினைப்போ யூத்து//
நிரூபனை சொல்ல வில்லைதானே?
நல்ல நகைச்சுவை.
ReplyDelete//
ReplyDeleteஉருவத்தில் இவன் நாற்று
உள்ளுக்குள் நினைப்போ யூத்து
சைக்கிளை மிதித்ததோ காற்று
சட்டென்று மெதுவானான்
பிரேக் போட்டு!
/
கவிதை ..கவிதை ..
haaa......haaa......haaa......haaa......
ReplyDeleteகவிதை நகைச்சுவையாய் உள்ளது...
ReplyDeleteநல்ல நகைச்சுவை கவிதை அன்பரே ...
ReplyDeleteஅதில் சிந்திக்க செய்தியும் சொன்னது அசத்தல்
TAMIL MANAM 2
ReplyDeleteநகைச்சுவையில் பொதிந்த கருத்து அருமை.
ReplyDeleteவித்தியாசமான சிந்தனையில்...
ReplyDeleteநகைச்சுவை சிந்தனை,..
ReplyDelete\ஹா..ஹா.
ஹா..ஹா........
ReplyDeleteஎப்பிடி வந்தது வரிகள் எல்லாம் அடுக்கடுக்காய் நகைச்சுவையுடன்..
நல்லாயிருக்குங்க...
நிரூபா!!!!!!!!!!!!!!!
ReplyDeleteஆஹா சூப்பர்!
ReplyDeleteநிரூபன் அண்ணா
ReplyDeleteஹா ஹா
நிரூபனா அந்த பாண்டி??????? # பின் குத்தில் மாட்டிவிடுவோர்
ReplyDeleteசெம காமெடி பாஸ்
ReplyDeleteஇப்படிப்பட்ட கேசுகள் நம்ம ஊரில் நிறைய இருக்கு பாஸ்
ReplyDeleteஅட ...பொண்ணுங்கன்னா இப்படியா அலைவாயிங்க ....
ReplyDeleteமாப்ள நிரூ .......ஐயோ ....அய்யோ...
ReplyDelete///உருவத்தில் இவன் நாற்று
ReplyDeleteஉள்ளுக்குள் நினைப்போ யூத்து
சைக்கிளை மிதித்ததோ காற்று
சட்டென்று மெதுவானான்
பிரேக் போட்டு!//
ஹி.ஹி.ஹி.ஹி
நல்ல அடுக்குமொழி....டி.ராஜேந்தர் படத்துக்கு வசனம் எழுதலாம்....
நல்ல நகைச்சுவை கவிதை நண்பா
அப்பறம் சங்கானைப்பக்கம் நல்ல...........ஹி.ஹி.ஹி.ஹி.
ரோட்டோ(வீதி)ஏன் கேட்கின்றேன் என்றால் சைக்கிளில் கைகளைவிட்டு ஓடலாம் என்றால்.நல்ல ரோடுகள்(வீதிகள்)இருக்கு போல....ஹி.ஹி.ஹி.ஹி
மச்சி, கவிதையினைப் படிக்க முன்னாடி, படம் பார்த்தேன்...
ReplyDeleteபடத்தினைக் கூகுளில் எடுத்திருக்கச் சந்தர்ப்பம் குறைவாக இருக்கிறதே,
யாரோ ஒருவர்
கந்தசாமி எனும் நபர் எடிற் பண்ணியிருக்கிறது போலத் தோன்றுதே.
அவ்...அவ்....
பாண்டியோ பாண்டி..!
ReplyDeleteசைக்கிளிலே பூண்டி..?!- இந்த
வம்பே எனக்கு வேண்டான்டி.!
பெண்களை மறந்த பாண்டி!//
ReplyDeleteதலைப்பே கொஞ்சம் கிளு கிளுப்பாக இருக்கு, பாண்டி பதிவுலகத்தில் பிசியாகியதால் இப்போ பெண்களை மறந்திட்டாராம்.
ஊரில உள்ள விதானையாரின் பெட்டை உட்பட எல்லோரும் நான் ப்ளாக்கில் பிசியாகியதால் நிம்மதியாக இருக்கிறது உங்களுக்குத் தெரியாதோ பாஸ்?
நான் தான் எம்.ஜி.ஆரு..!
ReplyDeleteஎன்ன எதித்த நின்னவன் யாரூ?
அம்மா போடுவா சோறு!
'அலேக்' விழுங்குவேன் பாரு!
என் கவிதை கூட ஜோரு..!
கமெண்ட் எப்படி இருக்கு சாரு! ச்சீ சாரே.. இல்லையில்லை ஐயா!!
ReplyDeleteமனிசிக்கு பட்டுச் சாறி
ReplyDeleteமகனுக்கு கொஞ்சம் ரொபி
சங்கானை போக வேண்டி, தனியாய்
சைக்கிளில் ஏறினான் பாண்டி!//
யோ....கந்ஸ்..
பாண்டிக்கு இன்னும் கலியாணம் ஆகலைத் தெரியாதோ....
அவ்...அவ்...
நன்றாக ரசிக்கும்படிதான் இருக்கு..! பகர்வுக்கு நன்றி..!
ReplyDeleteஉருவத்தில் இவன் நாற்று
ReplyDeleteஉள்ளுக்குள் நினைப்போ யூத்து
சைக்கிளை மிதித்ததோ காற்று
சட்டென்று மெதுவானான்
பிரேக் போட்டு!//
ஏனய்யா ஏன் இந்தக் கொலை வெறி?
மனிசி இல்லா துணிவோ
ReplyDeleteதினிசு வந்தது நெஞ்சில்
கொலரை தூக்கி விட்டான், கையால்
தலையை மேவிக்கொண்டான்.
"ஹாய்" சொல்ல எண்ணியே,ரண்டு
கையையும் தூக்கினான் முன்னே;//
நல்ல வேளை,
தலையில் மயிர் இல்லை என்று நீங்க எழுதலை(((((:
பெரியாஸ்பத்திரியில் பாண்டி ,இப்போ
ReplyDeleteபெண்களை மறந்த ஆண்டி
நடக்கிறதும் காலை நொண்டி, இனி
அஞ்சாறு மாசம் இவன் ஓட்டாண்டி..//
அப்ப்பாடா... நான் தப்பிச்சேன், நீங்க என்னைப் பற்றிச் சொல்லலைத் தானே;-))))
கவிதை சந்தம் கலந்து முடிக்கும் சொற்கள் ஒன்றித்து வந்து கலக்கலாக இருக்கிறது.
நல்ல போகுது பாண்டி கதை
ReplyDeleteவித்யாசமாய்த்தான் யோசிக்கிரீங்கப்பு
ReplyDeleteஅருமையான நகைச்சுவைக் கவிதை வாழ்த்துக்கள்
ReplyDeleteசகோ.....
நையான்டி கவிதை :) நன்றாக இருக்கிறது நண்பரே :)
ReplyDeleteஅடபாவி மக்கா அனுபவம் சூப்பரா வெளியே வந்துருக்கே ஹி ஹி....
ReplyDeleteநகைச்சுவையுடன் கருத்தும் செறிந்த கவிதை.
ReplyDeleteநந்தவனத்தில் ஓர் ஆண்டிக்கப்புறம் இது தான்...
ReplyDeleteகலக்கல்...
ஓரம்போ..ஓரம்போ..கந்தசாமி வண்டி வருது...
வணக்கம் கவி மாகா சக்கரவர்த்தி
ReplyDeleteஆனாலும் நிரூபன் உங்களுக்கென்ன பாவம் பண்ணினான். ஒரு பச்சை பிள்ளையை இப்பிடியா போட்டு வாருறது
நல்ல கருத்தை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDeleteஎனக்கு இதென்னவோ கந்தசாமிக்கு நடந்தது போலதான் இருக்கு!!
ReplyDeleteஎன்னா ஒரு கவிதை....
ReplyDeleteகடைசி இரண்டு பந்தி சூப்பர்.......
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கவிதை :)
ReplyDeleteநல்ல நகைச்ச்சுவைக் கதை கந்து...
ReplyDelete//உருவத்தில் இவன் நாற்று //
ஹா..ஹா..நிரூ பாவம்!
இப்பிடியும் கவிதைகள் எழுதலாமோ எண்டிருக்கு !
ReplyDeleteநிரூ பெரியாஸ்பத்திரில இருந்துகொண்டுதான் பதிவு
எழுதுறாரோ !
ஆஹா படமும் பதிவும் சூப்பரோ சூப்பர்
ReplyDeleteபாண்டி இனி வித்தையும் காட்ட மாட்டான்
பெண்கள் பக்கம் போகவும் மாட்டான்
படமும் பதிவும் இப்படி மிகச் சரியாக
ஒத்துப் போவது அபூர்வம்
தொடர வாழ்த்துக்கள்
சகொதரா படத்துக்கான கவிதையா ? கவிதைக்கான படமா ரொம்பக் குழப்பமாயிருக்கங்க..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னை கடுப்பேற்றும் பதிவர்களின் செயற்பாடுகள் மூன்று
இது ஒண்டும் உங்கட சொந்தக் கதை இல்லையே
ReplyDeleteஏனெண்டா நல்லா அனுபவிச்சு எழுதின மாதிரியே இருக்குது
ReplyDeleteகவிதையும் தலைப்பும் சூப்பர்...
ReplyDelete