காந்தியும் திலீபனும் பெருமைப்படுத்தியதை சிறுமைப்படுத்தும் சில ...

அகிம்சை, சத்தியாக்கிரகம்- உண்ணாவிரதம் என்ற வார்த்தைகளை கேட்கும் போதெல்லாம் என் நினைவில் வருபவர்கள் இருவர்.  ஒருவர் மோகன்தாஸ் கரம் சாந்த் காந்தி  என்ற மகாத்மா காந்தி.  மற்றவர்  பார்த்தீபன் ராசையா  என்ற  திலீபன்.

எமது பாடசாலை, சமூகக்கல்வியும் வரலாறும் என்ற பாட புத்தகத்தில் சத்தியாக்கிரகம்- மகாத்மா காந்தி பற்றிய விடயங்கள்  உள்ளடக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சிறுவயசிலே அவரைபற்றி அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.  அத்துடன்,   மகாத்மா காந்தி என்ற பெயரை அறியாதவர்கள்  இருக்கமாட்டார். பெயரை கேட்டாலே போதும், அவர் உருவம் கண் முன்னே வந்து நிற்கும்.


ஆனால், இலங்கை  இந்திய அரசுகளிடம் ஐந்து அம்ச  கோரிக்கைகளை முன்வைத்து,  உண்ணாவிரதம் என்ற தன்னை உருக்கி போராடும் வழியை கையில் எடுத்து, கொள்கைக்காக தனது  இருபத்தி நான்காவது வயசிலே உயிரை நீத்த திலீபன் பற்றி அநேகர் அறிந்திருந்தாலும், இன்னும் அவரின் அந்த தியாகம் பற்றிய  முழுமையான புரிதல் நம்மவர்கள்  பலரிடம் இல்லை என்பதுவே உண்மை.  ஏன், அவர் முன் வைத்த ஐந்து அம்ச கோரிக்கையை யாரிடமாவது கேட்டுபாருங்கள்?
 

ஆனாலும், இது எம் தவறு இல்லை. அவர் பெயரை பொதுவில் புகழ்ந்தாலே நாளை புகழ்ந்தவர் இருப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலை என்பதே உண்மை.  சிலைக்கே உரிமை இல்லையாம் அப்புறம் எப்படி ....!
நேற்று  வெள்ளை தோல் தரித்த அடக்குமுறையாளர்களால்  தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்டவர்களே, இன்று தியாகிகளாக மக்களால் பூசிக்க படுகிறார்கள். அந்த வகையில் வரலாறு  திலீபனின்  பெயரை சரியா பதிவு  செய்து  கொள்ளும். ***

ஆனால்,  இப்பவெல்லாம் இந்த உண்ணாவிரதம் என்ற சொல்லை கேட்டாலே மேற் சொன்ன இருவரையும்  மிஞ்சும்  வகையில் என் மனக்கண்ணில் வந்து நிற்பவர்கள் மேலும் இருவர்.

ஒருவர், கலைஞர், இன தலைவர்  என்று போற்றி புகழப்படும் கருணாநிதி, மற்றவர் சிறுத்தை தலைவர் தொல். திருமாவளவன்.
இவர்களின்  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உண்ணாவிரத போராட்டங்கள் பற்றி குறிப்பிட்டு உங்களை கண் கலங்க வைக்க நான் விரும்பவில்லை. அதே போல  சத்தியமாக மேற் சொன்ன இருவரை  திட்டவும்  இப்போ நான் முன் வரவில்லை. ஏனெனில், இப்பவெல்லாம் கலைஞரை திட்டுவதேன்பது  சும்மா சிவனே எண்டு இருக்கிற  சுவர் மீது தலையை கொண்டு போய் முட்டுவதுக்கு  ஒப்பானது... 
'விடுதலை சிறுத்தை' என்ற பெயரை கேட்டாலே அண்ணர் திருமா சும்மா மீசையை முறுக்கிக்கொண்டு கம்பீரமாக நிற்கும் காட்சி தான் கண் முன்னே வரும் - அது முன்னர்.  இப்ப அண்ணன் பெயரை கேட்டாலே,  எவரை வாய்கிழிய திட்டினாரோ அவர் முன் போய் பொன்னாடை போர்த்தி, அடங்கி கைகட்டி, பல்லிளித்து, வழிஞ்சுகொண்டு நின்ற காட்சி தான் நினைவுக்கு வரும்.  சிங்கத்தை  அசிங்கமாக்கிய  பெருமை  அவர் தலைவர் கலைஞருக்கு தான்.

பொதுவில் ஒரு கொள்கையை முன்வைத்து அது வெற்றிபெறும் வரை,  எதிரிக்கோ இல்லை பொதுமக்களுக்கோ, பொது சொத்துக்களுக்கோ   எந்த வித இடையூறும்- சேதாரமும் ஏற்படுத்தாமல்,  ஆகாரம்  தவிர்த்து  தன்னை தானே  வருத்தி மேற்கொள்ளப்படும் போராட்டம் தான் அறவழி போராட்டத்தில் உண்ணாநிலை போராட்டம்  என்று  நான் அறிந்துள்ளேன். (சரி தானே!)  

ஆனால் இன்று அதன் நிலை?

ஒரு தலைவனோ அரசியல்வாதியோ "சாகும் வரை உண்ணாநிலை" போராட்டம் என்று தான் கிளம்புவார்கள். கிளம்பிய சில மணி நேரங்களிலே ஐந்து  பஸ் கொளுத்தப்படும், பத்து கடைகள் அடித்து நொறுக்கப்படும்.  காரணம் "நம்ம  தலைவன் உண்ணாவிரதம் இருக்கிறான்டா".


ஆனால்,  குறித்த அகிம்சாமூர்த்தி கிளம்பும் போதே மக்களால் ஊகித்து கொள்ள முடியும், இவன்  போராட்டம் நாலு நாளுக்கு மேல தொடராது என்று.. அந்த கணிப்பு போலவே   நாலாவது நாள் குறித்த அகிம்சைவாதி "என் சேவை இன்னும் மக்களுக்கு தேவை" என்று  ஒரு பஞ்ச் அடித்துவிட்டு, அண்ணன் டாக்குத்தர் ராமதாசோ, இல்லை அவருக்கு ஒப்பான ஒருவரோ  யூஸ் கொடுக்க, இனிதே தனது வரலாற்று சிறப்பு மிக்க அறவழி போராட்டத்தை முடித்துக்கொள்வார்.   


 உடனே அங்கிருந்த அடிப்பொடிகள் 'அண்ணன் வாழ்க, தலைவன் வாழ்க, நாளைய முதல்வன் வாழ்க, நாளைய பிரதமர் வாழ்க' என்ற வரைக்கும் கூவி தம் விசுவாசத்தை காட்டி கொள்வார்கள். ஏனெண்டால், அந்த அடிப்பொடிகளில் ஒருவன் தான் அடுத்த தலைவன் /அரசியல்வாதி!! -
இன்று இதுக்கு பெயர் தான் "சாகும்வரையான  உண்ணாவிரதம்"
இந்த வகையில் அறவழி போராட்டத்தின் வீரியத்தை குறைத்ததும், உண்ணாநிலை போராட்டம் என்றாலே நாலு நாள் சாப்பிடாம இருக்கிறது தான் என்ற சாதாரண மனநிலையை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்திய பெருமையும்  இந்த  வியாபார அரசியல்வா(வியா)திகளையே சாரும்.

35 comments:

  1. நல்ல அருமையான பதிவு. அன்றைய உண்ணாவிரதத்தையும் இன்றைய கேலிக் கூத்துக்களையும் நன்கு அலசி உள்ளீர்கள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.
    vgk (voted 1 to 2 in Indli)

    ReplyDelete
  2. ஆமா யாரு இவங்க???? எங்கயோ பாத்த மாதிரி இருக்கே....

    ராஜபக்சே கூட சிரிச்சிட்டு வேற நிக்கிறாங்க. கேவலம்.

    ReplyDelete
  3. மாப்ள அவர்கள் தொழில் சார்ந்ட அரசியல்வாதிகள் அல்லவா...இன்னுமா ஐயம் உமக்கு!

    ReplyDelete
  4. காந்தியைப் படித்தோம் திலீபனைப் பார்த்தோம் வரலாறாக இப்போது நடக்கும் கூத்தை எப்படிச் சொல்வது நல்ல பதிவு நண்பா!

    ReplyDelete
  5. மாப்பிள நானும் சும்மா இருக்கிற சுவத்தில தலைய முட்டேல... திலீபனின் உண்ணாவிரதம் நடக்கும் போது நல்லூர் வீதிக்கு செல்லாதவர்கள் உண்டோ..? நானும் அங்கு அவர் உண்ணா விரதம் இருந்த நாட்களில் சென்று அவரின் பேச்சைக்கூட கேட்டிருக்கிறேன்.. திலீபனின் உண்ணாவிரதம் போல் நீர்கூட அருந்தாமல் இருந்தவர்கள் எவருமில்லை.. 

    இப்போது இந்த போலி அரசியல் உண்ணாவிரதக்காரர்களால் அதன் மகிமை குறைந்துள்ளது....

    ReplyDelete
  6. //நேற்று வெள்ளை தோல் தரித்த அடக்குமுறையாளர்களால் தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்டவர்களே, இன்று தியாகிகளாக மக்களால் பூசிக்க படுகிறார்கள். அந்த வகையில் வரலாறு திலீபனின் பெயரை சரியா பதிவு செய்து கொள்ளும்.//

    சத்தியமான வார்த்தைகள் கந்தசாமி..

    ReplyDelete
  7. ராஜபக்சே கூட சிரிச்சிட்டு வேற நிக்கிறாங்க. கேவலம்...

    ReplyDelete
  8. கலைஞரை போன்ற திராவிட தலைவர்களுக்கு, மகாத்மாவையும் பிடிக்காது. உண்ணாவிரதமும் பிடிக்காது. அவர் உண்ணாவிரதம் இருந்ததன் மூலம் காந்தியையும் மலினப்படுத்தினார். உண்ணாவிரதத்தையும் மலினப்படுத்தினார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

    ReplyDelete
  9. //அறவழி போராட்டத்தின் வீரியத்தை குறைத்ததும், உண்ணாநிலை போராட்டம் என்றாலே நாலு நாள் சாப்பிடாம இருக்கிறது தான் என்ற சாதாரண மனநிலையை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்திய பெருமையும் இந்த வியாபார அரசியல்வா(வியா)திகளையே சாரும். //
    வெட்கக்கேடு!

    ReplyDelete
  10. நச்சினு சொல்லி இருக்கிறீங்க....

    ReplyDelete
  11. சகோதரம் சமையல்காரன் போட் ரீயை கொடுத்திட்டு கொடுத்தவன் டிப்ஸ் வாங்கிறதில்லியா அது மாதிரித் தான்.. இது...

    ReplyDelete
  12. //உண்ணாநிலை போராட்டம் என்றாலே நாலு நாள் சாப்பிடாம இருக்கிறது தான் //
    அட நீங்க வேற.....
    24 மணிநேரமே பெரிய விஷயம்..

    உண்ணாவிரதம் வரும்போதே இத்தன மணி நேரத்துக்குள்ள சமரம் செய்து பழரசம் கொடுத்துடணும்னு சொல்லிட்டு தான் வருவாங்க போல...

    அப்பறம் அடையாள உண்ணாவிரதம் இருக்குறவங்க காலைல 10 மணிக்கு கூடி 4 மணிக்கு ஆப்பிள்ஜூஸ் குடிப்பாங்க. அதுக்கப்ப்றம் மெய்யாலுமே உண்ணாவிரத போராட்டம் நடத்துனதா சரித்திரமே இல்ல...

    இதையும் மக்கள் நம்பதானே செய்றாங்க :-(

    ReplyDelete
  13. //பொதுவில் ஒரு கொள்கையை முன்வைத்து அது வெற்றிபெறும் வரை, எதிரிக்கோ இல்லை பொதுமக்களுக்கோ, பொது சொத்துக்களுக்கோ எந்த வித இடையூறும்- சேதாரமும் ஏற்படுத்தாமல், ஆகாரம் தவிர்த்து தன்னை தானே வருத்தி மேற்கொள்ளப்படும் போராட்டம் தான் அறவழி போராட்டத்தில் உண்ணாநிலை போராட்டம் என்று நான் அறிந்துள்ளேன். (சரி தானே!) //

    ஆஹா...சகோதரரே...நீங்க ஏதோ கற்காலத்தைப்பற்றி காந்தி காலத்ததைப்பற்றி சொல்றீங்க போல. இப்படியெல்லாம் செய்தால் பிறந்தநாளைக்கு ஒருநாள் அரசாங்க விடுமுறையோடு நம்மள ஒதுக்கிடுவாங்க. பின்ன எப்படி 20 தலைமுறைக்கும் சொத்து சேர்ப்பது?

    மகாத்மா காந்திபோல் , காமராஜர் போல் ஒரு பைசாகூட சொந்தமாய் வச்சுக்காமல் சாகவா அரசியலுக்கு வந்திருக்காங்க. ஓட்டுப்போட்ட ஏமாளி மக்களைஓட்டாண்டியாக்கி ஊரையெல்லாம் வளைச்சுப்போடவேண்டாமா??

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. //பொதுவில் ஒரு கொள்கையை முன்வைத்து அது வெற்றிபெறும் வரை, எதிரிக்கோ இல்லை பொதுமக்களுக்கோ, பொது சொத்துக்களுக்கோ எந்த வித இடையூறும்- சேதாரமும் ஏற்படுத்தாமல், ஆகாரம் தவிர்த்து தன்னை தானே வருத்தி மேற்கொள்ளப்படும் போராட்டம் தான் அறவழி போராட்டத்தில் உண்ணாநிலை போராட்டம் என்று நான் அறிந்துள்ளேன். (சரி தானே!) //
    மிகச்சரி.சிந்தனையைத்தூண்டும் பதிவு.

    ReplyDelete
  16. //ஒருவர் மோகன்தாஸ் கரம் சாந்த் காந்தி என்ற மகாத்மா காந்தி. மற்றவர் பார்த்தீபன் ராசையா என்ற திலீபன்//
    TRUE!
    NICE POST!

    ReplyDelete
  17. (................)

    ReplyDelete
  18. எனக்கு தெரிந்த வகையில் திலீபன் என்ற பெயர் எத்தனையோ தமிழ்நாட்டு குழ்ந்தைகளுக்கு சூட்டபட்டுள்ளது அவர் நினைவாக,அவன் என்றும் மக்கள் மனதில் வாழ்வான்.பதிவுக்கு நன்றியும், வாக்கும்.

    ReplyDelete
  19. தமிழ்மணம் 15

    நெத்தியடி பதிவு ...

    ReplyDelete
  20. நல்லா உரைக்கும் படி சொன்னீங்க சகோ!
    ஆனா நீங்க சொன்னீங்க பாருங்க அவங்களுக்கு சுத்தமா உரைக்காது!

    ReplyDelete
  21. எங்க நீங்க நம்ம தளபதி உண்ணாவிரதம் பற்றித்தான் சொல்ல வர்றீங்களோ எண்டு பயந்தே போயிட்டேன்

    ReplyDelete
  22. நெத்தியடி பதிவு...ஏமாறும் கூட்டம் இருக்கும் வரை ஏமாற்றிக்கொண்டே தான் இவனுக இருப்பாங்க...

    ReplyDelete
  23. உவர்களை நினைத்தால் சரியான கோபம் தான் வருகிறது....................

    ReplyDelete
  24. நான் விரும்பும் மனிதர்களில் திலீபனும் ஒருவர்........

    ReplyDelete
  25. //ஒருவர் மோகன்தாஸ் கரம் சாந்த் காந்தி என்ற மகாத்மா காந்தி. மற்றவர் பார்த்தீபன் ராசையா என்ற திலீபன்//


    கரெக்ட் நண்பா. இப்போது இருப்பவர்கள் உண்ணா விரதமா இருக்கிறார்கள்.?? " உண்ணா விரதம்" என்ற உன்னத வார்த்தைக்கே மதிப்பு இல்லாமல் ஆக்கிவிட்டார்கள்.

    ReplyDelete
  26. நல்ல பதிவு நண்பா. நன்கு உறைக்கும் படி சொல்லி இருக்குறீர்கள்,
    ஆனால் என்ன பயன் இது அவர்களுக்கு
    எருமை மாட்டின் மேல் பெய்த மழைதான்

    ReplyDelete
  27. ஆமாம்... தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் " சாகும்வரை உண்ணாவிரதம்" என்று அறிவித்து உண்ணாவிரதம் இருக்காமல் விட்டவர்கள் யாராவது இன்னும் இருக்கிறார்களா????

    ReplyDelete
  28. சகோ!பதிவுக்கு எனது கண்டனங்கள்.திலீபனை இந்தாளுகளோட ஒப்பீடு செய்ததற்கு.திலிபனின் அகிம்சை போராட்டத்தை தீக்‌ஷித் என்ற இந்திய அரசின் அடியாள் எப்படி கையாண்டாரோ அதே போன்ற நிலையை தற்போது இந்திய காங்கிரஸ் அரசு அன்னா ஹசாரேவின் போரட்டத்தில் கபில் சிபல்,சிதம்பரம்,பிரணாப் சல்மான் குர்ஷித் போன்றவர்களின் இரு நிலை உள்சண்டை போட்டியில் பயன்படுத்துவதை எத்தனை பேர் கவனிக்கிறார்கள் என்று தெரியவில்லை.நீராகாரம் கூட அருந்தாமல் வரலாற்றில் அமர்ந்து கொண்ட திலீபனின் போராட்டத்தையும்,மரணிக்க வைத்ததே விடுதலைப்புலிகள்தான் என்று கொச்சைபடுத்தும் புல்லுருவிகளும் கூட தமிழர்களிடையே உள்ளார்கள் என்பது வருத்தத்தையே அளிக்கிறது.

    ReplyDelete
  29. @ராஜ நடராஜன், உண்மையிலே நான் யாரையும் யாருடனும் பதிவில் ஒப்பிடவில்லை. நான் சொல்ல வந்தது காந்தியும் திலீபனும் பெருமைப்படுத்திய அறவழி போராட்டங்களை இன்றைய இந்த அரசியல் புல்லுருவிகள் இழிவுபடுத்துகிறார்கள் என்று..

    மற்றும் படி இன்று காங்கிரஸ் செய்யும் அராயக அரசியலுக்கும் காந்திக்கும் என்ன சம்மந்தம்? அவர் அன்றே சொல்லியிருந்தார் சுதந்திரம் கிடைத்த பின் காங்கிரஸ் கட்சி கலைக்கப்படவேண்டும் என்று, ஆனால், இன்று அவர்களின் தியாகங்களை முன்னுறுத்திதான் குடும்ப சொத்தாக கட்சி வளர்க்க படுகிறது.

    காந்தி தொடர்பான எதிர்மறையான கருத்துக்கள் நானும் படித்துள்ளேன் ஆனால் அதெல்லாம் பெரிதாக அலட்சியம் செய்வதில்லை.எந்த போராட்ட அமைப்பின் வரலாற்றில் தான் கரும்புள்ளிகள் இல்லை. ஆனால் அவர்கள் செய்த தியாகங்கள் அந்த கரும்புள்ளிகளை மக்கள் மனங்களில் இருந்து காலப்போக்கில் மறைத்துவிடும் என்பதே உண்மை!

    ReplyDelete
  30. தமிழ்மணம் 19

    ReplyDelete
  31. மிக அருமையான பதிவு. உண்மைக்கு என்றும் அழிவு கிடையாது. காந்தியாரை பிடிக்காதவர்களும் அவர் படத்தினை பையில் வைத்திருக்க வேண்டிய கட்டாயம். காரணம் இந்திய பணத்தில் காந்தியார் படம்தானே உள்ளது. அதுபோல் தனி தமிழ் ஈழம் மலர்ந்தால் திலீபனின் படத்தை அனைவரும் வைத்திருக்கும் காலம் வரும். மற்றபடி புல்லுருவி அரசியல் சாக்கடைகளை பறம் தள்ளுவோம்.

    ReplyDelete