பதிவுலகுக்கு எதற்கு வந்தேன், எப்படி வந்தேன் என விவரமாக சொல்லி உங்கள் பொறுமையை சோதிக்க விரும்பவில்லை. ஒற்றை வரியில் சொல்லவேண்டும் என்றால் 'பொழுது போகவில்லை வந்தேன்'. (அட நம்புங்கப்பா!) தனிமை என்பது எவ்வளவு கொடுமை! அதை இரண்டு வருடங்களாக அனுபவித்த எனக்கு, இன்று என் நண்பன், உறவு, காதலி என்று எல்லாமே இந்த பதிவுலகும், என் பிளாக்கரும் ஆகிப்போச்சு! இங்கு வந்ததால் நான் அறிந்து கொண்டவை பல, இழந்து கொண்டவை என் பல இரவுகள் தூக்கம். உண்மையை சொல்லவேண்டும் என்றால் இன்னும் சில கிழமைகளில், மாதங்களில் பதிவுலகில் இருந்து காணாமல் போய் விட கூடிய சந்தர்ப்பம் உண்டு, ஆனால் மீண்டும் வருவேன் என்ற நம்பிக்கையுடன்...
தொன்னூற்று ஒன்பதாவது பதிவு வரை என்னோடு கூடவந்த என் தாய் மொழிக்கு இந்த நூறாவது பதிவு.
உன்னை வர்ணிக்க
வார்த்தைகள் தேடி தோற்றுப்போகிறேன்.
தேடிப் பொறுக்கும் வார்த்தைகளையும்
கோர்த்தும் சேர்த்தும்
இயலாமையால் சோர்ந்துவிடுகிறேன்;
பாவலர்கள் பலர் போற்றிய உனக்கு ,இந்த
தேடிப் பொறுக்கும் வார்த்தைகளையும்
கோர்த்தும் சேர்த்தும்
இயலாமையால் சோர்ந்துவிடுகிறேன்;
பாவலர்கள் பலர் போற்றிய உனக்கு ,இந்த
பாலகன் நான் எம்மட்டு?
அன்னைக்கடுத்து நான் அதனால் தான்,
நான் இவ்வுலகில் சுவாசிப்பதும், வாசிப்பதும்.
என் நாவை அரவணைத்துக்கொண்ட
தாய் நீ - அதன் பின்
என் பேச்சிலும், மூச்சிலும்
சந்தோசத்திலும், வலியிலும்
உன்னையே உணர்ந்து கொள்கிறேன்.
உன் பெருமையை
உன் புகழை
உன் இனிமையை
என்னவென்று சொல்வேன்!
உன் இனிமையை
என்னவென்று சொல்வேன்!
ஒளவை, பாரதி, வள்ளுவன் என்று- உனை
ஆலமரமாக்கி அதன் ஆணிவேரகிப்போனவர் பலர்.
நாவலர், சேக்கிழார் போன்று
உன் விழுதுகளாக நின்றவர்களும் உளர்.
இன்று வேற்று மொழி கதைப்பதையே
வீரமாக கொள்ளும் நம்மவர்கள் பலர்,
வேற்றுமொழியில் இருந்து வந்து
தமிழ் மொழியே செம்மொழி எனக்கண்டு
பாண்டித்தியம் பெற்ற
'வீரமா முனிவர்'களும் உளர்.
இலக்கிய உலகிலும்
இல்லற வாழ்விலும்
உன்னால் பிழைத்துக்கொள்பவர்கள் பலர்.
அரசியல் உலகிலும், அடுத்தவனை
அடிமை கொள்ள எண்ணும் அராஜக வாழ்விலும்
உன்னை வைத்தே பிழைப்பு நடத்துபவர்களும் உளர்.
இன்று இலத்திரனியல் உலகில்
இணையம் என்ற கடலில்
உன் கரம் பிடித்து கரை சேர துடிக்கும்
கப்பல்களாக பலர் - அதில்
சிறு ஓடம் நான்
உன்பால் சிரம் தாழ்த்துகிறேன்!
நட்புடன்
கந்தசாமி.
முதல் மழை..
ReplyDeleteவாழ்த்துக்கள்..
ReplyDeleteநூறாவது பதிவை தாய் தமிழுக்கு அர்ப்பணித்த உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை ......நன்றி !
ReplyDelete100 வருஷம் இந்த பிளாக்கரும், பிளாக்கும் காலம் முழுக்க சிந்து பாடனும்..
ReplyDeleteநூறாவது பதிவுக்கு பாராட்டுக்கள். தாய்க்கு ஒரு த்ங்கமான தாய்மொழிகு நன்றி நவின்ற பாங்குக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழக..வளரக..
வாழ்த்துக்கள்..
ReplyDeleteபிளாக்கருக்கு ரெஸ்ட் குடுக்கணும்ன்னு நெனச்சா விட மாட்டேன் .....
ReplyDeleteதாய் வாழ்த்து அருமை
ReplyDelete100 வது பதிவிற்கு வாழ்த்துகள்
nooru thamil thaaikku enpathil makilchhci.. vaalththukkal
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteசதம் அடித்தமைக்கு வாழ்த்துகள் கந்தசாமி. அவ்வப்போது எனது பதிவிலும் கருத்து சொல்லி வருவதற்கு நன்றி. இதயங்களை இணைக்கும் இணையம் உள்ளவரை பெருகும் நட்பு வட்டம்.
ReplyDelete100வது பதிவிற்கு வாழ்த்துகள் சகோ..வித்தியாசமான முறையில் 100வது பதிவைக் கொண்டாடி உள்ளீர்கள்.
ReplyDeleteCongrats friend
ReplyDeleteKavithai super
ReplyDeleteநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். நூற்றுக்கு நூறு உண்மையான பதிவு இது.சுருக்கமாகவும் சுத்தமாகவும் உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அன்புடன் vgk
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteதமிழ்மணம் 7 வதும் போட்டாச்சி....
ReplyDeleteவணக்கம் பாஸ்,
ReplyDeleteநூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
நூற்றுக்கும் இனி வரும் நூற்றுக்கும் வாழ்த்துக்கள்.தமிழ் சுவாசத்துடன் வாழ்க வளமுடன்.
ReplyDeleteமாப்பிள இப்பதானே நான் பதிவுலகுக்கு வந்தனான்.. அதுகுள்ள ஏன் நீ ஓடப்பாக்கிறாய்..!?
ReplyDeleteநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்...
காட்டான் குழ போட்டான்...
பாஸ், நமக்குப் பார்ட்டி எல்லாம் இல்லையா?
ReplyDelete///பாவலர்கள் பலர் போற்றிய உனக்கு ,இந்த
ReplyDeleteபாலகன் நான் எம்மட்டு? ////
பாவலர்களும் ஒருநாள் பாலகர்களே
பாவலர்கள் புரிந்த , அறிந்த , தெரிந்த , தெளிந்த தேன் தமிழை
இந்த பாலகன் புரிந்தது பெருமைபடவேண்டிய செய்தி அல்லவா
உங்களின் நூறாவது பதிவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சாமி அடிச்சு தூள் கிளப்புங்க
ReplyDeleteவாழ்த்துக்கள்..
ReplyDeleteஆகா நூறாவது பதிப்பா!....வாழ்த்துக்கள்
ReplyDeleteநூறாவது பதிப்பை பகிர்ந்துள்ளவிதம் அருமை!....
இதுபோன்று ஆயிரம் பதிப்புகள் இடும்வரை
இறைவன் தங்களை இந்த வலைத்தளத்தில்
கட்டிப்போட மனமாரப் பிரார்த்திக்கின்றேன் .
நன்றி பகிர்வுக்கு.....
பதிவுலகுக்கு எதற்கு வந்தேன், எப்படி வந்தேன் என விவரமாக சொல்லி உங்கள் பொறுமையை சோதிக்க விரும்பவில்லை//
ReplyDeleteஏன் பாஸ், ஒரு பெரிய...........................................................................................................................
ப்ளாஷ் பேக் பின்னாடி இருக்கும் போல இருக்கே. பில்டப் பயங்கரமா இருக்கே.
ஒற்றை வரியில் சொல்லவேண்டும் என்றால் 'பொழுது போகவில்லை வந்தேன்'.//
ReplyDeleteநீங்க சொன்னாப் பிறகும் நம்பாமல் இருப்பேனா.
நம்புறோம் பாஸ்.
உன் கரம் பிடித்து கரை சேர துடிக்கும்
ReplyDeleteகப்பல்களாக பலர் - அதில்
சிறு ஓடம் நான்
உன்பால் சிரம் தாழ்த்துகிறேன்!//
பெருக்கத்து வேண்டும் பணிதல்
சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு, எனும் வள்ளுவப் பெருந்தகையின் வார்த்தையினைச் செயலில் காட்டியுள்ளீர்கள்.
தொடர்ந்தும் ஜமாயுங்க பாஸ்.
மீண்டும் வாழ்த்துக்கள் கந்து.
//இன்னும் சில கிழமைகளில், மாதங்களில் பதிவுலகில் இருந்து காணாமல் போய் விட கூடிய சந்தர்ப்பம் உண்டு,//
ReplyDeleteஎன்ன கலியாணம் கட்டப் போறீங்களா பாஸ்?
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteநூறாவது பதிவலி் நெஞ்சைத் தொட்டுட்டிங்க...
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரம்....
நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்,,
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள் நண்பரே
வாழ்த்துகள் கந்தசாமி!தமிழ்த்தாயும் வாழ்த்துகிறாள்.
ReplyDelete100வது பதிவு திருவிழாக்கு வாழ்த்துக்கள் சகோ. தமிழ்தாய்க்கு அர்ப்பணித்தமை மிக அருமை. பதிவுலகில் நீடித்து நிலைத்து நிற்பீர்கள். நாங்களும் உங்களைத் தொடர்வோம். சந்தேகமே வேண்டாம்.
ReplyDeleteதாயிக்கு அஞ்சலி!-தமிழ்
ReplyDeleteதாயிக்கு அஞ்சலி!
அருமை!
புலவர் சா இராமாநுசம்
!
வாழ்த்துக்கள் :)
ReplyDeleteநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா.
ReplyDeleteவாழ்த்துக்கள்.பதிவு நன்று.
ReplyDelete100 பதிவுக்கு வாழ்த்துக்கள் சிறப்பாக தமிழின் பெருமையைத் தீட்டியுள்ளீர்கள்.
ReplyDeleteவிடைபெறுவது கொஞ்சம் கவலையளிக்கின்றது சிலநேரங்களில் சிலதைத் தாங்கியாகனும் நேரம் கிடைக்கும் போது இனைந்து கொள்ளுங்கள் யாவும் சிறப்பானவையாகட்டும் சகோ!
100 வது பதிவை பதிவுக்கே சமர்ப்பித்திருக்கிறீர்கள்
ReplyDeleteகவிதை அருமையிலும் அருமை
தொடர்ந்து தொடர வாழ்த்துக்கள்
என்ன பாஸ் இப்படி சொல்லுறீங்க....
ReplyDeleteதாய் மொழியை பற்றி எழுதினால் அதில் ஏது தவறு...
எனது கனா.................
சகோ வாழ்த்துக்கள் உங்களின் ௧௦௦ வது பதிவிற்கு . சிறப்பாய் உள்ளது கவிதை.
ReplyDeleteநூறாவது பதிவுக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteதமிழ்தாய் வாழ்க
இனிய வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் தல...தொடர்ந்து செல்லுங்கள்..நாங்கள் இருப்போம் உங்களுடன்!
ReplyDeleteநுறாவது பதிவு அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநேற்று முழுதும் பதிவின் பக்கங்கள் வரவில்லை.அதானால் நான்தான் கடைசி வாழ்த்தோடு ஆனாலும் அன்போடு வாழ்த்துகிறேன் கந்தசாமி.இன்னும் நிறைவான பதிவுகளை எழுதுங்கள் !
ReplyDeleteவாழ்த்துக்கள்..
ReplyDeleteநூறாவது வயதுக்கு வாழ்த்துக்கள் சகோ/
ReplyDeleteஇன்னும் இன்னும் படைப்பில் மேலோங்க,,
ஒருகிழமைக்குள் காணாமல் போனாலும் மீண்டும் வந்து சேர
நல்ல செய்தியுடன் மீண்டும் வலம் வர வாழ்த்துகின்றேன்...
தாய்மொழியை வாழ்த்திய கவிதை
அருமை...
உங்களைப்போலவே நானும் ஒருவர்,,,
ReplyDeleteஅத்தனை வருடம்தான் எனது காத்திருப்பும்...
Vaazhthugal kanths...
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே! தொடர்ந்து வழமைபோல் பயனுள்ள விடயங்களை எழுதுங்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅம்மா! ஒவ்வொரு உயிரும்..... மண்ணில் மரிக்கும்வரை, தன்னில் நினைக்கவேண்டும்!
ReplyDeleteஅம்மாவிற்கும் எழுதும் கவிதைகள் என்றுமே அழகுதான்...
வாழ்த்துக்கள் நண்பரே
http://nisiyas.blogspot.com/2011/07/blog-post_29.html
நூறு ஆயிரத்தைத்தொட வாழ்த்துகள்..
ReplyDeleteகவிதையும் ரொம்ப நல்லாருக்கு, தாய்க்காக எழுதப்பட்டதல்லவா!!.. அதான் :-)
நூறாவது பதிவுக்கு பாராட்டுக்கள் நண்பரே....
ReplyDeleteநூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteKAVITHAI ARUMAI
ReplyDeleteHi Friend This Is Mohan Vellore
ReplyDeleteWe buyd one script (cannot copy) your content anyone Copying ?
This problem Was Solved
Plz Go To (http://tamilcinemaphotos.blogspot.com) You Can copy From This Site :)
You Need This Just Rs 500 Lets buy
Contact Mohanwalaja@gmail.com
░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░
ReplyDelete░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
░░▓▓░░░░▓░▓▓▓▓▓░░▓░░░▓▓░░░░▓▓▓▓▓░░░░░░▓▓▓▓▓░░░░▓░░░▓▓▓▓▓░░░░▓▓▓░░▓▓▓▓░
░▓░░▓░░░▓░▓░░▓░░░▓░░▓░░▓░░░▓░░▓░░░░░░░▓░░▓░░░░░▓░░░▓░░▓░░░░▓▓░░▓▓░░▓░░
▓░▓░░▓░░▓░▓░░▓░░░▓░░▓░░▓░░▓▓▓▓▓▓▓▓░░░▓▓▓▓▓▓▓▓░░▓░▓▓▓▓▓▓▓▓░░▓░▓░░▓░░▓░░
▓░▓░░▓░░▓░▓░░▓░░░▓░░▓░░▓░▓░░░░▓░░░▓░▓░░░░▓░░░▓░▓░▓░░░░▓░░▓░▓░▓░░▓░░▓░░
░▓░░▓▓▓▓▓░▓░░▓░░░▓▓▓▓▓▓▓░░▓▓▓▓░░░░▓░░▓▓▓▓░░░░▓░▓░░▓▓▓▓░░▓░░▓▓░░░▓░░▓░░
░░░░░░░░░░░░░░░░▓░░░▓░░░░░░░░░░░▓▓░░░░▓▓▓▓▓▓▓▓▓▓░░░░░░░░░░░░░░░░░░░░░░
░░░░░░░░░░░░░░░░░▓▓▓▓▓▓░░░░░░░░▓░░░░░░░░▓▓▓▓▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
தாமதத்திற்கு மன்னிக்கவும்
ReplyDeleteநூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோ .
ReplyDeleteநூறு ஆயிரம் ஆகும் ... ஆயிரம் இலட்சங்களாகும் .... இலட்சங்கள் கோடிகளாகும்...
ReplyDeleteஅதுபோல உங்கள் எழுத்தும் எங்கள் வாழ்த்தும்..! !
மன்னிக்கவேண்டும் நண்பரே மிகவும் தாமதமாகத்தான் இந்தப்பதிவை வாசித்தேன்.நன்றாக இருக்கின்றது அதுவும் 100வது பதிவை தமிழ் மொழிக்கு சமர்ப்பித்தது இன்னும் கூடுதல் சிறப்பு.உலகில் பல மொழிகள் இருந்தாலும் சிறப்பு பெற்ற மொழிகள் சிலதான் அதில் நம் தமிழ்மொழியும் ஒன்று தமிழ் மொழிபேசுகின்றவனாக பிறந்தில் எனது இந்தப்பிறவி சிறப்புப்பெற்றுள்ளது.
ReplyDelete