ஒன்று அவன் மனநோயாளியாக இருக்கவேண்டும்,
இரண்டு அவனை வன்முறைக்கு தள்ளிய புறச்சூழல் காரணிகள்.
இதில் முதலாவதை விடுவோம். உற்று நோக்கினால் அது மிக குறைந்த பகுதி தான். ஆனால் இரண்டாவதை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிப்பது அதிகார வர்க்கம் தான் என்பது மறுப்பதற்கில்லை. எந்த ஒரு வன்முறையாளனையும் எடுத்துக்கொள்ளுங்கள் அவனை உருவாக்கியதற்கு பின்னால் எதோ ஒரு அதிகார வர்க்கம், அவர்களால் முடக்கப்பட்ட நாட்டின் சட்டங்கள், மறுக்கப்பட்ட நீதி போன்றவை தான் பின்னணியாக இருக்கும்.
இதில் முக்கிய பங்கு ஒரு நாட்டின் இராணும் போலீஸ் துறையை சாரும். அமெரிக்காவில் இருந்து இலங்கை வரை யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பது கணக்காய் வேலியே (!) பயிரை மேயும் சம்பவங்கள் நடந்துள்ளன /நடந்துகொண்டுள்ளன.
வாதாம் கொட்டை பறிப்பதற்காக இராணுவ விடுதிக்குள் நுழைந்த பதின்மூன்றே வயசான சிறுவனை இரக்கம் சிறிதும் இன்றி ஒரு இராணுவ அதிகாரி (நாட்டையும், மக்களையும் காப்பாற்றுபவர்களாம்) குடி போதையில்(!) சுட்டு கொன்றுள்ளார். சரி, வெறியிலே புத்தி பேதலிச்சு சுட்டுவிட்டான் என்று வைப்போம்; ஆனால் சுடப்பட்டு அந்த சிறுவன் குற்றுயிராக கிடந்த போது அங்கே நின்ற ஏனைய இராணுவத்தினர் என்ன செய்திருக்க வேண்டும்...?
உயிருக்கு போராடியவனை உடனடியாக வைத்தியசாலை கொண்டு செல்லும் நடவடிக்கையை கூட எடுக்காது, எதோ "தெருநாயை சுட்ட பின் ஈ எறும்பு மொய்க்குமே" என்பது போல இலைகளாலே மூடி விட்டுள்ளார்கள்.
இது கடந்த ஞாற்று கிழமை நடந்தது. இன்னமும் குற்றவாளி கைது செய்து நீதிமன்றத்திலே நிறுத்தவில்லை. இதுவே ஒரு அரசியல்வாதியின் மகனுக்கோ இல்லை அதிகாரங்களை சட்டை பையில் கொண்டலைபவனின் மகனுக்கோ நடந்திருந்தால் அரைமணி நேரத்தில் குற்றம் செய்தவன் கைதுசெய்யப்பட்டு இருப்பான். ஆனால் பாதிக்கப்பட்டது ......?, எதோ அறுபதடி கிணற்றில் தூண்டில் போட்டு மீன் பிடிப்பது போல ஐந்து நாட்களாக குற்றவாளியை தேடுகிறார்களாம். சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு "நியாயமான தண்டனை" வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியே!
இன்று முகநூலில் ஒரு சிலர் இந்த செயலை நியாயப்படுத்துகிறார்கள். காரணம் அந்த சிறுவன் குண்டு வைக்க வந்திருப்பான் என்று நினைத்து இராணுவ வீரன் சுட்டது தவறில்லையாம். என்ன கொடுமை! , அப்படியெனில் மும்பையில் குண்டுவைத்து அப்பாவி மக்களை கொன்ற கசாப்பை எதற்காக ராஜ மரியாதையோடு உள்ளே வைத்திருக்கிறார்கள். அவனையும் சுட்டுத் தள்ள வேண்டியது தானே. இவர்கள் கதைப்பார்கள், காரணம் செத்தது இவர்கள் பிள்ளையோ, உறவவோ இல்லையே !
இனி அந்த மகனை பெற்ற தாய்க்கோ, குடும்பத்துக்கோ, சுற்றி உள்ளவர்களுக்கோ இராணுவம் என்றால் ஒரு காழ்புணர்ச்சி, குரோதம் சாகும் வரை தொடர்ந்து இருக்க தான் செய்யும். இப்படியானவர்கள் நாளை நீதி கிடைக்காத போது வன்முறையின் பக்கம் நாடினால் அதற்கு யார் பொறுப்பு! இவ்வாறு இவர்களே ஒருவன் வன்முறையாளனாக உருவாக காரணமாக இருந்துவிட்டு, நாளை அவனுக்கு "பயங்கரவாதி" என்று பெயரும் கொடுத்து துப்பாக்கிகள் சகிதம் துரத்துவார்கள்.
"நாட்டை காக்க தன் உயிரையே பணயம் வைக்கும் இராணுவம்/பொலிஸ் துறை" என்பது எவ்வளவு புனிதமான தொழில்/கடமை. நாட்டின் பாதுகாப்பிற்காக இல்லற வாழ்க்கை துறந்து தன்னுயிரை கொடுத்த தன்னலமற்ற வீரர்கள் எத்தனை எத்தனை. ஆனால் ஒரு சிலரால் /கூட்டத்தால் நாட்டுக்கே அவமானம் தேடித்தரவும் இவர்களால் மட்டுமே முடியும்.
இது முதலாவது சம்பவம் இல்லை. இதை போல இதற்கு முன்னரும் பல சம்பவங்கள் நடந்துள்ளது; இனியும் நடக்காது என்பதற்கு எந்த வித உத்தரவாதமும் இல்லை. இந்த உலகிலே மோசமான இராணுவம் என்றால் என் அனுபவத்தில் இலங்கை இராணும் என்று தான் கண்ணை மூடிக்கொண்டு சொல்வேன். ஆனால் இதே கேள்வியை 87 களில் ஈழத்தில் இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த தமிழ் மக்களை கேட்டு பாருங்கள் ...!
உங்கள் கருத்துக்கள்தான் என் கருத்தும்.
ReplyDeleteசரியான பதிவு கந்தசாமி..இந்தச் செயலை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
ReplyDeleteபயங்கரவாதிகளை உருவாக்குவது அதிகரவர்கமும் ஆட்சியாளர்கலுமே உங்கள் கருத்து முற்றிலும் உண்மை.
ReplyDeleteசுட்ட இராணுவ அதிகாரியை தெரியும் இருந்தும் கைது செய்யாதது ஏன் ? நியாயமான கேள்விகள் சகோ .
நீதி தவறியவர்களுக்கு எதிராக நிச்சயம் மக்கள் திரள்வார்கள் கந்தசாமி அண்ணே
ReplyDeleteமற்றது பிரவேயிலேயே மன நோயாளியாய் பிறப்பவன் வன்முறையில் ஈடுபடுவதில்லை அதிகாரவர்கர்த்தின் சமுக கட்டமைப்பின் அடக்குமுறையால் மனநோயாளி ஆனவன் தான் வன்முறையில் ஈடுபடுயறான். அந்த சிறுவனின் சமுகத்தில் எதனை பெயர் மன நோயாளியாக மருகிரார்களோ அவர்களில் எதனை பெயர் வன்முறையில் ஈடுபடுகிறார்களோ தெரியாது..
எனவே வன்முறையால் மன நோயாளி ஆனவன் வன்முறையயே கையிலேடுப்பான்
இங்கே மன நோயாளி என்பது ( விசர்பிடிதவர்குள் அல்ல )
இனியும் நடக்காது என்பதற்கு எந்த வித உத்தரவாதமும் இல்லை. //
ReplyDeleteமிகக் கனமான பகிர்வு.
இது போல பல நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது ......இது எங்கே கொண்டு போய் விடுமோ தெரியவில்லை.......
ReplyDeleteஆமாம். நானும் படித்தேன்.பார்த்தேன்.. இதற்கு ஏதாவது செய்ய வேண்டும்..
ReplyDeleteஎன்னோட வலைப்பக்கமும் வந்திட்டுப் போங்க
நியாயமான காரணங்கள் தான்
ReplyDeleteவர வர இதுமாதிரியான எண்ணங்கள்
அதிகரிக்கவே செய்கிறது
சந்ரு said...
ReplyDeleteஉங்கள் கருத்துக்கள்தான் என் கருத்தும்.//கருத்துக்கு நன்றி நண்பா
செங்கோவி said...
ReplyDeleteசரியான பதிவு கந்தசாமி..இந்தச் செயலை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது./// உண்மை தான் நண்பா
Mahan.Thamesh said...
ReplyDeleteபயங்கரவாதிகளை உருவாக்குவது அதிகரவர்கமும் ஆட்சியாளர்கலுமே உங்கள் கருத்து முற்றிலும் உண்மை.
சுட்ட இராணுவ அதிகாரியை தெரியும் இருந்தும் கைது செய்யாதது ஏன் ? நியாயமான கேள்விகள் சகோ ./// கருத்துக்கு நன்றி நண்பா
கவி அழகன் said...
ReplyDeleteநீதி தவறியவர்களுக்கு எதிராக நிச்சயம் மக்கள் திரள்வார்கள் கந்தசாமி அண்ணே
மற்றது பிரவேயிலேயே மன நோயாளியாய் பிறப்பவன் வன்முறையில் ஈடுபடுவதில்லை அதிகாரவர்கர்த்தின் சமுக கட்டமைப்பின் அடக்குமுறையால் மனநோயாளி ஆனவன் தான் வன்முறையில் ஈடுபடுயறான். அந்த சிறுவனின் சமுகத்தில் எதனை பெயர் மன நோயாளியாக மருகிரார்களோ அவர்களில் எதனை பெயர் வன்முறையில் ஈடுபடுகிறார்களோ தெரியாது..
எனவே வன்முறையால் மன நோயாளி ஆனவன் வன்முறையயே கையிலேடுப்பான்
இங்கே மன நோயாளி என்பது ( விசர்பிடிதவர்குள் அல்ல )/// நீங்கள் சொல்வதும் உண்மை தான் நண்பா
இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteஇனியும் நடக்காது என்பதற்கு எந்த வித உத்தரவாதமும் இல்லை. //
மிகக் கனமான பகிர்வு./// கருத்துக்கு நன்றி சகோ
koodal bala said...
ReplyDeleteஇது போல பல நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது ......இது எங்கே கொண்டு போய் விடுமோ தெரியவில்லை.......// உண்மை தான் நண்பரே ஆனால் இதை நியாயப்படுத்தி குற்றவாளிகளுக்கு ஊக்கம் கொடுக்கிறார்களே சிலர்
குணசேகரன்... said...
ReplyDeleteஆமாம். நானும் படித்தேன்.பார்த்தேன்.. இதற்கு ஏதாவது செய்ய வேண்டும்..
என்னோட வலைப்பக்கமும் வந்திட்டுப் போங்க//நன்றி நண்பா தங்கள் கருத்துக்கு ,இதோ வாறன்
A.R.ராஜகோபாலன் said...
ReplyDeleteநியாயமான காரணங்கள் தான்
வர வர இதுமாதிரியான எண்ணங்கள்
அதிகரிக்கவே செய்கிறது// நன்றி நண்பா உங்க கருத்துக்கு ,பாதிக்கப்பட்டது ஒரு உயிராச்சே
nalla pathivu,,,
ReplyDeletevaalththukkal,,,
\\\இது போல பல நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது ......இது எங்கே கொண்டு போய் விடுமோ தெரியவில்லை.......// உண்மை தான் நண்பரே ஆனால் இதை நியாயப்படுத்தி குற்றவாளிகளுக்கு ஊக்கம் கொடுக்கிறார்களே சிலர்\\\ இத்தகைய தவறு செய்பவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்கவேண்டும் .இதை நியாயப்படுத்துபவர்களை சட்டப்படி தண்டிக்க இயலாது என்றபோதிலும் தவறு செய்பவர்களை விட அதிக தண்டனைக்குரியவர்கள் இவர்கள் ....
ReplyDeleteஎன்ன செய்வது இவர்களை????
ReplyDeleteபயங்கரவாதிகளை உருவாக்குவோம்//
ReplyDeleteவணக்கம் பாஸ், தலைப்பே ஒரு மார்க்கமாக இருக்கே. ஐந்து வருசம் பாணும் பருப்பும் சாப்பிடுற ஆசையோ...
இருங்கோ படிச்சிட்டு வாரேன்.
இரண்டு அவனை வன்முறைக்கு தள்ளிய புறச்சூழல் காரணிகள்//
ReplyDeleteஆஹா..மச்சி நம்ம பெரிசைத் தானே சொல்ல வாரார்.
எதோ ஒரு அதிகார வர்க்கம், அவர்களால் முடக்கப்பட்ட நாட்டின் சட்டங்கள், மறுக்கப்பட்ட நீதி போன்றவை தான் பின்னணியாக இருக்கும்//
ReplyDeleteஆமாம், ஒரு நாட்டின் ஆதிக்க வாதம் எப்போது தன் கோரக் கண்களை அகலப்படுத்தி தூரப் பார்வை பார்க்கிறதோ,
அப்போது தான் வன்முறை- கிளர்ச்சிகள் வெடிக்கிறது.
.?, எதோ அறுபதடி கிணற்றில் தூண்டில் போட்டு மீன் பிடிப்பது போல//
ReplyDeleteஇவ்வளவு ரணகளப் பதிவுலும், ஒரு கிளு கிளுப்பு உவமை!
சகோ சிந்திக்க வைக்கும் விடயம், தவறினை நியாயப்படுத்துவதென்பது, மேலும் மேலும் பல தவறுகளைச் செய்வதற்கு தூண்டுகோலாக இருக்கும்,
ReplyDeleteஎப்போது தான் இவர்கள் திருந்துவார்களோ தெரியாது.
இராணுவம் என்றால், எந் நேரமும் துப்பாக்கிகு வேலை கொடுக்க வேண்டும் என நினைத்திருப்பார்கள் போலும்.
ReplyDeleteதலைப்பு பார்த்து பயந்துட்டேன்..
ReplyDeleteஉங்களின் கோவம் நியாமானது பாஸ்
ReplyDeleteமனதை கணக்கா வைக்கும் பதிவு
இதைத்தான் வேலியே பயிரை மேய்கிறது என்று சொல்லுவார்கள், உங்கள் கருத்தே என் கருத்தும்
. // இந்த உலகிலே மோசமான இராணுவம் என்றால் என் அனுபவத்தில் இலங்கை இராணும் என்று தான் கண்ணை மூடிக்கொண்டு சொல்வேன்//
ReplyDeleteஇது சொல்லியா தெரியனும் பாஸ்
//இதே கேள்வியை 87 களில் ஈழத்தில் இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த தமிழ் மக்களை கேட்டு பாருங்கள் ...!//
ReplyDeleteகேக்கலாம்தான் அவர்கள் சொல்லி அதுக்கான காரங்களை சொன்னால் அதை கேக்கும் மனதிடம் எமக்கு வேணுமே பாஸ்
குட் பதிவு பாஸ்
ReplyDelete//இனியும் நடக்காது என்பதற்கு எந்த வித உத்தரவாதமும் இல்லை. இந்த உலகிலே மோசமான இராணுவம் என்றால் என் அனுபவத்தில் இலங்கை இராணும் என்று தான் கண்ணை மூடிக்கொண்டு சொல்வேன். ஆனால் இதே கேள்வியை 87 களில் ஈழத்தில் இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த தமிழ் மக்களை கேட்டு பாருங்கள் ...!//உங்களின் கோவம் நியாமானது பாஸ்
ReplyDeleteமனதை கணக்கா வைக்கும் பதிவு
இதைத்தான் வேலியே பயிரை மேய்கிறது என்று சொல்லுவார்கள், உங்கள் கருத்தே என் கருத்தும்..
ஒன்று அவன் மனநோயாளியாக இருக்கவேண்டும்,
ReplyDeleteஇரண்டு அவனை வன்முறைக்கு தள்ளிய புறச்சூழல் காரணிகள்.
உண்மை இந் இரண்டு தான். இதைக் கவிதைகளிலும் நான் எழுதியுள்ளேன். ம்.ம்.ம்...Vetha.Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com.
ஏழை வீடு பிள்ளை என்பதால் கேட்பார் யாருமில்லை. பணக்கார வீட்டு பிள்ளைக்கு இப்படி நிகழ்ந்து இருந்தால் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு இருக்கலாம்.
ReplyDeleteஉங்கள் பதிவில் தலைப்பு சரியாகவே படுகிறது எனக்கு.நசிக்கப்படுகிற ஒரு புழுக்கூட தலை நிமிர்த்திக் கடிக்கத்தான் பார்க்கும்.இராணுவத்தில் சேர்ந்துவிட்டால் கொடூரம் என்கிற பாடத்தைப் படிப்பிப்பார்களோ.
ReplyDeleteசாதாரணமாக எங்களைப் போலத்தானே மனிதமுள்ள மனிதர்களாகப் பிறக்கிறார்கள்.
பிறகெப்படி !
சரியான பார்வை
ReplyDeleteநீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை நண்பா....
ReplyDeleteபயங்கரவாதிகள் உருவாவதில்லை... உருவாக்கப்படுகிறார்கள்.. பயங்கரவாதிகள் என்று உலக நாடுகளால் குறிப்பிடப்படுபவர்கள் அனைவரது வரலாறுகளையும் எடுத்துப்பாருங்கள்.. அவர்களுக்கு பின்னால் ஒரு நியாயமான கோரிக்கை கட்டாயம் இருக்கும்
87களில் இந்தியராணுவத்தின் பிடியில் இருந்து,வெளிநாட்டுக்கு ஓடியவர்களென்றால் இந்தியராணுவத்தைதானே சொல்லுவார்கள்.அந்தக்காலப்பகுதியில் நடந்தவற்றை பெரியவர்கள்மூலம் நான் அறிந்திருக்கிறேன்(நான் அந்தக்காலத்தில்தான் பிறந்தேன்.).
ReplyDeleteஇன்னுமோர் விடயம் என்னவென்றால்- பிறப்பதற்கு முதலே இந்திய ராணுவத்திடம் அடிவாங்கியவன் நான். புரியவில்லையா?
நிறைமாதக் கர்ப்பிணியின் வயிற்றில் துப்பாக்கியின் இரும்பு முனையால் ஓங்கி இடித்தவர்கள்தான் இந்திய ராணுவம்.அந்த நிறைமாதக் கர்ப்பம் நானேதான்.