நீண்டநாள் எனதாசை
கரைநகரிலுள்ள
"கசூரினா பீச்"க்கு
செல்ல வேண்டுமென்று,
ஒரு நாள் சென்றேன்
தனியாக..!
நீண்ட நேரம்
நீருக்குள் கிடந்து
மீண்டும் கரை வந்த போது..
பூவரசு நிழலின் கீழ்
கறுத்த குடை ஒன்று
ஆட்கள் அற்று
அநாதையாக விரித்து கிடந்தது!
சிறிது நேரத்தில்
அங்குமிங்கும் ஆடிய குடை,
காற்றுக்கு தான் ஆடுகிறது! என
கவனித்த போது
அதன் மறைவில் ஒரு உருவம்...
ஆர்வக்கோளாறில்
கிட்டப்போய் எட்டிப்பார்த்தேன்...
ஐயோ!
ஒன்றல்ல! ஒரு சோடி,
எதோ "ஆராய்ச்சி" பண்ணீனம்!
என்னை கண்டதும்
"இங்கிதம் தெரியாதவன் நீ"
எண்டு ஏசுகீனம்!
பேசாமல் வந்துவிட்டன் நான்,
இருந்தும்..,
கரைக்கு வந்ததும்
இருப்புக்கொள்ளாது
மீண்டும் கடலை தேடும்
அலைகள் போல,
'சின்ன பொடியன்' எனக்கு
இன்னும் ஒருக்கா
எட்டிப் பாக்கணும் போல....!
என்ன செய்ய,
மீண்டும் என்னை
ஏசுவீனமே!
'இங்கிதம் தெரியாதான்'
எண்டு...!!
பின் குறிப்பு ;- என்றோ எழுதியது, வெறும் நகைச்சுவைக்கு மட்டுமே! கலாச்சார காவலர்களே! இதில் உங்கள் கற்பனை குதிரையை அவிழ்க்காதீர்கள்;-)
Voted 1 to 2 in Indli
ReplyDelete//'சின்ன பொடியன்' எனக்கு
இன்னும் ஒருக்கா
எட்டிப் பாக்கணும் போல....!//
சின்னப்பொடியன்களுக்கே உள்ள நியாயமான ஆசை தான். தவறேதுமில்லை.
இங்கிதம் தெரியாத குடை !காட்சிகளுக்கு உங்களுக்குத் தடை!!
'சின்ன பொடியன்' எனக்கு
ReplyDeleteஇன்னும் ஒருக்கா
எட்டிப் பாக்கணும் போல....!
ரசித்து படித்த வரி நல்லா இருக்குது...
மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்...........
நல்ல கவிஉணர்வு.சிரிச்சிட்டேன் !
ReplyDeleteநண்பா நல்லா இருக்கு ரசித்தேன் .
ReplyDeleteஉங்கள் கற்பனை குதிரை பறக்கிறது...
ReplyDeleteஇன்று உங்கள் வலையில் தான் ஜாகை...
மாப்பிள நானும் வருசா வருசம் இஞ்ச இருக்கிற கடற்கரைக்கு போவன் என்ன ஒரு முன்னூறு கிலோமீற்றர் போகவேனும்..
ReplyDeleteஅனா அங்க நாங்க குடைக்குள்ள என்ன இருக்கென்னு பார்க்க தேவையில்ல ஆமாய்யா குடை மட்டுமல்ல உடையே இல்லாம சூரிய குளியல் செய்கினம்..!?
கோவணத்தோடையும் கொக்குத்தடியோடையும் நிக்கும் காட்டான பார்த்து சிரிக்கிறாயா சின்னப்பிள்ளை..
ஏனையா உடுப்போட நிக்கிறாயென்று கடக்கரையில உடுப்போட நிக்கிறவ குருடர்கள் உலகில் கண்கள் தெரிந்தவர்கள்..!?
காட்டான் குழ போட்டுட்டான்..
ஓ... கவிதை கூட வருமா ?
ReplyDeleteவாழ்த்துக்கள்..
கடவுளை மனிதன் படைத்தானா ?
என்று ஒரு ஆக்கம் தந்திருக்கிறேன் வாருங்கள்..
http://sivaayasivaa.blogspot.com
கவி உணர்வுக்கு சிரிப்புகள்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநல்ல நகைசுவை
ReplyDeleteஇன்று என் வலையில்
ReplyDeleteஉங்கள் கடவு சொல்லை (PASSWORD) பாதுகாப்பது எப்படி ?
இதில் யாருக்கு இங்கிதம் கிடையாது ??? #டவுட்டு
ReplyDeleteஇங்கேயுமா கலாச்சார காவலர்கள் வருவாங்க # டவுட்டு..
ReplyDelete//ஆர்வக்கோளாறில்
ReplyDeleteகிட்டப்போய் எட்டிப்பார்த்தேன்//
ஹா ஹா எட்டிபார்த்துட்டிங்களா..
நல்ல சிந்தனை..
கவிதை பிடிச்சிருக்கு
ReplyDeleteநல்ல காரியம் செஞ்சீங்க கந்து!
ReplyDeleteகடற்கரை நிகழ்வுகள் அங்கே-நல்
ReplyDeleteகவிதையாய் அமைந்திட இங்கே
குடையது அசைந்ததே ஆடி-அள்ளி
கொடுத்ததே நகைச்சுவைத் தேடி
உடையது விளம்பேல் என்றே-அவர்
உரைத்தனர் போலும் நன்றே
விடையது வேண்டாம் சாமி-இத்துடன்
விடுவீர்! தாங்கா பூமி
புலவர சா இராமாநுசம்
உலகம் முழுக்க இப்படித்தானா? பாவம் நீங்கள்.
ReplyDelete//இன்னும் ஒருக்கா
ReplyDeleteஎட்டிப் பாக்கணும் போல....!//
தப்பேதுமில்லை!
/// சென்னை பித்தன் said...
ReplyDeleteஇன்னும் ஒருக்கா
எட்டிப் பாக்கணும் போல....!//
தப்பேதுமில்லை// பெரியவர், நீங்கள் சொன்னா சரி தான் ஹிஹி ))
கற்பனை குதிரை செம சூடு...
ReplyDeleteஇங்கிதம் தெரிந்தவர்கள் ஜோசிக்க வேணும் பலர் வந்து போகும் கிராமத்து அழகான கடற்கரையில் ஆராட்சி செய்யக்கூடாது என்று எத்தனைகண்கள் பார்க்கும் என்று உணர்வுள்ளவர்களாக இருக்கனும் என்ன செய்வது அவர்களும் ஆசையிருக்கும் ஒதுங்க ஒரு ஆட்களற்ற வீடு கிடைக்கலப் போல அத்துமீற அதுதான் உங்கள் மீது கொட்டிவிட்டார்கள் வார்த்தையை அனலாக !
ReplyDeleteசில இடங்களில் கலாச்சாரக் காவலர்கள் தான் பண்பாடு காட்கின்றார்களோ என நினைக்க வைக்கின்றது சகோ! அவர்கள் இல்லாதது தான் பத்திரிகையில் வரும் சிசுக்கொலை கருக்கலைப்பு அதிகரிப்பு என்ற தகவல்கள்!
nallayirukku ...
ReplyDeletevaalththukkal..
கடற்கரையில் அவமானப்பட்ட நபர்!//
ReplyDeleteபாஸ், என்ன பாஸ், உங்களுக்கே இந்த நிலமையா;-)))
நீண்டநாள் எனதாசை
ReplyDeleteகரைநகரிலுள்ள
"கசூரினா பீச்"க்கு
செல்ல வேண்டுமென்று,
ஒரு நாள் சென்றேன்
தனியாக..!//
இதை நாங்கள் நம்பனுமாக்கும்;-)))
சரி, பெரியவங்க சொல்லுறீங்க, நம்பித் தானே ஆகனும்,
நீண்ட நேரம்
ReplyDeleteநீருக்குள் கிடந்து
மீண்டும் கரை வந்த போது..//
நீருக்குள் என்றால்,என்ன நீர் பாஸ்,
உள்ளூர் தண்ணீருக்குள்ளா, இல்லை வெளிநாட்டு விலை உயர்ந்த தண்ணீருக்குள்ளா:-)))
பூவரசு நிழலின் கீழ்
ReplyDeleteகறுத்த குடை ஒன்று
ஆட்கள் அற்று
அநாதையாக விரித்து கிடந்தது!//
யோ, கொஞ்சம் அங்காலை எட்டிப் பார்க்கிறது, ஈச்சம் பற்றை மறைவிலை ஈனஸ்வரம் கேட்டிருக்குமே;-))
மறைப்பும் இருக்காது.
சிறிது நேரத்தில்
ReplyDeleteஅங்குமிங்கும் ஆடிய குடை,
காற்றுக்கு தான் ஆடுகிறது! என
கவனித்த போது
அதன் மறைவில் ஒரு உருவம்...//
ஆகா...அந்த ஒரு உருவத்தின் பின்ன்னே இன்னோர் உருவம் இருந்திருக்குமே.
ஹி ஹி... அப்போ லைவில பார்த்திருக்கிறீங்க.... ஒரு சீடி போட்டு நிரூபனுக்கு குடுங்க பாஸ்.. பாவம் அந்தாளு... ஹி ஹி
ReplyDeleteஹி..ஹி..ஹி...நிஜத்துல நடந்தது மாதிரியே இருக்கு
ReplyDeleteஏன் திரும்பி பாக்க போனீங்க??? ஹிஹிஹிஹி
ReplyDeleteநல்லாத்தான் ஓடுது கவிதை றீலு.அருமை!..
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி