நேற்று நள்ளிரவை தாண்டிய நேரம், சுமார் இரண்டு மணி இருக்கும். இரவெல்லாம் கம்பியூட்டரோட இருந்த அசதியால் ஆழ்ந்த உறக்கத்தில இருந்திருந்தேன். அப்பொழுது திடீரென்று "டாங்" என்று எழுந்த சத்தம், என் நித்திரையை குழப்பி எழ வைத்தது. என்னடா! என்று நானும் அடிச்சி தடவி எழுந்தா, என்ர ரூம் முழுக்க ஒரே மல்லிகைப்பூ வாசம். 'நான் தான் எந்த மல்லிகைபூ சென்ட்ரும் பாவிக்கிறதில்லையே......!' எனக்கோ நடுக்கமாய் போச்சு. அப்பொழுது தான் ஒரு எலி, நான் நேற்று இரவு தண்ணீர் குடித்துவிட்டு வைத்திருந்த கிளாஸை தட்டி விழுத்திவிட்டு யன்னல் பக்கமாய் தாவிக்கொண்டிருந்தது.
அப்பாடா! என்று நானும் நிம்மதிப் பெருமூச்சு விட்டு, மீண்டும் படுக்கவென்று சரிந்தால், என் கட்டிலுக்கு அருகில் உள்ள ஜன்னலோரம் எதோ அசைவு கண்டு திரும்பினேன்.
எதோ ஒரு உருவம்!
ஐயோ.,
ஐயோ பேய் ......! பொம்புள பேய் ...! என்று நானும் அதிர்ச்சியோடு அலறத் தொடங்கினேன். அது தான் தாமதம், உடனே அந்த உருவம் மேலும் ஜன்னலுக்கு அருகில் வந்தது. என்னை கண்டுகொண்டவுடன் 'சத்தம் போடாதே, நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்' என்றது.

நானும் பயத்துடனே "சரி" என்றுவிட்டு, அந்த உருவத்தை சற்று உற்று பார்த்தேன். அது எங்கட செத்துப்போன தாத்தா போலவே இருந்தது. சற்று நடுக்கத்துடன், மனசிலே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு "நீங்க செத்துப்போன என்ர தாத்தா தானே" என்று கேட்டேன் அதை நோக்கி.. .
"இல்ல, நான் உன் தாத்தா இல்ல. உன்ர தாத்தான்ர அப்பா" என்றது.
அப்போ, நீங்க என்ர தாத்தா போல இருக்கீங்களே! என்று கேட்டேன் நான்.
அப்பிடி இல்ல கந்தசாமி! எனக்கு பிறந்ததால, உன்ர தாத்தா தான் என்னை போல இருந்தாரு, என்று சொல்லி, தன்னை புத்திசாலி என்று காட்டிக்க முனைந்தது அந்த உருவம்.
நீ என்னை தாத்தா என்றே கூப்பிடலாம் என்று சொல்லிவிட்டு "அதுசரி, முதலில் பேய் என்று தானே கத்தினாய், சற்று பிறகு ஏன் பொம்பிள பேய் என்று கத்தினாய்? " என்று கேட்டர் ஆவலாய்.
'இல்லை தாத்தா, நள்ளிரவில மல்லிகைப்பூ மணம் வீசினா அது பொம்பிள பேயாய் தான் இருக்கும் எண்டு நான் சினிமாவில பார்த்திருக்கன். அது தான் அப்படி கத்தினான்' என்றேன் நான். என் புத்திசாலித்தனத்தை பார்த்து பூரிப்படைந்த தாத்தா, அதை பெருமூச்சாக வெளிக்காட்டிக்கொண்டார்.
'தாத்தா! இந்த நேரத்தில அங்க தூங்காமல் எதுக்கு என்னை பார்க்க இவ்வளவு தூரம் வந்தனி, என் மீது உனக்கு அவ்வளவு பாசமா' என்று கேட்டேன் நான்.
ஓம் கந்தசாமி, நீ என்ர மகன்ர, மகன்ர, மகனாச்சே. என்ர வம்சத்தை விருத்தி செய்யப்போறவனாச்சே! அது தான், கொஞ்ச நாளாய் விண்ணுலகில் விடுமுறை வாங்கி உன்னை விடுப்பு பார்க்க, உன் பின்னாலே சுத்திக்கொண்டு இருக்கிறன்' என்றவர், தொடர்ந்து;
"நாலு கழுத வயசாச்சு, இன்னமும் உனக்கு பொறுப்பு வரேல்ல! சும்மா பொடியளோட சேர்ந்து ஊர் சுத்துகிறியே, ஒரு வேலைக்கு போகணும் என்ற எண்ணமே இல்லையா உனக்கு...?" என்றார் என் மீது பெரும் அக்கறை கொண்டவராக..
'எனக்கும் வேலைக்கு போகணும் என்று ஆசை தான் தாத்தா! ஆனா, அது நோகாத வேலையாய் இருக்கணுமே' என்றேன் நான்.
அது என்னடா நோகாத வேல! கொஞ்சம் விளக்கமா சொல்லேன்ரா கந்தசாமி என்றார் தாத்தா.
அது என்னடா நோகாத வேல! கொஞ்சம் விளக்கமா சொல்லேன்ரா கந்தசாமி என்றார் தாத்தா.
அது தான் தாத்தா 'இருந்த இடத்திலே இருந்து கஸ்ரப்படாம, ஏதாவது வேலை என்றால் எனக்கு ஒக்கே தான்' என்றேன்.
அப்போ நீ என் கூட வா, உனக்கு நான் அப்படி ஏதாவது வேலை எடுத்துத்தாறேன் என்றார் தாத்தா!
சரி தாத்தா! என்று நானும் அப்பாவித்தனமாய் தலையை ஆட்டிவிட்டு ... திடீரென்று நினைவுக்கு வந்தவனாக "என்ன தாத்தா நக்கலா, நீ தான் எல்லாம் அனுபவிச்சுவிட்டு என்பது வயசில போய்விட்டா. ஆனா, எனக்கு இப்ப தான் இருபத்தி நாலு வயசு. இன்னும் கல்யாணம் காட்சி கூட பார்க்கல, அதுக்குள்ளே என்னை உன் கூட கூப்பிடுறியே இது நியாயமா?" என்று கடிந்து கொண்டேன்.

கோவப்படாத கந்தசாமி, நான் சும்மா தான் சொன்னேன். சரி, அப்போ எப்படி தான் நோகாத வேலை தேடுறது? என்று தன் கையை தூக்கி நாடி மேலே வைத்து ஜோசிக்க தொடங்கினார் தாத்தா!
'ஆ, ஒரு ஐடியா! உன்கிட்ட தான் கம்பியூட்டரும், இணையமும் இருக்கே. நீ ஏன் ஒரு இணையத்தளம் தொடங்கக்கூடாது? பத்து டொலர் கட்டினா இப்ப சொந்தமா ஒரு டொமைன் எடுத்திடலாமே....' என்றார் தாத்தா.
என்ன தாத்தா விளையாடுறியா! அதுக்கு தான் எழுதத் தெரிஞ்சிருக்கணுமே. பள்ளிக்கூட காலத்தில நான் முழுசா ஒரு கட்டுரை எழுதியதே கிடையாது. இப்படி தான், ஒரு முறை ரீச்சர் கோவிலை பற்றி ஒரு கவிதை எழுதச்சொன்னா....
என்ன, எழுதினியா நீ ?- ஆர்வக்கோளாறில் தாத்தா...
ஓம் தாத்தா, முதல் நாள் தான் அஜித்தின்ர 'ஜி' படம் பார்த்திருந்தன். அதில ஒரு பாட்டு வரும் தானே "டிங் டாங் கோவில் மணி கோவில் மணி நான் கேட்டேன்" என்று.. அந்த பாட்ட அச்சு பிசகாமல் எழுதி கொடுத்தன். ரீச்சர் பிரின்ஸுபால்'ட என்னை இழுத்துப்போகாத குறை தான்....
இந்த லட்சணத்தில நான் எங்க, இணையத்தளம் தொடக்கி ...எழுதி....!
'அட போடா கந்தசாமி! உனக்கு இன்னமும் விவரம் பத்தல. இப்ப இணையத்தளம் தொடங்கிறத்துக்கு பெருசா எழுதப்படிக்கவெல்லாம் தேவையில்ல. ஒரே ஒரு தகுதி மட்டும் இருந்தா போதும்!' என்று சொல்லி சிரித்துக்கொண்டார் தாத்தா.
அது என்ன தகுதி தாத்தா?
அது தான்ரா, கொப்பி பண்ணி பேஸ்ட் பண்ணுறது.... உனக்கு தெரியாதா என்ன?
ஓம் தாத்தா! அதுவும் ஈசியான வேல தான். ஆனா, எவனாச்சும் கண்டு பிடிச்சா நாறடிச்சுடுவானே! என்றேன் ஆதங்கத்துடன்.
உனக்கு தெரியாது கந்தசாமி! இப்ப இணையத்தளம் வச்சிருக்கிறவங்கள் எல்லாம் உந்த வலைப்பூ வச்சிருக்கிற ஆக்களின்ர பதிவுகளை தானே கொப்பி பண்ணி போடுறாங்களாம்.
இதால ஒரு பிரச்சனையும் வராதா தாத்தா?
இல்ல கந்தசாமி! கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு இணைய தளத்தில பார்த்தன், "டாவின்ஸ் கூர்ப்பு விதியை கொப்பி அடிக்கினம், வள்ளுவற்ரையையும் பாரதியின்ரையையும் கொப்பி அடிக்கினம், ஆகவே நாங்களும் அடுத்தவேன்ர எழுத்துக்களை கொப்பி அடிப்போம்" என்று அரைவேக்காட்டுத்தனமாய் ஒரு இணையத்தளக்காரர் தங்கட இணையத்தளப்பக்க மூலைல எழுதி வச்சிரிக்கினம். அது போல நீயும் உன்ர இணையத்தளத்தில எழுதி வைக்க வேண்டியது தானே.
ஓம் தாத்தா, நல்ல ஐடியா தான்!
அது மட்டுமில்ல கந்து, நீ உந்த கொப்பி பண்ணிய செய்திகளுக்கு தலைப்பு வைக்கிறதிலையும் கவனமாய் இருக்கணும். ஏனெண்டால், நீ இணையத்தளம் தொடங்கினாப்பிறகு, யாழ்ப்பாணத்தின்ர கலாச்சார காவலர்களில் நீயும் ஒருத்தனாய் ஆகிடுவாய்.
அப்பிடியா தாத்தா..? பெரிய பொறுப்பாச்சே !
அதோட, நீ எப்போதும் கையில காமராவோட தான் இருக்க வேணும். முக்கியமா, பஸ்சுகளில ஆணும் பெண்ணும் முட்டுப்பட்டாலோ, இல்லை ஆட்கள் இல்லா தெருக்கள், பூங்காக்களில ஒரு ஆணும் பெண்ணும் கதைச்சுக்கொண்டு நின்றாலோ உடனே படம் பிடிச்சு 'யாழ்ப்பாணத்தில் கலாச்சார சீர்கேடு' என்ற தலைப்பில, அந்த படத்தை உன்ர இணையத்தளத்தின் முன் பக்கத்தில பிரசுரிக்கணும்.
சரி தாத்தா. அப்புறம் 'தமிழன்' என்ற கோசம் ஏதாவது.....??
உலகம் புரியாத பயலடா நீ கந்தசாமி! நேற்று இப்படி தான், ஒரு பிரபல தமிழ் இணையத்தள பக்கம் போனேன். அதில ஒரு செய்தி இருந்திச்சு "நீங்கள் மானத்தமிழன் என்றால் இதை வாசியுங்கள்" என்று! உடனே அடிச்சுப் பதைச்சு நானும் அதை வாசிச்சேன், வாசிச்சு முடிச்சதும் அந்த இணையத்தளத்துக்கு ஒரு இ-மெயிலும் அனுப்பினேன், "நான் உங்கட செய்தியை படிச்சிட்டேன். ஆகவே, தயவு செய்து என்னையும் மானத்தமிழனாய் ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று.. ஏனெண்டால், நமக்கு மானம் தான் முக்கியம் பாரு...! அது சரி, நீ வாசிச்சனியா கந்தசாமி அந்த செய்தியை?
வாசிக்கவில்லையே தாத்தா...! 'அப்போ...... நான் மானத்தமிழன் இல்லையா?' அழத்தொடங்கினேன் நான்.
"ஏதாவது புரட்சிகரமான பெயராக இருக்கணும்.....என்ன வைக்கலாம்....." என்று சொல்லிக்கொண்டே, மீண்டும் தன் கையை தூக்கி நாடி மேலே வைத்து ஜோசிக்க தொடங்கினார் தாத்தா!
"ஆ.. புதிய புதிய யாழ்ப்பாணம் என்று பெயர் வைக்கலாம் கந்தசாமி!" என்றார், எதோ பெரிய கண்டுபிடிப்பு நடத்திய சந்தோசத்தை முகத்தில் காட்டியவாறு.
"ஏன் தாத்தா, இரண்டு தரம் 'புதிய' என்று வரணும்? புதிய யாழ்ப்பாணம் என்று பெயரை வச்சு, நியூ ஜப்னா என்று இங்கிலிசிலையும் வச்சாத்தான் என்ன?" புரியாதவனாக கேட்டேன் நான்
அது வேண்டாம் கந்தசாமி! நீ தாத்தா சொன்ன போல பெயரை வை. என்றுவிட்டு, எதோ ஒரு அழைப்பு வரவே கையில் வைத்திருந்த கருவியை தூக்கி காதில் வைத்தவர், "ஹலோ சொர்க்கத்திலிருந்தா" என்று கதைக்க தொடங்கினார். சிறிது நேரத்தின் பின் "இதோ நான் உடனே வருகிறேன்" என்று பேசி முடித்தவர். 'கந்தசாமி எனக்கு அழைப்பு வந்திருக்கு நான் சொர்க்கத்துக்கு போகணும் மீண்டும் சந்திப்போம். உனக்கு ஜெயம் உண்டாகுக ' என்று சொல்லிக்கொண்டே கிளம்ப முற்பட்டவரை மறித்த நான்..
"தாத்தா ஒரு நிமிஷம்!"
என்ன கந்தசாமி?
"நீ......... சொர்க்கத்திலா இருக்கா..?"

உடனே என் நிலைமையை கண்டு பரிதாபப்பட்ட தாத்தா 'கவலைப்படாத கந்தசாமி. அடுத்த தடவ இப்படி ஒரு செய்தி வந்தா உடனே உனக்கு தகவல் அனுப்புகிறன். நீயும் ஓடிப்போய் வாசிச்சு, உன்னையும் மானத்தமிழனாய் உறுதி செய்து கொள்!' என்றார்.
நன்றி தாத்தா. அது சரி, நான் தொடங்க இருக்கிற இணையத்தளத்துக்கு என்ன பெயர் வைக்கலாம்? என்று கேட்டேன் ஆர்வத்தோடு."ஏதாவது புரட்சிகரமான பெயராக இருக்கணும்.....என்ன வைக்கலாம்....." என்று சொல்லிக்கொண்டே, மீண்டும் தன் கையை தூக்கி நாடி மேலே வைத்து ஜோசிக்க தொடங்கினார் தாத்தா!
"ஆ.. புதிய புதிய யாழ்ப்பாணம் என்று பெயர் வைக்கலாம் கந்தசாமி!" என்றார், எதோ பெரிய கண்டுபிடிப்பு நடத்திய சந்தோசத்தை முகத்தில் காட்டியவாறு.
"ஏன் தாத்தா, இரண்டு தரம் 'புதிய' என்று வரணும்? புதிய யாழ்ப்பாணம் என்று பெயரை வச்சு, நியூ ஜப்னா என்று இங்கிலிசிலையும் வச்சாத்தான் என்ன?" புரியாதவனாக கேட்டேன் நான்
அது வேண்டாம் கந்தசாமி! நீ தாத்தா சொன்ன போல பெயரை வை. என்றுவிட்டு, எதோ ஒரு அழைப்பு வரவே கையில் வைத்திருந்த கருவியை தூக்கி காதில் வைத்தவர், "ஹலோ சொர்க்கத்திலிருந்தா" என்று கதைக்க தொடங்கினார். சிறிது நேரத்தின் பின் "இதோ நான் உடனே வருகிறேன்" என்று பேசி முடித்தவர். 'கந்தசாமி எனக்கு அழைப்பு வந்திருக்கு நான் சொர்க்கத்துக்கு போகணும் மீண்டும் சந்திப்போம். உனக்கு ஜெயம் உண்டாகுக ' என்று சொல்லிக்கொண்டே கிளம்ப முற்பட்டவரை மறித்த நான்..
"தாத்தா ஒரு நிமிஷம்!"
என்ன கந்தசாமி?
"நீ......... சொர்க்கத்திலா இருக்கா..?"
ஆஹா..ரவுண்டு கட்டி அடிக்காங்களே தாத்தாவும் பேரனும். நடக்கட்டும் நடக்கட்டும்.
ReplyDeleteஅந்த பேய்ப்படம் பாத்ததும் அரண்டுட்டேன். பேய்த் தாத்தா அடிக்கடி வர வாழ்த்துக்கள்.
ReplyDeleteவித்தியாசமான அந்த குழந்தைகள் படம் அழகு.
new jeffna என்ற இணையத்தளத்தை கிண்டல் பண்ணியதற்காக எனது வன்மையான கண்டனங்கள் ஹாஹஹா
ReplyDeleteஅட உந்த கலாச்சார காவளர்களின் டொட் கொம் தொல்லை தாங்க முடியலைப்பா..!?
ReplyDeleteஅது சரி மாப்பிள கிளாசில தண்ணிய நிறைச்சு வைச்சிட்டு கிடக்காத தண்ணி ஓடிடும்.. (எலி தட்டி விட்டால்..!!!??)..!!!!!!!!!!!!!!!!!!!
காட்டான் குழ போட்டான்..
மாப்பூ இப்படி ராவுண்டுகட்டியடிக்கிறீங்கள் உண்மையில் பலவிடயங்கள் இப்படித்தான் எங்களுக்கு இனையங்களில் வருகின்றது இதைப் படிக்கும் போது சரியான மனஉளைச்சல் வரும் நண்பா !உண்மையான விசயத்தைச் சொல்கின்றது!
ReplyDeleteநீங்கள் சொல்ல வந்த விடயத்தை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்..
ReplyDeleteஅதிலும் இணையத்தளம் பற்றிய அலசல் அருமை.......
மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்...(பகுதி2)
என்ன சொல்ல வாறிங்க யாரைச் சொல்ல வாறிங்கண்ணு தெளிவா விளங்கிடுச்சி அவங்க தானே இப்ப கலக்கிற ஆளுங்க..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
சாருவின் ஆபாச அரட்டை உண்மையா? பொய்யா? ஆதார பதிவு
வணக்கம் பாஸ், இருங்க படிச்சிட்டு வாரேன்.
ReplyDeleteசங்கீதமாய் இலங்கைத்தமிழில் சுவாரஸ்யமாய் பேய்க்கதை சொன்னதற்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteதாத்தா பேச்சு பூராவுமே வில்லங்கமா
ReplyDeleteஇருந்துச்சா எனக்கும் உங்களைப்போலவே
சொர்கத்திலா இருக்காருங்கிற சந்தேகம் வந்திச்சு
சுவாரஸ்யமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
இங்கு இந்த டொட்காம் மிக பிரபலமாச்சு.. அதைவிட இங்கு இருப்பவர்கள் யாழ்பாணத்தில் ஆங்காங்கே நடக்கும் சில தவறுகளை ஒட்டு மொத்தமாக எல்லோரும் இப்படித்தான் என்பதுபோல் எழுதுகிறார்கள்... இவர்கள் வருமானத்திற்காக எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று முடிவெடுத்து விட்டார்கள் போலும்..!!
ReplyDeleteநான் இங்கு வந்த ஆரம்பகாலங்களில் சிலோனைப்பற்றி செய்தி படிக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் மாலா கடைக்கு முன்னால் தவம் கிடப்பம்.
இப்ப இணையம் வந்த பின்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்கிறோம்.. என்றாலும் இங்கு இருக்கும் நம்மவர்கள் தாங்கள் யாழ்பாணத்தை விட்டு வெளியேறும் போது யாழ்பாணம் எப்படி இருந்ததோ அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்..
உலகம் ஒரு கிராமத்தைப்போல் இணையத்தால் சுருங்கி வரும் இன்னாளில் இவர்களின் அந்த தலம் ஒட்டு மொத்தமாக நம்மை பின்னோக்கி அழைத்து செல்கிறது..!?
இங்கு இருக்கும் அதிகமாணவர்கள் காட்டானை போன்றவர்களே.. பச்ச புள்ளங்கள்.. எதை கொடுத்தாலும் கேள்வி கேட்காமல் சப்புவார்கள்...!?
ஆனால் இப்போது அங்கிருந்து வரும் இளைஞர்களை பார்கிறேன்.. மிக தெளிவாக இருக்கிறார்கள்.. இங்கிருக்கும் பழம் பஞ்சாங்கங்களை கொஞ்ச காலம் யாழ்பாணத்தில் இருக்கவிட்டு அழைத்து வர வேண்டும் ...!?
சூப்பர்! சும்மா ரவுண்டு கட்டி அடிச்சிருக்கீங்க! அடிகடி தாத்தா வரட்டும்! :-)
ReplyDeletenallawe yosikkuringa boss, unga thaathakita solli enakkum konjam advice pana solungalen ?
ReplyDeleteதாத்தாவும் பேரனுமா கலக்கிட்டீங்க!
ReplyDeleteமாப்ள ரைட்டுய்யா!
ReplyDeleteதாத்தாவும் பேரனும் கலக்கிட்டீங்களோ இல்லியோ.. ஆனால் நீங்கள் கலக்கின ஆசாமிக்கு கலக்கியிருக்கும்..!!!
ReplyDeleteசெம அடி! இந்த கேவலங்கெட்டவங்கள பற்றி கதைக்கிறது செவிடன் காதில ஊதின சங்கு!!
ReplyDeleteஉந்த தளங்களுக்கு போறதே பெரிய கலாச்சார சீர்கேடு
kalakkal.
ReplyDeleteநல்லது... வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையான விடயம் .. தாத்தா , பேரன் வடிவில்..
ReplyDeleteநீ.. சொர்க்கத்திலா இருக்கா..
ReplyDeleteமுத்தாய்ப்பு...வாழ்த்துக்கள்...
அருமையாக நகைச்சுவை கலந்த கற்பனையில் நச்சுனு சில விடயங்களை சொல்லி இருக்கிறீங்க.கலக்கல்
ReplyDeleteபடிக்க படிக்க சிரிக்க வைத்த பதிவு. சிந்திக்கவும் முடிந்தது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteமீண்டும் வணக்கங்கள் பாஸ்,
ReplyDeleteஎனக்கோ நடுக்கமாய் போச்சு. அப்பொழுது தான் ஒரு எலி, நான் நேற்று இரவு தண்ணீர் குடித்துவிட்டு வைத்திருந்த கிளாஸை தட்டி விழுத்திவிட்டு யன்னல் பக்கமாய் தாவிக்கொண்டிருந்தது.//
ReplyDeleteஎன்ன கிளாஸ், அந்த தண்ணிக் கிளாஸ் இல்லைத் தானே பாஸ்.
அப்பாடா! என்று நானும் நிம்மதிப் பெருமூச்சு விட்டு, மீண்டும் படுக்கவென்று சரிந்தால், என் கட்டிலுக்கு அருகில் உள்ள ஜன்னலோரம் எதோ அசைவு கண்டு திரும்பினேன்//
ReplyDeleteநல்ல வேளை நீர் நமீதாவை நினைச்சுக் கொண்டு தூங்கவில்லை;-)))
ஹி.....விட்டால் நமீதாவே கனவிலை வந்திட்டா என்றும் சொல்லியிருப்பீங்க பாஸ்.
எதோ ஒரு உருவம்!
ReplyDeleteஐயோ.,
ஐயோ பேய் ......! பொம்புள பேய் ...! என்று நானும் அதிர்ச்சியோடு அலறத் தொடங்கினேன்.//
அடப் பாவி, பேயிலை பொம்பிளைப் பேய் என்று நினைக்கிறீயா.
மவனே, பிச்சுப் புடுவேன் பிச்சு.
பாஸ், எழுத்து நடை சூப்பர், கலக்கலான மண் வாசனை கமழும் உரை நடை. வேண்டிய இடங்களில் ஏற்ற- இறக்கங்கள், குறியீடுகள் கொடுத்துப் பதிவினை நகர்த்தியிருக்கிறீங்க.
ReplyDeleteபாடசாலை போகும் வெள்ளை ஜீன்ஸ் பொடியள் கையில் கமெரா போன் இருப்பதால் வந்த விளைவு தான் இந்த மாதிரியான இணையத் தளங்களும், இவர்களால் காட்டப்படும் யாழ்ப்பாணத்தின் ஓசிச் சீன்களும்.
ஊடகம் பற்றிய சரியான அறிவு ஏதுமின்றி, தாம் பிரபலமாக வேண்டும் எனும் நோக்கில் வீடியோ எடுத்து கலாச்சாரம் பற்றி கதை பேசும் காவலர்களின் இழிவான செயல் தான் இது பாஸ், கேட்க ஆளில்லை எனும் நினைப்பில் தான் இவ்வாறு செய்கிறார்கள் என்று நினைக்கின்றேன்.
நீங்க வாங்க, நாங்களும் ஒரு தளம் தொடங்கி, இவர்களுக்குப் போட்டியாக எழுதுவோம்;-)))
கந்தசாமி...இப்பிடியெல்லாம் பயப்படுத்தபடாது.பேய்,மல்லிகைப்பூ,
ReplyDeleteதாத்தா,சொர்க்கம்....வெக்கையெண்டு கதவு திறந்திட்டுத்தான் படுக்கிறனான்.இண்டைக்கு அவியல்தான் !
விஷயத்தைச் சொன்ன விதம்.அதுவும் சொர்க்கத்தில இருக்கிற தாத்தாவையும் கூப்பிட்டு....அசத்திட்டீங்க !
சிரிக்கிறதா இல்லாவிட்டால் சீறுவதா என்று தெரியல சகோ..
ReplyDeleteகிழிச்சு தொங்கப் போட்டுட்டீங்க