கோடி அழகில் ஒருத்தி ..!


தென்றல் காற்றில் திரை கிழிய
வெள்ளை மலர் ஒன்று முகம் மலருது,
பனித்துளியின் சிதறல்களால்
அதுவும் மெதுவாய் நாணம் கொள்ளுது!

வாய் மொழி மவுனமாக
வார்த்தைகள் புதைந்து போகுது - உன்
கூர் விழி பார்வையால், புது
சொல்லாமொழி கருவாகுது!

இருளின் கருமை கிழிப்பதால்
நீயும் நிலவும் ஒன்றானது - என்
இருதயம் தினமும் துடிப்பதால்
அதுவும் உன்னை கொண்டாடுது!

இரவின் மடியில் நிலவாய் நீ
இயற்கை படைப்பின் மகளாய் நீ
சுவர் தேடும் சித்திரமாய் நீ - பல
காளையர் கனவின் சுவர்க்கமாய் நீ;

பாதி அழகில் பிறை நிலவே
முழு மதியாய் முன்னே வா
கோடி அழகில் ஒன்றான
உன்னழகை பாட வா..?!

பின் குறிப்பு :- சமீபத்தில எதோ ஒரு தளத்தில, மேலே இருக்கும் அந்த புகைப்படத்தை கொடுத்து  அதற்கு ஏற்ற கவிதை எழுதி அனுப்புமாறு ஒரு போட்டி வைத்தார்கள். நான் கலந்துகொள்ளவில்லை, இருந்தாலும் எதோ நாலு வரி எழுதணும் போல இருந்துச்சு அது தான்;-)

40 comments:

  1. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. அசத்தலான கற்பனை ........கிரேட் ...

    ReplyDelete
  3. பரவாலயே கவிதையிலும் கலக்கிரீன்களே தல!!

    ReplyDelete
  4. நிரூபனுக்கு போட்டோ மிக்சிங் எல்லாம் பண்ணி குடுக்கிறீங்களே...எனக்கும் ஒன்னு??நானும் ஸ்ரீதேவியும் நிக்கிற மாதிரி ஹிஹிஹி

    ReplyDelete
  5. நிரூபனுக்கு போட்டோ மிக்சிங் எல்லாம் பண்ணி குடுக்கிறீங்களே...எனக்கும் ஒன்னு??நானும் ஸ்ரீதேவியும் நிக்கிற மாதிரி ஹிஹிஹி

    ReplyDelete
  6. நல்லா இருக்கு பாஸ்!

    ReplyDelete
  7. //மைந்தன் சிவா said...
    நிரூபனுக்கு போட்டோ மிக்சிங் எல்லாம் பண்ணி குடுக்கிறீங்களே...எனக்கும் ஒன்னு??நானும் ஸ்ரீதேவியும் நிக்கிற மாதிரி ஹிஹிஹி//
    ஆகா! பயபுள்ள அத வச்சு கொலையாக் கொல்லப் போறான்!

    ReplyDelete
  8. கவிதை சிறப்பாக உள்ளது
    போட்டியில் கலந்துகொண்டிருக்கலாம்
    நல்ல பதிவு.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. பாட்டு போல இருக்கிறது. அருமை..

    ReplyDelete
  10. கவிதை நன்று

    ReplyDelete
  11. கவிதையிலும் கலக்குறீங்களே. எளிய நடையில் சிறப்பான கவிதை. தொடருங்கள் நண்பரே.

    ReplyDelete
  12. கவிதையிலும் அசத்தரீங்க ..
    வாழ்த்த்குக்கள்..

    ReplyDelete
  13. கோடி அழகில் ஒருத்தி ..!//

    ஆகா...ஏழரை உச்சியிலை வந்து தொற்றி விட்டதோ, நம்ம பாஸுக்கு.

    காதல் கவிதை, அதுவும் கோடி அழகிகளில் ஒருத்தி என்று வர்ணிக்கிறார்.

    ReplyDelete
  14. மைந்தன் சிவா said...
    நிரூபனுக்கு போட்டோ மிக்சிங் எல்லாம் பண்ணி குடுக்கிறீங்களே...எனக்கும் ஒன்னு??நானும் ஸ்ரீதேவியும் நிக்கிற மாதிரி ஹிஹிஹி//

    ங்.........கொய்யாலா....ஆசையப் பாரு,
    வேணும்னா, பரங்கி மலை ஜோதியும், நீங்களும் நிற்கிற மாதிரி மிக்ஸ் பண்ணித் தரலாம்.

    அதுவும் வேண்டாம் என்றால், மாலு கடை சரோவும், மைந்தன் சிவாவும் நிற்கிற மாதிரிப் படம் எடிற் பண்ணித் தருவார் நம்ம பாஸ்;-)))

    ReplyDelete
  15. தென்றல் காற்றில் திரை கிழிய
    வெள்ளை மலர் ஒன்று முகம் மலருது,
    பனித்துளியின் சிதறல்களால்
    அதுவும் மெதுவாய் நாணம் கொள்ளுது!//

    ஆகா..சான்ஸே இல்லை பாஸ், உங்களுக்குத் தொற்றியிருக்கிறது வலு ஸ்ரோங்கான வைரஸ்.

    ReplyDelete
  16. வாய் மொழி மவுனமாக
    வார்த்தைகள் புதைந்து போகுது - உன்
    கூர் விழி பார்வையால், புது
    சொல்லாமொழி கருவாகுது!//

    ஆகா...அப்ப நிறையக் கவிதைகள் எழுதத் தொடங்கியிருப்பீங்க தானே, ஒருககாப் பார்த்தால் போதுமே.....பிறகு அதனை நினைத்து நினைத்து., தூக்கத்தைக் கெடுப்பது தானே காதலோடை வேலை.

    ReplyDelete
  17. கோடி அழகில் ஒருத்தியிடம் மனதைப் பறி கொடுத்து, அவளைக் காணுமிடமெங்கும் காதல் உணர்வு தோன்ற நோக்கிக் கவிதையாக்கி எம்மோடு பகிர்ந்திருக்கிறீங்க. அருமையான கவிதை பாஸ்.

    கோடி அழகிகளில் ஒருத்தி- மனதினுள் எண்ண அலைகளைத் தட்டி விட்டிருக்கிறாள்!

    ReplyDelete
  18. நல்ல கவிதை கந்து.

    ReplyDelete
  19. எழுதியிருந்தா உங்களுக்குதான் பரிசு! நன்றாக இருக்குது

    ReplyDelete
  20. சகோ... நல்ல முயற்சி கவிதை நன்றாக உள்ளது

    ReplyDelete
  21. ஒரு சந்தத்தோடு இசைந்திருக்கிறது கவிதை.போட்டியில் கலந்திருக்கலாம்.இனோரு சந்தர்ப்பம் வந்தால் விட்டுவிடாதீர்கள் !

    ReplyDelete
  22. பாஸ் அழகாக கவிதையும் அசத்தலாக வருகிறது உங்களுக்கு வாழ்த்துக்கள்,
    கவிதை போட்டியில் கலந்து இருக்கலாம் நீங்கள்.
    ஒரு முதலிடத்தை தவற விட்டுவிட்டிர்கள்

    ReplyDelete
  23. பாதி அழகில் பிறை நிலவே
    முழு மதியாய் முன்னே வா
    கோடி அழகில் ஒன்றான
    உன்னழகை பாட வா..?!
    ஏன் வினாக்குறி அதுதான் பாடிட்டின்களே
    தல மிக அருமையாய் உள்ளது.

    ReplyDelete
  24. பாதி அழகில் பிறை நிலவே
    முழு மதியாய் முன்னே வா...

    இந்த வரிகள் மிகவும் அழகாக உள்ளன..
    (http://akulan1.blogspot.com/2011/07/blog-post.html)

    ReplyDelete
  25. அருமையான கவிதை படத்திக்கு ஏற்றால் போல் இருக்கு

    ReplyDelete
  26. பாதி அழகில் பிறை நிலவே
    முழு மதியாய் முன்னே வா
    கோடி அழகில் ஒன்றான
    உன்னழகை பாட வா..?!


    good vaalthukal
    http://www.kovaikkavi.wordpress.com
    Vetha.Elangathilakam

    ReplyDelete
  27. ஏதோ எழுத நாலு வரி அல்ல.. நல்ல ஏற்ற இறக்கத்துடன், தேர்ந்த கவிஞரைப் போன்றுதான் எழுதியிருக்கிறீர்கள்.. பகிர்வுக்கு நன்றி..!

    ReplyDelete
  28. போட்டில கலந்திருக்கலாம்.. காசா பணமா?

    ReplyDelete
  29. அருமை. எந்த தளம் அது?

    ReplyDelete
  30. கவித, கவித, உன்ன நெனைக்கும் போது அருவியா கொட்டுது. அருமை.

    ReplyDelete
  31. இரவின் மடியில் நிலவாய் நீ
    இயற்கை படைப்பின் மகளாய் நீ
    சுவர் தேடும் சித்திரமாய் நீ - பல
    காளையர் கனவின் சுவர்க்கமாய் நீ;

    மாப்பிள நீ கொன்னுட்ட!!
    காடான் குழ போட்டான்....!!

    ReplyDelete
  32. /////பாதி அழகில் பிறை நிலவே
    முழு மதியாய் முன்னே வா////

    இல்லப்பா அரை குறையாய் தான் வந்திருக்கேன்.. ஹ..ஹ..ஹ.

    ReplyDelete
  33. வரிக் கோர்ப்பு அருமையப்பா...

    ReplyDelete
  34. இரவின் மடியில் நிலவாய் நீ 
    இயற்கைப் படைப்பில் மகளாய் அருமையான கவித்துவம் போட்டியில் கலந்திருக்கலாம் சகோ!

    ReplyDelete
  35. எனக்கும் சாருக்ஹான் மாதிரி முடிவளர்த்து தனிமரம் நிற்பது போல் படம் வரையனும் பாஸ் முடியுமா?

    ReplyDelete
  36. ///பலே பிரபு said...

    அருமை. எந்த தளம் அது?
    //மூன்றாம் கோணம் என்ற ஒரு தளம் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  37. ///Nesan said...

    எனக்கும் சாருக்ஹான் மாதிரி முடிவளர்த்து தனிமரம் நிற்பது போல் படம் வரையனும் பாஸ் முடியுமா?/// புரியவில்லை நண்பா, சற்று விளக்கமாக மெயில் பண்ணுங்கள் , என்னால் முடியுமென்றால் முயற்சிப்பேன் .

    ReplyDelete
  38. அடடா போட்டியைத் தவற விட்டீர்களே சகோ. யாருக்குத் தெரியும் இந்தக் கவிதைக்குக்கூட
    அந்த முதலிடம் கிடைத்திருக்கலாம். பறவாயில்லை இன்னொரு போட்டி வராமலா போகும்.இன்னும்
    முயற்சியுங்கள் உங்கள் வாழ்விலும் கவிதை மழை பொழியட்டும் வாழ்த்துக்கள்.................................

    ReplyDelete
  39. கந்தசாமி நல்ல கவிதை சாமி
    தந்தசாமி நீர் தங்கசாமி
    இந்தசாமி வாழ்த்த வந்தசாமி
    ஏற்பீர்சாமி என்றும் சாமி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete