இன்று அரசியல் விமர்சகர்களாலும், அரசியலாலர்களாலும், வெட்டி வீராப்பு பேசுபவர்களாலும் கண்கொத்தி பாம்பாக கவனிக்கப்பட்டுக்கொண்டிருப்பவர் சீமான். இணையத்தளங்களில் சீமான் பற்றிய விமர்சனம் படு சூடாக நடந்துகொண்டிருக்கிறது.சமீபத்தில முகநூலில் சீமான் பற்றிய விமர்சனம் நடந்துகொண்டிருந்தது.(வழமையாக அந்த நபருக்கு இது தான் வேலை)எனினும் வழமைக்கு மாறாக சீமான் பற்றி கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார்கள் சிலர் .இதென்னடா இப்படி எல்லாம் விமர்சிக்கிராங்களே, யார் இவங்க என்று நினைத்து விமர்சனம் முன்வச்ச சிலரின் முகநூலுக்கு சென்று பார்த்தேன். அப்ப தான் தெரிந்தது அநேகமானோர் தங்கள் அபிமான கட்சி ( தி மு க ) சார்பாக ஒரு நோக்கத்தோடு தான் இந்த விமர்சனங்களை முன்வைக்கிறார்கள் என்று.
பொதுவாக இப்பொழுது சீமான் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்.
1. அ தி மு க வுக்குதேர்தலிலே ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.(முக்கியமானது)
2. சீமானுடைய பேச்சுக்களும் நடத்தைகளும் சினிமா தனமாக இருக்குதே ஒழிய ஆக்க பூர்வமாக இல்லை.
3.ஈழத்தை வைத்து அரசியல் செய்கிறார்.
4.பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு பெரியார் கொள்கைகளுக்கு எதிராக செயற்படுகிறார்(முக்கியமாக தேவர் சிலைக்கு மாலையிட்டது).
5. பாஞ்சாலம் குறிச்சி(1997) படத்தில் தமிழரின் பண்பாடுகளுக்கு முரணாக உதட்டோடு உதடு முத்தக்காட்சி வைத்தவர் சீமான்.(முட்டையில மயிர் பிடுங்கிறாங்க)
6. சீமான் என்பது தமிழ் பெயர் இல்லை (இப்பிடியும் சொல்லுறாங்க சிலர்)
இப்படியாக பல பல குற்றச்சாட்டுக்களை இணையங்களிலே அடுக்கிக்கொண்டே போகிறார்கள். (ஆனால் இவ்வாறு விமர்சனம் முன் வைப்பவர்கள் பொது களத்தில் இறங்குகுகிரார்களா என்றால் நிச்சயமாக பதில்- இல்லை! )
பேச்சு என்பதும் ஒரு ஆயுதம் தான். ஒருவர் கூட்டத்தின் முன் வந்து எந்த வித உணர்ச்சிகளையும் காட்டாது ஒரு கருத்தை சொல்லிவிட்டு போவதை விட, அதே விடயத்தை உணர்ச்சிகரமாக சொல்லும்பொழுது அது மக்களிடையே விழிப்பை உண்டாக்கிறது. இதை சினிமாத்தனம் என்பது என்னை பொறுத்தவரை முட்டாள்தனம். அத்தோடு ஆக்ரோசமாக பேசுவது என்பது எல்லோராலும் முடியாத விடயம்.(நான் அறிந்த வரை மிகவும் மென்மையாக பேசி அது மக்களாலே உற்று கவனிக்கப்படும் பேச்சாக "தந்தை" செல்வாவின் பேச்சு இருந்துவந்தது.)
சரி முதலாவது குற்றச்சாட்டுக்கு வருவோம்.தமிழகத்தை பொறுத்தவரை தி மு க, அ தி மு க என்ற இரு பெரும் திராவிட கட்சிகளை தவிர்த்து இன்னொரு கட்சி ஆட்சியில் வருவது என்பது இன்றைய நிலைமையில் முயல் கொம்பு தான். தமிழர்களுக்கு குறிப்பாக தினந்தோறும் கொடுமைகளை அனுபவிக்கும், சுட்டு கொல்லப்படும் அந்த தமிழ் நாட்டு மீனவர்களுக்கும்,ஸ்பெக்ராம் ஊழலில் கோடி கோடியாக மக்களில் பணங்களை கொள்ளையடித்தும் ,மற்றும் முக்கியமாக ஈழ தமிழர்களுக்கு மிக பெரிய துரோகத்தை செய்த காங்கிரஸ், திமுக கூட்டணியை தோற்கடிப்பதற்காகவே தான் அ தி மு க வுக்கு ஆதரவு வழங்குவதாக தன்னிலை விளக்கம் கொடுக்கிறார் சீமான்.
சீமான் சொல்வதிலும் நீயாயம் இல்லாமல் இல்லை.அதற்காக ஜெயலலிதாவை நியாயப்படுத்த வரவில்லை.ஊழலிலே கருணாநிதிக்கு சளைக்காதவர் அவர்.எனினும் இஸ்பெக்ராம் ஊழல், திமுகா மீண்டும் காங்கிரசோடு கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்பதன் மூலம் புஸ்வானம் ஆக்கப்பட்டுவிடும் என்கிறார் ஜெயலலிதா.( இவவின் ஊழல் இன்னமும் கிடப்பில் கிடக்கிறதே என்ற கவலை போலும்)இதிலும் உண்மை இல்லாமல் இல்லை. மிருகங்களை போல கடலிலே தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் போதும்,தமிழின தலைவர் என்பவர்- தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை வரும் போதும் வெறும் காகிதங்களோடும் கண்டனங்களோடும் தனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லாதது போல காட்டிகொண்டிருக்கிறது தி மு க. காங்கிரசை பொறுத்தவரை தமிழ் நாடும் இந்தியாவுக்குள் தான் இருக்குறது என்பதை மறந்து பல காலம். ஆக இந்த கூட்டணியால் தமிழனுக்கு விடிவு இல்லை என்பதை விட, கடுமையாக இருள் சூழ்ந்து வருகிறது என்பதுவே உண்மை.
ஆகவே தி மு க விற்கு மாற்றீடாக அ தி மு க வை கொண்டு வருவதை விட மாற்றீடு வேறு எதுவும் மக்களுக்கு இருக்கப்போவதில்லை, ஏனெனில் இவற்றுக்கு மாற்றீடாக வேறு பலமான கட்சிகள் இல்லை .சீமானை பொறுத்தவரை தனித்து நின்று வெல்லும் அளவுக்கு தற்சமயம் அவர் கட்சி வளர்ந்துவிடவில்லை.தற்சமயம் அவ்வாறு தனித்து நின்றால் நிச்சயமாக வாக்குகள் சிதறடிக்கப்படும் அதன் மூலம் மீண்டும் தி மு க+ காங்கிரஸ் கூட்டணியே ஆட்சிக்கு வந்து, மீண்டும் பழைய பஞ்சாங்கமே. அதே போல தேர்தலில் பங்குபற்றாது வெறும் பார்வையாளராக சீமானின் கட்சி நின்றாலும் நிச்சயமாக மேலே சொன்ன நிகழ்வு தான் நடக்கும்.
ஒரு தராசில் ஒரு தட்டில் அ தி மு க வும் ,மற்றைய தட்டில் தி மு க +காங்கிரஸ் கூட்டணியும் இருப்பதாக நினையுங்கள். உங்களுக்கு எது கனமாக தெரிகிறதோ, உங்களுக்கு எந்த தட்டில் உள்ளது அளவுக்கு அதிகமாக வேதனையையும், துரோகத்தையும் கொடுத்ததோ அதை அப்புறப்படுத்துவதே இன்றைக்கு மக்களின் தேவை.............இதை தானே சீமானும் செய்கிறார்.
ஈழத்திலே உச்ச கட்ட யுத்தம் நடந்துகொண்டு இருந்த வேளை ராமேஸ்வரத்தில் நடந்த கூட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கடுமையாக தாக்கி பேசியதால் "இறையாண்மைக்கு எதிரானது" என்று கூறி சீமானும் இயக்குனர் அமீரும் தமிழக அரசால் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.சிறையில் இருந்து வெளி வந்த பின்னர் அமீர் தன் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டார்.
ஒரு முறை இயக்குனர் அமீரிடம் இது பற்றி நிருபர் கேட்ட போது "தான் இந்த விடயங்களில் இருந்து தற்போது ஒதுங்கி இருப்பதாகவும், ஆனால் சீமான் சிறையில் தன்னோடு இருந்த போது கூட எந்த வித மன மாற்றமும் இல்லாமல் உறுதியோடு இருந்தார்" என்று கூறினார்.அந்த சம்பவத்தின் பின்னரும் சீமான் அநியாய வழியில் (தேசிய பாதுகாப்பு சட்டம்) சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இப்படி அநாதரவான தமிழினத்துக்கு ஆதரவாககுரல் கொடுப்பதையே தேச விரோதமாக கருதிகிறது இப்போதைய மத்திய மாநில அரசுகள்!
ஆகவே நாம் விமர்சனம் என்று கூறி தமிழனுக்காக முன்னின்று குரல் கொடுக்கும் ஒரு சிலரையும் கடுமையாக தாக்கி விமர்சிக்கும் போது ,எதிர்காலத்தில் தன் இனத்துக்காக, மக்களுக்காக என்று எவனும் குரல் கொடுக்க வரமாட்டான், அவ்வாறு குரல் கொடுக்க வந்தாலும் இந்த மக்கள் தன் மீது "துரோகி பட்டம்" "சுயலனவாதி பட்டம்" "ஓட்டுப்பொறுக்கி பட்டம்" என்று பல்வேறு விதமான பட்டங்களை தானே இறுதியில் வழங்குவார்கள் என்று ஒதுங்கியே இருந்துவிடுவான்.
இருந்தாலும் எனக்கு ஒரு பயமும் தொற்றி கொள்கிறது.சில காலங்களுக்கு முன்னர் சீமானை போலவே தன் துணிவு மிக்க பேச்சாற்றலால் ஒரு மிகப்பெரும் கூட்டத்தை தன் பின்னால் கொண்ட வை.கோ,எதிர்காலத்தில் பலம் மிக்க அரசியல்வாதியாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அண்ணன் வை.கோ, பிற்காலத்தில் கருணாநிதியோடு ஏற்பட்ட முரண்பாடுகளால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்னர் கருணாநிதிக்கு எதிர்ப்பு அரசியல் செய்யும் பொருட்டு அ தி மு க வுடன் இணைந்து இன்று ஜெயலலிதா எந்த அறிக்கை விட்டாலும் எதிர்த்து கேள்வி கேட்க்க முடியாது மொளனி ஆக்கப்பட்டது போல எதிர்காலத்தில் சீமானின் நிலை வந்தால்........."கருணாநிதி வந்தால் மட்டுமல்ல ஜெயலலிதா வந்தாலும் நான் இருக்கும் இடம் சிறைச்சாலை தான்" என்கிறார் சீமான். இன்றைய பொழுதில் சீமானது நிலை கத்தில் மேல் நடப்பது போன்று. கடந்து முடிப்பார் என்று நான் இதுவரை நம்புகிறேன்.எதிர்கால சீமானின் அரசியல் இதற்க்கு விடையாக அமையும்.
என் மனசில் பட்டத்தை மட்டுமே இங்கே கொட்டியுள்ளேன். தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.

// பாஞ்சாலம் குறிச்சி(1997) படத்தில் தமிழரின் பண்பாடுகளுக்கு முரணாக உதட்டோடு உதடு முத்தக்காட்சி வைத்தவர் சீமான் //
ReplyDeleteதமிழர்கள் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துக்கொள்ளவே மாட்டார்களா...
சீமானுடைய முக்கிய குறிக்கோள் தி.மு.கவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே... அதற்காக வேறு வழியில்லாமல் அம்மா பக்கம் சேர்ந்திருக்கிறார்...
ReplyDeleteஏன் திரட்டிகளில் இன்னும் இணைக்கவில்லை... பதிவை காலையில் வெளியட உத்தேசமா...
ReplyDeleteremove word verification please...
////ஏன் திரட்டிகளில் இன்னும் இணைக்கவில்லை... பதிவை காலையில் வெளியட உத்தேசமா.../// சற்று நேரத்தில் இணைத்துவிடுவேன்...
ReplyDelete///சீமானுடைய முக்கிய குறிக்கோள் தி.மு.கவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே.///இன்றைய தருணத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணியை வெளியேற்றுவது தான் என்னை பொறுத்தவரையில் முக்கியமாக படுகிறது....எனவே தங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்
இனம் மறந்து இயல் மறந்து
ReplyDeleteஇருப்பின் நிலைமறந்து
பொருள் ஈட்டும் போதையிலே
தமிழின் தரம் மறந்த தமிழனுக்கு
நினைவூட்டும் தாயகத் திருநாள்
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!
thiyaga thalaivar seemanin thampikale ! neengal ammavai support panungal illai 'poda vaikovai support seyungal aanal eaan muthalvar meethu ivalvu kobam ?
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஎன்னுடைய தளத்தில் கருத்துப் பொங்கல் வைத்திருக்கிறேன்... வந்து சுவைத்துப் பார்க்கவும்...
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_15.html
வாழ்த்துக்களுக்கு நன்றி, எல்லோருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதோழரே! மிகசிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்
ReplyDeleteசீமான் ஒரு சிறப்பான போராளி லர் ஊராக பேசி இளைஞர்களை ஓரணியில் திரட்டுகிறார்,
தூய தமிழில் பேசுகிறார், , எழுதிகிறார் , தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்து உணர்வாளர்களை ஒன்றிணைக்கிறார்
நான் சீமான் பேச்சை கேட்ட பின்புதான் தமிழன் ஆனேன், அதற்க்கு முன்னால் உணர்வற்ற ஜடமாக இருந்தேன்.
கடந்த இரு ஆண்டுகளாக அவரை பின் தொடர்ந்து வருகிறேன்
காங்கிரசை தமிழ் நாட்டில் இருந்து ஒழித்துக்கட்ட இந்த தேர்தலில் சபதம் எடுத்துள்ளோம்
காங்கிரெஸ் போட்டியிடும் தொகுதிகளில் அதற்க்கு எதிரான பலம் வாய்ந்த எந்த கட்சியாக இருந்தாலும் அதற்க்கு ஆதரவாக பரப்புரை செய்வோம்
சீமானை ஆதரிப்போம்
தமிழின உணர்வை எழ வைப்போம்
நம் இனத்தை கொன்ற துரோகிகளை , கருணாநிதி சோனியா கொள்ளைக்கூட்டத்தை நாட்டில் இருந்து சிறைக்கு துரத்தியடிப்போம்
see even i was a seeman supporter, eventhough my father is a DMK supporter. i fought with them during last parliment election, even asked all my friends and relatives to vote against dmk/congress just believing seeman. but now this seeman is even going so low and supporting the cheap guys SAC & Vijay. why vijay met Rahul? below is the questions i sent to seeman.
ReplyDeleteசீமான்! உங்கள் மீது அதிக மதிப்பு வைத்திருந்தேன். ஆனால் கடந்த சில நாட்களில் நீங்கள் செய்யும் காரியங்கள், என்னை மிக வேதனை படுத்தி விட்டது. நீங்கள் சில விசயங்களை யோசித்து பாருங்கள் :
1. தமிழகத்தில் LTTE கு எவ்வளவு ஆதரவு இருந்தது, அதை ஒழித்து ...கட்டியவள், இன்று நீங்கள் யாருகக வோட்டு கேட்கிரின்களோ அந்த ஜெயா.
2.she joined with Subramaniam swami and dissolved KARUNANIDHI's govt for LTTE support. what did the tamilnadu people do in the next election? did they bring karunanidhi back?
3. she even made the politics so worst? before her when MGR was a CM, any common issues like tamil/cauvery/mullai issue mostly karunanidhi supported MGR. but once this lady come to power, she made a point never join with karunanidhi in any issue. that split the whole tamilnadu. and from 1989 we cannot fight anything unitely. i remember MGR called a bandh for ltte support against jayawardane, the whole tamilnadu stood together irrespective of party. but this lady spoiled everything. now you want to support her.
3. just few months back, in spectrum issue she openly announced that she can give support to congress govt.
few days back she made communist to wait, bcoz she tried her best to make alliance with congress. what is your answer for this?
4.Vijayakanthuku EVKS லட்டு ஊடுன போது, முத்துக்குமார் பத்தி நினைத்து இருப்பான, அவனும் கடைசிவரை காங்கிரஸ் வுடன் கூட்டு வைக்க தானே துடித்தான். கூட்டணி முடிவகரவரை காங்கிரஸ் ஐ எதிர்த்து எதாவது பேசினன, ஈழத்திற்கு ஏதாவது குரல் குடுத்தன? அவனுக்கு நீங்க சப்போர்ட் பண்ணி தான் ஆகனுமா?
5. நல்லவர்கள் அரசியலுக்கு வரணும்னு விஜய்க்கு ஜால்ரா அடிச்சிங்களே, இந்த விஜய்
விஜய் ஏன் ராகுலை சந்தித்தார்? சந்திப்புக்கு பிறகு அப்பாவும் மகனும் சேர்ந்து ராகுலை புகழ்ந்து விட்ட அறிக்கைகளுக்கு பதில் என்ன? எல்லோரும் வெறுத்து ஒதுக்கிய அசினை மீண்டும் தன்னுடன் நடிக்க வைத்து வாழ்வு கொடுத்தது ஏன்?
எல்லாவற்றுக்கும் போராட்டம் மற்றும் அறிக்கை தரும் நீங்கள் இவற்றை எதிர்த்து ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. உண்மையில் எனக்கு கடைசியாக உங்கள் மீது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஆனால் இன்றைக்கு விஜய் /sacஐ எல்லாம் சப்போர்ட் பண்ணிகுட்டு. இருப்பதாய் பார்த்தல் யாரையும் நம்ப முடியவில்லை.
6. JAYA தான் மீண்டும் வரணும், நீங்கள் எல்லாம் மீண்டும் பட்டாள் தான் தெரியும். LTTE ஒழிபதற்கு, ltte கு தமிழ்நாட்டில் இருந்த அதரவை அளித்ததற்கு முதல் கரணம் ஜெயா தான். வைகோவை துரத்திய பிறகாவது neengal நல்ல முடிவு எடுபிர்கள் என்று நம்பினேன். ஆனால் நீங்கள் விஜய் அளவுக்கு இறங்கி போகி விட்டிர்கள்.
இனி வுங்களை நம்பி ஒரு பயனும் இல்லை.
7. உண்மையில் தாமரை உங்களுக்கு கடிதம் எழுதிய போது அவர் மீது கோவ பட்டேன், ஆனால் இப்போது உணர் கிறேன் அவர் சொன்னது தான் சரி என்று.