இன்னும் எத்தனை பிணம் ...?


மானை கொன்றால் குற்றம்  டால்பின் மீனை கொன்றாலும் குற்றம்  ஆனால் தமிழனை கொன்றால்?  மனிதனாக அல்ல விலங்காக  நினைத்து கூட தமிழன் மீது பரிவு காட்ட இந்த உலகு மறுக்கிறதே. தமிழனாக பிறப்பது இவ்வுலகில் தப்பா? கொன்றவனுக்கு செங்கம்பள வரவேற்ப்பு  தட்டிகேட்ப்பவனுக்கு  கைவிலங்கு.


முப்பது ஆண்டுகளாக தொடரும் கொடூரம்.இதுவரை 500 மீனவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள், தொடர்கிறது...  இன்னமும் இருபது  வருடங்களில் வல்லரசு கனவு காணும் இந்தியா இலங்கைக்கு அடி பணிகிறதா!இல்லை  இந்த தமிழக மீனவர்களை அந்நியனாகபார்க்கிறதா? புரியவில்லை! அன்று சுபாஸ் சந்திரபோஸ் வெள்ளையனை எதிர்த்து ஆயுதம்  தூக்கி போராட இந்தியர்களை அழைத்த போது  முண்டியடித்துக்கொண்டு சென்றவர்கள் தமிழர்கள் தான்.  இவ்வாறு சுயநலம் அற்று போராட புறப்பட்ட தமிழனுக்கு சுதந்திரம் இல்லை இன்று!

   ஒரு மீனவனின் உயிரின் விலை 5 இலட்சம்  என உயிருக்கு  பேரம் பேசுகிறார் அம்மக்களால் தம் தலைவர் ஆக்கப்பட்ட முதல்வர்.மத்திய அரசில் ஒட்டிக்கிடக்கும் இவர் தமிழனுக்கு பிரச்சனை என்றால் காகிதங்களோடு போராடுகிறார். இவர் மட்டுமல்ல அனைத்து அரசியல்வாதிகளும் அங்கெ கொல்லப்படும் மீனவனின் பிணங்களை வைத்து ஓட்டாக்க,அரசியலாக்க  முனைகிறார்களே தவிர உண்மையாக ஒன்று பட்டு போராட இது வரை முன்வரவில்லை என்பது மிக வெக்கப்பட வேண்டிய விடயம்.

இந்தியாவை தன் முதல் எதிரியாக வரிந்துகட்டும் பாகிஸ்தான்  கூட இவ்வாறு எல்லை தாண்டும் மீனவனை  சுட்டு கொன்றதில்லை. ஆனால்  தன் நட்பு நாடு என்று சொல்லிக்கொள்ளும் இலங்கை மிருகங்களை  வேட்டையாடுவது  போல மீனவனை  வேட்டையாடுகிறான். இதிலே அறிக்கை வேறு விடுகிறான் " மீனவர்களை கொல்வது தாம் அல்ல வேறு எதோ மூன்றாம் தரப்பு" என்று. இந்த காமெடிகளை கேட்டும் இந்தியா வாய் மூடி மவுனியா இருக்கிறதே!

 அன்று மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு வரிந்து கட்டிக்கொண்டு கொதித்தெழுந்த இந்திய ஊடகங்கள் இன்று படுத்துக்கிடப்பதன் மர்மம் என்னவோ? காரணம் கொல்லப்படுபவன் தமிழன் தானே என்ற இளக்காரமா!......அது சரி இதை கண்டு கொந்தளிக்க வேண்டிய தமிழ் ஊடகங்களே மயிலாட்டங்களிலும் குத்தாட்டங்களிலும் மூழ்கி கிடக்கையில் வேற்று ஊடகங்களை குறை சொல்வதில் என்ன நியாயம்?

நித்தியானந்தா (ஆ)சாமியின் படுக்கையறையை பச்சையாக வெளியிட்டு முகத்திரை கிழித்தவர்கள்  கடலில் தன் இனம்  கொல்லப்படும் போது கொலையாளிகளின் முகத்திரை கிழிக்க தயங்குவது ஏன்?
இதை மீறி கொந்தளித்தாலும் அந்த பிணங்களை கொண்டு  தம் முன் பக்கத்தை அலங்கரித்து கட்சி சார்ந்து ஓட்டுப்பிச்சை கேட்க்கும் நிலையிலே மட்டுப்படுத்தப்படுகிறதே!

வெறும் அன்றாட செய்தியாக வெளியிடும் ஏனைய தமிழ் ஊடகங்கள்.

சுதந்திர தினம் கொண்டாடுகிறார்கள் மீனவன் பிணத்தை வைத்து.

இவற்றை  எல்லாம் தட்டிக்கேட்க்க வேண்டிய இளைய சமுதாயமோ சினிமா என்னும் மாயையில் தம்மை மூழ்கடித்து சமூகத்தில் என்ன நடக்கிறது என்று புரியாமலே நடிகர்களுக்கு பின்னால் தன் வாழ்க்கையை மாய்த்துக்கொண்டு கிடக்கிறது.

இதற்கு  எல்லாம் ஒரே வழி மக்களாக ஒன்றிணைந்து போராட வேண்டியதே தவிர இன்னமும் இந்த அரசியல்வாதிகளை நம்பி இருந்து எந்த வித பயனும் இல்லை.இன்று இந்த விடயம்   இணையத்தளங்களிலே ,சமூக தளங்களிலே பரவலாக கொண்டுவந்து விழிப்புணர்வை ஏற்ப்படுத்துவது  வரவேற்க தக்கது இதன் விளைவாக தற்சமயம் இந்த பிரச்சனையில்  சில முன்னணி  ஊடகங்கள் தங்கள் கவனத்தை திருப்பி தமிழக மீனவர்களின் பிரச்சனையை பேச தொடங்கியுள்ளன. எனினும் இந்த பிரச்சனை  உறங்கு நிலையை அடையவிடாது தொடர்ந்து,  பாதிக்கப்பட்டது இதுவே இறுதி  மீனவனாக இருக்க வேண்டும்.

தமிழக மீனவர்களுக்கு குரல் கொடுக்க சில இணையத்தளங்கள்.
http://www.savetnfisherman.org/
http://www.savetnfishermen.org/ .

2 comments:

  1. நம்மால் முடிந்தவரை இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்வரை போராடுவோம்...

    உங்களின் பங்களிப்புக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  2. ///நம்மால் முடிந்தவரை இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்வரை போராடுவோம்...///நிச்சயமாக ஒன்று பட்டால் உண்டு வாழ்வு...

    ReplyDelete