பொதுவாகவே ஆக்ரோசம் மிக்க பேச்சும்,நடவடிக்கையும் தான் அரசியல் வாதி என்பதற்கான அடையாளம் என்பது மறுக்க முடியாது, காரணம் ஒரு கூட்டத்தின் முன்னால் நின்று ஒரு அரசியல்வாதி உரையாற்றும் போது மனப்பாடம் பண்ணி ஒப்புவிப்பது போல அவர் பேச்சு இருந்தால், அவர் சொன்ன கருத்துக்களில் ஆழ தன்மை இருந்தாலும் அது சாதாரண மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்துவிடாது. அத்தோடு மக்களாலும் அப்படிப்பட்ட அரசியல்வாதி உற்று கவனிக்கப்படமாட்டார்.ஆனால் அந்த கூட்டத்துக்கு முன் நின்று அதே விடயத்தை ஆக்ரோசத்துடனும்,உணர்ச்சிகளை முக பாவனை மூலம் வெளிக்காட்டி பேசும் போது அது சாதாரண மக்களையும் சென்றடைந்துவிடும்.ஆனால் "தந்தை" செல்வா இதற்க்கு நேர் மாறானவராம்.மிகவும் மென்மையான போக்கு கொண்டவர் மட்டும் அல்லாது அவர் கூட்டங்களில் உரையாற்றும் போது மிகவும் அமைதியாகவும், நிதானமாகவும் உரையார்றுவாராம்.எனினும் இவர் உரையாற்ற தொடங்கினால் அவர் முன் எந்த பெரிய கூட்டம் நின்றாலும் மிக அமைதியாகி செவிமடுப்பார்களாம். இவ்வாறு மென்மையான போக்கு கொண்ட அரசியல் வாதியாக எனக்கு தெரிந்து ஈழத்தை பொறுத்தவரையில் இலட்சக்கணக்கான மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர் தந்தை செல்வா மட்டும் தான்.
(மூன்று தசாப்தகால யுத்தங்களை கடந்தும் கம்பீரமாக நிற்கும் தந்தை செல்வா அவர்களின் நினைவு தூபி)
அது மட்டுமல்லாது அவர் மக்கள் மத்தியில் பிரபல்யம் ஆவதற்கு,பேச்சை மிக குறைத்து, செயல் வீரராக இருந்ததும் முக்கிய காரணமாம். ஈழத்தை பொறுத்தவரை இவ்வாறாக வாய்பேச்சை குறைத்து செயல்வீரராக மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் ஆனவர்கள் இரண்டு பேர் என்று பொதுவான கருத்து. இதில் ஒருவர் தந்தை செல்வா ....
தந்தை செல்வா பற்றீய பகிவுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
ReplyDeleteபுதியதொரு தலைவரை பற்றி தெரிந்துக்கொண்ட நிம்மதி கிடைத்தது... இன்னொருவர் யார்...?
ReplyDelete///தந்தை செல்வா பற்றீய பகிவுக்கு நன்றி. வாழ்த்துக்கள்////நன்றி மதுரை சரவணன்
ReplyDelete///புதியதொரு தலைவரை பற்றி தெரிந்துக்கொண்ட நிம்மதி கிடைத்தது... இன்னொருவர் யார்...?/// நன்றி பிரபா.விடை உங்கள் பெயரிலே இருக்குதே..
////பகிர்விற்கு நன்றிகள்////கருத்துக்கு நன்றி ராம்ஜி