முகநூலும் முகமூடிகளும்...

வீட்டுக்கு  ஒரு கணணி,  அதிகரித்து  வரும்  இணையப்பாவனை  என்று  தற்சமயம்  நகர்ப்புறங்களில் மட்டுமல்லாது  கிராம புறங்களிலும்  வீட்டுக்குள்ளே அதிக நேரம் அடைந்து  கிடப்பவர்களுக்கு  பெரும்பாலும் மிகப்பெரிய பொழுது போக்கு அம்சமாக  முகநூல் (facebook)  தான்  இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.  நண்பர்களுடன்  அரட்டையடிப்பதாக  இருந்தாலும்  சரி, அவர்களின் பக்கம் சென்று  தகவல்களை ஆராய்வதாக  இருந்தாலும்  சரி  நேரம் போவதே தெரியாமல் கணணி முன் உட்கார்ந்து  இருப்பவர்கள் அதிகம்.  ஆனால்  இதுவே அளவுக்கு அதிகமாகும் போதோ இல்லை  கட்டுப்பாடு  இன்றி பயன்படுத்தும் போதோ  அதனால்  வரும்  பின்விளைவுகளும் மோசமானதாகவும், மனக்கசப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும்  அமைந்துவிடுகிறது.

சில மாதங்களுக்கு முன்னர்  என் முகநூல் நண்பர்கள்  பக்கத்தில் நான் பார்த்த விடயம்; ஒரு  ஐம்பது வயசு மதிக்கத்தக்க  நபர் ஒருவர்  இருபது வயசு பெண்ணின் புகைப்படத்துக்கு கீழே பின்னூட்டுகிறார்  "தயவு செய்து  உங்களுக்கு பிடித்தமான விடயங்களை என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்"  என்று,  கூடவே  தனது  மின்னஞ்சல் முகவரியும் .... அப்ப பாருங்களவன் எப்பிடி போகுது என்று.  இப்படி தான் ஆரம்பிப்பார்கள்..! இப்படியானவர்களை உள்ளே அனுமதித்தது யார் தவறு!

இன்னும்  சிலர்  இருக்கிறார்கள்  இவர்களுக்கு முகநூல்  என்பது  மஞ்சள் பக்கம் என்ற  நினைப்பு.  மிகவும் ஆபாசமான  படங்களை பகிர்ந்து கொள்வது  பச்சை தனமான  வார்த்தை  பிரயோகங்கள் என்று நண்பர்கள்  வட்டத்தை உருவாக்கி வைத்துக்கொண்டு  சுற்றி  இருப்பவர்களை  பற்றி சிந்திக்காமல் நடந்துகொள்வார்கள்.

அதே போல தனிப்பட்ட  விரோதத்தின் காரணமாக பழிவாங்க எண்ணுபவர்களுக்கு முகநூல் வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.  இதனால்  இன்னொருவரின் முகநூல் கணக்கை   திருடுபவர்களும்   அவர்களின் புகைப்படங்களை எடுத்து  போலியான ஒரு கணக்கை  திறப்பவர்களும்  சாதாரணமாய் போச்சு.  இப்படியான திருடர்களை  கடிந்து  கொள்வதில் எந்த பயனும்  இல்லை. மாறாக இதற்கெல்லாம்  காரணம் நமது கவனயீனம் தான். 

இதற்கு என்ன தீர்வு
ஒரு சிலருக்கு தமது  நண்பர்கள்  வட்டத்தை பெருக்க வேண்டும் என்று ஆசை.  இன்னும் சிலருக்கு தமது புகைப்படங்களை விதம் விதமாக எடுத்து பகிர்ந்து  கொள்ள வேண்டும் என்ற ஆசை. அத்துடன் முகநூலில்  இருக்கும் சாட்டிங் வசதி... இவ்வாறு விளையாட்டுத்  தனமாக செய்வதே பின்னர்  வினையாக மாறிவிடுகிறது.


முக்கியமாக  எமக்கு  முகமறியாத  நபர்களை  இணைத்துக்கொள்வதை முடிந்தவரை  தவிர்க்கலாம்.  அதிலும் சுயவிபரத்தை   மறைத்து அனானியாக வரும் நபர்களை முற்றாக  தவிருங்கள்.  அப்படி இணைத்துக்கொண்டாலும்  நமது     புகைப்படங்கள் வீடியோக்கள் போன்றவற்றை  பகிர்ந்து கொள்ளும் போது  இரகசிய காப்பு விதிகளை (privacy settings) கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

முக்கியமாக பெண்கள் தமது புகைப்படங்களை  பகிர்ந்து  கொள்வதில்  மிக அவதானமாக இருக்க வேண்டும் என்பது சுற்றி  இருப்பவர்கள் மூலம் நான் கண்ட அனுபவம்.   அதுமட்டுமல்லாது  இதனால் பின்னொரு பொழுதில்  பிரச்சனை வரும் போது  உங்கள் மீது  குற்றம் சாட்டவே கிளம்பிவிடுவார்கள். "நீ பெண்!, எதற்காக முகநூல் பாவிக்கிறாய், தெரிந்து கொண்டு  தானே புகைப்படங்களை பகிர்ந்து கொண்டாய்,  இப்படியெல்லாம் ஒரு பெண் செய்யக்கூடாது,  உன்  நடவடிக்கை ஆரம்பம் முதலே சரியில்லை"  என்று ஆளாளுக்கு உங்கள் மீது  தான்  கை நீட்டுவார்கள். ஆக  எதற்காக வம்பை விலை கொடுத்து வாங்கி  பழி சுமப்பான்.


முகநூல் பயன்படுத்துவதற்கு முற்றாக பாதுகாப்பு இல்லாதது என்றால் பேசாமல் தவிர்த்துக்கொள்ளலாம்.  ஆனால் எமது கணக்கை பாதுகாப்பதற்க்கான வசதிகள்  இருந்தும்   அதை நாம் பயன்படுத்தாமை எமது தவறு தானே.  ஆகவே  இது தொடர்பாக முகநூலில் தரும் கட்டுப்பாடு வசதிகளை (privacy settings) முழுமையாக பின்பற்றுங்கள்.  உங்கள் பாதுகாப்புக்காக  சிறிது நேரத்தை செலவு செய்வதில் உங்களுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடப்போவதில்லை.

38 comments:

  1. பயனுள்ள பதிவு
    கூர்மையான கத்தி வேலைக்கு வசதிதான்
    ஆயினும் உறையிலிட்டு காத்துக் கொள்வதுதான்
    புத்திசாலித்தனம் என்பதை தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள்
    பயனுள்ள பதிவு.பதிவிட்டமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. விழிப்புணர்வு தரும் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. கொஞ்சம் கவணமாகத்தான் இருக்க வேண்டும்...

    விழிப்புணர்வுக்கும் தகவலுக்கும் நன்றி..

    ReplyDelete
  4. இப்போது நடக்கும் விஷயங்களை பார்க்கும் போது நீங்கள் சொல்வது அவசியம் ஆகிறது. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு.

    ReplyDelete
  5. ஒரு விழிப்புணர்வு பதிவிற்கு நன்றி சகோ ..

    ReplyDelete
  6. பயனுள்ள தகவல் ஐயா

    ReplyDelete
  7. நல்ல பதிவு.. நான்கூட இதைப்பற்றி பதிவிட்டிருந்தேன்

    ReplyDelete
  8. பிரச்சனை என்று தெரிகிறது.இவைகளைவிட்டு ஒதுங்கியிருப்பதே நல்லது !

    ReplyDelete
  9. மிகத்தேவையான விழிப்புணர்வு தகவலை தந்திருக்கிறீர்கள்

    ReplyDelete
  10. அவசியமான
    அருமையான

    பகிர்வு

    நன்றி...

    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    ReplyDelete
  11. ஹேமா சொன்னது சரி.

    ReplyDelete
  12. நண்பா நல்ல பயன் உள்ள பதிவு,
    உங்கள் பதிவை பார்த்து பலர் உசாராகி கொண்டால் சந்தோஷம்

    ReplyDelete
  13. //சில மாதங்களுக்கு முன்னர் என் முகநூல் நண்பர்கள் பக்கத்தில் நான் பார்த்த விடயம்; ஒரு ஐம்பது வயசு மதிக்கத்தக்க நபர் ஒருவர் இருபது வயசு பெண்ணின் புகைப்படத்துக்கு கீழே பின்னூட்டுகிறார் "தயவு செய்து உங்களுக்கு பிடித்தமான விடயங்களை என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்" என்று, கூடவே தனது மின்னஞ்சல் முகவரியும் .... அப்ப பாருங்களவன் எப்பிடி போகுது//

    இவர்கள் கதைகளை இன்னும் நிறைய சொல்லாம்
    ஹா ஹா

    ReplyDelete
  14. //அதே போல தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக பழிவாங்க எண்ணுபவர்களுக்கு முகநூல் வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.//

    உண்மைதான் பாஸ்

    ReplyDelete
  15. //இன்னொருவரின் முகநூல் கணக்கை திருடுபவர்களும் //

    இதால் நானும் அனுபவித்து உள்ளேன்
    இதுகேண்டே ஒரு குறுப் தனியா அலையுது பாஸ்

    ReplyDelete
  16. //முக்கியமாக எமக்கு முகமறியாத நபர்களை இணைத்துக்கொள்வதை முடிந்தவரை தவிர்க்கலாம்//

    கண்டிப்பாக , முக்கியமாக பெண்கள் இந்த விசயத்தில் கறாராக இருக்க வேண்டும்

    ReplyDelete
  17. //ஆகவே இது தொடர்பாக முகநூலில் தரும் கட்டுப்பாடு வசதிகளை (privacy settings) முழுமையாக பின்பற்றுங்கள்//

    இது எல்லோரும் பின் பற்ற வேண்டியது பாஸ்

    ReplyDelete
  18. ரியலி சூப்பர் பதிவு பாஸ்

    ReplyDelete
  19. ம்ம் நானும் இப்படி பல பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறேன்... நல்லதொரு விழிப்புணர்வு

    ReplyDelete
  20. எதையுமே அளவோடு உபயோகித்தால் பாதகமில்லை

    ReplyDelete
  21. சகோ நிச்சயமாக இது உண்மைதான்,,,,
    இதுதான் இப்போ நடந்து கொண்டிருக்கு ....
    அருமையான தகவலை பகிர்ந்துள்ளீர்கள்
    வாழ்த்துக்கள்........

    ReplyDelete
  22. நல்ல,பயனுள்ள பதிவு!

    ReplyDelete
  23. நல்ல எச்சரிக்கைப் பதிவு கந்து.

    ReplyDelete
  24. முகநூலில் இந்த பிரச்சனை தான் இப்போது பரவி வருகிறது எனவே முகநூலில் தங்களுக்கு தெரிந்தவர்களை மட்டுமே இணைத்து கொள்வதே சால சிறந்தது
    நண்பா . நல்ல பதிவு . தீர்வினையும் கொடுத்துளீர்கள் சிறப்பு .

    ReplyDelete
  25. வணக்கம் பாஸ்,

    ReplyDelete
  26. பின்விளைவுகளும் மோசமானதாகவும், மனக்கசப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும் அமைந்துவிடுகிறது.//

    பாஸ், நீங்க அந்த சாவகச்சேரி மேட்டரைத் தானே சொல்லுறீங்க.

    ஹி...ஹி...

    ReplyDelete
  27. ஒரு ஐம்பது வயசு மதிக்கத்தக்க நபர் ஒருவர் இருபது வயசு பெண்ணின் புகைப்படத்துக்கு கீழே பின்னூட்டுகிறார் "தயவு செய்து உங்களுக்கு பிடித்தமான விடயங்களை என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்" //

    அவருக்கு ஐம்பதிலும் ஆசை இருக்கு என்று மறைமுகமாகச் சொல்ல வருகிறாரோ...

    ReplyDelete
  28. முக்கியமாக எமக்கு முகமறியாத நபர்களை இணைத்துக்கொள்வதை முடிந்தவரை தவிர்க்கலாம். அதிலும் சுயவிபரத்தை மறைத்து அனானியாக வரும் நபர்களை முற்றாக தவிருங்கள்.//

    யாரையோ குத்துறீங்க இல்லே..

    ReplyDelete
  29. பேஸ் புக் பற்றி, காலத்திற்கேற்ற விழிப்புணர்வுப் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

    நன்றி சகோ.

    ReplyDelete
  30. நல்ல பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  31. அருமையான தகவல் பகிர்வுக்கு மிக்க
    நன்றி சகோ..............

    ReplyDelete
  32. விழிப்புணர்வூட்டும் நல்ல பதிவு தேவையான பாதுகாப்பு ஏற்பாடு செய்ய பட்டே முகநூலை கையாள வேண்டும் குறிப்பாக பெண்கள்

    ReplyDelete
  33. இந்த சமயத்துக்கு ரொம்ப அவசியமான முக்கியமான பதிவு....

    ReplyDelete
  34. விழிப்புணர்வுக்கும் தகவலுக்கும் நன்றி..
    தேவையான விஷயங்கள் சகோ

    ReplyDelete
  35. இந்த விழிப்புணர்வு முக நூலுக்கு மட்டும் அல்ல.... எல்லா சோசியல் தளத்திற்கும் பொருந்தும்.

    ReplyDelete
  36. நானும் தெரியாதவர்களை accept பண்ணுவதில்லை. பலருக்கு ஙீங்கள் சொன்ன privacy settings தெரியாது இருக்கிறது. எனவே இந்த பதிவு பலருக்கு பயனளிக்கும்

    ReplyDelete