1984ம் ஆண்டு இந்திராகாந்தி அம்மையார்
படுகொலை செய்யப்பட்ட போது இலங்கை தமிழர்கள் தம் பகுதிகளில் கருப்பு கொடிகள் பறக்க விட்டு
தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தியதாக வீடுகளில் கதைக்கும் போது
கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் ராஜீவ் காந்தியின் மரணம் ஈழ தமிழர்களுக்கு எந்த
விதத்திலும் அனுதாபத்தை கொடுத்திருக்கவில்லை என்பதை உறுதியாக
சொல்லமுடியும். காரணம், அவரும் அவர் தம் கட்சியும் ஈழ தமிழர்களுக்கு
வழங்கிய கசப்பான அனுபவங்கள் அப்படியானவை..!
ஒரு
வேளை புலிகளால் ராஜீவ் காந்தி கொல்லப்படவில்லை என்றால் மத்திய அரசு
(காங்கிரஸ் கட்சி) கடைசி வரை ஈழ தமிழர்களுக்கு-அவர்களின் விடுதலைக்கு ஆதரவாக
இருந்திருக்கும் என்று யாராவது கூறினால் அதை நினைத்து பரிதாப்படுகிறேன்.
ஆனால்,
ராஜீவின் கொலை பல்வேறு வழிகளில் தமிழர்களின் உரிமை போராட்டத்தை முடக்க ஒரு
காரணமாக இருந்துவந்துள்ளது. அதுமட்டுமல்லாது இதை காரணமாக வைத்து
இலட்சகணக்கான அப்பாவி தமிழ் மக்கள் பழி வாங்கப்பட்டுள்ளார்கள். இவ்வளவு வன்மமும் சம்மந்தப்பட்ட தரப்புக்கு போதாதா?
1991 ஆம் ஆண்டு ஸ்ரீ பெரும்புத்தூரின் நடந்த தற்கொலை தாக்குதலில் ராஜிவ்காந்தி
கொல்லப்பட்டார். தற்கொலை சூத்திரதாரி தனு என்ற பெண்! இந்த பெண்ணுக்கு
எங்கிருந்து இந்த வைராக்கியம்? "இந்திய அமைதிகாக்கும் படைகளால் தன்
இரண்டு சகோதரர்களை இழந்திருந்தார். அதோடு அந்த படைகளால் வன்புணர்வுக்கும்
ஆளாகியிருந்தார். அதனால் தான் காரணமானவர்களை பழிவாங்க வேண்டும் என்ற
வைராக்கியம் அவருக்குள் இருந்துவந்தது" என்று இந்த வழக்கில் குற்றம்
சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முருகன் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அந்த
தற்கொலை தாக்குதலை வழிநடத்தியவர்களான சிவராசன், சுபா மற்றும் சிலரும்
இந்தியாவிலே போலீஸ் மற்றும் இராணுவத்தின் சுற்றிவளைப்பில் சயனேட் அருந்தி
தற்கொலை செய்து கொண்டார்கள். அதன் பின்னர் இதனுடன் சம்மந்தப்பட்டுள்ளார்கள்
என்ற போர்வையில் பலர் கைது செய்யப்பட்டார்கள். விசாரணைகளின் பின்னர்
முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி என்ற நால்வர் மீது கடுமையானா
குற்றச்சாட்டுக்கள்(!) முன்வைக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர் நளினி என்ற பெண்ணுக்கு மாத்திரம் அது ஆயுள் தண்டனையாக
மாற்றப்பட்டது.
இதில்
கொடுமையான விடயம் 'ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை முழுமையாக பூர்த்தி
செய்யும் முன்னரே இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது. அதை
தொடர்ந்தும் இருபது வருடங்களாக விசாரணை என்ற பெயரில் எதோ நடந்து வருகிறது.
முக்கியமாக ராஜீவ் காந்தி கொலை
புலிகளால் தான் நடத்தப்பட்டது என்பதற்கு கூட இன்னமும் முழுமையான ஆதாரங்கள்
விசாரணை செய்யும் தரப்பால் முன்வைக்கப்படவில்லை. அதோடு விசாரணை "புலிகள்
தான் இந்த தாக்குதலை நடத்தினார்கள்" என்ற கோணத்தில் மட்டுமே இதுவரை நடந்து
வந்துள்ளது.
ஆனால் இந்த வழக்கிலே அவிழ்க்கப்படாத முடிச்சுக்கள் ஏராளம்.
முக்கியமான
கேள்வி 'ராஜீவ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது அவரின் கட்சி
உறுப்பினர்கள் எங்கே போனார்கள்.' அவருக்கு அருகில் இருக்க வேண்டியவர்கள்
அந்த நேரத்தில் மாத்திரம் விட்டு தூர விலகியது தற்செயலானதா? என்பது உட்ப்பட
பல்வேறு விடை தெரியாத கேள்விகள் தெக்கு நிற்கிறது! அதற்காக இது புலிகளால் செய்யப்படவில்லை என்று நான் உறுதிப்படுத்த வரவில்லை. ஆனால் இதனுடன் சம்மந்தப்பட்ட பல்வேறு தரப்பு திட்டமிட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.
ஆனால்
இன்று குற்றவாளிகள் என்ற பெயரில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளவர்கள்
அந்த கொலையுடன் எந்த மட்டிலும் நேரடியாக சம்மந்தபடாதவர்கள். முருகனை
பொறுத்தவரை நடப்பதை ஏற்கனவே அறிந்திருந்தார் என்பதை விட கொலையில்
அவருக்கு வேறு பங்கு இருந்திருக்கவில்லை. ஆனால், மிகுதி இருவரான
சாந்தன், பேரறிவாளன் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சிறுபிள்ளை
தனத்தின் உச்சம்.
எம்மை விட, முப்பது வருடங்களுக்கு மேலாக புலிகளை எதோ ஒருவிதத்தில்
பின்தொடரும்-புலனாய்வு செய்துகொண்டிருக்கும் இந்திய புலனாய்வுத்துறைக்கு
தெரியும், புலிகள் தங்கள் நடவடிக்கைகளில் எந்த மட்டில்
ரகசியம்காப்பார்கள் என்று...
அப்படி
இருக்க, கொலை நடக்கபோவது பற்றி அறியாது, பேட்டரி வாங்கி கொடுத்ததுக்கும்,
அருகில் நின்று கதைத்ததுக்கும் தீர்ப்பு மரண தண்டனையா..!
நிச்சயமாக இந்த தண்டனை என்பது ஆளும் வர்க்கத்தை திருப்திபடுத்த, இல்லை அவர்களின் செய்யும் மட்டமான அரசியலுக்காகவே வழங்கப்பட்டது.
சரி,
இவ்வாறான ஒரு சம்பவம் நடக்கப்போகிறது என்று அறியாது, பேட்டரி வாங்கி
கொடுத்தது கொலைக்கு ஒப்பான, மரண தண்டனை வழங்கக்கூடிய அளவுக்கு கொடூரமான
குற்றம் என்றால், கொத்து கொத்தாக ஈழத்தில் மக்கள் சாக குண்டுகள் கொடை செய்த
அன்னை சோனியா கும்பலுக்கு உச்ச பட்சமாக வழங்கப்பட வேண்டிய தண்டனை என்ன?
வழங்குவது யார்??
தண்டனைகள் என்பது குற்றம் செய்தவர்கள் உணர்ந்து திருந்துவதற்காக வழங்கப்படுவது என்பார்களே அது பொய்யா? இருபது வருடங்களாக அவர்கள் அனுபவித்து வந்த நரக வேதனை போதாதா? அவர்களின் உயிரை எடுப்பது தான் தண்டனை என்றால் அதில் இருந்து சம்மந்தப்பட்ட தரப்பு எதிர்பார்ப்பது தான் என்ன!!
இப்போது வேண்டிக்கொள்வது எல்லாம், இந்த மூவரின் மரணதண்டனைக்கு எதிராக அரசியல், கட்சி, பேதம் புறம் தள்ளி ஒன்றுபட்டு போராடுவது தான்.
வணக்கம் மாப்பிள நீங்க சொல்வது போலவே இந்திரா காந்தி கொலையுண்ட சமயம் ஈழத்தில் எல்லோருக்கும் தங்கள் வீட்டில்தான் ஒரு துக்கம் நடந்ததைப்போல் கவலைப்பட்டார்கள்... அப்போது நான் ஊரில்..
ReplyDeleteராஜீவ் காந்தி கொலையுண்ட சமயம் நான் பிரான்சில் இருந்தேன்..அப்போது இங்கு நம்மவர்கள் இச்செய்தியை எப்படி எடுத்தார்கள் என்பதை நினைத்துப்பார்கிறேன்.. சத்தியமாக அன்றிரவு எங்கள் ரூமில் நடந்ததை சொன்னால் நீங்கள் எங்களை இப்போது மனநோய் பிடித்தவர்களோ என சந்தேகப்படுவீர்கள்...
எனது வாழ்கையிலேயே ஒருவரது மரணத்தை கொண்டாட்டமாக செய்தவர்களை அன்றுதான் முதல் முறையாக பார்த்தேன்...
அவரால் எப்படி பாதிக்கப்பட்டிருப்பார்கள் இவர்கள் என்று சிந்தித்துப்பாருங்கள்...
காட்டான்.................. விளங்கும்தானே மாப்பிள்ள
முன் பின்னூட்டம் காட்டானின் கருத்தின் மனநிலைக்கு மாறாகவே நான் இருந்தேன்.நான் மட்டுமல்ல,தமிழகமே பல வருடங்களாக அந்த மனநிலையில் தான் இருந்தது.ராஜிவ் காந்தியின் கொலையை எந்த விதத்திலும் நியாயப்படுத்தி விட முடியாது.அந்த மனநிலையை ராஜபக்சே குழுவுக்கான இந்திய ஆதரவும்,அப்பாவி குழந்தைகள்,பெண்கள்,பெரியவர்கள் என்ற இனப்படுகொலைக்கு ஒத்துழைத்த காரணத்தால் தமிழகத்தின் மனநிலை இப்போது மாறியிருக்கிறது.
ReplyDeleteமிகவும் ஆதங்கமான பதிவு....
ReplyDeleteநாலு கப் டீ......(கொஞ்சம் குடிச்சு பாருங்கோ)
கொத்து கொத்தாக ஈழத்தில் மக்கள் சாக குண்டுகள் கொடை செய்த அன்னை சோனியா கும்பலுக்கு உச்ச பட்சமாக வழங்கப்பட வேண்டிய தண்டனை என்ன? வழங்குவது யார்??
ReplyDeleteஇதுதான் நியாயமான கேள்வி....இந்திய அரசியல் எப்படி செல்கின்றது என்பதற்கு இது உதாரணம்.....
நாலு கப் டீ......(கொஞ்சம் குடிச்சு பாருங்கோ)
இவர்களுக்காக மனம் வருந்துவதை தவிர வேறு ஒண்டும் என்னால் செய்ய முடியாது.......இதுதான் தமிழன் நிலை..
ReplyDeleteநாலு கப் டீ......(கொஞ்சம் குடிச்சு பாருங்கோ)
இப்போதைய நிலைமை உணர்ந்து நல்ல பதிவு தந்து உள்ளீர்கள் நண்பா,
ReplyDeleteமேலே காட்டான் சொன்னது போல்
ராஜீவின் கொலை நடந்த போது நம் மக்கள் பலர் மகிழ்ச்சியில் ஆரவாரித்ததாக என் தாத்தா சொல்லி கேட்டு உள்ளேன், ஒருவருடைய மரணத்தை மக்கள் கொண்டாடி இருக்கிறார்கள் என்றால் அதில் இருந்தே தெரிந்து கொள்ளலாமே அவர்கள் எவ்வளவு அனுபவித்தும் உள்ளார்கள் என்று. அதைவிட ராஜீவ்வின் கொலையில் அவிழ்க்கப்படாத முடிச்சுக்கள் இன்னும் ஏராளம்.அவர் கொலை ஆனபோது அருகில் இருந்த இருக்க வேண்டியவர்கள் எங்கே போனார்கள் என்பதே பலருது கேள்வி, ராஜீவின் கொலையில் இப்போது "புலி எதிர்ப்பு" அரசியல் நடத்தும் பலருக்கு தொடர்பு இருக்குது என்பதே உண்மை உதாரணமாக சுப்பரமணிசுவாமி போன்றவர்களுக்கு.
//பேட்டரி வாங்கி கொடுத்தது கொலைக்கு ஒப்பான, மரண தண்டனை வழங்கக்கூடிய அளவுக்கு கொடூரமான குற்றம் என்றால், கொத்து கொத்தாக ஈழத்தில் மக்கள் சாக குண்டுகள் கொடை செய்த அன்னை சோனியா கும்பலுக்கு உச்ச பட்சமாக வழங்கப்பட வேண்டிய தண்டனை என்ன? வழங்குவது யார்??//
ReplyDeleteநெத்தியடி கேள்வி நண்பா,
இதே இதே தான் பலரது கேள்வியும்
அவர்களை தூக்கு மேடைக்கு அனுப்ப துடிக்கும் சோனியா, அதற்க்கு முன் அவர் தூக்கு மேடை ஏற ஆயித்தம் ஆக வேண்டும்.
சாதாரண மக்களுக்கு ஒரு நியாயம்??
பதவியில் இருப்பவருக்கு ஒரு நியாயமா??
உண்மை நண்பா
ReplyDeleteஇந்த அப்பாவி ஜீவன்களை காப்பாற்ற ஆவது நம் அரசியல் வாதிகள் ஒற்றுமையாக இருப்பார்களா
என்பதுதான் என் ஆதங்கம்
நண்பர் நடராஜன் நான் கொலை நடந்த அன்று எங்கள் ரூமில் என்ன நடந்தது என்றுதான் சொன்னேன்.. ஆனால் இந்திய இராணுவம் ஈழத்துக்கு வந்த போதும் விடுதலைப்புலிகளினோடு யுத்தத்தில் ஈடுபட்ட போதும் நான் அங்குதான் இருந்தேன்...
ReplyDeleteஏன் அவர்களால் 5நாட்கள் தடுத்து வைக்கப்பட்டும் இருந்தேன்.. அவர்களைப்பற்றி ஏராளமாக சொல்லமுடியும் என்னால்.. ஆனால் அவர்களா விரும்பி வந்தார்கள் ஈழத்திற்கு..!!?? எய்தவன் யார்..? ஒருவருடைய கொலையை கொண்டாடுவதை நான் ஒருபோதும் நியாயப்படுத்தவில்லை.. அங்கு அப்போது நடந்த சம்பவங்களையே சொல்கிறேன்.. ஏன் அவர்கள் அப்படிச்செய்தார்கள்..??
ஏன் இந்திரா காந்தி படுகொலை செய்யப்படும்போது அதை தங்கள் வீட்டில் நடந்த ஒரு துக்கமாகவே கருதினார்கள்...? ஐயா நான் காட்டானுங்க எனக்கு இதெல்லாம் விளங்கவில்லை உங்களுக்கு விளங்கும்.. ஏன்னா நீங்க ரெம்ப படிச்சவங்க.. நீங்க சொன்னா நான் கேட்டுக்கிறேன்யா..
மும்பையில் படுபயங்கர தாக்குதல் நடத்திய அப்துல் கசாப்ப்பை தூக்கிலிடுவதர்க்கு யோசிக்கும் இந்த அரசு
ReplyDeleteஇவர்களின் தண்டனையை நிறைவேற்ற துடிக்குது.நல்லா இருக்குடா உங்க நியாயம்!
தமிழ்மணம் 6
ReplyDeleteஇவர்களுக்கு கொடுக்கப்படும் மரண தண்டனை அவர்கள் குடும்பத்தாருக்கு ஆயுள் முழுக்க கொடுக்கும் தண்டநியாகவே இருக்கும் .
ReplyDeleteசாவுரவனுக்கு ஒரு நிமிட வேதனை அவனை சார்ந்தவர்களுக்கு ஆயுசு முழுக்க வேதனை
Your question is 100% correct
ReplyDeleteஇதெல்லாம் பேசிப்பயன் இல்லை..
ReplyDeleteஒரு சிலராவது ஒன்றிணையும் வரை எதுவும் நடக்கப்போவதில்லை.
ஆட்ச்சியிளிருப்பவர்கள் சொற்படி தான் எதுவுமே!
உண்மை சொல்ல ஒரு வழி கூட இல்லை!
ம் என்னத்தை சொல்வது பாஸ்.எல்லாம் அரசியல்......
ReplyDelete/மரண தண்டனை வழங்கக்கூடிய அளவுக்கு கொடூரமான குற்றம் என்றால், கொத்து கொத்தாக ஈழத்தில் மக்கள் சாக குண்டுகள் கொடை செய்த அன்னை சோனியா கும்பலுக்கு உச்ச பட்சமாக வழங்கப்பட வேண்டிய தண்டனை என்ன? வழங்குவது யார்??
ReplyDelete!!எல்லாமே கேள்வியாகத்தான் இருக்கிறது..
நியாயங்கள் இறந்து போய்விட்டதே...!!
இவர்களது மரண தண்டனையை நினைக்கவே மனம் பதறுகிறது...
நல்ல நியாயமான கருத்துக்களை சொல்லியிருக்கிறீங்கள் சகோ..
தகுந்த நேரத்தில் நல்ல பகிர்வு..
மிகவும் நியாமான கேள்விகள் ,ஆதங்கங்கள் !!!
ReplyDeleteகுரல் கொடுப்போம் நாமமும் ..அவர்களின் மரண தண்டனை நிக்க படவேண்டும் என்று ...கேக்க ஆளு இருக்கா
tamil manam 11
ReplyDeleteஇலைமறை காயாக உள்ள பல பதிவர்களை இனம் காணல்.இது எமது தளத்தின் நோக்கம்.கொஞ்சம் எல்லாப்பதிவர்களும் வந்து ஆதரவைத்தாருங்கள்
ReplyDeleteஅநியாயமான தீர்ப்பு தான் அது...எல்லா அரசியல்வாதிகளும் பதவிக்காக அவர்களை கைவிட்டு விட்டனர்..
ReplyDelete//தண்டனைகள் என்பது குற்றம் செய்தவர்கள் உணர்ந்து திருந்துவதற்காக வழங்கப்படுவது என்பார்களே அது பொய்யா? இருபது வருடங்களாக அவர்கள் அனுபவித்து வந்த நரக வேதனை போதாதா? அவர்களின் உயிரை எடுப்பது தான் தண்டனை என்றால் அதில் இருந்து சம்மந்தப்பட்ட தரப்பு எதிர்பார்ப்பது தான் என்ன!! //
ReplyDeleteயாவரும் யோசிக்க வேண்டிய கேள்விகள்.
சோனியாவை நாடு [[இத்தாலி]] கடத்தினா நல்லாயிருக்கும் ம்ஹும்...
ReplyDeleteவணக்கம் பாஸ்,
ReplyDeleteஏன் உலவுத் திரட்டியில் இணைக்கலையா?
அரசியல்களின் சுயநல, தவறான காய் நகர்த்தலினால் - ஈழத்தமிழர்களையும் இழந்தோம். தமிழக தமிழர்களையும் இழக்கிறோம்.
ReplyDelete(பேட்டரி வாங்கி கொடுத்தது கொலைக்கு ஒப்பான, மரண தண்டனை வழங்கக்கூடிய அளவுக்கு கொடூரமான குற்றம் என்றால், கொத்து கொத்தாக ஈழத்தில் மக்கள் சாக குண்டுகள் கொடை செய்த அன்னை சோனியா கும்பலுக்கு உச்ச பட்சமாக வழங்கப்பட வேண்டிய தண்டனை என்ன? வழங்குவது யார்??)யோசிக்க வேண்டிய கேள்வி
ReplyDelete/மரண தண்டனை வழங்கக்கூடிய அளவுக்கு கொடூரமான குற்றம் என்றால், கொத்து கொத்தாக ஈழத்தில் மக்கள் சாக குண்டுகள் கொடை செய்த அன்னை சோனியா கும்பலுக்கு உச்ச பட்சமாக வழங்கப்பட வேண்டிய தண்டனை என்ன? வழங்குவது யார்??
ReplyDelete!!எல்லாமே கேள்வியாகத்தான் இருக்கிறது..
நியாயங்கள் இறந்து போய்விட்டதே...!!
நியாயமான கேள்வி .ஆனாலும் நீதி செத்து ரொம்ப காலம்
ஆச்சு .வலிநிறைந்த பகிர்வு அனைவரின் வேதனைக்கும்
ஒரு சின்ன அமைதிக்காக கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க
நம்ம வீட்டுப்பக்கம் .நன்றி சகோ பகிர்வுக்கு
காட்டான் அவர்களுக்கு!கேள்விக்கணையை என்பக்கம் திருப்பி விட்டுட்டீங்களே!
ReplyDeleteபின்னூட்டம் போடும் போது நீங்கள் மட்டுமே முதல் பின்னூட்டத்தில் இருந்தீர்கள்.திசை மாறிப்போய் விட்ட இந்திய,ஈழத்தமிழர்களின் உறவுக்கும்,வெளிநாட்டுக்கொள்கைக்கும் முக்கிய காரணம் ராஜிவின் கொலை வழக்கே.இன்று வரை ராஜிவ் கொலையை விடுதலைப்புலிகள் செய்தார்கள் என்றோ அல்லது செய்யவில்லையென்றோ அறிக்கைகள் வெளியிடவேயில்லை.துன்பியல் என்ற ஒற்றை வார்த்தையுடன் நிறுத்துக்கொண்டார்கள்.மேலும் இப்பொழுது போல் மாற்றுக்கருத்துக்களை பொதுவாக விவாதிக்கும் நிலையில் தமிழகம் இல்லை.தமிழகத்தைப் பொறுத்தவரையில் பொடா காலங்களுக்கும் முன்பே தமிழகம் ராஜிவ் குறித்தான கருத்தில் பொடாக்காலமே!
மரணதண்டனையின் பல பரிமாணங்களை அப்சல்குருவின் மரணதண்டனை பதிவில் சொல்லியிருந்தேன்.அதைச் சொல்லும் போது பேரறிவாளன் உட்பட்ட மூவரின் மரணதண்டனை பற்றி தெரியாத காரணத்தால் குறிப்பிட முடியவில்லை.மன்னிக்கவும்.
நல்ல சட்ட ஆலோசகர் மரணதண்டனைக்குறித்து நீதிமன்ற முன்னெடுப்புக்களைக் கொண்டு செல்லும் பட்சத்தில் மரணதண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்ற வழிகள் இருப்பதாக வழக்குரைஞர் ஒருவர் சொன்னார்.வாய்ப்புக்களுக்கு எதிராக சுப்ரமணிய சுவாமி மேல் முறையீடு செய்வேன் என்று நேற்று அறிக்கை விடுகிறார்.சுப்ரமணியசுவாமி,சந்திரசுவாமிகளின் கோணத்தில் வழக்கு விசாரிக்கப்படாமையும்,மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் சார்பான வாதங்களையும் முன்வைக்காமல் சி.பி.ஐ தரப்பு வாதம் மட்டுமே முன்வைக்கப்பட்டு தீர்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.இதனை மாற்றும் வலிமை நம்மிடம் உள்ளதா என்பதே கேள்விக்குறி!
இப்போதைக்கான அரசு அதிகாரத்தில் ஜெயலலிதா இதில் மூக்கை நுழைப்பாரா என்பது சந்தேகம்தான்.தமிழ் உணர்வாளர்களின் குரல்கள் மட்டுமே இப்போதைக்கு ஆதரவு.அப்பாவி மக்களின் இனப்படுகொலைகள் மட்டுமே தராசின் தட்டுகளை மாற்றியிருக்கிறது.
மேலும் வாசிப்புக்கும்,விவாத களத்திற்கும்...
http://www.writerpara.com/paper/?p=944
//பேட்டரி வாங்கி கொடுத்தது கொலைக்கு ஒப்பான, மரண தண்டனை வழங்கக்கூடிய அளவுக்கு கொடூரமான குற்றம் என்றால், கொத்து கொத்தாக ஈழத்தில் மக்கள் சாக குண்டுகள் கொடை செய்த அன்னை சோனியா கும்பலுக்கு உச்ச பட்சமாக வழங்கப்பட வேண்டிய தண்டனை என்ன? வழங்குவது யார்??
ReplyDeleteநியாயமான கேள்விகள்....
மரணத்தை எதிர்நோக்கி காத்திருகும்
ReplyDeleteமூவரும் ஏன் தமிழனாகப் பிறந்தார்
அது தவறுதானே
வேறு மத்தவனாக அல்லது வேறு
மாநிலத்தவனாக இருந்திருந்தால்
விடுதலை எப்போதோ கிடைத்
திருகும்.
புலவர் சாஇராமாநுசம்
மாப்ள....இந்த விஷயத்தில் @@@ரா அம்மையார் அளவுக்கு அறிவாளி கிடையாது @@வ்......அதனாலதான் சில மலையாள புல்லுருவிகள் கொடுத்த தவறான அறிவுரைகளை ஏற்று பெரும் பாவத்துக்கு ஆளானார்!......இதை தொடர்ந்து செயல்படுத்தி மனைவி எனும் பொறுப்பை கருவறுக்க பயன் படுத்தியவர்களை என் சொல்வது....இது இன்றும் தொடர்கிறது ....இதன் தாக்கமே இந்த தண்டனைகள்!
ReplyDelete//இப்போது வேண்டிக்கொள்வது எல்லாம், இந்த மூவரின் மரணதண்டனைக்கு எதிராக அரசியல், கட்சி, பேதம் புறம் தள்ளி ஒன்றுபட்டு போராடுவது தான். //
ReplyDeleteநடக்குமா?!
தமிழன் சுத்தமாக முதலில் குப்பையில் துடைத்தெறிய வேண்டிய கட்சியும்,ஆட்களும் காங்கிரஸ்தான்.இவர்களின் ப்ழி வாங்கும் படலம் இந்திரா கொலையின்போது பல்லாயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்டதில் புரியாதா என்ன?ஈழத்தில் பல்லாயிரம் உயிரை குடித்தவர்களை இன்னமும் இங்கு மன்சாட்சியை விற்று விட்டு தமிழ்நாட்டில் சோனியாஜி,பிதாஜி,மாதாஜி என கூவிக்கொண்டிருக்கும் அல்லக்கைகளை என்ன செய்வது?
ReplyDeleteதங்கள் பதிவை புரியவேண்டியவர்கள் படித்தால்
ReplyDeleteமனசாட்சி இருந்தால்
நிச்சயம் ப்ராயச் சித்தம் தேடுவார்கள்
தரமான பதிவு தொடர வாழ்த்துக்கள்
நியாயமான கேள்விகள்..என்ன செய்வது? அரசியல்வாதிகள் தமது சுயலாபங்கள் தவிர்த்து கட்சி பேதமின்றி ஒன்றுபட்டு....மரண தண்டனைக்கெதிரா...இதெல்லாம் நடக்குமா? :-(
ReplyDeleteNedumaran have to work like Anna Hazare .Vaiko & Seeman have to explain to peoples clearly this matter .
ReplyDeleteCongress peoples have no idea above tamilians globally include India.
அரசியல்ல நான் ஒதுங்கியே இருக்கிறன். பதிவுகள்ளையும் பேசுறதில்ல, பின்னூட்டம் வருகைக்கு மட்டும்.
ReplyDeleteஉங்கள் பதிவுகள் டஷ்போர்டில் காலம் சென்றே வருகின்றன... என்னவென்று பாருங்கள்....
ReplyDeleteWhat would you say if they are real culprits? Can we hang them or no?
ReplyDeleteShoule we leave them because they are TAMILS and LTTE Supporters??
In my opinion they all played in the gruesome killing of Rajiv so they should be hung.
காலவதியான தடா சட்டங்களின்படி வழங்கபட்ட தண்டனைகளை ரத்து செய்யவேண்டும். இவர்களின் மீது சுமத்த பட்டுள்ள குற்றசாட்டுகள் கடுமையனவைகள் அல்ல. அப்படியே குற்றம் என்றாலும், அவர்கள் ஏற்கனேவே சுமார் 20 ஆண்டுகள் தனிமை சிறையில் அனுபவித்த தண்டனைகளை கருத்தில் கொண்டு, அவர்களை விடுவிக்கவேண்டும். அப்படி விடுவிகமுடியவிட்டால், தூக்கு தண்டனையை மாற்றி, அரசாங்கம் விரும்பும் வரை சிறையிலாவது உயிருடன் இருக்கவிடுங்கள்...
ReplyDeleteஆனால் நடப்பவை கவலை அளிபதாக உள்ளது, இந்த பிரச்னையை சட்டசபையில் பற்றி பேச 15 முறை அனுமதி கேட்டும் அனுமதி மறுப்பு. சட்டசபையில் பேசியதும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கம். இலங்கைத் தமிழர்களுக்காக திடீர் குபீர் ஆதரவு தெரிவித்தவர்கள் இப்படி திடீர் என்று மாறி சட்டசபையில் பேசக்கூட முடியாத நிலைமை.
தங்களால் முடியாத, தான் நேரடியாக செய்யமுடியாத ஒன்றிற்காக ஆவேசமாக தீர்மானம் நிறைவேறும் போது, தனது அரசு சமந்தப்பட்ட, தன்னால் நேரடியாக செய்யமுடிந்த ஒன்றை பற்றி, குறைந்தபட்சம் சட்டசபையில் பேச கூட அனுமதி இல்லை..
அடுத்தது என்ன நடக்கும் என்று தெரியவில்லை...
கருணாநிதியும் மற்ற அனைத்து தமிழகத்து தலைவர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து விட்டனர், காங்கிரேசை தவிர. இன்னும் ஜெயா இதுகுறித்து எந்த கருதும் தெரிவிக்கவில்லை...சோனியா இந்த முறையாவது கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்பாரா ?..
அப்படி செய்தல், ஈழ துரோகத்தால் காயம்பட்டு உள்ளவர்களுக்கு , சிறிது மருந்திடுவது போல இருக்கும்...செய்வாரா ?
இந்த மூன்றுபேரும் குற்றமற்றவர்கள் ஆதலால் இவர்களை விடுதலை செய்ய வேண்டும். அதையும் மீறி தூக்கில்போடுவதென்றால் ராசிவ்காந்தி என்ற கொடுங்கோல் கொலைகாரனை கொன்ற வழக்கில் தண்டனையை நிறைவேற்றட்டும். மானங்கெட்ட இந்திய அரசு தமிழ் மீனவர்களை பாதுகாக்க வக்கில்லை, முதல்ல இந்த இந்திய நடுவன அரசு தலைவர்களை தூக்கில் இடவேண்டும்.
ReplyDeleteதமிழா நீ இந்திய நாட்டில் அடிமையாய் இருக்கிறாய்
என்பதற்கு பல சான்று உண்டு அதில் இது ஒன்று.
துரோகி இந்தியாவை ஈழம் நம்பி சீரழிந்தது
தமிழர்களும் இந்தியாவை நம்பியிருந்தால் நாம் அழிவது நிச்சயம்,
இந்தியாவின் சுயருபத்தை உணர்ந்துகொள் தமிழா,
இந்தியா என்றுமே தமிழனுக்கு நண்பனாக இருந்ததில்லை
காலம் தரும் பாடத்தை கற்றுகொள்.