கொளுத்தும் வெயிலிலும்
காவற் கடமை நிமிர்த்தம்,
காய்ந்து போய்
நடு முற்றத்தில் படுத்துக்கிடந்த
நாயார்..,
(நிகழ்வுகள் வலை தளத்தில் திருடியது)
பார்த்துப் பரிதாபப்பட்டு
பக்கத்துக்கு கடைக்கு போய்,
அளவான தொப்பி
வாங்கி ஒன்று கொடுத்தேன்.
வாலை ஆட்டிக்கொண்டே
தலையை நீட்டியவர்,
உரிமையோடு ஒரு
கூலிங்கிளாஸ்_சும் கேட்டார்!
(நிகழ்வுகள் வலை தளத்தில் திருடியது)
"கருப்பு தான் எனக்கு
எடுப்பாக இருக்கும்!" என்று
சொன்னவர்கு..
ஆசை போலவே
அழகான ஒரு கண்ணாடியும்;
கருப்பு கண்ணாடி
போட்ட நாள் முதல்
புரட்சி தலைவன் MGR! என்று
நினைப்பு வேறு.
(நிகழ்வுகள் வலை தளத்தில் திருடியது)
ம்ம்ம்
நினைப்பில மட்டும் தான்..!
எவ்வளவு தான் அ(க)டி வாங்கினாலும்
வலியை வெளிக்காட்டா
வடிவேலு போல...,
எங்க வீட்டு நாயார்!
(நிகழ்வுகள் வலை தளத்தில் திருடியது)
குறிப்பு 1;-சில போட்டோக்களை பார்த்தால் ஏதாவது நாலு வரி எழுதணும் என்று தோணும், அந்த வகையில் என்றோ ஒரு நாள் எழுதிய கவிதை (!) தான் இது ;-)
குறிப்பு 2;- புகைப்படம் -கூகுளே
முதல் விதை முளைத்ததே...
ReplyDeleteநாய் படம் சூப்பரப்பு...
ReplyDeleteநன்றியுள்ள நாயாருக்கு தொப்பியும் கூலிங் க்ளாஸும் அருமையாக வழங்கியுள்ளீர்கள் கவிதையில்; படமும் ஜோராய் இருக்கு. பாராட்டுக்கள்.
ReplyDeleteஒரு படத்துக்கு இவ்வளவு பெரிய கவிதையா.....நல்லா இருக்குது...
ReplyDeleteதளத்தின் பெயரும் எனது பெயரும்...........
நாய்க்கு ஒரு கவிதை(!)//
ReplyDeleteஅவ்....தலைப்பில் உள் குத்து ஏதும் இல்லையே?
வாலை ஆட்டிக்கொண்டே
ReplyDeleteதலையை நீட்டியவர்,
உரிமையோடு ஒரு
கூலிங்கிளாஸ்_சும் கேட்டார்//
இங்கே, நீங்கள் யாரையோ,
இருக்க இடங் கொடுத்தால்,படுக்கப் பாய் கேட்பார்களென்று நச்சென்று கடிச்சிருக்கிறீங்க.
எவ்வளவு தான் அ(க)டி வாங்கினாலும்
ReplyDeleteவலியை வெளிக்காட்டா
வடிவேலு போல...,
எங்க வீட்டு நாயார்!//
அவ்...உள் குத்தில் எம்ஜிர், வடிவேலு இருவரையும் போட்டுத் தாக்கியிருக்கிறீங்களே.
சில போட்டோக்களை பார்த்தால் ஏதாவது நாலு வரி எழுதணும் என்று தோணும், அந்த வகையில் என்றோ ஒரு நாள் எழுதிய கவிதை (!) தான் இது ;-)//
ReplyDeleteஅப்ப நீங்கள் அவாவோடை போட்டோவைப் பார்த்தால் என்ன எழுதுவீங்க?
கவிதை கலக்கலாக வந்துள்ளது.
பிராணிகள் மீதுள்ள உங்களின் இரக்கத்திற்குச் சான்றாக இக் கவிதை அமைந்துள்ளது.
படத்திற்குக் கவிதை எழுத எல்லோராலும் முடியாது.நல்லாவே வந்திருக்கு வரிகள்.நாயாரை மதித்து யார் இப்படி ஒரு அழகான கவிதை எழுதியிருப்பார்கள்.நாயாருக்குத் தெரிந்தால் வேற ஏதாச்சும் வாங்கித் தரக் கேக்கப்போறார் !
ReplyDeleteபடத்தைப்போலவே கவிதையும் அழகு நண்பா
ReplyDeleteகொடுத்து வைத்த நாயார்.
அவருக்கு கிடைத்தவற்றில் உங்கள் கவிதை போல் ஒன்றும் புடிக்கவில்லையாம் lol
ஹா ஹா
அடபாவி நானும் நாய் பதிவு போட இருக்கிறேன் எப்பிடியப்பா மோப்பம் பிடிச்சாய் என்றாலும் காட்டான்ட நாய் கூலிங்கிளாஸ் போடாது மாப்பிள...!!!
ReplyDeleteகாட்டான் குழ போட்டான்..
படமும் கவிதையும் மிக மிக அழகு
ReplyDeleteகவிதை என்கிற வார்த்தைக்கு
பக்கத்தில் வைத்துள்ள
ஆச்சர்யக் குறியை நிச்சயம் நீக்கிவிடலாம்
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்
அட அட ஒரு போட்டோவை வைத்து கவிதையா? கலக்குறீங்க
ReplyDelete//வாலை ஆட்டிக்கொண்டே
ReplyDeleteதலையை நீட்டியவர்,
உரிமையோடு ஒரு
கூலிங்கிளாஸ்_சும் கேட்டார்////
ஹிஹி ஆரம்பிச்சிட்டாங்கப்பா!!
//கருப்பு கண்ணாடி
ReplyDeleteபோட்ட நாள் முதல்
புரட்சி தலைவன் MGR! என்று
நினைப்பு வேறு.//
ஹிஹி நல்லா கடிக்கிறீங்க அப்பு!!சாமர்த்தியம்!!
நான் யாரும் அரசியல் வாதிகளுக்கு உள்குத்து எண்டு நினைச்சன்
ReplyDelete//// "கருப்பு தான் எனக்கு
ReplyDeleteஎடுப்பாக இருக்கும்!" என்று
சொன்னவர்கு..////
அவரு சொல்லாலாம் நானும் சொல்லலமா சொல்லித் தான் நீர் வாங்கித் தருவீரா ? ஹ..ஹ..ஹ.
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவிட்ட பின் அழித்த பதிவுகளையும் தேடிப் படிக்கலாம்.
கருப்பு கண்ணாடி
ReplyDeleteபோட்ட நாள் முதல்
புரட்சி தலைவன் MGR! என்று
நினைப்பு வேறு.
(நிகழ்வுகள் வலை தளத்தில் திருடியது)
ம்ம்ம்
நினைப்பில மட்டும் தான்..!
உள்குத்தா?
ம்ம்ம்ம்
மொத்தத்தில் கலக்கல்.
லொள் லொள் ....
ReplyDeleteநல்ல லொள் கவிதை...உங்கள் inspiration ல எனக்கும் ஒரு லொள் கவிதை ஆசை வந்துவிட்டது....
நாளை அலுவலகம் செல்லும் வழியில் எழுதுகிறேன்..மறக்காமல் உங்கள் கருத்தை சொல்லவும்...
மனுசங்களை விட நாய் பரவாயில்லை தான்.
ReplyDeleteசூப்பரப்பு!
ReplyDelete//செங்கோவி said.மனுசங்களை விட நாய் பரவாயில்லை தான்//
ரிப்பீட்டு!
அட...... இது புதுசா இருக்குதே.
ReplyDeleteநல்ல கவிதை ....
ReplyDeleteநல்ல புகைப்படம்
வாழ்த்துக்கள்
தமிழ் மனம்
நாய் செம ஸ்டைலு .........அத விட கவிதை தூளு ...
ReplyDeleteHa ha nice
ReplyDeleteநாயாரின் முகத்தில்தான் எத்தனை பெருமிதம்!
ReplyDeleteஇத்தனை அருமையான கவிதை எழுதினால் இருக்க்காதா பின்னே.
எலலவற்றிலும் கவிதை பார்க்கனும்...
ReplyDeleteசூப்பர்...
கவிதை சூப்பர்...
ReplyDeleteஉங்கள் கவிதை சூப்பர் .நான் வலையுலகில் புதியவன் என் தளத்துக்கும் வருகை தாருங்களேன். மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு எது பெஸ்ட் -ஒரு அலசல்
ReplyDeletehttp://kobirajkobi.blogspot.com/2011/08/blog-post_03.html
அதுசரி நாய் கேட்கிறதை வாங்கிக்கொடுத்தால் நாய் நன்றியாவது வைச்சிருக்கும்..
ReplyDeleteநல்ல கவிதை..
நன்றியுள்ள நாய்க்கு கவிதை தேவைதான் ஆனா என்ன ஒன்னு அதால
ReplyDeleteபடிச்சு ரசிக்க முடியாது.
படத்துக்குப் பொருத்தமா ஒரு கவிதை!
ReplyDeleteநாய் வாழ்க கந்தசாமி வாழ்க கவிதை வாழ்க!!!
ReplyDeleteஉயர் திணைக்குரிய 'ஆர்'விகுதி
ReplyDeleteநாயார் என்று போட்டது சாலச்
சிறந்தது.
நன்றி கெட்ட மனிதரினும்
நாய்கள் மேலடா
கவிதை அருமை!
புலவர் சா இராமாநுசம்
தாய்.... தாயார்...
ReplyDeleteநாய்.... நாயாரா??!!
நல்ல கண்டுபிடிப்புங்க... :)
எங்களுக்கு எவளவோ உதவிகள் செய்யும் நாயையும் மதித்து அதற்கு ஒரு கவிதை அருமையாக உள்ளது நண்பரே
ReplyDeleteஅட அட..... நாய்க்கெல்லாம் கவிதையா......... நல்லா இருங்கப்பு
ReplyDeleteஆமா.... அது ஆம்பிள நாயா பொம்பள நாயா
ReplyDeletesimply super maapla!
ReplyDelete''...எவ்வளவு தான் அ(க)டி வாங்கினாலும்
ReplyDeleteவலியை வெளிக்காட்டா
வடிவேலு போல...,''
அப்படி ஒரு நகைச்சுவை ! சிரிப்பு..சிரிபாய்..வருகிறது...
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
சூப்பர் ஒரு படத்தினை பார்த்து அதுவும் நாயாருடைய படத்தினை பார்த்து இம்புட்டு அழகான கவிதை சூப்பர்
ReplyDelete