மனதை கனக்க வைத்த கிளைமாக்ஸ்கள்.

ஏனோ தெரியல்லீங்க, எனக்கும் சினிமாவுக்கும் கொஞ்சம் எட்டா பொருத்தம் தான். அதுக்காக சினிமா எல்லாம் பார்க்காதவன் நான் என்று சொல்ல வரவில்லை. நான் முதன் முதலாக தியேட்டருக்கு சென்று பார்த்த படம் மின்சாரக்கண்ணா. நான் நினைக்கிறேன் 2002ம் ஆண்டளவில் யாழ் ராஜா திரையரங்கில் பார்த்ததாக நினைவு. அப்போ எனக்கு கிட்டத்தட்ட பதின்மூன்று, பதின்நான்கு வயசிருக்கும். அந்த சின்ன வயசில, அந்த பெரிய திரையரங்கில் ரம்பாவை பார்த்த அதிர்ச்சியோ இல்லை எதோ..., அதன் பின்பு படம் பார்க்கவென்று இதுவரை தியேட்டர் பக்கம் சென்றதில்லை.. செல்ல விரும்பியதும் இல்லை. ஒரு வேளை கிரிக்கெட் மீது இருந்த மோகம் தான் இதற்கு காரணமாக இருக்கலாம். ஆனாலும், தொலைக்காட்சியில் திரைப்படம் போனால் நேரம் கிடைக்கும் போது  பார்க்கத்  தவறுவதும்  இல்லை.

பதிவர் கார்த்தி அவர்கள் என்னை "மனதை கனக்க வைத்த கிளைமாக்ஸ்"  என்ற தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். அவருக்கு நன்றியை கூறிக்கொண்டு நானும் தொடர்கிறேன். எனக்கும் சினிமாவுக்கும் எட்டா பொருத்தம் என்பதால ஏதாவது தவறுகள், பிழைகள் இருந்தால் மன்னியுங்கள்- சுட்டிக்காட்டுங்கள்.

உயர்ந்த மனிதன்! (ரசிப்புக்கு பழசு புதுசு தேவையில்லை தானே, ஏனென்டால் ஊருக்க இப்பவே எனக்கு அறுபது வயசெண்டு நம்பிக்கொண்டிருக்காங்கள் ஹிஹி)  நடிகர் திலகம், வாணிஸ்ரீ,  செளகார் ஜானகி, சிவகுமார் போன்றோர் நடிப்பில் வெளிவந்த  திரைப்படம்.  நான் பிறப்பதற்கு பல காலம் முதலே வெளியானது. மிகவும் செல்வந்தரான சிவாஜி ஏற்கனவே நிச்சயம் பண்ணிய பெண்ணான  செளகார் ஜானகியை  விட்டு, ஒரு ஏழை பெண்ணை காதலித்து கல்யாணம் செய்துடுவார். சிறிதுகால குடும்ப வாழ்க்கைக்கு பின்னர் அது சிவாஜின் பணக்கார தந்தைக்கு தெரிய வரவே, சிவாஜி இல்லாத நேரமாக பார்த்து கர்ப்பவதியாக இருந்த,  சிவாஜியின் காதல் மனைவி  தங்கியிருந்த வீட்டுக்கு தீ வைத்துவிட்டு,  அந்த சமயத்தில் வரும் சிவாஜியையும் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று, ஏற்கனவே நிச்சயம் பண்ணிய பொண்ணுக்கு  திருமணம் செய்து வைத்திடுவார். இவ்வாறு சில வருடங்கள் கழித்து, ஏற்கனவே இறந்து போனதாக கருதப்பட்ட , சிவாஜியின் காதல் மனைவிக்கு பிறந்த மகன் கால ஓட்டத்தில் சிவாஜியின் வீட்டிலேயே வேலைக்காரனாக சேர்ந்திடுவார். அதன் பின் சிவாஜி தன் மகனை அடையாளம் கண்டுகொள்கிறாரா? எவ்வாறு?  என்பது தான் மீதி கதை. சிவாஜியின் மகனாக சிவகுமார் நடித்திருந்தார். 

இதில், சிவாஜியின் மகனுக்கு சக ஊழியர்களால் திருட்டுப்பட்டம்  கட்டி சிவாஜியிடம் மாட்டி விட்ட போது, தன் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவனை திருடன் என நம்பி,  தன்  மகன் என்றும் தெரியாது சிவாஜி சிவகுமாரை அடித்து துரத்துவதும். சற்று நேரத்திலே சிவகுமாரின் காதலி மூலம் அவன் திருடன் இல்லை, தன் மகன் தான் என்று அடையாளம் கண்டு கொண்டவுடன் வெளிக்காட்டும் உணர்வுகளும் ரொம்பவே அற்புதம். இதில் ஒரு அப்பாவியாக -நேர்மையானவனாக  நடித்த  சிவகுமாரின் நடிப்பும் அபாரம்.


சின்னத்தம்பி! பி வாசு இயக்க, பிரபு, குஷ்பூ நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போட்ட  திரைப்படம். இளையராஜா இசையில் பின்னியிருப்பார். பாடல்கள் அனைத்தும் அந்த நாட்களிலே பெரும்பாலானோர் வாய்களில் முனுமுனுக்கப்பட்டது.  இந்த மெகா ஹிட் திரைப்படமே பிரபுவுக்கு என்று தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பெற்று  கொடுத்தது  என்றால் மிகையில்லை.  ஒரு அப்பாவியாக, உலகம் தெரியாத பிள்ளையாக தன் தாயால் வளர்க்கப்படும் பிரபு... தாய் வேடத்தில் மனோரம்மா நடித்திருந்தார். பணக்காரரான குஷ்பூவின் வீட்டில் வேலை செய்யும் போது, வெள்ளந்தி மனம் கொண்ட பிரபு மீது குஸ்பூவுக்கு காதல் ஏற்படுகிறது (  நிஜத்தில் ஏற்பட்டது வேற கதை ஹி ஹி)

ஒரு கட்டத்தில், தாலி எதற்காக கட்டுவது என்று கூட தெரியாத பிரபுவிடம் அதை கொடுத்து குஷ்பூ கட்டிப்பார். இதை அப்பாவி தனமாக தன் தாயான மனோரம்மாவிடம் சொல்லும் காட்சியும், அதன் பின்னரான மனோரம்மாவின் தவிப்பும்.... இன்றும் பலர் மனங்களில்  நிற்கும் திரைப்படம். 

துள்ளாத மனமும் துள்ளும்! விஜய்க்கு தமிழ் சினிமாவில் சிறந்த இடத்தை கொடுத்த படங்களில் இதுவும்  ஒன்று என சொல்லலாம். 99 களில் வெளிவந்து ஹிட் ஆகிய படம். ராஜ்குமாரின்  இசையில் பாடல்கள் அனைத்தும் பிரபலமாகியது. இப்படத்துக்கும் ஏற்கனவே 96 களில் வெளிவந்த காதல் கோட்டை திரைப்படத்துக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை. அதே போல இறுதியாக வெளிவந்த விஜயின் காவலன் திரைப்படத்தின் முன்பாதியும்  இதே படத்தை தான் நினைவு படுத்தும். ஆனால் இரண்டிலும் கிளைமாக்ஸ் வேறு.  நிச்சயமாக விஜயின் ரசிகர் தவிர்ந்தவர்களையும் இந்தப்படம் கவர்ந்திருக்கும். முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில் விஜய், சிம்ரனின் நடிப்பு  பார்ப்பவர்கள் முகத்தில் சோக உணர்வுகளை   வரவைக்கும்.


அன்புள்ள ரஜனிக்காந்! சின்ன வயசில படம் பார்க்கிறது என்றால் அது அந்த படங்களில் வரும் நகைச்சுவை காட்சிகளுக்காகவும், சண்டைகாட்சிகளுக்காகவும் தான்(சொந்த அனுபவம்). அந்த வகையில் இந்த படத்தை சிறு வயசிலே பார்த்துவிட்டேன். மீண்டும் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் இரண்டாயிரத்து எட்டில் கொழும்பில் இருக்கும் போது கிடைத்தது. என் வாழ்நாளில் முதன் முதலாக ஒரு திரைப்படம் பார்த்து கண் கலங்கியது என்றால், அது  இந்த படத்தில் குழந்தை மீனாவின் நடிப்பில் தான். 

தெய்வத்திருமகள்! மேற்சொன்ன சின்னத்தம்பி  படத்தில் பிரபு கேரக்டருக்கும் தெய்வ திருமகள் படத்தில் விக்ரம் கேரக்டருக்கும் சில ஒற்றுமைகள்  உள்ளது! அத்தோடு, முதல் நான் குறிப்பிட்டது போல, அன்புள்ள ரஜனிக்காந் படத்தில் குழந்தை    மீனாவின் நடிப்புக்கு பிறகு மீண்டும் ஒரு தடவை  என்(பலர்) கண் கசிய  வைத்த குழந்தை  இந்த  நிலா (சாரா). கிளைமாக்ஸில், நீதி மன்ற காட்சியில்,  நீண்ட நாட்கள் பிரிந்திருந்த தகப்பன் மகளுக்கிடையிலான ஒரு பாச போராட்டத்தை தம்  நடிப்பின் மூலம் கொண்டுவந்து  பார்ப்பவர்களை  கலங்க   வைத்திருப்பார்கள்  விக்கிரமும்  நிலாவும்.

 எம் குமரன் சண் ஒப் மகாலக்ஸ்மி!  நான் இது வரை அதிக தடவைகள் பார்த்த திரைப்படம் என்றால் இது தான்(கூடவே விஜயின் பிரண்ட்ஸ்). தற்போதும் சந்தர்ப்பம் கிடைத்தால்  பார்க்க தவறுவதில்லை. படம் மிக பெரிய ஹிட் இல்லை என்றாலும் எனக்கு பிடிச்சிருந்தது. ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருந்தார். முதல்  பாதி  தாய்  மகனுக்கிடையிலான  பாசத்தை அடிப்படையாக வைத்தும், இரண்டாம் பாதி மகன் தகப்பனுக்கிடையிலான புரிந்துணர்வுகளை கொண்டும் வெளிவந்த படம்.  தாய் இறக்கவும் அவரின் ஆசையின் படி  ஹீரோ சிங்கப்பூரில் உள்ள தன் தந்தையிடம் செல்கிறார். தந்தையான பிரகஸ்ராஜ் ஏற்கனவே இரண்டாம் கல்யாணம் செய்து,   ஒரு  பாச்சிங் சென்டர்  வைத்து நடத்திக்கொண்டு  இருப்பார்.
வளர்த்த கிடாவே மார்பில் பாய்வது போல, பிரகாஸ்ராஜ் தான் பயிற்றுவிக்கப்பட்டவனாலே (சிஷ்சியனால்) தாக்கப்பட்டு  வைத்தியசாலையில் கிடக்கும் போது, அவரின் முதல் மனைவியின்  மகனான ஜெயம் ரவி காட்டும் உணர்வுகளும்,  அவரை அங்கிருந்து  பாக்சிங்  சென்ரருக்கு அழைத்து சென்று தாக்கியவர்களுடன் சண்டை போடும்  போது பிரகாஸ் ராஜ்  முகத்தில் காட்டும் பெருமிதமும்  அந்த சில நிமிடங்களில் பார்ப்பவர்களை இருக்கையில் கட்டிப்போடும் .


இவை தவிர குணா, சந்தோஸ் சுப்ரமணியம், காதல், சேது, வாழ்வே மாயம், நான் அடிமை இல்லை .....இன்னும் பல படங்களை சொல்லாம். ஆனால், உடனடியாக நினைவுக்குள் வருகுதில்லை;-) 

44 comments:

  1. நல்ல படங்களின் தொகுப்பு தான்..

    ReplyDelete
  2. //இதில் ஒரு அப்பாவியாக -நேர்மையானவனாக நடித்த சிவகுமாரின் நடிப்பும் அபாரம்.//

    அவர் எங்கே நடித்தார்..அவர் மூஞ்சியே அப்படித்தான்யா!

    ReplyDelete
  3. அவர் எங்கே நடித்தார்..அவர் மூஞ்சியே அப்படித்தான்யா!///ஹஹஹா அவர் மூஞ்சியே அப்படித்தான் ,ஆனால் அந்த கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியிருந்தது....

    ReplyDelete
  4. அனைத்தும் அனைவர் நெஞ்சிலும் நிற்பவை.
    எனக்கு நந்தா படத்தில் க்ளைமாக்ஸ்சில் சூர்யா வின் முகபாவம் பிடிக்கும்.

    ReplyDelete
  5. நல்ல படங்கள்தான். எல்லா பாடங்களையும் மற்றொரு படத்துடன் இணைத்து விட்டீரே.

    ReplyDelete
  6. நானும் உங்களைபோல்தான் மாப்பிள சினிமா பார்பதே அபூர்வம்..  அப்படியிருந்தும் அருமையான பதிவை இட்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள்... 

    காட்டான் குழ போட்டான்..

    ReplyDelete
  7. உங்களின் சினிமா விமர்சனங்கள் மிக நன்றாக உள்ளன. இவற்றில் ‘உயர்ந்த மனிதன்’ & ‘சின்னதம்பி’ இரண்டும் பல முறை நான் பார்த்த படங்கள். உயர்ந்த மனிதனில் சிவாஜி, சிவக்குமார், மேஜர் சுந்தரராஜன், அசோகன், வாணிஸ்ரீ, செளகார்ஜானகி, வி.கே.ராமசாமி போன்ற அனைவரும் மிகச்சிறப்பாகவே நடித்திருப்பார்கள். இவை இரண்டுமே நல்ல நல்ல அருமையான பாடல்களைக் கொண்ட படங்கள். மற்ற படங்கள் நான் இதுவரை பார்க்காதவை. பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  8. நல்ல படங்களின் தொகுப்பு

    ReplyDelete
  9. //ஏனென்டால் ஊருக்க இப்பவே எனக்கு அறுபது வயசெண்டு நம்பிக்கொண்டிருக்காங்கள் ஹிஹி//

    ஆஹா ஆஹா

    ReplyDelete
  10. //சின்னத்தம்பி///

    எனக்கும் ரொம்ப பிடித்த படம் பாஸ்

    ReplyDelete
  11. //துள்ளாத மனமும் துள்ளும்!//

    நண்பேண்டா

    ReplyDelete
  12. அருமையாய் எழுதி உள்ளீர்கள்

    ReplyDelete
  13. மொத்தத்தில் எல்லாமே சூப்பர் படங்கள்

    ReplyDelete
  14. அருமை. நானும் இந்த தொடர் பதிவை எழுதலாம் என்று இருக்கிறேன்.

    ReplyDelete
  15. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  16. நன்றிகள் உடனேயே எழுதிட்டீங்க!!
    எனக்கு இதில் தூள்ளாத மனமும் துள்ளும் தெய்வதிருமகளின் கிளைமாக்ஸ்கள் மனதில் நிறைந்திருந்தது.

    பிரபு மீது குஸ்பூவுக்கு காதல் ஏற்படுகிறது ( நிஜத்தில் ஏற்பட்டது வேற கதை ஹி ஹி)
    இந்த வரியை ரொம்பவே ரசித்தேன்!

    ReplyDelete
  17. \\\நான் முதன் முதலாக தியேட்டருக்கு சென்று பார்த்த படம் மின்சாரக்கண்ணா\\\ அதான் அந்த படம் ஊத்திக்கிச்சா ...ஹி ..ஹி

    ReplyDelete
  18. இதில் சின்னத்தமிபி, எம் குமரன்
    படம் மட்டும் பாத்திருக்கேன். நீங்க எழுதி இருப்பதுபோல மனதில் நிற்கும்
    க்ளைமாக்ஸ்தான். அதிகமாக படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில்லே.

    ReplyDelete
  19. அனைத்துமே மனதில் நிற்பவை.நன்று

    ReplyDelete
  20. அடுத்த தொடர் பதிவு ஆரம்பித்து விட்டதா..?

    ReplyDelete
  21. தாங்கள் ரசித்த படங்களின் கிளைமாக்ஸ் மிகவும் அர்ப்புதமானதுதான்....


    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  22. நல்ல ரசனை..
    பகிர்வுக்கு பாராட்டுக்கள் சகோ..

    ReplyDelete
  23. சிலரது ரசனையை வைத்து அவர்களது குணமும் வ...ய...சும் தெரியும் என்பார்கள்.அருமையான தெரிவுகள் !

    ReplyDelete
  24. வாலிக்கும் சோவுக்கும் ஏழாம் பொறுத்தம்.உங்களுக்கும் சினிமாவுக்கும் எட்டாம் பொறுத்தமா:)

    ReplyDelete
  25. நல்ல ரசனை!வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. 2002ம் ஆண்டளவில் யாழ் ராஜா திரையரங்கில் பார்த்ததாக நினைவு. அப்போ எனக்கு கிட்டத்தட்ட பதின்மூன்று, பதின்நான்கு வயசிருக்கும்./

    வணக்கம் பாஸ்,
    தான் இப்போதும் சின்னப் புள்ள என்று சொல்லத் தான் இந்த வசனமா?
    இல்லே, நான் உங்களின் நிஜ வயது பற்றி என் பதில் பொய் சொல்லியதால் இந்த வசனமா?

    ReplyDelete
  27. என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. உயர்ந்த மனிதன்! (ரசிப்புக்கு பழசு புதுசு தேவையில்லை தானே, ஏனென்டால் ஊருக்க இப்பவே எனக்கு அறுபது வயசெண்டு நம்பிக்கொண்டிருக்காங்கள்/

    இந்தக் குத்தல் எனக்குத் தானே;-)))

    என்னயை எப்படியாச்சும் கடிக்கா விட்டால் சாப்பிட்டது செரிக்காது போலிருக்கே.

    ReplyDelete
  29. சின்னத் தம்பி, எம் குமரன் சன் ஒப் மகாலட்சுமி, துள்ளாத மனமும் துள்ளும் எனக்கும் பிடித்த படக் கிளைமாக்ஸ் பாஸ்.
    வித்தியாசமான ரசனையோடு உங்களின் உணர்வுகளைப் பகிர்ந்திருக்கிறீங்க.

    ReplyDelete
  30. நீங்கள் குறிப்பட்ட அத்தனை
    படங்களும் சிறப்பானவை நான் ரசித்த படங்கள் தான்,
    நல்ல பதிவு பாஸ்
    ரெம்ப ரசித்தேன் பகிர்தலுக்கு நன்றி பாஸ்

    ReplyDelete
  31. பிந்திய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் பாஸ்.

    ReplyDelete
  32. துள்ளாத மனமும் துள்ளும் my favourite .அப்புறம் உங்களுக்கு 23 வயதா. நான் என்னவோ கந்தசாமி என்றால் ஒரு 60 வயது இருக்கும் எண்டெல்லோ நினைச்சன் .எனக்கும் இப்படி ஒரு பதிவு எழுத ஆசை நீங்கள் விரும்பினால் மட்டும் .

    ReplyDelete
  33. மன்னிக்கவும் .ஒரு சந்தேகம் facebook like button இணைப்பது எவ்வாறு என்று சொல்ல முடியுமா .நீங்கள் விரும்பினால் மட்டும்

    ReplyDelete
  34. நல்ல தொகுப்பு !

    ReplyDelete
  35. ரொம்ப அழகா தொகுத்து எழுதியிருக்கீங்க..!!

    ReplyDelete
  36. பகிர்வுக்கு மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete
  37. முதலில் இரண்டு விடயங்களுக்கு மன்னிப்பு நண்பரே.
    1)மிகவும் தாமத மாகத்தான் இந்தப்பதிவை வாசிக்கின்றேன்
    2)உங்கள் பெயரைப்பார்த்து நான் நீங்கள் ஒரு வயதானவர் என்றுதான் நினைத்து இருந்தேன் அதற்கு.

    //அப்போ எனக்கு கிட்டத்தட்ட பதின்மூன்று, பதின்நான்கு வயசிருக்கும். அந்த சின்ன வயசில, அந்த பெரிய திரையரங்கில் ரம்பாவை பார்த்த அதிர்ச்சியோ இல்லை எதோ..., அதன் பின்பு படம் பார்க்கவென்று இதுவரை தியேட்டர் பக்கம் சென்றதில்லை.//

    ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....ரம்மா......அவ்....ரம்பா மேடத்தை ஞாபகப்படுத்திட்டீங்களே பாஸ்.

    அப்பறம் சின்னத்தம்பி,துள்ளத மனதும் துள்ளும் எல்லாம் மறக்கக்கூடிய படங்களா

    அதேபோல் ரசனைக்கு பழய படம் புதியபடம் என்ற வித்தியாசம் என்ன இருக்கு.உங்கள் கருத்துதோடு உடன்படுகின்றேன்.
    நான் அதிகமுறைபார்த்த Top-10 படங்களை வரிசைப்படுத்தினால் நிச்சயமாக ஒன்று இரண்டு சிவாஜியின் படங்களும் அடங்கும் உதாரணத்திற்கு.வசந்த மாளிகை.

    ReplyDelete
  38. Thullatha manamum thullum...nice movie

    ReplyDelete
  39. நல்ல படங்களின் தொகுப்பு

    ReplyDelete
  40. பலமுறை படிக்கத்தூண்டிய பகிர்வு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  41. நல்ல தொகுப்பு தான்.
    நன்றி,
    பிரியா
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete