ஒரே தெரு என்பதால்
அவ்வப்போது சந்திக்கும் எம் விழிகள்..,
பதிலுக்கு புன்னகைத்து செல்வாள்..
கால மாற்றத்தில்
இது காதலானது என்னுள்!
தினமும்
அவள் பாதம் சுமந்து
தாங்கி நிற்கும் தெருவை
விழிகளாலே உள்வாங்கியிருப்பேன்..
சில சமயங்களில்
அவளின் எதேச்சையாக
என் மீதான பார்வை
எனக்குள் ஏற்படும் மாற்றங்கள்
சொல்லி அடங்கா..
என் டயரி பக்கங்கள்
அவள் பெயராலும்,
நினைவுகளிலும்
கனவுகளிலும்
அவளுடன் நான் வாழும்
வாழ்க்கையாலும்
நிரம்பி கிடந்தது...
காத்திருந்து காலங்கள் கடக்க,
சில சமயங்களில்
கதைக்க முயன்று
தோற்றுப்போனேன் அவளிடம் !
நேர் விழியாக காணும் போதே
நான் பேச்சிழந்துவிடுகிறேன்..
தைரியம் இல்லாதவனாக
செல்பேசி எண்ணை
கொடுத்து, அவளின்
சொல்லாத காதலுக்காய்
செல்போனை பாத்திருக்க..
திடீரென ஒலித்த அழைப்பு மணியில்
"ஹலோ" என்ற மறுமுனையில்
அவள் காந்தர்வ குரல்..,
சிறிது நேரம் என்னையே மறந்த நான் ..
"உங்களை நான் சந்திக்க வேண்டும்
நாளை!".., என்றவள் சொல்லி முடிக்க
விழிப்புக்கு வந்தவனாக...
அந்தரத்தில் பறப்பதை
அன்று தான் முதல் முறை உணர்ந்தேன்..
அன்றைய நாள் இரவில்
என் விழிகள்
இமை மூட முன்னரே
அடுத்த நாள்
அதிகாலையும் விடிந்தது..
அவளுக்காய்..
இருமணி நேரம் முன்..,
காதல் கைகூட போகிறதே என்ற
எதிர்பார்ப்பும் மகிழ்ச்சியுமாக
சொன்ன இடத்தில் சென்று
தவமிருக்க
அவள் வருகிறாள்
தன் காதலனுடன்..!
கவிதை ...ரசனை...
ReplyDeleteகவிதையும் தொடங்கிட்டீங்களா??
வாழ்த்துக்கள் பாஸ்
அட வடை எனக்கு தானா??
ReplyDeletesuper! finishing touch is great! congrats
ReplyDeleteநன்றி மைந்தன் சிவா
ReplyDeleteநன்றி ரஜீவன்..
கற்பனையில் ஒரு காதல்!//
ReplyDeleteகவிதையின் தலைப்பே, உள்ளடக்கத்தில் நிறையப் பொருள்களைச் சொல்லும் போல இருக்கிறதே.
ஏன் நீங்கள் கற்பனையில் மட்டும் தான் காதல் செய்வீங்களோ?
ஒரே தெரு என்பதால்
ReplyDeleteஅவ்வப்போது சந்திக்கும் எம் விழிகள்..,
பதிலுக்கு புன்னகைத்து செல்வாள்..
கால மாற்றத்தில்
இது காதலானது என்னுள்!//
இக் கால இளைஞர்களின் யதார்த்தத்தை கவிதையில் அழகுற, ஆரம்ப வரிகளாகத் தொடுத்திருக்கிறீர்கள்.
ஒரு பொட்டை, பார்த்துச் சிரித்தால் போதும், நம்மாளுங்க எல்லாம் இறக்கை கட்டிப் பறக்கவே தொடங்கிடுவாங்க, இல்ல.
தினமும்
ReplyDeleteஅவள் பாதம் சுமந்து
தாங்கி நிற்கும் தெருவை
விழிகளாலே உள்வாங்கியிருப்பேன்..//
காதலின் ஆரம்ப படி நிலை, காத்திருத்தல், அதனை நீங்கள் மொழியாக்கம் செய்திருப்பது அருமையாக வந்திருக்கிறது சகோ.
சில சமயங்களில்
ReplyDeleteஅவளின் எதேச்சையாக
என் மீதான பார்வை
எனக்குள் ஏற்படும் மாற்றங்கள்
சொல்லி அடங்கா..//
ஆரம்ப காலத்தில் பார்க்கும் போது, அடி வயிற்றில் ஒரு குளிர்ச்சி, சிலிர்ப்பு ஏற்படுமே, அதனைத் தான் இங்கே விளித்திருக்கிறீர்கள்...
நிஜமாவா? சொல்லவே இல்லை.
என் டயரி பக்கங்கள்
ReplyDeleteஅவள் பெயராலும்,
நினைவுகளிலும்
கனவுகளிலும்
அவளுடன் நான் வாழும்
வாழ்க்கையாலும்
நிரம்பி கிடந்தது...//
ஏன் டயரிப் பக்கங்கள் மட்டுமா? பள்ளிக் கூடக் கொப்பிகளிலும் இது தானே நடந்திருக்கும்.
காத்திருந்து காலங்கள் கடக்க,
ReplyDeleteசில சமயங்களில்
கதைக்க முயன்று
தோற்றுப்போனேன் அவளிடம் !
நேர் விழியாக காணும் போதே
நான் பேச்சிழந்துவிடுகிறேன்..//
சகோ, உங்களிடம் இப்படி ஒரு கவிதா, நெஞ்சம் படுத்துறங்கியிருக்கிறது என்பதை இன்று தான் அறிந்து கொண்டேன். ஆரம்பச் சந்திப்புக்களில் மௌனங்கள் மட்டும் தான் வார்த்தைகளாக வந்து கொள்ளும், அதனை அனுபவித்தவன் தான் அழகுறச் சொல்ல முடியும், நீங்கள் அவ்வாறே சொல்லியிருக்கிறீர்கள்.
தைரியம் இல்லாதவனாக
ReplyDeleteசெல்பேசி எண்ணை
கொடுத்து, அவளின்
சொல்லாத காதலுக்காய்
செல்போனை பாத்திருக்க.//
அப்போ, இது கடிதம் கொடுத்து விட்டு, பதிலுக்காய் காத்திருக்கும் அந்தக் காலக் காதல் இல்லை, இந்த கால செல்பேசிக் காதலே!
நம்ம ஊர் பசங்கள் பல பேரின் யதார்த்தம் கவிதையில் தொனிக்கிறது.
திடீரென ஒலித்த அழைப்பு மணியில்
ReplyDelete"ஹலோ" என்ற மறுமுனையில்
அவள் காந்தர்வ குரல்..//
உவமை....காந்தர்வ குரல்...
இது கொஞ்சம் ஓவர்...பிறகு தானே புரிந்திருக்கும், அது ஹார்ட் பீற் ஆகிய விடயமும்.
அந்தரத்தில் பறப்பதை
ReplyDeleteஅன்று தான் முதல் முறை உணர்ந்தேன்.//
இந்த வரிகள் வரைக்கும், என் உள்ளத்தையும் கவிதையுடன் சேர்த்துப் பறக்க வைத்து வீட்டீர்கள் சகோ.
அன்றைய நாள் இரவில்
ReplyDeleteஎன் விழிகள்
இமை மூட முன்னரே
அடுத்த நாள்
அதிகாலையும் விடிந்தது..//
இது ஒரு வித தொற்று வியாதி, சாப்பிட்டால் பசிக்கும், கண் மூடினால் தூக்கம் வராது, அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
கவிதையினுள் எங்களையும் உள் இறக்கிப் படிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது சகோ.
அவளுக்காய்..
ReplyDeleteஇருமணி நேரம் முன்..,
காதல் கைகூட போகிறதே என்ற
எதிர்பார்ப்பும் மகிழ்ச்சியுமாக
சொன்ன இடத்தில் சென்று
தவமிருக்க
அவள் வருகிறாள்
தன் காதலனுடன்..!//
கவிதையின் இறுதி வரிகள் மட்டும் எதிர்பார்ப்புடன் கலந்து வந்த எண்ணங்களின் நம்பிக்கையினைச் சீர் குலைத்து விடுகிறது, ஏமாற்றம்...
ஆனாலும் வாசகர்களை உள் இழுத்து வாசிக்க வைத்து, இறுதியில் திருப்பத்துடன் கவிதையினை நிறைவு செய்திருக்கிறீர்கள்.
கற்பனையில் ஒரு காதல்!//
ReplyDeleteபறக்க நினைத்த காதற் பறவையொன்றின் இறக்கைகளைக் கொய்த இறுதி நிமிடத்தின் காவியப் பாடல்!
வாழ்த்துக்கள் சகோ! தொடர்ந்தும் நிறைய, வித்தியாசமான படைப்புக்களைத் தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் சகோ.
நன்றி நிரூபன்....
ReplyDeleteமிக அருமை
ReplyDeleteஆரம்பத்தில் இருந்து
ஒரு எதிர்பார்ப்போடு
மகிழ்வோடு தொடர்ந்து வர..
கடைசி வரியில்
ஒரு அறை விழுந்தார்போல் இருந்தது
நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்
.
///Ramani said...
ReplyDeleteமிக அருமை
ஆரம்பத்தில் இருந்து
ஒரு எதிர்பார்ப்போடு
மகிழ்வோடு தொடர்ந்து வர..
கடைசி வரியில்
ஒரு அறை விழுந்தார்போல் இருந்தது
நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்/// நன்றி ஐயா