வாழ்க்கை பயணம் தொடங்கும்
தண்டவாளம் கல்யாணம்!
புதிய உயிர்களை
பூமியில் எழுப்பிட
போடப்படும் ஆழமான
அஸ்திவாரம் கல்யாணம்!
வெட்டிவிட்ட உறவுகளும்
எட்ட நின்ற உறவுகளும்
பகைமை மறந்து
புதுமை பேசி மகிழும்
போகி பண்டிகை கல்யாணம்!
ஆயிரம் உறவுகள்
புள்ளியில் ஒன்றித்து
புது உறவுகளை விஸ்தரிக்கும்
விசித்திரம் கல்யாணம்!
பல்சுவையோடு பந்தி வைத்து
வந்தவர்கள் வயிறு நிறைத்து
வாழ்த்துக்களை பிரதியாக பெறும்
பண்டமாற்று கல்யாணம்!
வாழ்வின் புரிதல்கள் பலவற்றுக்கு
வழிகாட்டும் வாழ்க்கை பாலம்
கல்யாணம்!
பாஸிடிவ் பாயிண்ட்களாக எடுத்துரைக்கும் அருமையான கவிதை. பாராட்டுக்கள். Voted 2 to 3 in Indli
ReplyDeleteஓ...கல்யாணத்துக்குள்ள இத்தனை நல்லது இருக்கா? நான் கூட ஏதோ டிராஜடிதான் கல்யாணமோனு நினைத்தேன்.
ReplyDeleteதண்டவாளக் கல்யாணம், அஸ்திவாரக் கல்யாணம், போகிப்பண்டிகை கல்யாணம்(அப்ப பழைய உறவான அம்மா அப்பா அக்கா தங்கை தம்பி அண்ணன் அண்ணி etc உறவுகளையெல்லாம் கழிச்சிடுவீங்களா?) விசித்திரம் கல்யாணம் பண்டமாற்று கல்யாணம் வழிகாட்டும் வாழ்க்கைப் பாலம் கல்யாணம் என்று பல கோணத்தில் அலசியிருக்கிறீரகள் . அருமை.
வாழ்வின் புரிதல்கள் பலவற்றுக்கு
ReplyDeleteவழிகாட்டும் வாழ்க்கை பாலம்
கல்யாணம். உண்மையிலும் உண்மைதான்
கடம்பவன குயில் கருத்தோடு ஒத்து போகிறேன்...
ReplyDeleteஅம்மாடி.....
கல்யாணத்தில் இத்தனைவகை இருக்கிறதா???? இவ்வளவு காலமும் ஒரேயோரு கல்யாணத்தைப்பற்றித்தான் எனக்குத் தெரியும்.
ReplyDeleteNice....
ReplyDeletePositive thinking
ReplyDeleteகல்யாணத்தின் பெருமை
ReplyDeleteசொல்லும் பதிவு அருமை
Super kavithai
ReplyDelete//வெட்டிவிட்ட உறவுகளும்
ReplyDeleteஎட்ட நின்ற உறவுகளும்
பகைமை மறந்து
புதுமை பேசி மகிழும்
போகி பண்டிகை கல்யாணம்!// அருமை..அருமை.
உங்க கவிதை படிச்சு கல்யாண ஆசை வந்துட்டுது பாஸ்
ReplyDelete//புதிய உயிர்களை
ReplyDeleteபூமியில் எழுப்பிட
போடப்படும் ஆழமான
அஸ்திவாரம் கல்யாணம்!//
ஹி ஹி
//வாழ்வின் புரிதல்கள் பலவற்றுக்கு
ReplyDeleteவழிகாட்டும் வாழ்க்கை பாலம்
கல்யாணம்!//
கடைசி சும்மா நச்சுன்னு இருக்கு பாஸ்
//"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
ReplyDeleteஉங்க கவிதை படிச்சு கல்யாண ஆசை வந்துட்டுது பாஸ்//
அவளுக்குப்பின்னால சுற்றும்போதே நினைத்தேன்... இப்படி எல்லாம் ஆசை விரைவில் வருமென்று...
விரைவில் டும்... டும்.. டும்.......
ஆஹா அப்படியே ஆண் பெண்ணில் தொடங்கி புது உயிர் பற்றி கதைத்து பழைய சொந்தங்கள் சேருவதை சொல்லி ஆயிரம் உறவுகளின் வாழ்த்துக்களை பெற்று வந்த வேலையாம் பாந்தியைல் உட்கார்ந்தது எல்லோரும் போனால் பிறகு வாழ்வின் புரிதல்கள் பலவற்றுக்கு வழிகாட்டும் வாழ்க்கை பாலம் கல்யாணம்! என்ற முக்கியமான விடயத்தை மஊன்று வரிகளில் சொல்லி முடித்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் கந்தசாமி அண்ணாச்சி
ReplyDeleteகந்தசாமி அண்ணாச்சி எனக்கு வாசித்த உடனே பிடிச்ச பந்தி
ReplyDeleteவெட்டிவிட்ட உறவுகளும்
எட்ட நின்ற உறவுகளும்
பகைமை மறந்து
புதுமை பேசி மகிழும்
போகி பண்டிகை கல்யாணம்!
வாசிக்க வாசிக்க பிடிச்ச பந்தி எண்டால் எல்லா பந்தியும் நான் சாப்பாட்டு பந்திய சொல்லல
ஆண் பெண் என்ற இரு சாதி
ReplyDeleteவர்க்கம் மறந்து ஒன்றித்து
வாழ்க்கை பயணம் தொடங்கும்
தண்டவாளம் கல்யாணம்!//
ஆரம்ப வரிகளே, திருமணம் பற்றிய அருமையான வர்ணணையினைத் தருகிறது.
புதிய உயிர்களை
ReplyDeleteபூமியில் எழுப்பிட
போடப்படும் ஆழமான
அஸ்திவாரம் கல்யாணம்//
பாஸ் இதுவும் உண்மை தான், ஆனால் ஒரு சிலர் அதுக்காகவே தான் திருமணத்தை விரும்பியும் செய்வார்கள்.
அந்த அது எது என்று எனக்குத் தெரியாது பாஸ்.
புதிய உயிர்களை
ReplyDeleteபூமியில் எழுப்பிட
போடப்படும் ஆழமான
அஸ்திவாரம் கல்யாணம்//
பாஸ் இதுவும் உண்மை தான், ஆனால் ஒரு சிலர் அதுக்காகவே தான் திருமணத்தை விரும்பியும் செய்வார்கள்.
அந்த அது எது என்று எனக்குத் தெரியாது பாஸ்.
வெட்டிவிட்ட உறவுகளும்
ReplyDeleteஎட்ட நின்ற உறவுகளும்
பகைமை மறந்து
புதுமை பேசி மகிழும்
போகி பண்டிகை கல்யாணம்! //
ஆஹா... இது தான் நம்ம ஊர்களில் கல்யாண வீடென்றாலே நினைவிற்கு வரும் விடயம், பிரிந்தவர்கள் ஒன்று சேருவது. அதனைப் போகிப் பண்டிகையுடன் ஒப்பிட்டுக் குறியது இன்னும் சிறப்பாக இருக்கிறது.
ஹி....ஹி..
ஆயிரம் உறவுகள்
ReplyDeleteபுள்ளியில் ஒன்றித்து
புது உறவுகளை விஸ்தரிக்கும்
விசித்திரம் கல்யாணம்!//
ஆமாம் பாஸ், உறவுகள் அனைவரும் ஒன்றாகி மகிழ்ச்சி பொங்கும் இனிய நாள் பற்றி ஓர் இனிமையான கவிதையினைத் தந்திருக்கிறீங்க. ரசித்தேன்.
கந்தசாமிக்கு கலியாண வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்ல கவிதை பாஸ்... உங்களுக்கு எப்போ கல்யாணம்?
ReplyDeleteதயாரயிட்டீங்களா ? வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....
ReplyDeleteவாழ்வின் புரிதல்கள் பலவற்றுக்கு
ReplyDeleteவழிகாட்டும் வாழ்க்கை பாலம்
கல்யாணம்!
அழகாக சொன்னிங்க..........
வாழ்த்துக்கள்
//புதிய உயிர்களை
ReplyDeleteபூமியில் எழுப்பிட
போடப்படும் ஆழமான
அஸ்திவாரம் கல்யாணம்//
கல்யாண வைபோகம் எல்லா
வரிகளிலும் காணுகின்றன
என்றாலும் மேலே உள்ள வரிகள்
தத்துவம் மிக்கது அருமை
புலவர் சா இராமாநுசம்
வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்
ReplyDeleteகூட்டான்சோறு...
கல்யாணம் பற்றி நிறைய நல்ல பந்தி விரித்துள்ளீர்கள். வாசிக்கச் சுவையாக யதார்த்தமாக உள்ளது. மகிழ்ச்சி. வாழ்த்துகள். Vetha.Elangathilakam.
ReplyDeleteDenmark.http://www.kovaikkavi.wordpress.com