ஈழத்தில் அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த இளைஞர்கள் தமக்குள் ஒற்றுமை இல்லாது மூலைக்கு ஒரு திசையாக முட்டி மோதி செயற்படுவதை கண்டு சங்கடப்பட்ட அன்றைய தமிழ்நாட்டு முதல்வர் MGR அவர்கள், குறித்த கட்சிகளின் தலைமைபீடத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குறித்த ஒரு தினத்தில் தன்னை வந்து சந்திக்குமாறு அழைப்பு விட்டாராம்.
உடனே இதை அறிந்த கருணாநிதி அவர்கள், தானும் குறிப்பிட்ட ஈழ இயக்க தலைமை பீடங்களை சந்திக்க வேண்டும் என கூறி MGR அறிவித்த அதே நாளில் அதே நேரத்தில் தன்னையும் வந்து சந்திக்கும் படி அழைப்புவிட்டாராம்.
இதனால் சங்கடப்பட்ட ஈழ இயக்கங்களில் ஒரு சில தலைமைகள் மட்டும் MGR ஐ சென்று சந்திக்க ஏனையவை இருவரையும் சந்திப்பதை புறக்கணித்தார்களாம். அதன் பின்னர் MGR ஐ சந்திக்கும் போது ஈழ இயக்கங்கள் தமது சங்கடமான நிலை பற்றி எடுத்து கூற, கருணாநிதி பற்றி ஏற்கனவே நன்றாக புரிந்து வைத்திருந்த MGR ரும் அவர்களின் நிலைமையை புரிந்து கொண்டாராம்.
ஆக இந்த ஒரு விடயமே போதும் கருணாநிதி அவர்கள் ஈழ தமிழ் மக்கள் விடயத்தில் கொண்டுள்ள அக்கறை பற்றி புரிந்து கொள்ள...
ஆனால் இப்பொழுதெல்லாம் இறுதி கட்ட யுத்தத்தின் போது கலைஞரின் மவுனம்/பித்தலாட்டம் சம்மந்தமாக கலைஞரை ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்கும் போதெல்லாம் உடனே பழைய புராணம் பாட தொடங்கிவிடுகிறார்.
83 ல் பதவி துறந்தேன், ராஜீவ் படைகள் ஈழத்தில் இருந்து திரும்பிய போது நான் சென்று அவர்களை வரவேற்கவில்லை , தமிழ்ச்செல்வனுக்கு இரங்கற்பா எழுதினான் என்று அடுக்கடுக்காய் எடுத்து விடுகிறார்.
ஒரு பெரியமனுசன் தான் செய்ததை ஒரு போதும் சொல்லி காட்டன் என்று சொல்வார்கள். ஆனால் தமிழின தலைவராக தன்னை வரிந்து கட்டி கொள்ளும் கலைஞர் விடயத்தில் இது மாறுபடுகிறது. ( சமீபத்தில் ரசிகன் என்ற ஒரு நிகழ்ச்சி கலைஞர் ரீவியில் எதேச்சையாக பார்த்தேன்... சின்ன புள்ளைங்களை எல்லாம் கொண்டு வந்து வச்சு கலைஞரை பற்றி புகழ்ந்து தள்ளுறாங்கையா .. இதில காமெடி என்னன்னா, கலைஞர் ஊழலுக்கு எதிரானவராம் ஹிஹிஹி )
ஆக இதிலிருந்து இன்னொரு முடிவுக்கும் வரலாம் எதிர்காலத்தில் "ஈழ மக்களுக்காக என்ன செய்தாய்" என்று கேள்வி எழும் போது சொல்லுவதற்கு நாலு விடயங்கள் தேவைப்படுமே என்பதை முன்னுணர்ந்த கலைஞர் மேற்குறிப்பிட புராணங்களை செய்திருக்கலாம்.( மிக பெரிய ராஜதந்திரி ஆச்சே) அதுவே அவரின் அரசியலுக்கு ஏணிப்படியாக அமைந்தது ஒரு கல்லில் இரு மாங்காய் போல..
ஆனால் இன்று இறுதி காலத்தில் "நியூட்டனின் மூன்றாம் விதி போல" முன்னர் செய்ததெல்லாத்துக்கும் சன்மானம் வாங்கிக்கொண்டு இருக்கிறார்/ இருப்பார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைவீர்களா? என்று ஜெயா அம்மையாரை ஊடவியலாளர்கள் கேட்ட போது, ஆம்/இல்லை என்று ஒரே பதிலில் சொல்லாமல், "அவர்கள் தரப்பில் இருந்து அப்படி ஒரு அழைப்பு வரவில்லை" என்று சொல்லியிருக்கார். ஆக அப்படி ஒரு அழைப்பு வந்தால் அதை பரிசீலனை செய்யும் நிலையில் தான் இருக்கார்..!
அம்மையார் தொடர்பாக எனது இரு மதிப்பீடு
1. இறுதி யுத்தத்தில் நடந்த கொடூரங்களை காணொளி வடிவில் கண்ட பின் ஈழ தமிழர்கள் பால் உண்மையிலே கரிசனை கொண்டிருக்கலாம்..!
இல்லை
2 . காங்கிரசில் இருந்து திமுக வை விரட்டிவிட்ட பின் தான் சென்று ஒட்டிக்கொள்வதற்காக ஈழ பிரச்சனையை கையில் எடுத்து காங்கிரசுக்கு நெருக்கடி கொடுக்கு எண்ணலாம்...
ஏன் இந்த சந்தேகம் என்றால் நம்பி கெடுபவன் தமிழனாச்சே....
பொறுத்திருந்து பார்ப்போம்...!!
நல்லதே நடந்தால் சந்தோசம்..!!!
இனிய இரவு வணக்கம் பெரிய பாஸ்!
ReplyDeleteவணக்கம் பாஸ் ,,))
ReplyDeleteஇறுதி கட்ட யுத்தத்தின் போது கலைஞரின் மவுனம்/பித்தலாட்டம் சம்மந்தமாக கலைஞரை ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்கும் போதெல்லாம் உடனே பழைய புராணம் பாட தொடங்கிவிடுகிறார்.//
ReplyDeleteஉங்க வூட்டில கீறல் விழுந்த சீடி இருந்தால் என்ன பண்ணும் தெரியுமோ?
அதனைத் தான் கலைஞரும் பண்றார் பாஸ்.
83 ல் பதவி துறந்தேன், ராஜீவ் படைகள் ஈழத்தில் இருந்து திரும்பிய போது நான் சென்று அவர்களை வரவேற்கவில்லை , தமிழ்ச்செல்வனுக்கு இரங்கற்பா எழுதினான் என்று அடுக்கடுக்காய் எடுத்து விடுகிறார்.//
ReplyDeleteபாஸ் சொல்லாமல் செய்வார் பெரியார் என்று ஒரு ஆன்றோர் கூற்று இருக்குத் தெரியுமோ;-))
ஆனால் இன்று இறுதி காலத்தில் "நியூட்டனின் மூன்றாம் விதி போல" முன்னர் செய்ததெல்லாத்துக்கும் சன்மானம் வாங்கிக்கொண்டு இருக்கிறார்/ இருப்பார்.//
ReplyDeleteஅஃதே...அஃதே..
இதுக்குத் தான் முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் என்று சொல்லுவார்கள்.
இப்ப நன்றாக உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன்.
////உங்க வூட்டில கீறல் விழுந்த சீடி இருந்தால் என்ன பண்ணும் தெரியுமோ?
ReplyDeleteஅதனைத் தான் கலைஞரும் பண்றார் பாஸ்/// தனை தலைவர் தன்மான சிங்கம் தமிழரின் விடிவெள்ளி என்ற பல்வேறு புகழுக்கு சொந்தக்காரரை இப்படியா குத்தி காட்டுவது ))
சபாஷ் பாஸ்,
ReplyDeleteதமிழக அரசியலின் பரந்து பட்ட படி நிலைகளை நன்றாக உற்றுப் பார்த்து இப் பதிவினை எழுதியிருக்கிறீங்க.
அரசியல்வாதிகளின் இருப்பினைத் தக்க வைக்க வேண்டும் என்றால் தமிழர்களை ஊறு காய் போலத் தொட்டு நக்குவார்கள் என்பதனை நாம் அறியாதவர்களா என்ன?
அவ் வகையில் தான் எதிர்காலத்திலும் ஒரு சில இராஜதந்திர நகர்வுகள் எமக்கு பாடமாய் அமைந்து கொள்ளும் என்பது தான் எனது கருத்தும் கூட,
கந்தசாமி. said...
ReplyDelete////உங்க வூட்டில கீறல் விழுந்த சீடி இருந்தால் என்ன பண்ணும் தெரியுமோ?
அதனைத் தான் கலைஞரும் பண்றார் பாஸ்/// தனை தலைவர் தன்மான சிங்கம் தமிழரின் விடிவெள்ளி என்ற பல்வேறு புகழுக்கு சொந்தக்காரரை இப்படியா குத்தி காட்டுவது ))//
அதென்ன எப்ப பார்த்தாலும் ஒரே மாதிரிப் பல்லவி பாடிக் கொண்டிருப்பது.,
ஏதாச்சும் புதிதாக சொல்லலாமில்லே..
வுட்டால் ஸ்பெக்ட்ரம் காசில கொஞ்சத்தை ஆயுதம் வாங்க கொடுத்தகாகவும் சொல்லுவார் போல இருக்கே;-))
ஹி....ஹி...
விடுங்க கந்தசாமி கலைஞர் பிழைச்சுப் போகட்டும்! அவரை இப்போது விமர்சிப்பது செத்த பாம்பை அடிப்பது போல!
ReplyDeleteஅவர்களின் காலம் முடிந்துவிட்டது! இயற்கையே அவர்களுக்குத் தண்டனை கொடுத்துவிட்டது! நீங்கள் சொன்னதுபோல, அந்த 3 ம் விதி தனது வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது!
நம்பிக் கெடுபவன் தமிழன்! எனவே ஜெயலலித விஷயத்திலும் கவனமாக இருப்போம்! என்று குறிப்பிட்டது உண்மையிலும் உண்மை! சத்திய வார்த்தைகள!
ReplyDelete//1. இறுதி யுத்தத்தில் நடந்த கொடூரங்களை காணொளி வடிவில் கண்ட பின் ஈழ தமிழர்கள் பால் உண்மையிலே கரிசனை கொண்டிருக்கலாம்..!//
ReplyDeleteஇப்படிதான் இருக்கும் இருக்கணும் என்று ஆசைப்படுகிறேன்,
(ஆசைபடுவதும் தமிழனின் குணம் தானே)
//காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைவீர்களா? என்று ஜெயா அம்மையாரை ஊடவியலாளர்கள் கேட்ட போது, ஆம்/இல்லை என்று ஒரே பதிலில் சொல்லாமல், "அவர்கள் தரப்பில் இருந்து அப்படி ஒரு அழைப்பு வரவில்லை" என்று சொல்லியிருக்கார். ஆக அப்படி ஒரு அழைப்பு வந்தால் அதை பரிசீலனை செய்யும் நிலையில் தான் இருக்கார்..!//
ReplyDeleteஅப்படி ஒன்று நடந்தால் இன்றைய திமுகாவின் நிலை நாளை அதிமுகாவுக்கு,
( ஜெயா அவ்வளவு முட்டாள் அல்ல காங்கிரசை சேர்க்க என்பது என் கணிப்பு)
//உடனே பழைய புராணம் பாட தொடங்கிவிடுகிறார்//
ReplyDeleteஅவர் மேலே போகும் வரை பழையது பற்றியே பேசிக்கொண்டு இருப்பார்
இதெல்லாம் என்ன ஜென்மமோ
நம்பி கெடுபவன் தமிழனாச்சே....
ReplyDeleteபொறுத்திருந்து பார்ப்போம்...!!
நல்லதே நடந்தால் சந்தோசம்..!!!
தமிழர்கள் நம்பிக்கைக்குரிய ஆட்சியாளர்கள் இருப்பது வெகுதூரத்தில் .....இப்போது இருப்பவர்கள் அனைவருமே தமிழர்களை ஏப்பம் விடுபவர்கள்தாம்....
ReplyDeleteகலைஞரை பற்றி பல ஈழத்ததலைவர்களுக்கு நன்றாக தெரிந்திரிந்தமையால் - கலைஞரை எந்த சூழ்நிலையிலும் யாரும் எந்த உதவியும் கோரவில்லை.
ReplyDelete//நம்பி கெடுபவன் தமிழனாச்சே....// நச்சுன்னு சொன்னீங்க..சரியான அலசல்.
ReplyDeleteநல்ல அலசல். அருமையான கட்டுரை...
ReplyDeleteநண்பா எல்லோரும் கதிரையில் அமரும் மட்டும் தான் ...
ReplyDeleteஇப்படியே ஏமார்ந்து ஏமார்ந்து நம்ம காலமும் போகுது நண்பா.....
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருந்தே தீருவான் நண்பா...
சரி சரி பொறுத்திருந்து பார்ப்போம்..
நல்ல அலசல். அருமை
அருமையான ஒரு அலசல் பாஸ்
ReplyDelete//ஒரு பெரியமனுசன் தான் செய்ததை ஒரு போதும் சொல்லி காட்டன் என்று சொல்வார்கள். //
ReplyDeleteயாரு அவர பெரிய மனுசன்னு சொன்னது.. அது அவங்க குடும்பத்துக்கு மட்டும்தான் பாஸ்
விடுங்க பாஸ்.. இனிமே வடிவேலுவுக்கு பதில் கலைஞர் தான் எங்கள சிரிக்க வைக்கப்போறார்
ReplyDeleteதோழா சரியான சாட்டையடி பதிவு தோழா?
ReplyDeleteசத்தியமான வார்த்தைகள் தோழரே..
ReplyDeleteஎன்றுதான் இவர்கள் திருந்துவார்களோ ?
ஜெயலலிதாவின் காங்கிரஸ் நிலைப்பாட்டுக்கு முதலாவதான காரணமாக தி.மு.க வை காங்கிரஸ் கூட்டணியிலிருந்து கழட்டி விடனும் என்பதாக இருக்கலாம்.
ReplyDeleteஇரண்டாவது ஆட்சி செய்யும் அரசுடன் ஒன்றிணைந்து செயல்படுவது மாநில அரசுக்கு நன்மை தரும்.
எனக்கென்னவோ முதல் காரணமே சரியாக இருக்குமென படுகிறது.மேலும் ஊழல்கள் 2G.4G,ஆதர்ஸ் கட்டிட ஊழல்,காமன்வெல்த் என ஊழல்களாலும்,மன்மோகனின் நிர்வாகத் திறமையின்மையாலும் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெல்வது கடினம்.அதுவும் தமிழ் நாடு சொல்லவே வேண்டாம்.
சோ போன்ற பி.ஜே.பி ஆதரவாளர்கள் ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ்க்கு வழி காட்ட மாட்டார்கள்.எனவே சுற்றி வந்தாலும் காங்கிரஸ் கூட்டணி தூண்டில் போடுவது தி.மு.க வைக் கழட்டி விடவும் மறுதேர்தலுக்கான சூழலை உருவாக்கவும் கூட இருக்கலாம்.
ஜெயலலிதா ஈழப்பிரச்சினையை தனது சுயநலத்திற்கு உபயோகப்படுத்தாமலிருப்பாராக.
கலைஞர் ஊழலுக்கு எதிரானவராம் ஹிஹிஹி )
ReplyDeleteஎது எப்படியோ நல்லது நடந்தால் சந்தோசம் பாஸ் . பார்ப்போம் பொறுத்திருந்து
ReplyDeleteதமிழக அரசியல்வாதிகளை தமிழர்கள் நம்பி ஏமாந்தது போதும். இனியும் வேண்டாம். தமிழக அரசியல்வாதிகளுக்கு ஈழத்தமிழர்கள் மீது எந்த அக்கறையும் இல்லை.
ReplyDeleteஇலங்கை தமிழர்களை வைத்து அரசியல் இலாபம் தேட நினைப்பவர்கள்தான் அவர்கள்.
எல்லாரும் கள்ள நாய்கள்தான்! ஒருவரையும் நம்பாது நாங்க எங்கட பாட்டில முன்னேறினாதான் உண்டு!!
ReplyDelete//1. இறுதி யுத்தத்தில் நடந்த கொடூரங்களை காணொளி வடிவில் கண்ட பின் ஈழ தமிழர்கள் பால் உண்மையிலே கரிசனை கொண்டிருக்கலாம்..!//
ReplyDeleteநம்பிக் கெடாமல் நம்புவோம்!
திராவிட கழகங்கள்.... புலிவால் பிடித்த நிலையில் தமிழன்!!
ReplyDelete!!எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவின் தொடர் ஓடுகிறது ஓடிவாங்கோ
ReplyDelete