இந்தியாவை காப்பாற்றிய "சிங்"

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. 4 ம் திகதி அகமதாபாத் மைதானத்தில் ஆரம்பித்த இப்போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்றஇந்திய கேப்டன் தோனி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

  இதன் படி சேவாக்கும் காம்பீரும் களமிறங்கினார்கள்.சேவாக்  தனது வழமையான பாணியில் நியூசிலாந்தின் அனைத்து பந்துவீச்சாளர்களையும் துவைத்து எடுக்க ஆரம்பித்தார்.அணியின் ஓட்ட எண்ணிக்கை  60 ஆக இருந்த போது காம்பீர் ஆட்டம் இழந்தார்.சிறப்பாக விளையாட கூடிய காம்பீர் சமீப காலமாக   பார்ம் இன்றி தவிக்கிறார்.இதே நிலை தொடர்ந்தால் இவருடைய இடம் முரளி விஜய்க்கு கிடைக்கும் சந்தர்ப்பமாக  அமைந்துவிடும்.

  அடுத்து டிராவிட் களமிறங்கினார்.அதிரடியாக ஆடிய ஷேவாக் அனால் ராவிட்டோ ஆமை வேகத்தில் நகர்ந்தார் 17 ஓட்டங்கள் எடுக்க  100 பந்துகளை எதிர்கொண்டார். மறுமுனையில் சேவாக் தனது 23 வது டெஸ்ட் சத்தத்தை பூர்த்தி செய்தார்.அணியின் ஓட்ட எண்ணிக்கை 297 ஆக இருந்த போது சேவாக் 173  ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். சிறிது நேரத்தில் ராவிட்டும் தனது 30 வது சத்தத்தை பூர்த்தி செய்த கையேடு 104 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
 
  
    இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சச்சின் 40 ஓட்டங்களுடனும் லஸ்மன் 40 ஓட்டங்களுடனும் ரைனா 3 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.அடுத்து களம் இறங்கிய தோனி அதிரடியாக ஒரு சிச்சருடன் 10 ஓட்டங்களை பெற்று வெளியேறினார் .எனினும் மறுமுனையில் ஹர்பஜன்  சிங் அதிரடியாக 69 ஓட்டங்களை பெற்றார்.முடிவில் இந்தியா தனது முதலாவது இனிங்சில்  487 ஓட்டங்களுக்கு சகல விக்கற்ருக்களையும் இழந்தது.

   அடுத்து தனது முதலாவது இனிங்க்சை ஆரம்பித்த நியூசிலாந்து ரோஸ் டைலர் 56 , மக்கலம் 65 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க 137 /4 என்ற இக்கட்டான நிலையில் இருந்தது.எனினும் 5 வது விக்கற்ருக்கு ஜோடி சேர்ந்த ரெய்டர் மற்றும் வில்லியம்சன் அணியை சிறப்பான நிலைக்கு இட்டு சென்றனர்.இதில் ரெய்டர் தனது 3 வது சத்தத்துடன் 103 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.தனது கன்னி போட்டியில் விளையாடும் வில்லியம்சம் சதம் அடித்து சாதனை செய்தார்.இறுதியில் வில்லியம்சம் 131 வெக்டாரி 41 ஆட்டமிழக்க 459 ஓட்டங்களுக்கு சகல விக்கற்ருக்களையும் இழந்ததது 28 ஓட்டங்களுக்கு பின் தங்கி நின்றது நியூசிலாந்து.
         தொடர்ந்து  தனது இரண்டாவது இனிங்சை தொடர்ந்த இந்தியாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை கொடுத்தார் மார்ட்டின்.கம்பீர்௦ ராவிட் 1 சச்சின் 12என்று முன்னணி துடுப்பாட்ட வீரர்களை விரைவாக பவிலியன் திருப்பினார்.சேவாக் 1 ஓட்டத்துடன் துரதிஸ்ரவசமாக ரன் அவுட் ஆனார்.அடுத்து வந்த ரைனா பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஓட்டம் எதையும் பெறாமல் மார்ட்டீனுக்கு இரையானார்.இந்திய அணி 15 /5 விக்கர்ருக்களை இழந்த நிலையில் லச்மனும்  டோனியும் அணியை சரிவில் இருந்து மீட்க்க போராடினார்கள்.எனினும் தோனி 22 ஓட்டங்களுடன் மார்ட்டீனுக்கு அவுட்டானார்.66 /5 என்ற பரிதாபமான நிலையில் எதிர்பாராத தோல்வியை நோக்கி சென்றுகொண்டு இருந்தது இந்தியா. நம்பர் 1 இடத்தில் இருக்கும் இந்தியா பங்களாதேசுக்கு முதல் இடத்தில் இருக்கும் நியுசிலாந்துடன்   தோல்வியடையும்  நிலையில்..

  இந்நேரத்தில் லஸ்மானுடன் ஹர்பஜன் சிங் கைகோர்த்தார்.ஒட்டுமொத்த அணியும் கைவிட்ட நேரத்தில் தனி ஒருவராக நின்று அணிக்காக போராடும் லஸ்மன் இந்த போட்டியுளும் அதே பாணியில் அணிக்கு கை கொடுத்தார்.இணைப்பாட்டமாக 163 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை எதிர்பாராத விதமாக 91 ஓட்டங்களுடன் லஸ்மன் ஆட்டமிழந்தார். அடுத்து ஹர்பஜன் சிங் டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது சதத்தை  அடித்து அணியைதோல்வியில் இருந்து மீட்க்க பெரும் உதவி புரிந்தார்.இறுதியில் இந்திய அணி 266 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
 

  295 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறுதி நாள் மீதமிருந்த ஓவர்களை தொடர்ந்த நியூசிலாந்து  22 /1 என்ற நிலையில்ஆட்டம் சமநிலையில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.இதேவேளை இறுதி ஓவரை தோனி வீசினார் என்பது சுவாரசியமான விடயம்.கைகாப்பை கழட்டி ரைனாவிடம் கொடுத்து விட்டு பந்து வீசினார்   எனினும் எந்தவித விக்கட்டுக்களையும் கைப்பெற்ற முடியவில்லை.ஆட்ட நாயகனாக போட்டியிலே அதி கூடிய ஓட்டத்தை பெற்ற ஹர்பஜன் (184)  தெரிவானார்.


 அம்பியர்ககளின் மோசம்   .
    இதே வேளை அம்பியர்களின்  மோசமான தீர்ப்பும் இந்திய அணியை இக்கட்டான நிலையில் மாட்டி விட்டது.வில்லியம்சம் 56 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை சகீர் கானின் பந்து வீசி டோனியிடம் பிடி கொடுத்தார்.எனினும் அம்பியர் இடத்துக்கு எந்த வித தகுதியும் அற்ற குமார் தர்மசேனா தனது வழமையான பாணியில் அந்த அவுட் ஐ நிராகரித்தார்.அத்தோடு விக்டோரி வீசிய பந்து லச்மனின் துடுப்பில் பட்டு  கால் காப்பில் பட்ட போது உடனடியாக அவுட்  ஐ கொடுத்தார் steve davis  அதே பாணியில் சகீர்கானுக்கும் அடுத்த பந்தில் அவுட் கொடுத்தார்.

    அம்பியரின் முடிவை மறு பரிலீசனை செய்யும் முறையை இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை நிராகரித்ததால் அதிகம் பாதிப்படைவது   இந்திய அணியே.முன்னதாக நடந்த அவுஸ்ரேலிய அணியுடனான போட்டியிலும் இதனால் இந்தியா அதிக பாதிப்பை பெற்றது அறிந்ததே.(இதை தான் பொல்லு கொடுத்து அடி வாங்குவது என்பார்களோ)
Click to get cool Animations for your MySpace profile
Free MySpace Animations!
  

0 கருத்து:

Post a Comment