சில வருடங்களுக்கு முன்னர் அவுஸ்ரேலியா என்பது எவராலும் அவ்வளவு சீக்கிரம் வீழ்த்த முடியாத அணி.துடுப்பாட்டத்தை பொறுத்த வரை என்றும் அதிரடி.ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் "கில்லியும்" கைடனும் இணைந்து எதிரணியை ஒரு கை பார்க்காமல் விட மாட்டார்கள் அப்படி விட்டாலும் பின்னாலே பாண்டிங் , டேமியன் மார்ட்டின் ,மைக்கல் கிளார்க் ,அன்ரு சைமன்ஸ் என்ற அதிரடி மன்னர்கள் வேறு, 300 ஓட்டங்கள் எல்லாம் சாதாரணமாக கடக்கும் ஆற்றல்.பந்து வீச்சை சொல்லவே தேவையில்லை.எதரணி துடுப்பாட்டத்தை குலை நடுங்க செய்யும் ஆற்றல் மிக்க பந்து வீச்சு மெக்ரா, லீ, ஜிலீஸ்பீ என்று இவர்களுடன் சுழல் மன்னன் ஷேன் வேர்ன் எந்த அணியாக இருந்தாலும் இவர்களிடம் சாதாரணமாக மண்டியிடும். தொடர்ந்து மூன்று உலக கிண்ணங்களை சாதாரணமாக தம் வசம் ஆக்கியவர்கள்.மொத்தமாக நான்கு உலக கிண்ணங்களுக்கு சொந்தக்காரர்கள்.
ஆனால் இன்று சொந்த மண்ணலே தடுமாறுகிறார்கள்.இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை மோசமாக இழந்தமை.அதன் பின்( நலிவடைந்து உள்ள) பாகிஸ்தானுக்கு எதிராக ஆறுதல் வெற்றி.ஆனால் மீண்டும் இந்தியாவிடம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்தமை.தற்சமயம் இலங்கையிடம் தொடர் தோல்வி. துடுப்பாட்டத்தை பொறுத்தவரை அணி பாண்டிங்கை மட்டுமே நம்பி உள்ளது.இதனால் பொண்டிங்குக்கு தலைமை பதவியுடன் பெரும் சுமை.சிறப்பாக விளையாடி வந்த கிளார்க் நிலைமை சமீப காலமாக மோசம்.இந்தியாவுடன் டெஸ்டில் மோசமான விளையாட்டு.அதன் பின்னர் ஒருநாள் போட்டியில் தலைமை தாங்கி சதம் அடித்தும் அணியால் வெற்றி பெற முடியாமல் போனமை.288 என்ற இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தும் பந்துவீச்சாளர்களின் பலவீனத்தால் இந்திய இளம் அணி வெற்றி பெற்றது. சற்று நாட்களுக்கு முன் இலங்கையுடனான 20 /20 போட்டி.இதில் இலங்கை இலகுவாக வெற்றி பெற்றது.தற்பொழுது நடை பெற்று வரும் 3 ஒரு நாள் போட்டியில் முதல் இரண்டிலும் இலங்கை வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது.இதில்மெல்போனில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் தொடரில் மிக மோசமான தோல்வி, ஒன்பதாவது இலக்க வீரர் அதுவும் ஒரு பந்து வீச்சாளர் அவுஸ்ரேலியாவின் வெற்றியை தகர்த்தார்.
அவுஸ்ரேலியாவின் பந்து வீச்சாளர்களின் அனுபவம் இன்மை இந்த தோல்விக்கு ஒரு காரணம் எனலாம். அத்தோடு சொந்த மண்ணில் அவுஸ்ரேலியா எடுத்த மிக குறைந்த ஓட்ட எண்ணிக்கை(243 ) அவர்களின் துடுப்பாட்ட பலவீனத்தை காட்டுகிறது . சிட்னியில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்பிய பாண்டிங் சாதிப்பார் என எதிர்பார்ப்பும் வீணாகியது.இக்கட்டான தருணத்தில் கைகொடுக்கும் "mr cricket " மைக்கல் ஹசி தொடர்ந்து இந்த போட்டியிலும் தடுமாற்றம். அத்தோடு பந்து வீச்சை பொறுத்தவரை மிகவும் நலிவடைந்து போய் உள்ளது.
2007 உலகக்கிண்ணம் வரைக்கும் அசைக்க முடியாத அணியாக இருந்த அவுஸ்ரேலியா இன்று எந்த ஒரு அணியாலும் தோற்கடிக்க முடியும் என்ற நிலையில் உள்ளது. முன்னணி வீரர்களான கில்கிறிஸ்ட் ஹெய்டன், மார்ட்டின், மெக்ரா ,ஷேன் வோர்ன் ஆகியோர் குறுகிய கால இடைவெளிக்குள் ஓய்வுமற்றும் லீயின் உடற்தகுதி பிரச்சனை ஆகியவற்றை முதன்மை காரணமாக கூறலாம்.இதனால் பாண்டிங்கின் சுமை அதிகரித்து அவரின் துடுப்பாட்டத்தில் அது தாக்கத்தை ஏற்ப்படுத்தும் நிலைக்கு சென்று விட்டது என்பது உண்மை.அத்தோடு சிறந்த சகலதுறை வீரர் ஆன்று சைமன்சுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.
சிறிது காலத்துக்கு முன்னர் நியூசிலாந்தின் சிறந்த சகலதுறை வீரர் கிறிஸ் கெயின்ஸ் ஒரு கருத்தை முன்வைத்தார்.அதாவது "அவுஸ்ரேலியா அணி தொடர் வெற்றிகளை பெறுவதற்கு காரணம் அவ் அணியின்தலை சிறந்த வீரர்களே ஒழிய பொண்டிங்கின் தலைமைத்துவம் அல்ல .என் அம்மா அவுஸ்ரேலியாவின் கேப்டனாக இருந்தாலும் அவ் அணி வெற்றி பெறும்" என்று இதை கடுமையாக எதிர்த்த பாண்டிங் இப்பொழுது ஏற்றுக்கொள்ளும் நிலையில்...
அத்தோடு சில மாதங்களுக்கு முன்னர் அவுஸ்ரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜெஃப் தாம்சன்,"இப்போதெல்லாம், விஷயங்கள் தனக்கு சாதகமமக இல்லாத போது வெறுப்பை காட்டுகிறார். ஹார்டிஸ் போன்ற விக்கெட்டுகளை வீழ்ழ்த்தும் சாத்தியக்கூறே இல்லாத ஒரு வீரரை இவர் அணியில் வைத்துள்ளார், சைமன் கேடிச், மைக்கேல் கிளார்க் போன்றவர்கள் இவரை விட சிறப்பாக வீசுகின்றனர்.அணித் தேர்வு, ஃபீல்டிங் உத்திகள், மற்றும் பல விஷயங்களை பாண்டிங் தவறாகவே செய்கிறார்".இவ்வாறு தாக்குதல் விமர்சனம் வைத்துள்ளார்.
சாதனைகளை மட்டுமே அதிகமாக பெற்று வந்த அணிக்கு இப்பொழுது சோதனை காலம்.ஆசிஸ் தொடர் நெருங்கி வரும் நிலை.இங்கிலாந்தோ அசுர பலத்துடன் காத்திருக்கிறது. அணியை குறுகிய காலத்தில் மீள் கட்டி எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் பாண்டிங்கும் பயிற்றிவிப்பாளர் நில்சனும். அதிரடி நாயகன் சைமன்ஸ் எங்கே? அவுஸ்ரேலியா தற்சமயம் அன்ரு சைமன்சை மீள அணிக்கு அழைத்து துடுப்பாட்டத்தை வலுப்படுத்தலாம். அத்தோடு லீயின் மீள் வருகை அவுரேலிய அணியின் பந்து வீச்சை பலப்படுத்தும்.சுழல் பந்து வீச்சை பொறுத்த வரை அவுஸ்ரேலியாவுக்கு மிகப்பெரிய வெற்றிடம். உலககிண்ண போட்டிகளுக்கு இன்னமும் இரண்டு மாதங்களே உள்ள நிலையின் அவுஸ்ரேலியாவின் இந்த தடுமாற்றம் அவ்வணி தொடர்ந்து நான்காவது தடவையாக கிண்ணத்தை கைபற்றுவதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.அதுவும் இந்த நிலையில் ஆசிய மண்ணில் ஆசிய அணிகளை மீறி எந்த அளவுக்கு வெற்றி சாத்தியம் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
0 கருத்து:
Post a Comment