கடவுள் இல்லை என்ற நிலைப்பாடு, கடவுள் பற்றிய நம்பிக்கை இல்லாமல் இருத்தல் அல்லது கடவுள் தொடர்பான நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் மறுக்கும் கொள்கை இறைமறுப்பு ஆகும். வடமொழியில் இதை நாத்திகம் என்றும் ஆங்கிலத்தில் இதை ஏத்திசம் (Atheism) என்றும் குறிப்பிடுவர். சமய நம்பிக்கை போன்றே இந்த கொள்கையும் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.
தமிழ்ச் சூழலில் இறைமறுப்பு தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. பண்டைக்காலத்தில் உலகாயுதர் இறைமறுப்பு கொள்கை உடையவர்கள். முக்கியமாக தந்தை பெரியாரை குறிப்பிடலாம். ( ஈ. வெ. ராமசாமி) இவரால் தோற்றுவித்து தமிழர் மத்தியில் செல்வாக்குப் பெற்ற சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவை இறைமறுப்பு கொள்கை உடையன. மார்க்சிய அல்லது இடதுசாரி நிலைப்பாடுகள் உடைய பலரும் இறைமறுப்பு கொள்கை உடையவர்கள்.
உலகில் எத்தனை பேர் இறைமறுப்பாளர் என்று துல்லியமாக கணிப்பது கடினமாகும். தொடர்புள்ள இறைமறுப்பு, அறியாமைக் கொள்கை, மனிதநேயம், உலகாயதம், ஐயுறவுக்கொள்கை கொள்கைள் உடையோர் எல்லோரும் இறைமறுப்பாளர் என்ற வகைக்குள் வரார். இறைமறுப்பு பல நாடுகளில் சட்டத்துக்கு புறம்பானது, மரணதண்டனைக்கும் உரியது எனவே வெளிப்படையாக இறைமறுப்பாளர் என்று ஒத்துக்கொள்வது சிக்கலாக இருக்கும். உலகில் 12-15 % மக்கள் இறைமறுப்பாளர்கள் எனப்படுகிறது. எனினும் இந்த எண்ணிக்கை இதவிடக் கூடுதலாக இருக்கும். ஐக்கிய அமெரிக்க அறிவியாளர்களில் பெரும்பான்யானோர் (93%) சமய நம்பிக்கை அற்றோர் எனபதும் குறிப்பிடத்தக்கது.
அனேக சமயங்கள் ஆண் ஆதிக்க மரபைக் கொண்டவை. பெண் ஆணுக்கு கட்டுப்பட்டவள் என்ற கருத்துடயவை. பெண்களுக்கு சமமான உரிமைகளையோ வாய்ப்புக்களையோ சமயத்தில் கூட தராதாவை.இந்து சமயம் பெண்கள் பல கொடுமைகளுக்கு ஆளாவதை அனுமதிக்கிறது. உடன் கட்டை ஏறுதல் முற்காலத்தில் வற்புறுத்தப்பட்டது. பெண் குழந்தை வெறுக்கப்பட்டது. குழந்தைத் திருமணம் பரிந்துரைக்கப்பட்டது. பெண்ணை வன்முறைக்கு உட்படுத்த அனுமதித்தது. பெண்களுக்கு சுதந்திரம் இல்லை .தற்காலதில் இவ்வாறான பல சமயக் கொள்கைகள் நடைமுறையில் இல்லை. மேற்குநாடுகளிலும் இந்தியாவில் இவற்றில் பல சட்டத்துக்கு புறம்பானவை.
எனினும் நாம் வாழும் சமூகம் ஒழுக்கம் உடையதாகவும் கட்டுப்பாடு உடையதாகவும் இருக்கின்றது என்றால் அதற்க்கு இறை நம்பிக்கையும் ஒரு முக்கிய காரணம் ஆகும். இந்த உலகத்தில் நமக்கும் மேலான சக்தி இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அது இயற்கையாக கூட இருக்கலாம்.நம்மால் கட்டு படுத்த முடியாத சக்தியை மனிதன் கடவுளாக வணங்குகிறான்.உதாரணமாக பஞ்ச பூதங்கள்-பஞ்ச பூதம் என்றால் ஐந்து மூல சக்திகள் என்று பொருள்.ஒரு கோவிலில் சென்று வழிபாடும் போது
கோபுர வழிபாடு -ஆகாயம்
நிலத்தில் விழுந்து வணங்குதல் -நிலம்
கோவிலில் வழங்கப்படும் தீர்த்தம்-நீர்
கற்பூர ஆராதனை வழிபாடு-தீ
இவற்றுக்கு எல்லாம் மூல ஆதாரமாக-காற்று
நன்றி & விக்பீடியா.
0 கருத்து:
Post a Comment