இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கற்றுக்களால் வெற்றி பெற்றுள்ளது.முதலில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்று இந்திய அணி அவுஸ்ரேலியாவுக்கு துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை வழங்கியது.அதன் படி அவுஸ்ரேலிய அணி சார்பாக
கிளார்க் 111 ஓட்டங்களையும் ஹசி 69 ஓட்டங்களையும் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய வைட் 6 சிக்ஸ்சர்களுடன் 89 ஓட்டங்களையும் பெற்றதன் மூலம் 292 /3 என்ற ஓட்ட எண்ணிக்கையை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்து ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது.தனது முதலாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய தவான் ஓட்டம் எதையும் பெறாமல் ஆட்டம் இழந்தார். முரளி விஜய் 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க இந்திய அணி நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.எனினும் கொலியுடன் இணைந்த யுவராஜ் சிறப்பாக துடுப்பெடுத்தாடினார்.யுவராஜ் 58 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அடுத்து வந்த ரைனா அதிரடியாக துடுப்பெடுத்தாடினார்.இதேவேளை மறுமுனையில் விறார் கோக்லி தனது 3 வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்து 118 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார் அடுத்து வந்த தோனி டக் அவுட்டாக இந்திய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது.எனினும் ரைனாவின் சிறப்பாட ஆட்டம் மூலம் இறுதி ஒரு ஓவர் மீதம் இருக்க இந்திய அணி வெற்றி பெற்றது.ரைனா 71 ஓட்டங்களுடனும் திவாரி 12 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காது இருந்தனர்.
0 கருத்து:
Post a Comment