தொமஸ் அல்வா எடிசன்


தொமஸ் அல்வா எடிசன் (பெப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931) ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர். இவர் பல முக்கியமான சாதனங்களை உருவாக்கினார். மின்குமிழ்  மற்றும் புகைப்பட கருவி  இவருடைய கண்டுப்பிடிப்புகளில் மிக முக்கியமானதாகும். "மென்லோ பூங்காவின் மந்திரவாதி" பெரும்படித் தயாரிப்புக் கொள்கையைக் கண்டு பிடிப்புக்களின் உருவாக்கத்துக்குப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். 1880 ல் எடிசன் அறிவியல் சார்ந்த பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார். இது 1900 ஆவது ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for the Advancement of Science) பத்திரிகை ஆனது.
                                        
எடிசனின்  ஆரம்ப வாழ்க்கை மிகவும் சோதனையானது பள்ளிக்கூடத்தில் நன்றாக படிக்காததால், அவனை வாத்தியார் "அறிவீலி" என்று ஏசினார். இதனால்  ஆத்திரம்  அடைந்த இவர் தாயார்  எடிசனை பள்ளியிலிருந்து நிறுத்தி  வீட்டிலேயே பாடம் கற்றுத்தந்தார். எடிசன் சிறு வயதிலேயே, இயந்திர பொருட்களிலும், வேதியல் சோதனைகள் செய்வதிலும் ஆர்வம் கொண்டார். 12 வது வயதில் கிட்டத்தட்ட அவர் செவிப்புலனை இழந்தார். ஆனால் அவர் சிறிதும் மனம் தளரவில்லை. அந்த குறைபாட்டை ஒரு வரப்பிராசதமாக கருதினார். ஏனென்றால் இதனால் அவர் தன்னுடைய சோதனையிலும் ஆராய்ச்சியிலும் முழுமையாக ஈடுபட முடிந்தது.இதற்கிடையில் 1871 வருடம் தாயார் இறந்தார். அதே வருடம் கிருத்துமஸ் தினத்தன்று Mary Stilwell, என்பவரை மணந்தார். எடிசன் மனைவியை மிகவும் நேசித்தார். இருந்தபோதிலும் அவர்களுக்கிடையே உறவு அவ்வளவு நன்றாக இல்லை. ஏனென்றால்,எடிசன் எப்பொழுதும் தன் வேலையிலேயே ஈடுபட்டுயிருப்பார், மனைவி நிரந்தர நோயாளி. முதல் குழந்தை Marion பிப்ரவரி 1873 லும் அதன் பின் மகன் Thomas, Jr., ஜனவரி 1876 லும் பிறநதனர்.  எடிசன், குழந்தைகள் இருவருக்கும் டாட்; டாஷ் தந்தி சங்கேத மொழியில்("Dot" and "Dash," referring to telegraphic terms) செல்லப் பெயரிட்டார்( Nickname). அக்டோபர் 1878ல் மூன்றாவது குழந்தை William Leslie பிறந்தது.
                      
எடிசன் 1877ல் phonograph கண்டுபிடித்தார் வெள்ளீயம் பூசின உருளையில் முதன் முதலாக "Mary had a little lamb" என்று phonograph ல் பேசி தன்னுடைய குரலை பதிவு செய்தார். அந்த வார்த்தைகளை அந்த பொறி திரும்ப ஒலித்தது  இந்த கருவியை விற்பனை செய்ய 1878 The Edison Speaking Phonograph Company நிறுவப்பட்டது.  இதன் பிறகு எடிசனுடைய சிந்தனைகள்  வேறு கண்டுபிடிப்பில் திரும்பியது, அவருடைய கவனம் மின்சார விளக்குகள் பக்கம் திரும்பியது. நவம்பர் 15 1878 ல் The Edison Electric Light Co கம்பெனி நிறுவப்பட்டது. அதிகமாக விளக்குகள் தேவைப்பட்டதால், நிறைய கம்பெனிகள் எடிசன் பல இடங்களில் ஸ்தாபித்தார். 1881 பாரிஸ் நகரிலும், 1882ல் லண்டனிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. மாஸ்கோவில் czar யுடைய முடிசூட்டு விழாவிற்கு பிறகு, பல ஐரோப்பிய நாடுகளில் கம்பெனி நிறுவவேண்டியதாயிற்று.
                          
எடிசனின் மனைவி மேரி, மூளையில் ஏற்பட்ட கட்டியினால் 1894 ம் வருடம் ஆகஸ்ட் 8 ம் தேதி உயிர் துறந்தார். 1886 ம் வருடம் பிப்ரவரி 24 ம் தேதி Mina Miller என்னும் பெண்ணை மணம் புரிந்தார். 1920ம் வருடம் அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதனால், அவர் அதிகமாக தன் பொழுதை வீட்டிலேயே தன் மனைவியுடன் கழித்தார். எடிசனுடைய  நெருங்கிய  நணபர் ஹென்றி ஃப்போர்ட்(Henry Ford, ),எடிசனுடைய invention factory யை ஒரு மியூசியமாக மற்றினார். எடிசினுடைய மின்சார விளக்கின் 50 வது வருட உபயோகத்தின் ஞாபகார்த்தமாக மியூசியம் 1929ல் திறக்கப்பட்டது. அக்டோபர் 14ம் தேதி 1931 கோமாவில் படுத்த எடிசனின்  18ம்தேதி இவ்  உலகை விட்டு பிரிந்தார்.

0 கருத்து:

Post a Comment