நேற்று இடம் பெற்ற அவுஸ்ரேலியாவுக்கு எதிரான போட்டியிலே இந்தியா தனது நீண்ட நாள் பழியை தீர்த்துக்கொண்டது. 1996 இல் அரை இறுதியிலும் 2003 இல் இறுதி போட்டியிலும் அவுஸ்ரேலியா இந்தியாவை தோற்கடித்து இந்தியாவின் உலகக்கிண்ண கனவை தகர்த்திருந்தது. அவற்றுக்கெல்லாம் நேற்றைய தினம் இந்தியா பதிலடி கொடுத்து இந்த முறை அவுஸ்ரேலியாவின் தொடர் நான்காவது உலகக்கிண்ண கனவை தகர்த்தெறிந்துவிட்டது.
மீண்டும் சிகரம் (18000 )
நேற்றைய போட்டியை பொறுத்தவரை இந்தியாவின் நட்சத்திரம் யுவராஜ் தான். பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் அவுஸ்ரேலியாவுக்கு தலையிடியாக மாறியிருந்தார். நாணய சுழற்ச்சியில் இந்தியா தோல்வியடைந்தது ரசிகர்கள் மனதிலே ஒரு வித பயத்தை தோற்றியிருக்கலாம். காரணம் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் போது அவுஸ்ரேலியாவின் வேகங்களை சமாளித்து இலக்கை துரத்துவதென்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.
இந்திய அணியிலே யூசுப் பதானுக்கு பதிலாக தேறாத உடல் நலத்துடன் சேவாக் உள்வாங்கப்பட்டார். வேறு மாற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை. ரைனாவை அணியில் வைத்திருந்தது இந்தியாவுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது.
கடந்த மேற்கிந்தியாவுக்கு எதிரான போட்டியை போல இம்முறையும் அஷ்வினே ஆரம்ப ஓவர்களை வீசினார். இறுதி வரை சீராக வீசியது சிறப்பம்சம். அத்தோடு முக்கிய இரு விக்கெட்டுக்களை வீழ்த்தி அவுஸ்ரேலியாவின் ஓட்ட எண்ணிக்கையை கட்டுப்படுத்த இவரும் காரணமானார். இந்திய அணியை பொறுத்தவரை இந்த போட்டியிலே களத்தடுப்பு மிக அருமையாக இருந்து. அத்தோடு முனாப் பட்டேலை தவிர பந்துவீச்சாளர்கள் தமக்குரிய கடமையை சரிவர செய்தனர். அரை இறுதியிலே முனாப்க்கு பதிலாக சிறீசாந்துக்கு வாய்ப்பளித்து பார்க்கலாம். இம்முறையும் சகீர்கானே பந்துவீச்சில் துருப்பு சீட்டாக பயன்பட்டார். அவுஸ்ரேலியாவின் இடை வரிசை துடுப்பாட்டத்தை சிதைத்த பெருமை இவருக்கே. ஹர்பஜன் சிங் விக்கெட்டுக்கள் எதுவும் எடுக்காவிட்டாலும் ஓட்டங்களை கட்டுப்படுத்தி பந்துவீசினார்.
அவுஸ்ரேலிய அணியை பொறுத்தவரை கிளார்க், ஹசி, வைட் என்று அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்ததே அவ்வணி மிகப்பெரிய ஓட்ட இலக்கை பெறுவதை தடுத்தது. எனினும் இறுதி பவர் பிளே ஓவர்களை பாண்டிங்கும் டேவிட் ஹசியும் இணைந்து மிக சிறப்பாக கையாண்டார்கள். இல்லை எனில் 240 ஓட்டங்களுக்குள் கட்டுப்பட்டிருப்பார்கள். இதுவரை இடம்பெற்ற போட்டிகளிலே மோசமாக விளையாடி வந்த பாண்டிங் இப்போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஓரளவுக்கேனும் தன் மீதான நெருக்கடியை குறைத்துக்கொன்டாலும் அணித்தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார் என்றே எதிர்பார்க்கலாம்.
எங்கே செல்லும் இந்த பாதை..
265 என்ற இலக்கு இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையை பொறுத்தவரை கடினமாது இல்லை தான் ஆனால் அவுஸ்ரேலியாவின் வேகங்களை சமாளிப்பார்களா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கும். எனினும் ஆரம்பம் முதலே சீரான ஓட்ட எண்ணிக்கையுடன் துடுப்பெடுத்தாடி வந்ததால் பெரிதாக நெருக்கடி ஏற்ப்படவில்லை. அதே போல முதல் ஐந்து விக்கெட்டுக்களும் அவுஸ்ரேலிய அணியின் ஓட்ட விகிதத்திலே விழுந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்தில் 187 /5 என்ற நிலையில் இருந்த இந்திய அணி நெருக்கடியை எதிர்கொண்டது. எனினும் பின் வந்த ரைனா வழமைக்கு மாறாக பொறுப்புடன் ஆட மறுமுனையில் இந்த உலகக்கிண்ண தொடரில் இது வரை 3 அரைசதம் அடித்த யுவராஜ் இம்முறையும் சிறப்பாக செயற்பட்டு அரைச்சதம் ஒன்றை போட இந்திய அணி வெற்றியை எட்டி பிடித்தது.
இப்போட்டியிலே 53 ஓட்டங்களை பெற்ற சச்சின் அத்தோடு 18000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லையும் கடந்து முடித்தார். அதே போல சிறப்பாக துடுப்பெடுத்தாடி 50 ஓட்டங்களை பெற்ற காம்பீர் தன் அவசரதனத்தால் ரன் அவுட் ஆனார். தோனி இம்முறையும் ஏமாற்றினார். மொத்தத்தில் இடதுகை துடுப்பாட்ட வீரர்களால் பெற்றுக்கொண்ட வெற்றி எனலாம். அவுஸ்ரேலியாவின் களத்தடுப்பு மிக மோசம்.
சண்டேன்னா சட்ட கிழியதான் செய்யும்...)
இவ்வெற்றியின் மூலம் அரையிறுதி போட்டியிலே இந்தியா தனது பங்காளி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. நடந்து முடிந்த காலிறுதி போட்டியிலே பாகிஸ்தான் தன் அபார பந்துவீச்சால் மேற்கிந்தியாவை படு தோல்வி அடைய வைத்தது குறிப்பிடத்தக்கது. மேற்கிந்தியாவின் நிலைமையை நினைத்து பரிதாபப்படுவதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. கிரிக்கெட் உலகின் இமயங்கள் ஆடிய அணி அது (
தற்சமயம் பாகிஸ்தானின் பலமே அவர்களின் சுழல் பந்துவீச்சு தான். இது எந்தளவுக்கு இந்தியாவுக்கு எதிராக எடுபடும் என்பது பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். மீண்டும் அக்தருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா என்பது சந்தேகமே! துடுப்பாட்டத்தில் தற்சமயம் பாகிஸ்தான் பலவீனமாகவே உள்ளது. எனினும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளிலே யூனிஸ்கான் அப்ரிடி போன்றோர் சிறப்பாக செயற்ப்படக்கூடியவர்கள்.
டெரரா விளையாடுவம்..)
அதே போல இந்திய அணியின் துடுப்பாட்டம் பலமாக உள்ளது. அஸ்வினின் வருகைக்கு பின் இடம்பெற்ற இறுதி இரண்டு போட்டிகளிலும் இந்தியா பந்துவீச்சிலும் சிறப்பாகவே செயற்ப்பட்டுள்ளது. அத்தோடு சொந்த மண்ணில் இடம்பெறப்போகும் போட்டி என்பதாலும் வெற்றி வாய்ப்பு இந்தியாவுக்கே அதிகமாக உள்ளது. இதுவரை இடம்பெற்ற போட்டிகளை விட இந்திய பாகிஸ்தானின் அரையிறுதி மோதல் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்பது நிச்சயம்.
வெற்றி பெறுவோம்...
ReplyDeleteஇதுவரை இடம்பெற்ற போட்டிகளை விட இந்திய பாகிஸ்தானின் அரையிறுதி மோதல் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்பது நிச்சயம்.
ReplyDeleteகண்டிப்பாக வரும் போட்டி மிகவும் சுவாரசியமாக இருக்கும்... நானும் வரும் 30ம் தேதியை எதிர்கொண்டு இருக்கிறேன்...பதிவில் பயன்படுத்திய தமிழ் வார்த்தைகள் அருமை வாழ்த்துக்கள் தோழரே...
வணக்கம் பாஸ்....
ReplyDeleteஅடுத்த போட்டி தான் வாழ்வா சாவா எண்டு இருக்கும்..
இன்று இலங்கையில் மழை பெய்கிறது...போட்டி நடக்குமோ தெரியவில்லை
அடிக்கடி வாறதில்லைன்னு கோபிக்க கூடாது என??
தபசி'னு பெயர் வரக் காரணம் என்ன?
http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_26.html
///வேடந்தாங்கல் - கருன் */// நன்றி சார்
ReplyDelete///ரேவா said...//// நன்றி சகோதரி
///வணக்கம் பாஸ்....
அடுத்த போட்டி தான் வாழ்வா சாவா எண்டு இருக்கும்..
இன்று இலங்கையில் மழை பெய்கிறது...போட்டி நடக்குமோ தெரியவில்லை/// நேற்று ஆபிரிக்காவுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்கள் கருப்பு குதிரைகள். அதே போல இன்று இலங்கைக்கும் நடக்காதிருக்க மழை காப்பாற்ருது போல ..)))
உலகக்கோப்பையை மூன்று முறை தொடர்ந்து வென்ற அணியை நாம் வீழ்த்தியது உலககோப்பை வென்றதுக்குச் சமம் . இனி கோப்பையே வாங்கினாலும் அது வெறும் பேருக்காகத்தான் .
ReplyDeletehttp://jselvaraj.blogspot.com/