ஆயுள் பாதி தாண்டிய வயசு இருக்கும்,
காணும் போதெல்லாம்
கைப்பிடியிலே "மனைவியை" வைத்திருப்பார்,
அவ்வளவுக்கு காதல்
அந்த மது போத்தல்கள் மீது!
ஆலமரம் போன்று பெருத்து வளர்ந்து
விசாலமாக கூரை விரித்து நின்ற
அந்த மர நிணலே அவர் கூடு,
முகத்தை மறைக்கும் முடிகளும்
ஓட்டை விழுந்த உடைகளுமாக
பார்க்க பரிதாபமாக இருப்பதில்லை எனக்கு!
காரணம்
உயிர் வாழ ஆசைகொண்டு
நாடு விட்டு இங்கு வந்து
உயிரை குடிக்கும் விசமான
மதுவுக்கு அடிமை கொண்டு
வீடு வாசல் மனைவி மக்களுடன்
தன்னிலையும் தானிழந்தாரே தவிர,
ஊனம் என்பதே அவர் உடலில் காணோம்!
தன்னாலே தான் கெடுதல் என்பதற்கு
தன்னிலை விளக்கம் அளிப்பது போல
இருந்த அவர் தோற்றம்
சில நாளாக
என் கண்ணில் படவில்லை...!
அப்புறம் ஒருநாள்
இணையத்தில் உலாவரும் போது
கண்ணில் பட்ட செய்தி ஒன்றிலே,
"உறைந்த குளிரால்
இலங்கை தமிழர் ஒருவர்
இத்தாலிய வீதியிலே
செத்து பிணமாக இருக்கார்" என்று....!
காணும் போதெல்லாம்
ReplyDeleteகைப்பிடியிலே "மனைவியை" வைத்திருப்பார்,//
வணக்கம் சகோதரம், மனைவி மீது எம்மவர்களுக்கு அவ்வளவு காதலோ இல்லை மாற்றான் கவர்ந்து விடுவான் என்று ஒரு ஐயமோ?
கவிதை இன்றைய புலம் பெயர் தமிழர்களின் நிஜ வாழ்க்கையினைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
//"உறைந்த குளிரால்
இலங்கை தமிழர் ஒருவர்
இத்தாலிய வீதியிலே
செத்து பிணமாக இருக்கார்" என்று....!//
என்ன ஓவராக மப்பேத்தியதன் விளைவோ?
புலம் பெயர் நாட்டில் உள்ளவர்களின் நிலமையை அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
pulam peyarnthavarkal vaalvu katasi paaraavil .varuththamalikkirathu..
ReplyDeleteஅனைத்தும் உண்மை..
ReplyDeleteமதுவிற்கு மட்டுமல்ல எதற்கு அடிமையானாலும் இதே கதிதான்
ReplyDelete