பின்லேடனுக்கு கலைஞரின் இரங்கற்பா..!




ஆண்டுக்கு ஒரு துணைவி கொண்டு
அடுக்கடுக்காய் பிள்ளை பெறுவதில்
முன்னுக்கு நிற்ப்பது மு.கா
என்று எண்ணியிருக்க
என்னை பின்னுக்கு தள்ளிய பின்லேடா!

இறுதியாய்  ஒரு தடவை பார்த்து
கண்ணீர் விட்ட பின் 
கவி வடிக்க எண்ணியிருந்தேன்,
கயவர்கள்  உன்னை
கடலுக்குள் புதைத்தார்களோ!

உடன் பிறவா சகோதரனே
ஊழலில் நீ எப்படியோ தெரியல ..
ஆனாலும்  உண்மையிலே
எமக்குள் ஒற்றுமை பல!

புனிதப்போர் என்று
உயிர்களை  கொன்றாய் நீ
புள்ளை குட்டிக்கென்று
உடைமைகள் கொண்டேன் நான்!

மதங்களை வச்சு
மக்களை கொன்றாய் நீ
மக்களை வச்சு 
ஆட்சி வென்றேன் நான்
அடிப்படையில் நமக்கு
பலிக்கடா மக்கள் தான்!

ஆரம்பத்தில் நீயும் 
அமெரிக்கனின் அடிமையாமே, 
கடைசி வரை நான்
காங்கிரசுக்கு அடிமை!
புளைக்க தெரியாதவன் நீ;
இன்று பார்
இடையிலே  கொள்கை மாறியதால்
இறந்துவிட்டாய்!
இறுதி வரை நான்
கொண்ட கொள்கையிலே.. 
இறக்கும் வரை முதல்வன்!

தாடி வைத்த தூயவனே,
தங்கரதத்தில் அனுப்பியுன்னை 
கொடநாட்டு பெண்மணிக்கு
குண்டு வைக்க எண்ணியிருந்தேன்,
பாதியிலே நீ போனதால் 
பதை பதைக்கிறது உள்ளம்
இன்னும் எழுத எண்ணவே
என் கண்ணீரால் நனைந்தது காகிதம்!  

உண்மையை சொல்கிறேன்
இறக்கவில்லை நீ
என் போல் மனிதர்களில்
என்றும் வாழ்வாய் !

                                                                             இங்கனம் 
                                                                             பாசத்தலைவன்
                                                                            மு. கா 

50 comments:

  1. மிகவும் அருமையான கற்பனை.
    அழகழகான அடுக்கு மொழிகள்.
    வரிக்குவரி நகைச்சுவை.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. உண்மையிலே கலைஞர் எழுதியதை பகிர்ந்துள்ளீர்கள் என்று படிக்க ஆரம்பித்த பின்னர் தான் தெரிந்தது இது உங்களின் நையாண்டி கைவண்ணம் என்று...

    ReplyDelete
  3. எழுதியவிதமும், எழுதிய கருத்துக்களும் கவனத்தை ஈர்க்கிறது.

    ReplyDelete
  4. உண்மையில் ஒசாமா கொல்லப்பட்டது குறித்து கலைஞர் என்னதான் சொல்லியிருக்கிறார்?

    ReplyDelete
  5. ///டக்கால்டி said...

    Anaithu varigalum arumai.../// நன்றி தலிவா ..))

    ReplyDelete
  6. ///பாரத்... பாரதி... said...

    உண்மையிலே கலைஞர் எழுதியதை பகிர்ந்துள்ளீர்கள் என்று படிக்க ஆரம்பித்த பின்னர் தான் தெரிந்தது இது உங்களின் நையாண்டி கைவண்ணம் என்று.../// ஹிஹிஹி

    ReplyDelete
  7. ///வை.கோபாலகிருஷ்ணன் said...

    மிகவும் அருமையான கற்பனை.
    அழகழகான அடுக்கு மொழிகள்.
    வரிக்குவரி நகைச்சுவை.
    பாராட்டுக்கள்./// நன்றி ஐயா

    ReplyDelete
  8. ///பாரத்... பாரதி... said...

    உண்மையில் ஒசாமா கொல்லப்பட்டது குறித்து கலைஞர் என்னதான் சொல்லியிருக்கிறார்?/// ஹிஹிஹி அவருக்கு நெறைய வேலையிருக்காம்.)))

    ReplyDelete
  9. சொல்வதற்கு ஒன்றும் இல்லை
    சுவாரசியமான கவிதை உண்மையில் கலைஞர் தான் எழுதினாரோ

    ReplyDelete
  10. கலக்கல் தலைவா

    ReplyDelete
  11. இதைவிடச் சிறப்பாக நிகழ்வுகளை யாரும் சித்தரிக்க முடியாது

    லேபிள் ஒட்ட எத்தனிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது- The K Company காமெடி ஜிம்மி
    http://aagaayamanithan.blogspot.com/2011/05/k-company.html

    ReplyDelete
  12. ///தமிழ் உதயம் said...

    அருமை...//// நன்றி பாஸ்

    ReplyDelete
  13. ///பலே பிரபு said...

    கலக்கல் தலைவா
    /// நன்றி தலிவா )))

    ReplyDelete
  14. ////ஆகாயமனிதன்.. said...

    இதைவிடச் சிறப்பாக நிகழ்வுகளை யாரும் சித்தரிக்க முடியாது

    லேபிள் ஒட்ட எத்தனிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது- The K Company காமெடி ஜிம்மி
    http://aagaayamanithan.blogspot.com/2011/05/k-company.html /// எதோ முடிஞ்சது. நன்றி பாஸ்

    ReplyDelete
  15. //ஜீ... said...

    very nice! :-)/// நன்றி ஜீ

    ReplyDelete
  16. ///யாதவன் said...

    சொல்வதற்கு ஒன்றும் இல்லை
    சுவாரசியமான கவிதை உண்மையில் கலைஞர் தான் எழுதினாரோ// நன்றி யாதவன்

    ReplyDelete
  17. அண்ணா பட்டய கிளப்பிடீங்க ..............சூப்பர்

    ReplyDelete
  18. ///ரஹீம் கஸாலி said...

    present /// வாங்கண்ணா

    ReplyDelete
  19. ////பாலா said...

    அண்ணா பட்டய கிளப்பிடீங்க ..............சூப்பர்//// நன்றி அம்பி ...

    ReplyDelete
  20. பாஸ் ரியலி சூப்பர் ..
    சான்சே இல்லை கலக்கீட்டிங்க ...
    இத படிக்கும் பொது கருணா மேல கோவமும் வருது
    பட் அத விட அதிகமா சிரிப்பும் வருது

    ReplyDelete
  21. //ஆண்டுக்கு ஒரு துணைவி கொண்டு
    அடுக்கடுக்காய் பிள்ளை பெறுவதில்
    முன்னுக்கு நிற்ப்பது மு.கா
    என்று எண்ணியிருக்க
    என்னை பின்னுக்கு தள்ளிய பின்லேடா//

    ஆரம்பமே அசத்தல் பாஸ்

    ReplyDelete
  22. //தங்கரதத்தில் அனுப்பியுன்னை
    கொடநாட்டு பெண்மணிக்கு
    குண்டு வைக்க எண்ணியிருந்தேன்,
    பாதியிலே நீ போனதால்
    பதை பதைக்கிறது உள்ளம் //

    அம்மையாருக்கு குண்டு வைக்குராரோ இல்லையோ
    இத பார்த்தால் உங்களுக்கு கண்டிப்பா குண்டு வைப்பாரு.. lol

    ReplyDelete
  23. mige arumai!!

    ReplyDelete
  24. ///துஷ்யந்தனின் பக்கங்கள் said...

    //ஆண்டுக்கு ஒரு துணைவி கொண்டு
    அடுக்கடுக்காய் பிள்ளை பெறுவதில்
    முன்னுக்கு நிற்ப்பது மு.கா
    என்று எண்ணியிருக்க
    என்னை பின்னுக்கு தள்ளிய பின்லேடா//

    ஆரம்பமே அசத்தல் பாஸ்/// வாங்கண்ணா

    ReplyDelete
  25. துஷ்யந்தனின் பக்கங்கள் said...

    //தங்கரதத்தில் அனுப்பியுன்னை
    கொடநாட்டு பெண்மணிக்கு
    குண்டு வைக்க எண்ணியிருந்தேன்,
    பாதியிலே நீ போனதால்
    பதை பதைக்கிறது உள்ளம் //

    அம்மையாருக்கு குண்டு வைக்குராரோ இல்லையோ
    இத பார்த்தால் உங்களுக்கு கண்டிப்பா குண்டு வைப்பாரு.. lol //// ஹிஹிஹி

    ReplyDelete
  26. ///Krishna said...

    mige arumai!!/// கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  27. ஆண்டுக்கு ஒரு துணைவி கொண்டு
    அடுக்கடுக்காய் பிள்ளை பெறுவதில்
    முன்னுக்கு நிற்ப்பது மு.கா
    என்று எண்ணியிருக்க
    என்னை பின்னுக்கு தள்ளிய பின்லேடா!//

    பாஸ்..ஆரம்ப வரிகளே, கலைஞரின் உணர்வுகளைக் கூறுவது போன்று, அவர் எழுதுவது போலவே வந்திருக்கிறது.

    ReplyDelete
  28. இறுதியாய் ஒரு தடவை பார்த்து
    கண்ணீர் விட்ட பின்
    கவி வடிக்க எண்ணியிருந்தேன்,
    கயவர்கள் உன்னை
    கடலுக்குள் புதைத்தார்களோ!//

    கலைஞர் நிசமாவே வருந்திட்டாரா..
    முடியலை பாஸ்...இப்படி ஒரு கற்பனாவாதி, உங்களுக்குள் இருந்திருக்கிறானே என்பதைப் படிக்கையில் ஆச்சரியமாக இருக்கிறது,

    குளிர் பனி போல் வெளித் தெரியும் நீங்கள்- கவிதையில் ஒரு எரிமலை தான்.!
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  29. ஆனாலும் உண்மையிலே
    எமக்குள் ஒற்றுமை பல!//

    ஹா...ஹா...

    ReplyDelete
  30. புனிதப்போர் என்று
    உயிர்களை கொன்றாய் நீ
    புள்ளை குட்டிக்கென்று
    உடைமைகள் கொண்டேன் நான்!//

    யாராவது பத்திரிகைக்காரங்க இருந்தால், கலைஞர் படிக்கும் வண்ணம் பேப்பரிலை போடுங்கய்யா..

    கலைஞர் நாளைக்கே போயிடுவார்- மேலே.

    ReplyDelete
  31. ஆரம்பத்தில் நீயும்
    அமெரிக்கனின் அடிமையாமே,
    கடைசி வரை நான்
    காங்கிரசுக்கு அடிமை!//

    அஃதே...அஃதே....
    என்ன ஒரு சொல்லடி..!

    ReplyDelete
  32. இறுதி வரை நான்
    கொண்ட கொள்கையிலே..
    இறக்கும் வரை முதல்வன்!//

    இறந்தாலும், தன் பரம்பரை தான் ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் கலைஞர் கண்ணும் கருத்துமாக உள்ளாரே!
    அவ்....அதனையும் கவிதையில் சேர்த்திருக்கலாம்.

    ReplyDelete
  33. தாடி வைத்த தூயவனே,
    தங்கரதத்தில் அனுப்பியுன்னை
    கொடநாட்டு பெண்மணிக்கு
    குண்டு வைக்க எண்ணியிருந்தேன்,
    பாதியிலே நீ போனதால்
    பதை பதைக்கிறது உள்ளம்
    இன்னும் எழுத எண்ணவே
    என் கண்ணீரால் நனைந்தது காகிதம்! //

    கலைஞரின் நடையில் கலைஞரைச் சாடி, அழகாக வந்திருக்கிறது இரங்கற்பா..

    யோ இது இரங்கற்பா இல்லை...
    இடக்கு, முடக்கான நகைச்சுவை கவிதை.

    ReplyDelete
  34. தாடி வைத்த தூயவனே,
    தங்கரதத்தில் அனுப்பியுன்னை
    கொடநாட்டு பெண்மணிக்கு
    குண்டு வைக்க எண்ணியிருந்தேன்,
    பாதியிலே நீ போனதால்
    பதை பதைக்கிறது உள்ளம்
    இன்னும் எழுத எண்ணவே
    என் கண்ணீரால் நனைந்தது காகிதம்! //

    கலைஞரின் நடையில் கலைஞரைச் சாடி, அழகாக வந்திருக்கிறது இரங்கற்பா..

    யோ இது இரங்கற்பா இல்லை...
    இடக்கு, முடக்கான நகைச்சுவை கவிதை.

    ReplyDelete
  35. நிரூபன் said...குளிர் பனி போல் வெளித் தெரியும் நீங்கள்- கவிதையில் ஒரு எரிமலை தான்.!/// ஹிஹிஹி இதில ஒன்னும் உள் குத்து இல்லையே ..........ச்சும்மா..)))

    ReplyDelete
  36. ///யாராவது பத்திரிகைக்காரங்க இருந்தால், கலைஞர் படிக்கும் வண்ணம் பேப்பரிலை போடுங்கய்யா..

    கலைஞர் நாளைக்கே போயிடுவார்- மேலே./// அப்புறம் நான் கொலைகாரன் ஆகிடுவனே ஹிஹிஹி

    ReplyDelete
  37. கலைஞரின் நடையில் கலைஞரைச் சாடி, அழகாக வந்திருக்கிறது இரங்கற்பா..

    யோ இது இரங்கற்பா இல்லை...
    இடக்கு, முடக்கான நகைச்சுவை கவிதை./// நன்றி பாஸ், சும்மா ஒரு காமெடி பண்ணலாமே எண்டு.............நாலு பேர் சிரிக்கணுண்டா எதுவுமே தப்பில்லா.................. )))

    ReplyDelete
  38. அடடே..யார் இந்த கந்தசாமி என்று பார்க்க வந்தால், பதிவுகள் அமர்க்களமாக இருக்கே!..பின் தொடர்கிறேன்!

    ReplyDelete
  39. அருமை அருமை
    முதல் இரண்டு பத்தி படிக்கும் வரை
    மு.க அவர்களின் பாடலைத்தான் எடுத்து
    பதிவில் போட்டு இருக்கிறீர்களோ என நினைத்தேன்
    அதே நடை அதே நக்கல் அதே நையாண்டி
    திரும்பத் திரும்ப படித்து ரசித்தேன்
    நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  40. ஒரு கொலைகார மடல் ஹிஹி!

    ReplyDelete
  41. லேட்டா வந்தாலும் இந்தப் பதிவை தவற விடாம படித்து விட்டென் என்று மகிழ்ச்சியடைகிறேன்.
    அசத்திட்டீங்க!

    ReplyDelete
  42. ///செங்கோவி said...

    அடடே..யார் இந்த கந்தசாமி என்று பார்க்க வந்தால், பதிவுகள் அமர்க்களமாக இருக்கே!..பின் தொடர்கிறேன்!// வாங்க பாஸ்

    ReplyDelete
  43. //////////Ramani said...

    அருமை அருமை
    முதல் இரண்டு பத்தி படிக்கும் வரை
    மு.க அவர்களின் பாடலைத்தான் எடுத்து
    பதிவில் போட்டு இருக்கிறீர்களோ என நினைத்தேன்
    அதே நடை அதே நக்கல் அதே நையாண்டி
    திரும்பத் திரும்ப படித்து ரசித்தேன்
    நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்/// நன்றி ஐயா

    ReplyDelete
  44. ////விக்கி உலகம் said...

    ஒரு கொலைகார மடல் ஹிஹி!/// ஆமா ஆமா ஹிஹிஹி

    ReplyDelete
  45. ///சென்னை பித்தன் said...

    லேட்டா வந்தாலும் இந்தப் பதிவை தவற விடாம படித்து விட்டென் என்று மகிழ்ச்சியடைகிறேன்.
    அசத்திட்டீங்க!/// ரொம்ப நன்றி ஐயா

    ReplyDelete
  46. நண்பன்7 May 2011 at 15:06

    சிரித்து மாளவில்லை........நையாண்டி அருமையிலும் அருமை....

    ReplyDelete