இரண்டு வருடங்கள்
இமைப்பொழுதில் கடந்த போதும்
நினைவுகளில் இருந்து அகல மறுக்கும்
கொடிய நாட்கள்!
வாழவேண்டிய வயசிலே
வசந்தங்களை பறித்து
கயவர்களால் நயவஞ்சமாக
எம் உறவுகளின் உயிர்கள் குடித்து
உடல்கள் புதைக்கப்பட்ட நாட்கள்!
பள்ளி பருவத்தில்
சிட்டா திரிந்த
சின்னஞ்ச் சிறுசுகளை
பெத்தவள் முன்னாலே
பிணமாக போட்ட நாள் இது!
பசி கொண்டு வரும்
பருந்தை கண்டு
குஞ்சுகளை காக்கும் கோழியாக,சீறி
பறந்துவரும் கொடும்
குண்டுவீச்சு அரக்கனை கண்டு
குழந்தையை காக்க,
தன் உடலை
துண்டுகளாக கொடுத்த
தாயவள் நாள் இது!
உறவை நினைந்து
கடல் கடந்த ஐரோப்பிய வீதிகளில்
நடை பிணங்களாக
நம்மவர்கள் கதறிய நாள் இது ,உலகின்
இறுதி சொட்டு மனிதாபிமானும்
புதைந்து போன
நாள் இது!
தொடர்ந்து துரத்தும்
போர் என்ற அரக்கனிடம் இருந்து
தம்மை காத்துக்கொள்ள,
ஓடி ஓடி
கால்கள் நலிந்து
முள்வேலிகள் நடுவே
முகத்தை புதைத்துக்கொண்ட
கரி நாள் இது!
நேரில் கண்டவர்களும்
நிழற்ப்படத்தில் பார்த்தவர்களும்
கண்களால் உள்வாங்கி
இதயத்தில் புதைத்துவைத்த
அந்த உருவம்,இன்று
இல்லையே என்று தெரிந்ததும்
இதயமே நொறுங்கிப்போன
நாள் இது.
பசுமை படர்ந்து
செழித்து வளர்ந்துநின்ற மரத்தை
அழிக்கும் நோக்கம் கொண்டு,
பக்கவேர்களை சிதைத்து சென்று
ஆணிவேரை
வெட்டி வீழ்த்திய நாள் இது!
பட்டு போகுமோ
இனி
அந்த மரமும் ..!!
இரண்டு வருடங்கள்
ReplyDeleteஇமைப்பொழுதில் கடந்த போதும்
நினைவுகளில் இருந்து அகல மறுக்கும்
கொடிய நாட்கள்!//
காலங் கடந்தாலும் கண் முன்னே நிற்கும் எங்களின் கொடிய நாட்களை இவ் வரிகள் சுட்டுகின்றது.
எந்த வரிகளைச் சுட்டுவதென்று தெரியவில்லைச் சகோ. எங்கள் வாழ்வின் அவலங்களை, கடந்த காலத்தின் கருகிய நாட்களினை உங்கள் கவிதை உணர்வுகளை உலுக்கும் வார்த்தைகளின் தொகுப்பாய் உரைக்கிறது.
ReplyDeleteதண்ணீர்விட்டா வளர்த்தோம்....என
ReplyDeleteபாரதி பாடியதைபோல
இதன் வேர்கள் பூமியிலா புதையுண்டு கிடக்கின்றன
நெஞ்சங்களில் அல்லவா வேரூன்றிக் கிடக்கின்றன
நிச்சயம் ஒரு நாள் இம்மரம் வான் மறைக்க பூதமாய்
விஸ்வரூபமெடுத்து நிற்கும்
உணர்வுபூர்வமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ஆணிவேரை
ReplyDeleteவெட்டி வீழ்த்திய நாள் இது!
மனது கனக்க வைக்கும் கவிதை..
ReplyDeleteபக்கவேர்களை சிதைத்து சென்று
ReplyDeleteஆணிவேரை
வெட்டி வீழ்த்திய நாள் இது!
பட்டு போகுமோ
இனி
அந்த மரமும் ..!!
\
.. நெஞ்சை கணக்க வைக்கும் கவிதை.சீக்கிரம் நாம் விரும்பும் நாள் வரும் சகோ.
படிக்கும்போதே மனம் கனத்துப் போகிறது.நல்ல நாளுக்காக ஏங்குகிறது.
ReplyDeleteஅசத்தல் கவிதை சகோ.. படிக்கும் போதே மனம் ஏதோ செய்கிறது..
ReplyDeleteதமிழன் வாழ்வில் மறக்க முடியா நாள் இது...
ReplyDeleteமனசை கனக்க செய்யும் கவிதை,
ReplyDelete/////உலகின்
ReplyDeleteஇறுதி சொட்டு மனிதாபிமானும்
புதைந்து போன
நாள் இது!/////
இந்த இடத்தில் தான் ஒரு பெரிய உச்சியடி சகோதரம்... பல அரசியல்வாதிகளின் மகமுடியை துகிலுரித்த நாளுமல்லவா ?
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. ?
உணர்வை சுமந்த பெரும் கவதை அருமை...
ReplyDeleteபிணமாக விழுந்தாலும் இனமாக விழுவோம் என்று இறுதிவரை இருந்த தமிழர்களுக்கு வீர வணக்கம்
ReplyDeleteஎல்லா வரிகளும் ஏதோ எனது மனதை உறுத்துகிறது ......
ReplyDeleteகனக்கும் பகிர்வு.
ReplyDeleteமீண்டும் துளிர்விட வேண்டும்.
@நிரூபன்
ReplyDeleteramani
தாராபுரத்தான்
ரேவா
செங்கோவி
சென்னை பித்தன்
வேடந்தாங்கல்
பலே பிரபு
துஷ்யந்தன்
மதி சுதா
யாதவன்
akulan
இராஜராஜேஸ்வரி
அனைவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மக்கள்ஸ்....
ம் ..
ReplyDeleteஇரண்டு வருடங்கள்
இமைப்பொழுதில் கடந்த போதும் ...
facebookல் ஷேர் செய்துவிட்டேன்...அருமையான கவிதை...மனதை கனக்க செய்துவிட்டது!!
ReplyDeleteபசி கொண்டு வரும்
ReplyDeleteபருந்தை கண்டு
குஞ்சுகளை காக்கும் கோழியாக,சீறி
பறந்துவரும் கொடும்
குண்டுவீச்சு அரக்கனை கண்டு
குழந்தையை காக்க,
தன் உடலை
துண்டுகளாக கொடுத்த
தாயவள் நாள் இது!
ஐயோ என எனை மறந்து என்
உதடுகள்
உச்சரித்த வார்த்தைகள் இவை
மேல சொன்ன உங்களின் கவிதை வரிகளை படித்தபின் .
துயரம் தூர போகும் நாள் வரும்
ஆயினும் இத்தாய் பட்ட வலி
என்றுமே ஆறாதே
கொடுமையின் ஊற்றுகண்ணாய்
கொடூரன் அவன் .
அழ வைத்திவிட்டது வரிகள்.இந்த வாரம் முழுதுமே ஒரு நிலையில் இல்லை நான் !
ReplyDelete