அந்தி மாலை பொழுது
ஆட்கள் அற்ற தெருவு
அழகான பொண்ணு
அவ மேல என் கண்ணு!
முதற்ப்பார்வையிலே
முற்றும் இழந்தேனடி
முங்கி எழுந்த கடலினிலே
முத்தெடுத்ததாய் உணர்ந்தேனடி!
உன் கண்களில் எழுந்த மின்னலடி
என்னை கவர்ந்து சென்றது சில நொடி
இனி எண்ணமெல்லாம் நீயடி - எம்
இதயத்தில் வேண்டாம் இடை வெளி!
இன்று என்னடி
பெண்ணே நகர மறக்குது
இதயம் நீயின்றித் துடிக்க மறுக்குது
வானம் கறுக்கும் போதெல்லாம், உன்
கனவு வந்து கண்ணை மறைக்குது!
தனிமை மட்டுமே எனக்கு பிடிக்குது
பெண்ணே உன் மேல் தாகம் எடுக்குது
கரம் பிடிக்கும் நாளை எண்ண
கால ஓட்டம் முள்ளாய் தைக்குது!
கிட்ட நெருங்கும் போதெல்லாம்
எட்ட செல்லும் வானமா நீ ?
கரையில் நின்று பார்ப்பவர்க்கு
கடலை தொடும் அந்தி நிலவா நீ ?
படகோட்டியும் நானாவேன்
பறக்கும் தட்டும் போலாவேன்
பெண்ணே உன்னை கைது செய்ய
பறக்கும் தட்டும் போலாவேன்
பெண்ணே உன்னை கைது செய்ய
காதல் என்ற காவலனாவேன்...!
அய் சாரும் பாழ்ங்கிணத்தில விழுந்திட்டாரு!!
ReplyDeleteஇந்த பிகரின்ர படம் ஹன்சிகா மாதிரியும் கிடக்கு பூமிகா மாதிரியும் கிடக்கு! உண்மையில யாரவ?
ReplyDelete///கார்த்தி said...
ReplyDeleteஇந்த பிகரின்ர படம் ஹன்சிகா மாதிரியும் கிடக்கு பூமிகா மாதிரியும் கிடக்கு! உண்மையில யாரவ?// ஹன்சிகாவே தான்...)
/////உன் கண்களில் எழுந்த மின்னலடி
ReplyDeleteஎன்னை கவர்ந்து சென்றது சில நொடி/////
இந்தாப் பார்ர நம்மாளையும் யாரோ கவுத்துட்டா...
அருமையான வரியுங்கோ..
ReplyDeleteபார்த்துச் செல்லுங்கள்.சொல்லுங்கள்.
ReplyDeleteயோவ் கார்த்தி அந்தாளுக்கு எழுபது வயசுப்பா...இதுல எங்க பாலும் கிணத்தில விழுறது..
ReplyDeleteஆல்ரெடி விழுந்திருப்பார் ஹிஹிஹி
//உன் கண்களில் எழுந்த மின்னலடி
ReplyDeleteஎன்னை கவர்ந்து சென்றது சில நொடி
இனி எண்ணமெல்லாம் நீயடி - எம்
இதயத்தில் வேண்டாம் இடை வெளி!
//
பின்னீட்டீங்க போங்க கந்தசாமி சார்
அந்தி மாலை பொழுது
ReplyDeleteஆட்கள் அற்ற தெருவு
அழகான பொண்ணு
அவ மேல என் கண்ணு!//
மச்சி, நீயும் மம்மலுக்கை வெளிக்கிட்டுப் போற ஆளா. அவ்...........
(பொழுது பட்ட பின்னர்)
முதற்ப்பார்வையிலே
ReplyDeleteமுற்றும் இழந்தேனடி
முங்கி எழுந்த கடலினிலே
முத்தெடுத்ததாய் உணர்ந்தேனடி!//
பாஸ், இதில் மூன்றாம் வரியில் ஒரு சின்னத் தவறு,
முங்கி என்பது,
மூழ்கி என்று வர வேண்டும் சகா.
உன் கண்களில் எழுந்த மின்னலடி
ReplyDeleteஎன்னை கவர்ந்து சென்றது சில நொடி
இனி எண்ணமெல்லாம் நீயடி - எம்
இதயத்தில் வேண்டாம் இடை வெளி!//
இது தான் பின்னாலே துரத்தி துரத்தி காதலிப்பது என்பதன் மகிமையா.
இன்று என்னடி
ReplyDeleteபெண்ணே நகர மறக்குது
இதயம் நீயின்றித் துடிக்க மறுக்குது
வானம் கறுக்கும் போதெல்லாம், உன்
கனவு வந்து கண்ணை மறைக்குது!//
யோ, நிஜமாகத் தான் சொல்லுறீங்களா. அவ்........
காதலில் விழுந்திட்டீங்க போங்க, இனிப் பர்ஸ் காலியான பின்னர் தான் எழுந்திருந்து வாங்க
தனிமை மட்டுமே எனக்கு பிடிக்குது
ReplyDeleteபெண்ணே உன் மேல் தாகம் எடுக்குது//
இதனைத் தான் மறைமுகமாய் அதைக் கேட்பது என்று சொல்லுவார்களே;-))
//கரம் பிடிக்கும் நாளை எண்ண
கால ஓட்டம் முள்ளாய் தைக்குது!//
ஏனய்யா, சீதனம் நிறையக் கேட்பீங்க என்பதால் தரமாட்டேன் என்று சொல்லி இழுத்தடிக்கிறாளா.
கிட்ட நெருங்கும் போதெல்லாம்
ReplyDeleteஎட்ட செல்லும் வானமா நீ ?
கரையில் நின்று பார்ப்பவர்க்கு
கடலை தொடும் அந்தி நிலவா நீ ?//
இந்த வரிகள் மூலம் கொன்னுட்டீங்க சகோ.
சந்த நடை, வார்த்தை பிரளாமல் இங்கே அருமையாக வந்திருக்கிறது சகோ.
படகோட்டியும் நானாவேன்
ReplyDeleteபறக்கும் தட்டும் போலாவேன்
பெண்ணே உன்னை கைது செய்ய
காதல் என்ற காவலனாவேன்...!//
வெகு விரைவில் நல்லதே நடந்தால் சந்தோசம்,
அவ்....
//கிட்ட நெருங்கும் போதெல்லாம்
ReplyDeleteஎட்ட செல்லும் வானமா நீ ?
கரையில் நின்று பார்ப்பவர்க்கு
கடலை தொடும் அந்தி நிலவா நீ ?//
அருமையான வரிகள்.. அசத்திட்டிங்க போங்க
கவிதை காதலில் விழுந்த, அல்லது கிணற்றினுள் மூழ்கிய இளைஞனின் உள்ளத்து உணர்வுகளைச் சந்த நடையில் மிக அழகாகச் சொல்லி நிற்கிறது,
ReplyDeleteநல்லாயிருக்கு சகோ..
ReplyDeleteமாறுப்பட்ட சிந்தனை. நன்றாக உள்ளது கவிதை.
ReplyDeleteகவிதை அழகு .
ReplyDeleteசரி பாஸ்! ஏதோ பாத்து...! :-)
ReplyDeleteஅருமையான கவிதை ரசித்தேன் ரசித்தேன்....!!!
ReplyDelete//முதற்ப்பார்வையிலே
ReplyDeleteமுற்றும் இழந்தேனடி
முங்கி எழுந்த கடலினிலே
முத்தெடுத்ததாய் உணர்ந்தேனடி!//
எல்லாமே சூப்பர் டேஸ்ட்டான வரிகள்.
பாராட்டுக்கள்.
கவிஞர் கந்தசாமி வாழ்க
ReplyDeleteகாதல் என்றாலே கவிதை ஊறறுக்கண் திறக்காதா!
ReplyDeleteநன்று!
ஆரம்பித்த வரிகள் முதல் முடிக்கும்வரை காதலின் உணர்வுகள் மாறி மாறிக் கடைசிப் பந்தியில் அழகாகக் காவலாகவும் நிற்கிறது.
ReplyDeleteஅழகு !
நைஸ்..பட்..ஹன்சிகாவுக்கு தமிழி தெரியுமா?
ReplyDeletehttp://zenguna.blogspot.com
அவள், எவள்???
ReplyDeleteகவிதை நீட்
ReplyDelete///♔ம.தி.சுதா♔ said...
ReplyDeleteஅருமையான வரியுங்கோ..
/// நன்றி மதி சுதா பாஸ் ..
இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteபார்த்துச் செல்லுங்கள்.சொல்லுங்கள்.
/// ) நன்றி சகோதரி ..
///மைந்தன் சிவா said...
ReplyDeleteயோவ் கார்த்தி அந்தாளுக்கு எழுபது வயசுப்பா...இதுல எங்க பாலும் கிணத்தில விழுறது..
ஆல்ரெடி விழுந்திருப்பார் ஹிஹிஹி
/// யோ ஏன்யா இந்த கோல வெறி, 2057 ல தான் நீங்க சொன்னது சரியாக இருக்கும்
////////மைந்தன் சிவா said...
ReplyDelete//உன் கண்களில் எழுந்த மின்னலடி
என்னை கவர்ந்து சென்றது சில நொடி
இனி எண்ணமெல்லாம் நீயடி - எம்
இதயத்தில் வேண்டாம் இடை வெளி!
//
பின்னீட்டீங்க போங்க கந்தசாமி சார்
/// நன்றி பாஸ் ..
நிரூபன் said...
ReplyDelete//// அந்தி மாலை பொழுது
ஆட்கள் அற்ற தெருவு
அழகான பொண்ணு
அவ மேல என் கண்ணு!//
மச்சி, நீயும் மம்மலுக்கை வெளிக்கிட்டுப் போற ஆளா. அவ்...........
(பொழுது பட்ட பின்னர்)
/// யோவ் அந்த கெட்ட பழக்கமெல்லாம் எனக்கு இல்லையா !
///நிரூபன் said...
ReplyDeleteமுதற்ப்பார்வையிலே
முற்றும் இழந்தேனடி
முங்கி எழுந்த கடலினிலே
முத்தெடுத்ததாய் உணர்ந்தேனடி!//
பாஸ், இதில் மூன்றாம் வரியில் ஒரு சின்னத் தவறு,
முங்கி என்பது,
மூழ்கி என்று வர வேண்டும் சகா.
/// முங்கிறது என்றால் மூச்சடக்கி நீரினுள் இருப்பதை குறிக்கும் என்று அறிந்துள்ளேன். ஆராய்ந்து பார்க்கிறான் பாஸ் அந்தவார்த்தையின் அர்த்தத்தை...
////////கிட்ட நெருங்கும் போதெல்லாம்
ReplyDeleteஎட்ட செல்லும் வானமா நீ ?
கரையில் நின்று பார்ப்பவர்க்கு
கடலை தொடும் அந்தி நிலவா நீ ?//
இந்த வரிகள் மூலம் கொன்னுட்டீங்க சகோ.
சந்த நடை, வார்த்தை பிரளாமல் இங்கே அருமையாக வந்திருக்கிறது சகோ./// ஹிஹிஹி நன்றி பாஸ்
///நிரூபன் said...
ReplyDeleteபடகோட்டியும் நானாவேன்
பறக்கும் தட்டும் போலாவேன்
பெண்ணே உன்னை கைது செய்ய
காதல் என்ற காவலனாவேன்...!//
வெகு விரைவில் நல்லதே நடந்தால் சந்தோசம்,
அவ்....
/// பாழுங்கினத்தில விழுகிறத பார்க்கிறத்தில அப்பிடி ஒரு சந்தோசம் ஹிஹிஹீ
///////மதுரன் said...
ReplyDelete//கிட்ட நெருங்கும் போதெல்லாம்
எட்ட செல்லும் வானமா நீ ?
கரையில் நின்று பார்ப்பவர்க்கு
கடலை தொடும் அந்தி நிலவா நீ ?//
அருமையான வரிகள்.. அசத்திட்டிங்க போங்க
/// நன்றி பாஸ் ...
////நிரூபன் said...
ReplyDeleteகவிதை காதலில் விழுந்த, அல்லது கிணற்றினுள் மூழ்கிய இளைஞனின் உள்ளத்து உணர்வுகளைச் சந்த நடையில் மிக அழகாகச் சொல்லி நிற்கிறது,
//// அண்ணருக்கும் அனுபவம் போல ;-)
///தோழி பிரஷா( Tholi Pirasha) said...
ReplyDeleteநல்லாயிருக்கு சகோ..
/// நன்றி சகோதரி ..
///தமிழ் உதயம் said...
ReplyDeleteமாறுப்பட்ட சிந்தனை. நன்றாக உள்ளது கவிதை.
/// நன்றி பாஸ் ...
koodal bala said...
ReplyDeleteகவிதை அழகு .
// நன்றி சார் ..
///ஜீ... said...
ReplyDeleteசரி பாஸ்! ஏதோ பாத்து...! :-)
/// ஹிஹிஹி நன்றி பாஸ்
///MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteஅருமையான கவிதை ரசித்தேன் ரசித்தேன்....!!!
/// நன்றி மனோ மாஸ்டர் ..
///////வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete//முதற்ப்பார்வையிலே
முற்றும் இழந்தேனடி
முங்கி எழுந்த கடலினிலே
முத்தெடுத்ததாய் உணர்ந்தேனடி!//
எல்லாமே சூப்பர் டேஸ்ட்டான வரிகள்.
பாராட்டுக்கள்.
/// நன்றி ஐயா ...
//யாதவன் said...
ReplyDeleteகவிஞர் கந்தசாமி வாழ்க
/// ஹிஹிஹி நன்றி யாதவன் ...
சென்னை பித்தன் said...
ReplyDeleteகாதல் என்றாலே கவிதை ஊறறுக்கண் திறக்காதா!
நன்று!
// நன்றி ஐயா ....
ஹேமா said...
ReplyDeleteஆரம்பித்த வரிகள் முதல் முடிக்கும்வரை காதலின் உணர்வுகள் மாறி மாறிக் கடைசிப் பந்தியில் அழகாகக் காவலாகவும் நிற்கிறது.
அழகு !
/// நன்றி சகோதரி ...
குணசேகரன்... said...
ReplyDeleteநைஸ்..பட்..ஹன்சிகாவுக்கு தமிழி தெரியுமா?
http://zenguna.blogspot.com
/// அது போட்டோ சும்மா பாஸ் ...
பலே பிரபு said...
ReplyDeleteஅவள், எவள்???
/// கற்பனையில் ....
///சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteகவிதை நீட்///
நன்றி பாஸ் ...
படகோட்டியும் நானாவேன்
ReplyDeleteபறக்கும் தட்டும் போலாவேன்
பெண்ணே உன்னை கைது செய்ய
காதல் என்ற காவலனாவேன்...!
நிகழ்கால நிகழ்வுகளை
காதலாய்
கவிதையாய்
சொல்லி சென்ற வார்த்தைகள்
கிட்ட நெருங்கும் போதெல்லாம்
ReplyDeleteஎட்ட செல்லும் வானமா நீ ?
கரையில் நின்று பார்ப்பவர்க்கு
கடலை தொடும் அந்தி நிலவா நீ ?
நன்றி
மாப்ள எப்பிடி இப்பிடி பின்றீங்க நல்லா இருக்குய்யா......கவிதை!
ReplyDeleteஉங்க வலைப்பூவின் டெம்ப்ளட் மற்றும் அந்த பொண்ணோட போட்டோ இரண்டும் அழகா இருக்குதுங்க
ReplyDeleteகாதல் புகுந்தது நெஞ்சுக்குள்ளே! கள்ளத்தனம் வந்தது கண்ணுக்குள்ளே!
ReplyDeleteகவியாய் கொட்டுது எண்ணத்திலே
காகிதம் பத்தல என்ன செய்வேன்.
அப்படிங்கிறமாதரியில்ல இருக்குது.
கவிதை மிக அருமை. வரிகள் பாடல்போல் இருக்கிறது.. வாழ்த்துக்கள்..