காதல் என்ற திரைக்கு பின் காமம்..!




காதல் என்ற திரையிட்டு
கொண்ட  காமத்தால்
உண்டான கரு உயிராக வெளிவந்ததும்
கடதாசியில் சுற்றி
கசக்கி எறியும் போது
உன்னைத் தேடுகிறேன் நான்..!

கர்ப்பிணி பெண்ணின் 
கருப்பையில் உறங்கும் சிசு
வெளியுலகை காண முன்னே
கந்தக துண்டுகளால்
குதறி வெளியேறியும் போதும்
உன்னையே தேடுகிறேன் நான்..!

பள்ளி செல்லும் வழியில்
பாதகர்களால் கடத்தப்பட்ட 
பச்சிளம் பாலகனை
பின்னொரு நாளிலே 
பிணமாக  கண்டபோதும்
உன்னையே தேடுகிறேன் நான்..!

மதங்கள்  என்ற நதிகள் 
கடலில்  கலப்பது அறியாமலோ!,
இடையிலே வழிமறித்து
செந்நீரை அதில் கலக்கும்
கயவர்களின் செயலை காணும் போதும்
உன்னை தான் தேடுகிறேன் நான்..!


 இனம் மொழி குலம் என்று
தெளிந்த குட்டைகளையும்
கிளறி காறி உமிழ்ந்து 
அதிலே பலன் பார்க்கும்
ஆதிக்கவாதிகள், அப்போதும்
உனையே  தான் தேடுகிறேன் நான்..!

தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய்
மனிதன் உணர்விலும், உள்ளத்திலும் இருப்பாய்
அவன் செயல்களிலும் நீயே இருப்பாய் என்று
ஆகமங்கள் கிழித்த விதிகளின் படி
அத்தனைக்கும் கடவுளே..,
உன்னை தான் தேடுகிறேன்!




12 comments:

  1. தேடல் ரொம்ப வலியுடன் இருக்கு மாப்ள!

    ReplyDelete
  2. என்னய்யா ரொம்ப ஃபீலிங்கா இருக்கீங்க போல....

    ReplyDelete
  3. உண்மை தான். எல்லாவற்றுக்கும் காரணமானவர் கடவுள். அவரை தேடும் கவிதை நன்று.

    ReplyDelete
  4. சமுக பிரச்னையை பிரதிபலிக்கும் கவிதை
    அந்த கடவுளுக்கு ஒரு சட்டை அடி
    வெட்கத்தில் கடவுள் இன்னும் வெளிவர இல்லை

    ReplyDelete
  5. வலிகள் நிறைந்த கவிதை ..

    ReplyDelete
  6. அருமை,உண்மை.

    ReplyDelete
  7. வலி மிகுந்த தேடல், ஒவ்வொரு வார்த்தையிலும்! (அந்தப் படம் தேவையா..ரொம்ப கொடூரமா இருக்கே)

    ReplyDelete
  8. படிக்கும்போதே மனசு வலிக்குது பாஸ் :(

    ReplyDelete
  9. காதல் என்ற திரையிட்டு
    கொண்ட காமத்தால்
    உண்டான கரு உயிராக வெளிவந்ததும்
    கடதாசியில் சுற்றி
    கசக்கி எறியும் போது
    உன்னைத் தேடுகிறேன் நான்..!//

    இக் காலக் குடாநாட்டின் யதார்த்த நிலையினக் கண்டு மனம் பொங்கிய கவிஞரின் உள்ளத்து உணர்வலைகளும், சமூகத்தின் மீதான ஆழ்ந்த சரிசனையும் இவ் வரிகளில் தெரிகிறது.

    ReplyDelete
  10. பள்ளி செல்லும் வழியில்
    பாதகர்களால் கடத்தப்பட்ட
    பச்சிளம் பாலகனை
    பின்னொரு நாளிலே
    பிணமாக கண்டபோதும்
    உன்னையே தேடுகிறேன் நான்..!//


    எங்களூரின் அவலம், கலாச்சார சீரழ்வுகள் யுத்தத்தின் பின்னரான நிழல் யுத்தம் அனைத்தையும் கவிதை உணர்வின் வரிகளாகச் சொல்லி நிற்கிறது,

    ReplyDelete
  11. மனிதனின் அட்டகாசத்துக்கெல்லாம் கடவுளா காரணம்.ஆனாலும் தேடுதல் தேவை !

    ReplyDelete
  12. வீரியமான
    வரிகளில்
    வலியின்
    வலிமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete