"ஒருவனை பார்த்து நீ நாசமாய் போ என்று சொல்வதற்கு பதிலாக பத்து பிள்ளை குட்டி பெத்துக்கோ என்று சொன்னால் போதுமாம் அவன் எதிர்காலத்தில் நடுத்தெருவுக்கு வர" இப்பிடி யாரோ ஒரு பெரியவர் சொன்னதாய் நினைவு, இன்று கலைஞரின் இந்த படு தோல்வியை அறிந்தவுடன் என் நினைவுக்கு வந்தது தொலைச்சிடிச்சு.
அட நம்ம கேப்டன் கலைஞரை ஓவர்ராக் பண்ணியதை கல்லில் அல்லவா செதுக்கி வைக்கணும்..) நான் நினைக்கிறேன் மக்கள் கேப்டன் மீது நம்பிக்கை வைத்து ஓட்டு போட்டதை விட திமுக மீது இருந்த அவநம்பிக்கை தான் அவரின் வாக்கு வங்கியில் ஓட்டாக விழுந்ததென்று. இன்று கம்பீரமாய் சென்று எதிர்க்கட்சி ஆசனத்தில் உட்காறப்போறாரு. பாவம் நம்ம "வைகை புயல்" 'சும்மா கிடந்த சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி' என்றது போல அவர் நிலை. இனி தமிழ் சினிமாவில் இருந்தும் கண்ணுக்கெட்டாத தூரத்துக்கு போய்விடுவாரோ! என்பதை காலம் தான் பதில் சொல்லும்.
தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கும் போது சூடான விவாதங்களை வலைத்தளங்களிலே எதிர்பார்த்திருந்தேன்(ம்). ஆனால் கூகுளுக்கும் கலைஞரின் சரிவு சங்கடத்தை ஏற்ப்படுத்திவிட்டது போல ) ஆனாலும் சமூக வலைத்தளங்களில் உலாவியபடியால் ஒன்று புரிந்து கொள்ள கூடியதாக இருந்தது. அதாவது அநேகருக்கு கருணாநிதி கும்பலும் காங்கிரசும் தமிழ்நாட்டு ஆட்சியில் இருந்து துரத்தப்பட்டது பெரிய சந்தோசமே ஒழிய ஜெயா மேடம் ஆட்சிக்கு வருவது பற்றி பெரிதாக சந்தோசம் இல்லை. அலட்டிக்கொள்ளவும் இல்லை. ( மக்கள் இரண்டு தரப்பின் ஆட்சிகாலங்களிலும் வாழ்ந்தவர்களாச்சே..!)
நான் நினைக்கிறேன் அநேகமாக இரண்டு விடயங்கள் திமுக தொடர்பில் மிக கடுமையான தாக்கத்தை ஏற்ப்படுத்தியிருக்கும். ஒன்று ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஏப்பம்விட்ட 'மக்கள் சொத்து'. ( இது கிராமப்புற மக்கள் மத்தியிலே எந்தளவுக்கு புரிதலை ஏற்ப்படுத்தியிருக்கும் என்பது தெரியவில்லை) மற்றையது "திமுக காங்கிரஸ் சம்மந்தப்பட்ட" ஈழ தமிழர் விடயம். இந்த இரண்டு விடயங்களே எதிர்தரப்பு திமுக வுக்கு எதிராக கையாண்ட மிக பெரிய பிரச்சாரம் என்று கூட சொல்லலாம். கூடவே சீமான் காங்கிரசுக்கு எதிராக கிராமம் கிராமமாக சென்று செய்த பிரச்சாரங்களும் இங்கே மறுக்க முடியாது தான். அத்தோடு இறுதி நேரத்திலே சீட்டுக்காக காங்கிரஸில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு பின்னர் சமரசமானவுடன் ஒன்றிணைந்து இவர்கள் போட்ட ஆட்டம் கூட மக்கள் மத்தியில் கடுப்பை ஏற்ப்படுத்தியிருக்கலாம். இவை தவிர இன்னும் பல்வேறு சம்பவங்கள் திமுக செய்த சில நல்ல காரியங்களையும் மூடி மறைத்து அவர்கள் கழுத்தை சுருக்க காரணமாக அமைந்துவிட்டது.
'தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டு மரமாக தான் மிதப்பேன்' என்று இனி கலைஞர் கவி வடிக்க வேண்டியது தான். ஆனால் மக்கள் தூக்கி எறிந்தது கடலில் அல்ல! நீந்தி வருவதற்கு, சாக்கடையில் அல்லவா தூக்கி வீசிவிட்டார்கள். இனி வரும் காலங்களிலே தன் வீழ்ந்து போனா சாம்ராச்சியத்தை மீட்டெடுப்பதை விட வழக்குகளில் சிக்கி தவிக்கும் "மக்களையும்" கட்சியையும் மீட்பதே கலைஞருக்கு பெரும் சவாலாக இருக்கப்போகிறது என்பது மட்டும் உண்மை.
ஆக என்ன தான் இருந்தாலும் அநேகர் சொல்வதை தான் நானும் சொல்கிறேன், "ஐயா வந்தா என்ன அம்மா வந்தா என்ன ஆட்சி என்னமோ ஒண்ணு தான்" தமிழ்நாட்டு மக்கள் நிலை என்பது இருதலை கொல்லி எறும்புதான். இருந்தும் மக்கள் நினைத்தால் கோ(பால)புரத்தில் குடியிருப்பவனையும் குப்பை மேட்டில் தூக்கி வீசமுடியும் என்பதற்கு இந்த தேர்தல் முடிவு எடுத்துக்காட்டு.
ஒருவனை பார்த்து நீ நாசமாய் போ என்று சொல்வதற்கு பதிலாக பத்து பிள்ளை குட்டி பெத்துக்கோ என்று சொன்னால் போதுமாம் அவன் எதிர்காலத்தில் நடுத்தெருவுக்கு வர" இப்பிடி யாரோ ஒரு பெரியவர் சொன்னதாய் நினைவு, இன்று கலைஞரின் இந்த படு தோல்வியை அறிந்தவுடன் என் நினைவுக்கு வந்தது தொலைச்சிடிச்சு.//
ReplyDeleteஆஹா....ஆஹா.. கலைஞரோடை உச்சியிலை அடிக்கிறீங்களே சகோ.
இம் முறை தோற்பார் என்று முன் கூட்டியே தெரிந்திருந்தால்,கடைசி நேரத்தில் ஈழத்தையும் இலவசமாக தாரைவார்த்துக் கொடுத்திருப்பாரே.
ReplyDeleteஅதோடு காமெடியன்களையும் கவர்ச்சி நடிகைகளையும் நம்பி களத்திலே இறங்கினால் முடிவு இப்படி தான் இருக்கும் போல..//
ReplyDeleteஅவ்......யாராச்சும் மாலை முரசிற்கு இதனை அனுப்பி வையுங்க மக்கள்ஸ்
'தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டு மரமாக தான் மிதப்பேன்' என்று இனி கலைஞர் கவி வடிக்க வேண்டியது தான். ஆனால் மக்கள் தூக்கி எறிந்தது கடலில் அல்ல! நீந்தி வருவதற்கு, சாக்கடையில் அல்லவா தூக்கி வீசிவிட்டார்கள்.//
ReplyDeleteஅவ்...............
அலசல், ஆய்வு கலைஞரைத் தாக்குவதுடன், தமிழக யதார்த்தத்தையும் உரைக்கிறது,
பெரும்பாலானநடு நிலையாளர்களின் மன நிலையை
ReplyDeleteஉங்கள் பதிவு மிகச் சரியாகச் சொல்லிப்போகிறது
கோ(பால)புரம்- இதுவரை யாரும் யோசிக்காத
வகையில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கிறீர்கள்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
அநேகருக்கு கருணாநிதி கும்பலும் காங்கிரசும் தமிழ்நாட்டு ஆட்சியில் இருந்து துரத்தப்பட்டது பெரிய சந்தோசமே ஒழிய ஜெயா மேடம் ஆட்சிக்கு வருவது பற்றி பெரிதாக சந்தோசம் இல்லை. அலட்டிக்கொள்ளவும் இல்லை
ReplyDeleteமாப்ள நல்ல அலசல்யா!...ஸ்பெக்ட்ரம் விஷயம் கிராமத்து பாட்டி வரைக்கும் தெரிஞ்சிருக்குய்யா.....மக்களை கண்டுக்காம அவங்க மேல திணிச்ச கரண்ட்டு கட்டும் ஒரு சுனாமி மாதிரி மக்களுக்குள்ள இருந்திருக்கு....
ReplyDeleteவேற வழி இல்ல இருக்குற ஒரே அடுத்த ஆளு அம்மாதான்.....
அதான் இப்படி...ஆனா ஒன்னுய்யா இனி கோவணத்த உருவிடும்...ஆனா மக்கள் வேட்டி கட்ட எதாவது முயற்சி எடுத்தா நல்லது பாப்போம்யா!
ஜெ. ஆட்சிக்கு வருவதற்காக கலைஞர் குடும்பமே கஷ்டப்பட்டு உழைத்தது!..நல்ல அலசல் நண்பரே.
ReplyDeleteஸ்பெக்ட்ரம் விஷயம் ‘ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி’ என்ற வார்த்தையால் அடித்தட்டு மக்களுக்குப் போய்ச் சேர்ந்த்து..ஓட்டுக்குக் கொடுக்கப்படும் காசு, அதிலிருந்து வரும் பங்கு என கிராமப்புற மக்களுக்கும் விளங்கியது..
ReplyDelete//ஆனால் மக்கள் தூக்கி எறிந்தது கடலில் அல்ல! நீந்தி வருவதற்கு, சாக்கடையில் அல்லவா தூக்கி வீசிவிட்டார்கள். //
ReplyDeleteஆகா,அம்சமாச் சொல்லிட்டாரு நம்ம கந்தசாமி!
காரணம் கலைஞரின் சானக்கியத்துக்கும் அரசியல் முதிர்ச்சிக்கும் ராஜதந்திரத்துக்கும் (அது தாங்க குள்ளநரித்தனம்) முன்னாடி அம்மா எல்லாம் சும்மா.//
ReplyDeleteஉண்மை முற்றிலும் உண்மை..
அவரின் பிள்ளைகளும் காரணமாய் போச்சு. //
ReplyDeleteஇதை விடுங்கள்.. கலைஞர் இறப்புக்கு பின்னர் என்ன ஆகும்.? திமுக தொடர்ந்து சம பலத்துடன் இருக்குமா.? கொளத்தூரு நிலைமையை பாத்தீங்களா.? காங்., அடிச்சு விரட்டிட்டு திமுக, அதிமுக போட்டியிட்ட மாதிரி அதிமுக, தேமுதிக என மாறிடுமா.? அப்படி இருந்தால் ஜெ., ஒரு வேளை போய்ட்டார் என்றால் அதிமுக கதி தான் என்ன.? அடுத்த தேர்தலில் அதிமுகவில் விஜய் இணைந்திட்டால்.. ஜெ., பிறகு விஜய் அதிமுக தலைமை ஏற்பாரா.? அப்படியானால் இன்னும் இரண்டு தேர்தலில் சம்பலமுடைய இரு கட்சி விஜயின் அதிமுக,விஜயகாந்தின் தேமுதிக என்றாகிடுமா.? அப்படியானால் என்ன செய்வது.?
திமுக மீது இருந்த அவநம்பிக்கை தான் அவரின் வாக்கு வங்கியில் ஓட்டாக விழுந்ததென்று.//
ReplyDeleteஇல்லை அது மட்டுமல்ல அதிமுக-வன் சப்போர்ட் ரொம்ப முக்கியம். அவர்கள் சப்போர்ட் இல்லாவிடில் இது சாத்தியமே இல்லை..
ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விடவும் இந்தக் "கும்பலை" வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே சராசரி மக்களின் தீர்மானமாக இருந்தது என்பதே உண்மை.பிசாசு போய் பேய் வந்திருக்கிறது அல்லது பேய் போய் பிசாசு வரட்டும்,எல்லாம் ஒன்று தான் ஒரே குட்டை தான் ஒரே மட்டை தான் என்றே பொதுமக்கள் நினைத்தார்கள்,நினைக்கிறார்கள்,நினைப்பார்கள்!ஒரு சிறிய(கொஞ்சக்காலம்)ஆசுவாசப் படுத்திக் கொள்ளலாம்,அவ்வளவு தான்.
ReplyDelete///நிரூபன் said...
ReplyDeleteஇம் முறை தோற்பார் என்று முன் கூட்டியே தெரிந்திருந்தால்,கடைசி நேரத்தில் ஈழத்தையும் இலவசமாக தாரைவார்த்துக் கொடுத்திருப்பாரே./// திருமாவளவன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தது தான் எனக்கு நினைவுக்கு வருகிறார்..)))
///அலசல், ஆய்வு கலைஞரைத் தாக்குவதுடன், தமிழக யதார்த்தத்தையும் உரைக்கிறது,/// நன்றி நிரூபன் கருத்துக்கு
ReplyDelete//////Ramani said...
ReplyDeleteபெரும்பாலானநடு நிலையாளர்களின் மன நிலையை
உங்கள் பதிவு மிகச் சரியாகச் சொல்லிப்போகிறது
கோ(பால)புரம்- இதுவரை யாரும் யோசிக்காத
வகையில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கிறீர்கள்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
//// நன்றி ஐயா உங்கள் கருத்துக்கு
///உருத்திரா said...
ReplyDeleteஅநேகருக்கு கருணாநிதி கும்பலும் காங்கிரசும் தமிழ்நாட்டு ஆட்சியில் இருந்து துரத்தப்பட்டது பெரிய சந்தோசமே ஒழிய ஜெயா மேடம் ஆட்சிக்கு வருவது பற்றி பெரிதாக சந்தோசம் இல்லை. அலட்டிக்கொள்ளவும் இல்லை
/// வாங்க சார்
//விக்கி உலகம் said...
ReplyDeleteமாப்ள நல்ல அலசல்யா!...ஸ்பெக்ட்ரம் விஷயம் கிராமத்து பாட்டி வரைக்கும் தெரிஞ்சிருக்குய்யா.....மக்களை கண்டுக்காம அவங்க மேல திணிச்ச கரண்ட்டு கட்டும் ஒரு சுனாமி மாதிரி மக்களுக்குள்ள இருந்திருக்கு....
வேற வழி இல்ல இருக்குற ஒரே அடுத்த ஆளு அம்மாதான்.....
அதான் இப்படி...ஆனா ஒன்னுய்யா இனி கோவணத்த உருவிடும்...ஆனா மக்கள் வேட்டி கட்ட எதாவது முயற்சி எடுத்தா நல்லது பாப்போம்யா!
/// நீங்கள் சொல்வது மிக சரி பாஸ்
///செங்கோவி said...
ReplyDeleteஜெ. ஆட்சிக்கு வருவதற்காக கலைஞர் குடும்பமே கஷ்டப்பட்டு உழைத்தது!..நல்ல அலசல் நண்பரே.
/// உண்மை தான் )
///செங்கோவி said...
ReplyDeleteஸ்பெக்ட்ரம் விஷயம் ‘ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி’ என்ற வார்த்தையால் அடித்தட்டு மக்களுக்குப் போய்ச் சேர்ந்த்து..ஓட்டுக்குக் கொடுக்கப்படும் காசு, அதிலிருந்து வரும் பங்கு என கிராமப்புற மக்களுக்கும் விளங்கியது..
// ஆமாம் இது தொடர்பாக எதிர் தரப்பு செய்த பிரச்சாரம் கிராம மக்களுக்கும் சென்று சேர்ந்திருக்கும் போல
///சென்னை பித்தன் said...
ReplyDelete//ஆனால் மக்கள் தூக்கி எறிந்தது கடலில் அல்ல! நீந்தி வருவதற்கு, சாக்கடையில் அல்லவா தூக்கி வீசிவிட்டார்கள். //
ஆகா,அம்சமாச் சொல்லிட்டாரு நம்ம கந்தசாமி!
/// நன்றி ஐயா
///தம்பி கூர்மதியன் said...
ReplyDeleteகாரணம் கலைஞரின் சானக்கியத்துக்கும் அரசியல் முதிர்ச்சிக்கும் ராஜதந்திரத்துக்கும் (அது தாங்க குள்ளநரித்தனம்) முன்னாடி அம்மா எல்லாம் சும்மா.//
உண்மை முற்றிலும் உண்மை..
// வாங்க பாஸ்
///தம்பி கூர்மதியன் said...
ReplyDeleteதிமுக மீது இருந்த அவநம்பிக்கை தான் அவரின் வாக்கு வங்கியில் ஓட்டாக விழுந்ததென்று.//
இல்லை அது மட்டுமல்ல அதிமுக-வன் சப்போர்ட் ரொம்ப முக்கியம். அவர்கள் சப்போர்ட் இல்லாவிடில் இது சாத்தியமே இல்லை..
/// ஆமாம் நீங்கள் சொல்வதும் சரி தான் .
///யோகா.சு. said...
ReplyDeleteஜெயலலிதா அம்மையார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விடவும் இந்தக் "கும்பலை" வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே சராசரி மக்களின் தீர்மானமாக இருந்தது என்பதே உண்மை.பிசாசு போய் பேய் வந்திருக்கிறது அல்லது பேய் போய் பிசாசு வரட்டும்,எல்லாம் ஒன்று தான் ஒரே குட்டை தான் ஒரே மட்டை தான் என்றே பொதுமக்கள் நினைத்தார்கள்,நினைக்கிறார்கள்,நினைப்பார்கள்!ஒரு சிறிய(கொஞ்சக்காலம்)ஆசுவாசப் படுத்திக் கொள்ளலாம்,அவ்வளவு தான்.
// ஆட்சி மாற்றம்! அவ்வளவு தான் )
//யாதவன் said...
ReplyDeleteநல்ல அலசல்
/// நன்றி யாதவன்
//"ஒருவனை பார்த்து நீ நாசமாய் போ என்று சொல்வதற்கு பதிலாக பத்து பிள்ளை குட்டி பெத்துக்கோ என்று சொன்னால் போதுமாம் அவன் எதிர்காலத்தில் நடுத்தெருவுக்கு வர"//
ReplyDeleteநல்ல உதராணம்
//மக்கள் தூக்கி எறிந்தது கடலில் அல்ல! நீந்தி வருவதற்கு, சாக்கடையில் அல்லவா தூக்கி வீசிவிட்டார்கள்//
ReplyDeleteஉண்மைதான் நண்பா
//நான் நினைக்கிறேன் அநேகமாக இரண்டு விடயங்கள் திமுக தொடர்பில் மிக கடுமையான தாக்கத்தை ஏற்ப்படுத்தியிருக்கும். ஒன்று ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஏப்பம்விட்ட 'மக்கள் சொத்து'. ( இது கிராமப்புற மக்கள் மத்தியிலே எந்தளவுக்கு புரிதலை ஏற்ப்படுத்தியிருக்கும் என்பது தெரியவில்லை) மற்றையது "திமுக காங்கிரஸ் சம்மந்தப்பட்ட" ஈழ தமிழர் விடயம். இந்த இரண்டு விடயங்களே //
ReplyDeleteமூன்றாவதாக குடும்ப ஆதிக்கத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள் நண்பா
அரசியலில் இதெல்லாம் சாதாரணம் என்பார்களோ !
ReplyDeleteஇனி கலைஞர் எழுந்து நிற்பதற்கான கால அவகாசமில்லையென நினைக்கிறேன்.மக்கள் அவர் விரும்பியபடியே குண்டுக்கட்டாக தூக்கிப் போட்டு விட்டார்கள்.
ReplyDeleteஇனிமேல் மதிப்பீடு செய்ய வேண்டியது...
ஜெயலலிதாவின் ஆட்சி முறை
விஜய காந்தின் செயல்பாடுகள்
சீமானின் அரசியல் பிரவேசம்
(வை.கோ வுக்கான கால அவகாசங்கள் கூட குறைவு எனவே நினைக்கின்றேன்.எனவே சீமானோடு கரம் கொடுக்கலாம்)
தி.மு.க வின் இரண்டாம் கட்ட தலைவர்களின் அணுகு முறை
கம்யூனிஸ்ட்டுகளின் மக்களுக்கான போராட்டங்கள்
காலத்தின் கோலம். விதைத்தது தானே அறுக்கமுடியும்.
ReplyDelete///துஷ்யந்தனின் பக்கங்கள் said..
ReplyDeleteமூன்றாவதாக குடும்ப ஆதிக்கத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள் நண்பா/// உண்மை தான், நன்றி நண்பாரே
////ஹேமா said...
ReplyDeleteஅரசியலில் இதெல்லாம் சாதாரணம் என்பார்களோ !//// மக்களின் வாழ்க்கை அரசியல்வாதிகளின் பொழுதுபோக்கு என்றும் சொல்லலாம் ) நன்றி சகோதரி உங்கள் கருத்துக்கு
ராஜ நடராஜன் said...
ReplyDeleteஇனி கலைஞர் எழுந்து நிற்பதற்கான கால அவகாசமில்லையென நினைக்கிறேன்.மக்கள் அவர் விரும்பியபடியே குண்டுக்கட்டாக தூக்கிப் போட்டு விட்டார்கள்.
இனிமேல் மதிப்பீடு செய்ய வேண்டியது...
ஜெயலலிதாவின் ஆட்சி முறை
விஜய காந்தின் செயல்பாடுகள்
சீமானின் அரசியல் பிரவேசம்
(வை.கோ வுக்கான கால அவகாசங்கள் கூட குறைவு எனவே நினைக்கின்றேன்.எனவே சீமானோடு கரம் கொடுக்கலாம்)
தி.மு.க வின் இரண்டாம் கட்ட தலைவர்களின் அணுகு முறை
கம்யூனிஸ்ட்டுகளின் மக்களுக்கான போராட்டங்கள்/// நானும் அப்படி தான் நினைக்கிறேன் உங்கள் கருத்துக்கு நன்றி
///இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteகாலத்தின் கோலம். விதைத்தது தானே அறுக்கமுடியும்./// ஆமாம் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவங்க மன்னுக்க தானே இறுதியாய் போயாகனும் காலத்தின் கட்டாயம் தான் இது நன்றி சகோதரி உங்கள் கருத்துக்கு
என்ன நடக்குதுன்னு பொறுத்துப் பார்ப்போம்
ReplyDeleteஸ்பெக்ட்ரம் விஷயம் ‘ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி’ என்ற வார்த்தையால் அடித்தட்டு மக்களுக்குப் போய்ச் சேர்ந்த்து..ஓட்டுக்குக் கொடுக்கப்படும் காசு, அதிலிருந்து வரும் பங்கு என கிராமப்புற மக்களுக்கும் விளங்கியது..
ReplyDeleteமக்கள் நினைத்தால் கோ(பால)புரத்தில் குடியிருப்பவனையும் குப்பை மேட்டில் தூக்கி வீசமுடியும் என்பதற்கு இந்த தேர்தல் முடிவு எடுத்துக்காட்டு. ///
ReplyDeleteசூப்பர்...