வேறு என்ன தான் தலைப்பு வைக்கிறது.... டோனியின் வெற்றியின் ரகசியம் அவரின் அதிஷ்டமா? இல்லை அவருக்கு கிடைக்கும் அணியின் திறமையா? என்று எண்ணும் நேரங்களில் எல்லாம் டோனியின் அதிஷ்டம் தான் என்று இறுதி முடிவு எடுக்க தோன்றுகிறது.
யாரும் நினைத்து பார்த்திராத வெற்றி..!
இந்த போட்டியில் வென்றால் தான் இறுதி போட்டி என்ற நிலையில் மிக முக்கியமான போட்டியாக சென்னை மற்றும் பாங்களூர் அணிகள் களமிறங்கியது. போட்டி இடம்பெற்ற மைதானம் உலகக்கிண்ண இறுதி போட்டியில் இலங்கையிடம் இருந்து "டோனி அணி" வெற்றியை தட்டி பறித்த மும்பை வான்கடே....!
கடந்த போட்டியில் சென்னை பாங்களூரிடம் வாங்கிய அடி மறக்கவில்லை போலும் அதால இம்முறை நாணய சுழற்ச்சியில் வென்றவுடன் களத்தடுப்பை எடுத்துக்கொண்டார்கள்.
முக்கியமான இந்த போட்டியில பெங்களூர் சார்பாக கெயிலிடம் நிறையவே எதிர்பார்த்தாலும் இம்முறை ஏமாற்றிவிட்டார். அதே போல வில்லியர்ஸ் கடந்த போட்டியை போல வந்த சில நிமிடங்களிலே பெவிலியன் திரும்ப சற்று இக்கட்டில் மாட்டிக்கொண்ட அணியை இம்முறையும் மிக பொறுப்பான, அதே சமயம் அதிரடியான ஆட்டத்தின் மூலம் மிக நல்ல ஸ்கோர்ருக்கு இட்டுச் சென்ற பெருமை "இந்தியாவின் வருங்கால நட்சத்திரம்" விராத் ஹோலிக்கே. மிகவும் பிரமாதமான ஆட்டம்..
சென்னையின் பந்துவீச்சு மோசம் தான் என்றாலும் போலிஞ்சரின் புண்ணியத்தால் 175 க்குள் கட்டுக்குள் கொண்டுவந்துட்டார்கள்.
ஒரு மிக பெரிய இலக்கோடு களமிறங்கிய சென்னைக்கு கடந்த போட்டியில் கிடைத்த கசப்பான அதே ஆரம்பம். கஸி டக் அவுட்! . "ஏறினால் ஏற்றம் இறங்கினால் அதே வேகத்தில் இறக்கம் " இது விஜய் என்ற பெயரில் உள்ளவர்களுக்கெல்லாம் பொருந்தும் போல! , தொடர்ந்து சொதப்பும் முரளி விஜய் இந்த போட்டியிலும் வந்த வேகத்தில் கடமையை முடித்து கிளம்பினார்.
அடுத்து பத்திரிநாத்! நெருக்கடியான நிலை தான், ஆனாலும் தொடர்ந்து பந்துகளை வீணடித்துக்கொண்டு நிற்கும் போது ஆட்டத்தை பார்க்கவே வெறுப்பாக இருந்தது மட்டுமல்ல தோல்வி என்றே எல்லோரும் முடிவு செய்திருப்பார்கள். எனினும் ஒருவாறு சமாளித்து ஆடி தன் பங்குக்கு 34 ஓட்டங்களுடன் வெளியேறினார். அது வரை படு மந்தமாக போய்க்கொண்டிருந்த ஆட்டம் டோனி களமிறங்கவும் சற்று விறுவிறுப்பாக தொடங்கியது.
ஒரு பக்கத்தால கெயில் சிறப்பாக பந்து வீசிக்கொண்டு இருந்தாலும் மறு பக்கத்தால வெக்டோரி , ஹோலி ,மிதுன் என்று ஓட்டங்களை வாரி வழங்கினார்கள்.
இருந்தாலும் பதினாறாவது ஓவர் வரை வெற்றி மிக பிரகாசமாக பாங்களூர் பக்கமே இருந்தது. பதினேழாவது ஓவர் வீச வந்த சகீர்................! ஓவர் முடிவில் "எதற்காக இவனிடம் கொடுத்தேன்" என்று வெக்டாரியை சிந்திக்க வைக்கிற அளவுக்கு அந்த ஓவரில் வீழ்ந்தது அடி... மூன்று சிச்சர் அடங்கலாக மொத்தம் இருபது ஓட்டங்கள். அந்த ஓவரில் தான் வெற்றி பாங்களூரிடம் இருந்து விலக ஆரம்பித்தது. அப்படியே பத்தொன்பதாவது ஓவரில் மூன்று சிச்சர்களை வாரி வழங்கிய சிறிநாத் அரவிந்த் சென்னையின் வெற்றியை ஓரளவுக்கு உறுதிப்படுத்தினார்.
இறுதி ஓவர்! வேண்டியது பதினொரு ஓட்டங்கள்! வெக்டோரி பந்துவீச்சு!
களத்திலே தாண்டவம் நடக்கும் போது என்ன தான் செய்ய முடியும்! நான்காவது பந்திலே சிக்ஸ்சருடன் வெற்றி உறுதி செய்யப்படுகிறது.
மோர்க்கல் ஆடியது....... ஆட்டமா அது! என்னா ஒரு அனல் பறக்கும் அடி! மொத்தம் மூறு சிச்சர்களுடன் பத்து பந்தில் இருபத்து எட்டு ரன்கள் ....
இந்த போட்டியிலே ரைனாவுக்கு ஒரு சபாஸ், வழமைக்கு மாறாக நிலைமையை அவதானித்து ஆடிய மிக பொறுப்பான ஆட்டம். சென்னை வெற்றி பெற்றதால ஹோலிக்கு கிடைக்க வேண்டிய ஆட்ட நாயகன் விருதையும் தட்டிக்கொண்டார் .
விராட் ஹோலி ஆடிய அந்த அற்புதமான ஆட்டம் விழலுக்கு இறைத்த நீராய் போனதில் சிறு வருத்தமே. எனினும் இதுவரை இடம்பெற்ற 71 போட்டிகளிலே மிக விறுவிறுப்பான போட்டிகள் வரிசையில் இந்த போட்டியையும் சேர்த்துக்கலாம்.
இனி நாளை (25 ) இடம்பெறும் மும்பை கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணியோடு சென்னை அணி வரும் 28 ம் திகதி இறுதி போட்டியில் சந்திக்கும். அநேகமாக போன முறை இடம்பெற்ற ipl போலவே இம்முறையும் இறுதி போட்டியில் சென்னை மும்பையை எதிர்கொள்ளும் என்று நினைக்கிறேன். அப்படி வந்தால் சென்னையை பழி வாங்க மிக நல்ல ஒரு சந்தர்ப்பமாக மும்பைக்கு அமையும். இதுவரை இடம்பெற்ற ipl லீக் ஆட்டங்கள் சலிப்படைய செய்திருந்தாலும் இனி வரும் இறுதி மூன்று போட்டிகளும் விறுவிறுப்பாக இருக்கும்.
வடை எனக்கு..வெற்றி டோனிக்கு!
ReplyDeleteஎனக்கு கிரிக்கெட் பத்தி எதுவும் தெரியாது..நீங்க ஏதோ பெரிய மேட்டரு சொல்றீங்கன்னு புரியுது..என்னன்னு தான் புரியலை!
ReplyDeleteஒண்ணுமே புரியல்ல பாஸ்
ReplyDeleteகிரிக்கட்ல நமக்கு அ ஆ கூட தெரியாது
சோ இது புரியாததுல ஆச்சரியம் ஒண்டும் இல்ல ^_^
கிரிக்கெட் பற்றிய நல்லதொரு அலசல்.
ReplyDeleteபாராட்டுக்கள்.
நானும் பார்த்தேன் பாஸ்...எனக்கு கடைசி மட்டும் நம்பிக்கை இருந்தது தோனி டீமில்..
ReplyDeleteஅதே மாதிரி நடந்து விட்டது
நண்பா எனக்கு கிரிக்கெட் சூனியம்!! ஆனா நீங்க சூப்பரா எழுதியிருக்கிறதா மத்த நண்பர்கள் சொல்றாங்க! எனிவே வாழ்த்துக்கள்! ஓட்டுப் போட்டுட்டு கெளம்புறேன்!!
ReplyDeleteவிறு விறுப்பான ஆட்டம்.
ReplyDeleteதோனி மச்சக்காரர்தான்!
உலகக் கிண்ணத்தில் தொடங்கி, ஐபி எல் வரை தோனியின் பக்கம் அதிஷ்டக் காற்றுப் பலமாக வீசுகிறது என்று நினைக்கிறேன்.
ReplyDeleteகிரிக்கட் பற்றி அதிகம் தெரியாததால்,
மேலதிகமாக கருத்திட முடியலை மச்சி,
நல்லா சொல்லி இருக்கய்யா மாப்ள!
ReplyDeleteமும்பை கொல்கத்தா போட்டியில் வெல்லும் அணி மீண்டும் பெங்களூர் அணியுடன் மோதி அதில் வெற்றி பெரும் அணியே பைனலில் சென்னை அணியுடன் மோதும் .... ஆனால் எனக்கென்னவோ மீண்டும் சென்னையும் மும்பையும் தான் மோதும் என்று தோன்றுகிறது ... எல்லாமுமே முடிவு செய்ய பட்டதுபோல் தோன்றுகிறது
ReplyDeleteசென்னையை பழி வாங்க மிக நல்ல ஒரு சந்தர்ப்பமாக மும்பைக்கு அமையும்//
ReplyDeleteஅய்யோ.!! சக்கரைய எடுத்து இவரு வாயில போடுங்கப்பா.. மும்பை தானுங்கோ.!!
ரைட்டு,,
ReplyDeleteரைட்டு,,
ReplyDeleteஉண்மைதான் யாரும் எதிர்பார்க்காத ஒரு வெற்றி.
ReplyDeleteபெங்களூருக்கு இன்னும் சான்ஸ் இருக்கிறது. மும்பை-கல்கத்தா இடையே நடக்கும் போட்டியில் வெல்லும் அணியுடன் பெங்களூரு மறுபடி மோதும். அதில் வெற்றி பெறும் அணியே இறுதி போட்டியில் சென்னையுடன் மோதும்
ReplyDelete////செங்கோவி said...
ReplyDeleteவடை எனக்கு..வெற்றி டோனிக்கு!
எனக்கு கிரிக்கெட் பத்தி எதுவும் தெரியாது..நீங்க ஏதோ பெரிய மேட்டரு சொல்றீங்கன்னு புரியுது..என்னன்னு தான் புரியலை!///
வாங்க பாஸ் வருகைக்கு நன்றி ...
///துஷ்யந்தனின் பக்கங்கள் said...
ReplyDeleteஒண்ணுமே புரியல்ல பாஸ்
கிரிக்கட்ல நமக்கு அ ஆ கூட தெரியாது
சோ இது புரியாததுல ஆச்சரியம் ஒண்டும் இல்ல ^_^///
வாங்க துஷ்யந்தன்
///வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteகிரிக்கெட் பற்றிய நல்லதொரு அலசல்.
பாராட்டுக்கள்.
/// நன்றி ஐயா ..
///மைந்தன் சிவா said...
ReplyDeleteநானும் பார்த்தேன் பாஸ்...எனக்கு கடைசி மட்டும் நம்பிக்கை இருந்தது தோனி டீமில்..
அதே மாதிரி நடந்து விட்டது./// எனக்கும் டோனியின் அதிஷ்டத்தில் நம்பிக்கை இருந்தது ஆனாலும் முதல் பன்னிரண்டு ஓவரிலும் கொஞ்சம் கூட நம்பவில்லை.........
////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ReplyDeleteநண்பா எனக்கு கிரிக்கெட் சூனியம்!! ஆனா நீங்க சூப்பரா எழுதியிருக்கிறதா மத்த நண்பர்கள் சொல்றாங்க! எனிவே வாழ்த்துக்கள்! ஓட்டுப் போட்டுட்டு கெளம்புறே/// நன்றி ரஜீவன் ..
///சென்னை பித்தன் said...
ReplyDeleteவிறு விறுப்பான ஆட்டம்.
தோனி மச்சக்காரர்தான்!
///நன்றி ஐயா ..
///நிரூபன் said...
ReplyDeleteஉலகக் கிண்ணத்தில் தொடங்கி, ஐபி எல் வரை தோனியின் பக்கம் அதிஷ்டக் காற்றுப் பலமாக வீசுகிறது என்று நினைக்கிறேன்.
கிரிக்கட் பற்றி அதிகம் தெரியாததால்,
மேலதிகமாக கருத்திட முடியலை மச்சி,
/// வங்க பாஸ்
///விக்கி உலகம் said...
ReplyDeleteநல்லா சொல்லி இருக்கய்யா மாப்ள!
// நன்றி தலிவா..
///"ராஜா" said...
ReplyDeleteமும்பை கொல்கத்தா போட்டியில் வெல்லும் அணி மீண்டும் பெங்களூர் அணியுடன் மோதி அதில் வெற்றி பெரும் அணியே பைனலில் சென்னை அணியுடன் மோதும் .... ஆனால் எனக்கென்னவோ மீண்டும் சென்னையும் மும்பையும் தான் மோதும் என்று தோன்றுகிறது ... எல்லாமுமே முடிவு செய்ய பட்டதுபோல் தோன்றுகிறது
// ஆமாம் பாஸ் சிறு தவறு விட்டுட்டன்,பாங்களூருக்கு இன்னுமொரு சான்ஸ் இருக்கு போல. இருந்தாலும் எல்லாம் எல்லாம் முடிவு பண்ணி தான் நடக்குது என்று என்னால் கூற முடியவில்லை.சில சமயங்களில் இருக்கலாம்.ரொம்ப நன்றி கருத்துக்கு ...
///தம்பி கூர்மதியன் said...
ReplyDeleteசென்னையை பழி வாங்க மிக நல்ல ஒரு சந்தர்ப்பமாக மும்பைக்கு அமையும்//
அய்யோ.!! சக்கரைய எடுத்து இவரு வாயில போடுங்கப்பா.. மும்பை தானுங்கோ.!!
//// ஏனுங்க சக்கரயெல்லாம்...
///!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteரைட்டு,,// வாங்கண்ணே..
///Jana said...
ReplyDeleteஉண்மைதான் யாரும் எதிர்பார்க்காத ஒரு வெற்றி.
/// வாங்க ஜனா..
///Ponchandar said...
ReplyDeleteபெங்களூருக்கு இன்னும் சான்ஸ் இருக்கிறது. மும்பை-கல்கத்தா இடையே நடக்கும் போட்டியில் வெல்லும் அணியுடன் பெங்களூரு மறுபடி மோதும். அதில் வெற்றி பெறும் அணியே இறுதி போட்டியில் சென்னையுடன் மோதும்
// ஆமாம் உண்மை தான். அவசரத்தில் சிறு தவறு விட்டுட்டேன்,கருத்துக்கு ரொம்ப நன்றிங்க...
இந்திய அணியின் வருங்கால நட்சத்திரங்கள் கோலி மற்றும் ரைனா...
ReplyDeleteவணக்கம் சகோ இது எனக்குத் தெரியாத இடம் இன்னொரு இடத்தில் முடிந்தால் கைகுழுக்குவம்!
ReplyDeleteஎனக்குகூட கிரிக்கட் பற்றி ஒன்றுமே தெரியாது பாஸ்.. அதால ஓட்டு மட்டும் போடுறன்
ReplyDeleteஉண்மைதான்...டோனிக்குஎங்கு சென்றாலும் வெற்றி கொட்டுகிறது...
ReplyDeleteடோனிக்கு இந்த முறையும் கோப்பை கிடைக்கும் என்று நம்புகிறேன்... அதற்கு அதிர்ஷ்டம் என்பதை விட நல்ல தலைமை பண்பு தான் காரணமாகும் ....
ReplyDeleteஎனது பக்கத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு விடை அளித்தமைக்கு நன்றி! வெற்றியாளர் விபரம் சொல்லும் போது உங்களுக்கு அறிய தருகிறேன். உங்கள் தளத்தையும் தொடர்கிறேன்!
ReplyDeleteசென்னை ஆதரவாளராக அவர்களின் வெற்றி எனக்கு மகிழ்ச்சியை தருது!
ReplyDeleteஃ இந்த போட்டியில் வென்றால் தான் இறுதி போட்டி என்ற நிலையில் ஃ
ஆனால் முதல்2 இடங்களை பிடித்தமையால் இதில் தோத்தாலும் இறுதிபோட்டயிற்கு போகும் வாய்ப்பு சென்னைக்கு இருந்ததே!
கந்தசாமி அண்ணே நீங்கள் மச்சக்காரன் உங்களுக்கு எப்படி இப்படி எழுத்த வருது
ReplyDeleteஎந்த ப்ளேயரையும் திறமைசாலி ஆக்குவதுதான் அவரது திறமை.
ReplyDeleteஅண்ணா அதிர்ஷ்டம்ன 4 ,5 மேட்ச் கை குடுக்கும் 4 வருசக்கணக்குல எல்லாம் கூட வராது...
ReplyDeleteஒரு வழியா ஐ.பி.எல். முடிஞ்சா சரி!! Excuse me மிஸ்டர் கந்தசாமி. அதிக ஆட்டங்கள்.....ரொம்ப போர் அடிக்குது..
ReplyDeleteநல்ல பதிவு , நீகள் சொல்லுவதைப்போலவே தோணி திறமையான அதிர்ஷ்டசாலி
ReplyDelete